Results 91 to 100 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மம் எங்கே படத்தின் வெளியீடு பற்றி சொல்லும்போது அரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நடிகர் திலகத்தின் படங்களை திரையிடுவதனால் கிடைக்கக் கூடிய வணிக வெற்றியைப் பற்றி குறிப்பிட்டேன். எதைப் பற்ற்யும் கவலைப்படாதீர்கள், எதிர்மறையான சூழலிலும் நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை படைக்கும் என்று. Dooms day predictors என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது நெகடிவ் செய்திகளை பரப்புபவர்கள், இது சரியாக வராது, இது சரியாக போகாது என்றெல்லாம் சிவாஜி படங்களுக்கு மட்டும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.

    தர்மம் எங்கே முதல் நாள் அமோகமாக போனபிறகும் கூட மறுநாள் அரங்க நிர்வாகத்தினரிடம் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆரம்பித்து விட்டது. அதனால் தியேட்டருக்கு ஆள் வராது அதிலும் இன்று [ஞாயிறு] இந்தியா பாகிஸ்தான் மாட்ச். ஆகவே நார்மலாக உங்களுக்கு ஞாயிறன்று வரக்கூடிய வசூல் கூட வராது என்று சொல்லியிருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் 4 வருடங்களுக்கு முன்பு [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2011 ஏப்ரல் 2 ஞாயிறு] கிரிகெட் உலகக்கோப்பையின் பைனல் மாட்ச் நடக்கிறது. அதில் இந்தியா இலங்கையை சந்திக்கிறது. அன்றைய தினம் இதே மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகத்தின் சிவகாமியின் செல்வன் ஓடிக் கொண்டிருக்கிறது. அன்றைய நாளில்ம் கூட திரளான மக்கள் மாலைக் காட்சிக்கு படம் பார்க்க வந்திருந்தனர்.

    இன்று நடந்த இந்தியா பாகிஸ்தான் மாட்ச் தர்மம் எங்கே திரைப்படத்தை எந்த விததிலும் பாதிக்கவில்லை. இன்று மாலை பாலகனி அரங்கம் நிறைந்தது. கீழே ஆண்கள் டிக்கெட் அனைத்தும் நிறைந்தது. நான் இரண்டு நாட்கள் முன்பு சொல்லியிருந்தது போல் முதல் நாளைப் போலவே மூன்றாம் நாள் வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை ஞாயிறு மாலை அதிகபட்ச வசூலாக இருந்த அண்ணன் ஒரு கோவிலின் வசூலையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறது தர்மம் எங்கே!

    நாம் பலமுறை சொன்னது போல் இந்த கூட்டம் எல்லாம் தாங்களாகவே வரும் கூட்டம். தங்கள் சொந்த காசில் டிக்கெட் வாங்கி பார்க்கும் கூட்டம். ஒரு கலைஞனாக தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக என்றென்றும் நடிகர் திலகம் இனம் கண்டுக் கொள்ளப்படுவார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் படங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்று நாம் அடிக்கடி சொல்வதற்கு இவையெல்லாம் நடைமுறை உதாரணங்கள். அவரை உயர்த்திப் பிடிக்க வேறு prop upகள் தேவையில்லை.

    இன்று மாலை நடந்த கோலாகல கொண்டாட்டங்களைஎல்லாம் நண்பர் சுந்தர் பதிவிடுவார்.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  2. Likes adiram, Russellmai, sivaa, kalnayak, KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •