Results 11 to 20 of 36

Thread: தேவை ஒரு இனிய தமிழ் பெயர்

Threaded View

  1. #20
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    shortening of nI

    Hi rsubras,


    உங்கள் ஐயப்பாடு உண்மையில் நீ என்பது குறுகி நி என்றாகுமா என்பது. இப்படிக் குறுகுதலுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் இல்லை.

    பழம் + நீ என்பது பழநி > பழனி என்றாகிவிட்டது என்று சொற்சிந்தனையாளர் சிலர் கூறுகின்றபடியாலும்;

    ஞான் + நீ = ஞாநீ >ஞானி என்று குறுகி, ஞானம் முதலிய சொற்கள் அதன்கணிருந்து தோன்றின என்று சிலர் கூறுகின்றபடியாலும்,

    நீ என்பது சிலகால் "நி"எனக் குறுகியமைதலும் கூடும் என்று தோன்றுகின்றது.
    *
    நீ என்பது நின் என்று குறுகும் தன்மையுடைய சொல்தான். நீ + மனம் = நின் மனம்,

    நினது மனம், நின்னுடைய மனம் என்று வேற்றுமைச் சொல்லுருபுகள் ஏற்கும்போதும் நீ என்பது குறுகியே அமையும்.

    இவற்றை நோக்குமிடத்து, அருணீதா என்பதை அருணிதா என்று குறுக்கி அமைத்தலும் கூடுமென்றே முடிபு கூறலாம்.

    குறிப்பு: பழனி என்பதும் ஞானி என்பதும் வேறுவிதமாகத் தோன்றினவென்பர் வேறு சிலர். அந்த வாதத்திற்குள் செல்லாமல், நீ என்ற்பாலது நி என்று குறுகக் கூடும் என்று ஆய்வாளர் கருதியுள்ளனர் என்பதையே முனி நிறுத்தி, உங்கள் ஐயத்திற்கு ஒருவாறு தெளிவு காணலாம்.

    ஞான் = I. நான் என்பதன் சேர நாட்டு வழக்கு. I - self. You = nI = the greater self. This then appears to be the beginning of a ஞானி's conception.

    மெய்ம்மேல் ஏறி நின்றும் தனித்து நின்றும் நெடிலாகிய உயிர்கள் குறுகுதல் பெருவழக்கு,

    ஆ > அ அம் மரம்.
    ஊ> உ உவன். ( உ +அன் )
    ஏ > எ எம் மனிதன்.

    இப்படியெல்லாம் குறுகித்தான் பல சொற்கள் அமைந்தன என்பர்.



    Note: phrases in italics amended (typo)
    Last edited by bis_mala; 25th July 2013 at 07:42 AM.
    B.I. Sivamaalaa (Ms)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •