Page 212 of 401 FirstFirst ... 112162202210211212213214222262312 ... LastLast
Results 2,111 to 2,120 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2111
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டு போகும்
    நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்// மதுண்ணா வாவ்.. என்னா பாட்டுங்க இது..இது கேட்க மட்டும் செய்திருக்கேன் பார்த்ததில்லை..ஆக்சுவலா கீதாவிற்கு அழகு நடிப்பு எல்லாம் இருந்தும் அவர் ஹீரோயினாக சோபிக்கவில்லை.. பாடல்வரிகளுக்கும், வீடியோவிற்கும் தாங்க்ஸ்..

    வான் நிலாவிற்கும் கல்யாணத் தேன் நிலாவிற்கும் வரிகள்,கம்பேரிஸனுக்கு + காணொளிகள் சரி ஈ ஈ தமிழ்ல வீடியோக்களுக்கு நன்றி..இரண்டுமே என்னைக் கவர்ந்த பிடித்த பாடல்கள்.. ஒன்றில் பாடல் அழகு (சிவரஞ்சனி அவ்வளவாகக் கவரவில்லை) இன்னொன்றில் பாடலும் அழகு (அடக்க ஹேண்ட்ஸ்ம் மம்முட்டி ஒடுக்க அழகு சொர்ண புஷ்பம்)..

    இந்த வான் நிலா பாடல் இருக்கிறதே.. வழக்கமாக மெட்டுப் போட்டுத்தான் பாட்டெழுதச் சொல்வார்கள்.. இது கவிஞர கண்ண தாசனைப் பாட்டெழுதச் சொல்லிவிட்டு மெட்டுப் போட்டார் என்பது போல் எம்.எஸ்.வியின் ஒரு பேட்டியில் படித்ததாக நினைவு.. என் நினைவில் பிழை கூட இருக்கலாம்..

    //உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தபோது, ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகளான குமாரி நளினியை எம்.ஜி.ஆருக்கு 'விஸ்வம்' மனோகர் அறிமுகப்படுத்த உடனே எம்.ஜி.ஆர். 'கண்டேன் என் கம்பெனியின் கதாநாயகியை' என்று நாகேஷ் பாணியில் கமெண்ட் அடித்து, குமாரி நளினியின் பெயரை 'லதா' என்று மாற்ற, ஜொள்ளு ரசிகர்களால் 'லட்டு லதா' ஆக்கப்பட்டார்...// கார்த்திக் சார்..எனக்குத் தெரியாத தகவல் இது.. ராஜா வீட்டுப் பெண்ணா லதா.. நன்றி. (இருந்தாலும் அவர் லத்து தான்..!)

    //கவிஞர் சொன்னார் தான் ஆனால் அதற்கு முன்பும் கா.மு ஷெரிப், மருதகாசி ஐயா, தஞ்சை ராமய்யா தாஸ் மற்றும் கு.மா.பா போன்றோரும் பல தத்துவ பாடல்களையும் ஆழமான சிந்தனைகளையும் சொல்லத்தான் செய்தனர். // இதுவும் உண்மைன்னு சொல்லட்டுமா.. ராஜேஷ் ஜி..அந்தந்த கால கட்டத்தில் தத்துவங்கள் வந்திருக்கின்றன..பிறந்திருக்கின்றன.. வழிமொழிந்த வகை என்பதைத் தான் கார்த்திக் சார் சொல்ல நான் வழி மொழிந்தேன் (ஹப்பாடா ஒருவகையா குழ்ப்பியாச்சு).. கவிஞர் கண்ண தாசன் கூட செங்கலின் வண்டு கலின் கலின் என்று - குற்றாலக் குறவஞ்சியில் இருந்து நிமிண்டி – எழுந்து வாராயோ கனிந்து வாராயோன்னு அபிராமியை எஸ்.வி.சுப்பையா கூப்பிடுவது போல எழுதியிருப்பார்..அங்கங்கே உள்ள நல்லவிஷயங்களை மற்ற காலங்களில் கவிஞர்கள் தம் சிந்தனைக்கேற்ப எழுதியதில் எதுவும் தவறுண்டோ..இல்லை என்று தான் நினைக்கிறேன்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2112
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்று எதேச்சையாக கே.டிவியில் சிவகுமார் நதியா படம் பார்க்க நேரிட்டது படம் பெயர் பார்க்கவில்லை..இரண்டு பாடல்கள் இளஞ்சோலை பூத்ததா, கண்ணா உனைத் தேடுகிறேன் வா..இரண்டு பாடல்களும் நல்லமெலடி..( நதியாவை நடனமாட விட்ட்து தான் ஒரு கஷ்டம்)

  4. #2113
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நேற்று எதேச்சையாக கே.டிவியில் சிவகுமார் நதியா படம் பார்க்க நேரிட்டது படம் பெயர் பார்க்கவில்லை..இரண்டு பாடல்கள் இளஞ்சோலை பூத்ததா, கண்ணா உனைத் தேடுகிறேன் வா..இரண்டு பாடல்களும் நல்லமெலடி..( நதியாவை நடனமாட விட்ட்து தான் ஒரு கஷ்டம்)
    padam unakkagave vaazhgiren (interesting story knot ... sivakumar taking his wife(menaka) to hospital who has fire injury meets with accident with a car which suresh was driving .. and nadhiya goes insane ) and when she realises siva is the one who killed suresh she goes furious and then loves him .. appadi oru kadhai

  5. #2114
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாங்க்ஸ் ராஜேஷ்.. யா.. கொஞ்சம் போரடிக்காமல் சென்றது படம்.. எதிர்பாராத சர்ப்ரைஸாக சில பாடல்கள்..நடனம்..வேறு யார் புலியூர் சரோஜா தான் என நினைக்கிறேன்..அதில் வந்த வி.கோபாலகிருஷ்ணன் பற்றி.. நாடகக் கலைக்குத் தொண்டாற்றியவர்.. அவர்பற்றி இங்கு பேசவில்லை என நினைக்கி”றேன்.. நீங்கள் எழுதியிருக்கிறீர்களா..

  6. #2115
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy- Poem.
    என்னோடு உன்னோடு இளையராசா முருகன் மந்திரம்


    என் இசை அறிவின் வட்டத்திற்குள் புதிதாக வருகிற ராசாவின் பாடலை. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன் வெறி கொண்டலைபவன் போல மீண்டும் மீண்டும் காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன்.

    இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற மெட்டுக்களை விட, எனக்கு இன்னும் அறிமுகமாகாத ராசாவின் பாடல்களைப் பற்றிய தேடல் பேராவலாய் எழுந்து நிற்கிறது.

    உதவி இயக்குநராக சேரவேண்டும் யாரிடம் சேரலாம். இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே உச்சரித்தது, என் விருப்பத்தின் குரல். என் விருப்பத்தின் குரல் உச்சரித்த, அந்த இரண்டு பெயர்களுமே இயக்கத்தின் உச்சத்தில் இருந்த நேரம்

    அந்த பெயர்களின் சொந்தக்காரர்களை நேராகப் பார்க்க வாய்ப்புகளை வழங்காத சந்தர்ப்பங்களோடு சண்டை செய்வதில் உடன்பாடில்லை. எனவே, கடிதத்தை உதவிக்கு அழைத்தேன். என் சார்பாக சென்று வாய்ப்பு கேட்டு வர என் கடிதங்கள் புறப்பட்டன. ஆனால் அந்த கடிதங்களை அவர்களிடம் அழைத்துச் செல்வது யார்?

    அதில் முதல் பெயர்க்காரருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் பற்றிய பாட்டுக்கதை தான் இது அந்த முதல் பெயர்க்காரர் இயக்குநர் பாலா.

    உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைபவர்கள் யாவருமே.. அநாதையின் நிலையில் தான் இருப்பார்கள். நானும் அப்படியே எந்த இழிநிலையிலும்.. நிலை பிறழாமல். கூடவே வரும் ராசாவின் பாடல்கள்.

    இதயத்தில் இருள்குவிந்து இடிந்து கிடக்கும் இயலாமைப்பொழுதுகளில்.. தாய்போல மடியில் கிடத்தி, தன் இசையின் விரல்களால் தடவிக்கொடுக்கிறார் ராசா.

    நீட்டுவதும் நிறுத்துவதுமாக,
    போற்றுவதும் போதிப்பதுமாக,
    உணர்தலும் உணர்த்துதலுமாக
    ராசாவின் பாடல்கள், கேட்டல் என்ற நிலையை கடந்த ஒன்று. காதுகளோடு நின்று விடக்கூடிய ஒலிகள் அல்ல ராசாவின் இசைக்கோர்வைகள். உயிரோடு பேசக்கூடிய மொழிகள்

    கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
    எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
    காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
    நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

    காலப்பெருவெள்ளத்தின் கண்கள் வழியாக கண்ணதாசன் கண்ட வாழ்வின் தத்துவத்தை இசைஞானியின் ராகம் தன் தோளில் சுமந்து வரும்பொழுது

    திசைகளை தொலைத்துவிட்டதொரு நிலப்பரப்பின் நடுவில் தனியொருவனாய் வீசி எறியப்பட்டதைப்போல ஒரு அமானுஷ்யத்திற்குள் நிற்கிறோம் நாம் அதை இன்னும் அதிகப்படுத்துகிறது ராசாவின் இசையோடு இறுகிக் கசிகிற ஜென்சி, ஷைலஜா, மலேசியா வாசுதேவனின்

    குரல்.

    விதியின் கைகள் போல, ராசாவின் இசையின் கைகள், நம்மை தன்போக்கில் இழுத்துச் செல்கிற வல்லமை படைத்ததாய் இருக்கிறது.

    வடபழனியில், விசாலமான வாகனம் நிறுத்தும் வசதி கொண்ட அந்த நட்சத்திர விடுதியில் பாலா, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இருப்பதாய். என்னை ரசிக்கிற, என்னை நேசிக்கிற, ஒரு தம்பி ராஜேஷ்குமார் எனக்கு அறிவித்தான். கூடவே எனக்கு மட்டும் தபால்காரனாகி உதவுகிறேன் என்று தன்னம்பிக்கை தந்தான். சில காகிதங்கள் என் கடிதமாக உருமாறியது. அந்தக் கடிதம் கை மாறியது. என் பிரத்யேக தபால்காரனால் பாலாவின் கைகளில் சேர்க்கப்பட்டது. என் எதிர்காலத்தை சுமந்துகொண்டிருப்பதாய் நான் நினைத்த என் கடிதம், ஒரு பாடலின் சில வரிகளையும் தனக்குள் கொண்டிருந்தது

    ராசாவின் மெட்டு, ராசாவின் வார்த்தை. என்ற சிறப்புத்தகுதி கொண்ட பாடல்களில் அந்த பாடலும் ஒன்று. கூடுதலாக மதுபாலகிருஷ்ணனின் மாயக்குரலை தன்னோடு சேர்த்துக்கொண்டது அப்பாடல்

    பொருளுக்கு அலைந்திடும்
    பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
    உன் அருள் அருள் அருள் என்று
    அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

    அருள் விழியால் நோக்குவாய்
    மலர் பதத்தால் தாங்குவாய்
    உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

    அந்த பாடலில் இருந்து இந்த வரிகளை மட்டும் வெட்டி எடுத்து என் கடிதத்திற்குள் கொட்டி இருந்தேன்.

    இந்தப்பாடல் வரிகள், நான் உன்னிடம் தான் உதவி இயக்குநராக சேரவேண்டும் என்று இன்னுமொரு முறை எனக்குச்சொன்னது. வார்த்தைகளின் கண்ணாடியில் வாழ்க்கையின் பிம்பத்தைக்காட்டுகிறாய். எப்படி உனக்கு மட்டும் இப்படி வாய்க்கிறது என்று வியப்பின் உச்சியில் நின்று பாலாவிடம் உரைத்துவிட்டு அடுத்தவரியில் உண்மையையும் உளறி இருந்தேன்.

    இந்த வரிகளை உன் அனுமதியோடு என் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். மன்னிக்கவும் எனக்கான வரிகளாய், என் நிலையின் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். என் நிலை உனக்கு உரைக்க இந்த வரிகள் போதும் எனக்கு வாய்ப்பு தருவது பற்றிய உன் நிலை பற்றி தெரியும் வரை, நிலை கொள்ளாமல் நான் திரிவேன் என்பதை மட்டும் உன்னிடம் சொல்லிக்கொள்கிறேன், என்று வேண்டுகோள் வைத்திருந்தேன்.

    அவர் பாடலையே அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். வாசித்துவிட்டு பாலா என்ன நினைத்திருப்பாரோ என்று நினைத்தேன். இன்று வரை விடை தெரியாமல் அந்த நட்சத்திர விடுதியிலேயே என் கேள்வி சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என்பது உபகதை.

    ஆனால் இன்றும் அந்தப்பாடல்.., நான் சோர்வுறும் போதெல்லாம் என் அருகிலேயே நிற்பதாய் உணர்வேன். பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் என்று முதல் வரியிலேயே ராசா நான் என்பது ஒன்றுமில்லை என, இறைவனின் காலடியில் சரணாகதி அடைந்திருப்பார்.

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய
    உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    அம்மையும் அப்பனும் தந்ததா
    இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
    அம்மையும் அப்பனும் தந்ததா
    இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
    இம்மையை நான் அறியாததா
    இம்மையை நான் அறியாததா
    சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    அத்தனை செல்வமும் உன் இடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
    அத்தனை செல்வமும் உன் இடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
    வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
    அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

    ஒரு முறையா இரு முறையா
    பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
    புது வினையா பழ வினையா,
    கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

    பொருளுக்கு அலைந்திடும்
    பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
    உன் அருள் அருள் அருள் என்று
    அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
    அருள் விழியால் நோக்குவாய்
    மலர் பதத்தால் தாங்குவாய்
    உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே.

    இடைவெளியற்ற தனிமையின் சர்வாதிகாரம், நம் தோல்விகளின் கண்ணீரை ருசித்துச் சிரிக்கிற பொழுதுகளிலும்

    நிகழ்காலம் என்ற ஒன்று எதிர்காலத்திற்குள் எட்டிப்பார்க்குமா என்ற கேள்விக்குறியோடு தற்காலிகமாய் மூளைச்சாவு நடந்தேறும் நிமிடங்களிலும்

    தேடல்களோடு திரிகிற நம்மை திருப்பி அனுப்பியே தீருவதென்று துடிக்கிற தினசரி வாழ்வின் இரக்கமற்ற தேவைகளின் முன் மண்டியிடுகிற போதும்..

    நம் அசாத்திய நம்பிக்கையின் முடிவில்லாப் பெருவெளியை முட்டுச்சந்துகளாக மட்டுமே முடிவு செய்து நகைப்பவர்களின் முகங்களை
    முகம் சுழிக்காமல் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயங்களிலும்

    ராசாவின் பாடல்கள் தான் காலாட்படையாக, குதிரைப்படையாக, யானைப்படையாக வந்து நின்று நம் எதிரிகளை விரட்டி அடிக்கிறது.

    ராசாவே மெட்டமைத்து, ராசாவே எழுதிய இந்த பாடல், எல்லா நிலையிலும் ஒரே நிலையில் இருப்பதாய், ஒரே நிலையை உரைப்பதாய் உணர்கிறேன். ஆதலினால் அடிக்கடி கேட்க விழைகிறேன்.

    வாழ்தலுக்கான செல்வத்தைத் தாண்டிய, அத்தனை செல்வங்களும் என்னிடம் இருப்பதாய் உணர வைக்கிறது இந்த பிச்சைப்பாத்திரம். மிக மிக சொற்ப அளவில் கல்வியாக, கலையாக, என்னோடு இருக்கும் செல்வத்தை விட பெருஞ்செல்வம் ஏதுமில்லை, என்றுபிச்சைப்பாத்திரம் வழியாக உணர்த்திச் செல்கிறார் ராசா.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2116
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் ஆல்..

    ம்ம் காலையில் தத்துவ மழையா..எனக்குப் பிடித்த தத்துவப் பாடல்..அதற்கு முன் அடியேன் முன்பு எழுதிப் பார்த்த சில பாடல்கள்..(வேற வழியில்லை.. நீங்க படிச்சுத் தான் ஆகணும் )

    மூப்பே என்னைச் சீண்டாதே
    ..முகத்தில் சுருக்கம் தாராதே
    சீப்போ என்றே சொல்லிடுவேன்
    ..திரும்பி என்னைப் பார்க்காதே
    காப்போம் என்றே எனைச்சுற்றி
    ..கடமை இருக்கு கேட்டாயோ
    போப்பு என்றென் ஊர்த்தமிழில்
    ..சொல்வேன் நீயும் போய்விடப்பா..

    *
    பயமின்றி துள்ளித்தான் பாய்ந்தகாலம் போனது..
    ..பாரினிலே கண்டகாட்சி பாழ்மனதில் பூண்டது
    சுயங்கொண்டே சோர்விலாமல் சூதுஎதும் கொண்டிரா
    ...சுறுசுறுப்பு மிகக்கொண்ட இளமையதும் போனதே
    வயல்வரப்பில் விளைந்தநாற்று அசைந்தாடிக் காற்றிலே
    ..வானம்பார்த்து நின்றதுபோல் வாழ்ந்தகாலம் போனது
    கயல்விழிகள் மனதினுள்ளே கலந்தாடி நீந்திய
    ..காலமெல்லாம் போச்சுபோச்சு முதுமைவந்து சேர்ந்ததே...!!

    அதிசயமாய் இருப்பதெது என்று கேட்டால்
    ..அழகான மனிதரவர் வாழ்க்கை என்பேன்
    நதிபோலே ஓரிடத்தில் ஆரம் பித்து
    ..நன்றாகப் பலவாறாய்ச் சுழித்து ஓடி
    கதியில்லை என்பதுபோல் இன்னும் சுற்றி
    ..கடக்கென்றே நின்றுவிடும் செயல்தான் என்னே..
    விதியென்பர் வேறென்பர் ஆனால் என்ன
    ..வாழ்வதனின் முடிவென்றும் அறிய மாட்டார்
    *
    நீர்போல இருப்பதுதான் வாழ்க்கை போல
    ..நிறைவாக அலசிடலாம் அதனை இன்று
    தேர்போல அசைந்தோடி மெல்லச் செல்லும்
    ..தெளிவான நதியோதான் சுழலில் சுற்றும்
    பார்த்தநிறம் தன்னுள்ளே வாங்கும் போல
    ...பலருக்கும் வாழ்க்கையிலே ஆசை தோன்றும்
    ஆர்ப்பாட்ட அருவியொலி அடங்கல் போலே
    ..அடங்கிடுமே மனிதவாழ்வு ஓர்நாள் தானே..

    **

    திரைப்பாடலில் இதையே கொடுத்திருப்பார் இளையராஜா..கவிஞர் வைரமுத்துவின் உதவியுடன்..திடீரென வருகின்ற பாடல் இது படம் நீங்கள் கேட்டவை..

    **
    கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
    துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

    பிறக்கின்ற போதே
    பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
    இருக்கின்றதென்பது மெய் தானே
    ஆசைகள் என்ன?
    ஆசைகள் என்ன ஆணவம் என்ன?
    உறவுகள் என்பதும் பொய் தானே
    உடம்பு என்பது
    உடம்பு என்பது உண்மையில் என்ன?
    கனவுகள் வாங்கும் பை தானே

    காலங்கள் மாறும்
    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
    வாலிபம் என்பது பொய் வேஷம்
    தூக்கத்தில் பாதி
    தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
    போனது போக எது மீதம்

    பேதை மனிதனே
    பேதை மனிதனே கடமையை இன்றே
    செய்வதில் தானே ஆனந்தம்

    **

    //உடம்பு என்பது உண்மையில் என்ன?
    கனவுகள் வாங்கும் பை தானே// ஹெள ட்ரூ..ம்ம் இதுக்குள்ள எவ்ளோ குழப்பம் எவ்ளோ சோதனை எவ்ளோ வேதனை எவ்ளோ போராட்டம் எவ்ளோ புன்சிரிப்பு எவ்ளோ பேரழுகை.. ஒரே ஸேடா இருக்குதுங்கோ..

    யாரங்கே சூப்பரா ஒரு ரொமாண்டிக் சாங்க் எடுத்து விடுங்க..

  8. Likes Russellmai liked this post
  9. #2117
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    தக்கிடத்தா.. ஹை ஹை திக்கிடத்தா

    தத்தி தத்தி போறா பாரு கிளியக்கா
    என்னை தட்டிக் கொண்டு போறா பாரு குயிலக்கா

    டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் குரல் கொடுக்க ஜெயசுதாவும், ஜெய்சங்கரும் ஆடும் பிராயசித்தம் பாடல்.

    "மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி" என்று லக்ஷ்மிக்காக சுசீலா பாடிய பாடல் பிரசித்தம். இந்தப் பாட்டின் தாளம் நம்மையும் தாளம் போட வைக்கும். கேட்டுப்பாருங்களேன்..


  10. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #2118
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்


    சிக்கா.. இதோ அதன் ஒரிஜினல்

    Upkaar படத்திலிருந்து மன்னா டே


  12. Thanks chinnakkannan thanked for this post
  13. #2119
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  14. Thanks chinnakkannan, madhu thanked for this post
  15. #2120
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    செல்லக்கிளி... நான் பார்க்கவில்லை. ஆனால் "மதுரை மீனாட்சி மணிக்கரத்தில்" என்று ஆனந்த பைரவியில் இழையும் பாடல் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.

    நன்றி கிருஷ்ணா ஜி

  16. Likes gkrishna, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •