Page 213 of 401 FirstFirst ... 113163203211212213214215223263313 ... LastLast
Results 2,121 to 2,130 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2121
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இன்றைய ஸ்பெஷல் பகுதியில் முந்தாநாள் ஸ்பெஷலாக நீங்கள் அளித்த 'எங்கவீட்டுப் பெண்' படத்தின் தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் பாடல் ஆய்வு நன்றாக இருந்தது. மிகவும் அமைதியான அழகான பாடல், இசையரசியில் குரலில் மேலும் உயரத்தை அடைந்தது. 1965-ல் ஆர்ப்பாட்டமான பாடல்களுக்கிடையே சந்தடியில்லாமல் ஹிட்டான பாடல். வானொலிகளில் அடிக்கடி ஒலித்தது.

    இப்படத்தின் இன்னொரு பாடலைப்பற்றி சொல்ல வேண்டும். (இப்போது பழைய பாடல்களின் மெட்டை, ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற போர்வையில், அப்பட்டமாக காப்பியடிப்பது சகஜமாகிவிட்டது). ஆனால் ரிப்பீட்டு ஆனால் சுலபமாக கண்டுபிடிக்கக் கூடிய காலத்திலேயே கே.வி.எம்.மாமா மிக சாதாரணமாக ரிப்பீட் செய்வார். அதற்கு உதாரணம் இப்படத்தில் வரும்

    'கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்'

    என்ற பல்லவி. இது ஏற்கெனவே மக்களைப்பெற்ற மகராசி படத்தில் இடம்பெற்ற

    'சீமையிலே படிச்சவரு சின்ன எஜமான் நல்லவரு'

    என்ற பல்லவியின் ரிபீட். மாமா இதோடு நிற்கவில்லை. எங்கவீட்டுப் பெண் வந்து ஐந்தாண்டுகள் கழித்து வந்த மாட்டுக்கார வேலனில் இதே மெட்டில் பல்லவி அமைத்திருப்பார்..

    'பட்டிக்காடா பட்டணமா ரெண்டுங்கெட்டான் லட்சணமா'

    இப்படி ஒரு மெட்டை வைத்து பல பல்லவிகளை உருவாக்கினார் (மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணம்தான். தேர்தல் வாக்குறுதிகளை வேண்டுமானால் மறப்பார்கள். பாடல்களையும் மெட்டுக்களையும் மறப்பார்களா?)

    எப்படியோ உங்கள் பதிவை வைத்து நானும் ஒரு சரவெடி கொளுத்த முடிந்தது...

  2. Likes gkrishna, Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2122
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    நீங்கள் பதித்த ஊருக்கு உழைப்பவன் படத்தில் இடம்பெற்ற 'அழகெனும் அழகெனும் ஓவியம் இங்கே' என்ற பாடலை பார்த்ததும் அப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அழகான பாடல் நினைவுக்கு வருகிறது.

    இதுதான் முதல் ராத்திரி
    அன்புக்காதலி என்னை ஆதரி

    தலைவா கொஞ்சம் காத்திரு
    வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

    மன்மதன் சேனை முன்வரும் வேளை
    நீதானே எனைக்காக்கும் மந்திரி
    உன் அடிமை இந்த சுந்தரி
    என்னை வென்றவன் ராஜ தந்திரி

    ஜேசுதாஸும் வாணியம்மாவும் அசத்தும் இப்பாடல் எழுதியவர் புலமைப்பித்தனா என்பது தெரியாது. ஆனால் மெல்லிசை மன்னரின் கலக்கல் அற்புதம்.

  5. Likes chinnakkannan liked this post
  6. #2123
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    மெல்லிசை மன்னரைப்பற்றி நீங்கள் எழுதத்துவங்கியிருக்கும் தொடர் துவக்கமே சுவையாக உள்ளது. தலைப்பு எம்.எஸ்.வி. பற்றியாக இருந்தாலும், உள்ளே கண்டெண்ட் என்னமோ மன்னர்கள் பற்றித்தான் துவங்கியுள்ளது ('இப்போதுதானே துவங்கியிருக்கிறேன், அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?' என்ற தங்கள் அதட்டல் கேட்கிறது). எப்படியோ பிள்ளையார் பிடித்து அது பிள்ளையாராகவே முடியவேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.

    எந்த நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கணிக்க முடியாத, புரியாத புதிர் நீங்கள்.

    பக்திப்பாடல்கள் வரிசை அருமையாக இருந்தது. அதிலும் அந்த 'ஆயர்பாடி மாளிகையில்' சூப்பர்...

  7. #2124
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    காலை வணக்கம் எல்லோருக்கும்

    கார்த்திக் சார்

    உங்கள் பாராட்டிற்கு நன்றி .
    உங்கள் 'பாதை தவறிய கால்கள் ' பதிவின் பாதிப்பு தான் இந்த கவியரசர் புலவர் நிலா ஒப்பிடு . ஊருக்கு உழைப்பவன் 'இது தான் முதல் ராத்திரி '
    அருமையான பாடல் .மேலும் சில பாடல்கள் நினைவில் உண்டு
    'பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைகாக பாடுகிறேன் ஜேசுதாஸ் பில்லை என்று பாடுவார். 'இரவு பாடகன் ஒருவன் வந்தான் ' கவிஞர் முத்துலிங்கம் பாடல் .

    சி கே சார்
    காலையில் நீங்களும் கோபால் சார் அவர்களும் போட்ட தத்துவ பாடல்கள் கலக்கல் .

    கோபால்
    நேற்று போட்ட பக்தி பஞ்சாமிர்தம் பழனி பஞ்சாமிர்தம் .
    இரண்டு நாட்களாக பக்தி தாண்டவம்

    மது சார்

    செல்ல கிளி சூப்பர் பாடல்.

    வாசு சார்

    அந்த செல்ல கிளி ஸ்ரீப்ரியா நிழல் படம் எப்புடி .

    ராஜேஷ் சார்

    எப்பவுமே உங்கள் கூட நான் பழம் தான்.
    gkrishna

  8. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  9. #2125
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    ரத்ன குமாரி என்கிற வாணிஸ்ரீ மிக சொற்ப படங்களில் தான் எம் ஜி யாருடன் நடித்திருக்கிறார். (ஊருக்கு உழைப்பவன், கண்ணன் என் காதலன், தலைவன் போன்றவை).
    இந்தப் பாடல் மிக நன்றாக பிரபலம் அடைந்தது. மெல்லிய, தங்கு தடையில்லாமல் ஓடும் இசையும், எளிய பாடல் வரிகளும், அழகான குரல்களும் இதற்கு காரணம்.

    திரைப்படம்: ஊருக்கு உழைப்பவன் (1976)
    இசை: M Sவிஸ்வநாதன்
    பாடல்: வாலி
    நடிப்பு: எம் ஜி யார், வாணிஸ்ரீ
    இயக்கம்: M கிருஷ்ணன் நாயர்
    பாடியவர்கள்: K J யேசுதாஸ், வாணி ஜெயராம்

    ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
    ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
    ம் ம் ம் ம் ம்
    ஆ ஆ ஆ ம் ம் ம் ம்
    ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
    ம் ம் ம் ம் ம் ம் ம்

    இது தான் முதல் ராத்திரி
    இது தான் முதல் ராத்திரி
    அன்பு காதலி என்னை ஆதரி
    இது தான் முதல் ராத்திரி
    அன்பு காதலி என்னை ஆதரி

    தலைவா கொஞ்சம் காத்திரு
    தலைவா கொஞ்சம் காத்திரு
    வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
    தலைவா கொஞ்சம் காத்திரு
    வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

    மன்மதன் சேனை முன் வரும் வேளை
    நீ தானே என்னை காக்கும் மந்திரி
    மன்மதன் சேனை முன் வரும் வேளை
    நீ தானே என்னை காக்கும் மந்திரி

    அடிமை இந்த சுந்தரி
    என்னை வென்றவன் ராஜ தந்திரி
    அடிமை இந்த சுந்தரி
    என்னை வென்றவன் ராஜ தந்திரி

    இது தான் முதல் ராத்திரி
    அன்பு காதலி என்னை ஆதரி

    கைகளில் வாரி வழங்கிய பாரி
    தந்தானோ நீ தந்த மாதிரி
    கைகளில் வாரி வழங்கிய பாரி
    தந்தானோ நீ தந்த மாதிரி

    இதழோ கொடி முந்திரி
    அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
    இதழோ கொடி முந்திரி
    அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி

    இது தான் முதல் ராத்திரி
    அன்பு காதலி என்னை ஆதரி

    திருமுக மங்கை திங்களின் தங்கை
    நான் பாடும் நவ ராக மாலிகை

    கடல்போல் கொஞ்சும் கைகளில்
    வந்து சேர்ந்தாள் இந்த காவிரி

    இது தான் முதல் ராத்திரி
    அன்பு காதலி என்னை ஆதரி

    http://www.youtube.com/embed/HsYSDZATDks
    gkrishna

  10. Likes chinnakkannan liked this post
  11. #2126
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஹாய் குட்மார்னிங் ஆல்..

    அடியேன் முன்பு எழுதிப் பார்த்த சில பாடல்கள்..(வேற வழியில்லை.. நீங்க படிச்சுத் தான் ஆகணும் )

    மூப்பே என்னைச் சீண்டாதே
    ..முகத்தில் சுருக்கம் தாராதே
    டியர் சி.க.

    படித்துப்பார்த்தேன். அசந்து போனேன்.

    எடுத்துப்போடப்பட்ட கவிதையைவிட, தாங்கள் எழுதிப்பார்த்த கவிதைகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. இதிலிருந்து புரிந்தது ஒன்று. திறமையுள்ளவர்கள் எங்கும் இருக்கிறார்கள், வாய்ப்புக்கிடைப்பவகள் மட்டுமே மேலே போகிறார்கள். அவர்கள் எது செய்தாலும் அது உலக அதிசயமாகிறது. காரணம், வெளிச்சம் படக்கூடிய இடத்தில் அவர்கள் இருப்பதுதான்.

    தங்களோடு ஒப்பிடும்போது நானெல்லாம் சின்னவன் என்று சொல்லமுடியாது. ஒண்ணுமேயில்லை என்று சொல்வதே பொருத்தம்.

    நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேறு...

  12. Thanks chinnakkannan thanked for this post
    Likes gkrishna liked this post
  13. #2127
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வழி மொழிகிறேன் கார்த்திக் சார்

    அதிலும் சி கே அவர்களின் இன்றைய தத்துவ பாடல்கள் மிக அருமை .

    நடிகர் திலகதின் தர்மம் எங்கே பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது
    'எல்லா மலரும் இறைவன் படைப்பு உலகம் அவனது தோட்டம் '
    'திறமை எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்

    நீங்கள் கூட திரு சி கே அவர்களை நமது திரியின் கண்ணதாசன் என்று பாகம் ஒன்றில் கூறிய நினைவு உண்டு . இந்த நேரத்தில் கண்ணதாசன் பற்றிய புது கவிதை ஒன்று

    கண்ணதாசன் - நல்
    எண்ணதாசா
    எல்லோருக்கும் புரியும் புடி
    எளிய கவிதை சொன்னதாசா
    தீந்தமிழில் பாடல் புனைந்தவனே
    தீது அறியா நல் நெஞ்சனே
    அஞ்சாத சிங்கமே - நல்
    அரசவைக் கவிஞனே - அந்தத்
    திரையுலகம் உனக்குத்
    திரை செலுத்தியது
    அமர்க்களம் உன்புலமை
    அவையடக்கம் உன் உடைமை
    கவிஞனாய் -தயாரிப்பாளனாய்
    கதாசிரியனாய் நடிகனாய் -பல
    அவதாரம் எடுத்தவனே
    அரிதாரம் இல்லா அன்பாலனே
    உன்பாடல் ஒவ்வொன்றும் முத்து ஐயா
    என்றும் நீ எம் சொத்து ஐயா
    அர்த்தமுள்ள இந்துமதம் தந்தவனே -நல்
    அர்த்தமுடன் வாழ வழி சொன்னவனே
    உன் பொன்னுடம்பு மறைந்து
    போனால் போகட்டும் போடா!
    உன் புகழ் உடம்பு -என்றும்
    பூமியில் நிலையாய் வாழு மடா

    நமது சி கே அவர்களுக்கும் உங்களுக்கும் இந்த கவிதை ஒரு சிறு பரிசு
    gkrishna

  14. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #2128
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //டியர் சி.க.

    படித்துப்பார்த்தேன். அசந்து போனேன். //
    //வழி மொழிகிறேன் கார்த்திக் சார்//

    அன்பின் கார்த்திக் சார், கிருஷ்ணா சார்.. என்ன சொல்வதெனத் தெரியவில்லை.. மிக்க நன்றி..இன்னும் வெகு தூரம் போக வேண்டும்..

    கண்ணதாசன் பற்றிய புதுக்கவிதை பரிசுக்கு நன்றி கிருஷ்ணா சார்..

    அன்புடன்
    சி. க.

  16. #2129
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    kabhi kabhi



    கபி கபி படம் சிறுவயதில் பார்த்தது. மீண்டும் பலமுறை டிவிடியில் பார்த்திருக்கிறேன். எப்போது பார்த்தாலும் சலிக்காத படம். நீண்ட படம்தான் திரைக்கதையில் தொய்வும் குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இளமையான அமிதாப்பும் கண்குளிர வைக்கும் ராக்கியும் பின்னர் நீதுசிங்கும் படத்துடன் ஒட்ட வைக்கிறார்கள். இதில் அற்புதமான இணைப்பாக சசிகபூர். நீ கடவுளா மனிதனா என்று அவரிடம் மனைவி கேட்கும்போது மனிதன்தான் என்றும் மனிதன் மனிதத்துவம் மிக்கவனாக இருப்பதுதான் மிகவும் நல்லது என்றும் அவர் விளக்கம் அளிப்பார். இதுபோன்ற கவித்துவமான தருணங்கள் இப்படத்தில் அதிகம். மிகவும் மெச்சூரிட்டியான ஒரு காதல் கதை.....அமித் என்ற அமிதாப் ஒரு கவிஞர். தமது காதலியின் நினைவாக எழுதிய கபி கபி புத்தகம் அச்சிட்டு முதல் பிரதியை காதலியின் திருமணப் பரிசாக தரவேண்டியிருக்கிறது.அத்துடன் அவர் எழுத்துலக வாழ்வும் முடிந்துபோகிறது. நீ நல்ல கவிஞன்தான் எழுது என தந்தை கூறும்போது எழுத மறுத்துவிடுகிறார்.எனக்குள் இருந்த படைப்பாளியை வழியிலேயே விட்டு வந்துவிட்டேன் என்பார். அவனை நீ மீண்டும் வழியில் சந்திக்க நேர்ந்தால் என்று தந்தையின் கேள்விக்கு அமித் பதிலளிப்பார். 'அவர் யார் என்று தெரியாதவர் போல கடந்து சென்றுவிடுவேன்.'
    இப்படித்தான் காதலியை மீண்டும் சந்திக்கும் போது கடந்து சென்றுவிட நினைக்கிறார். ஆனால் அவர் மனைவி வகிதா ரஹ்மானுக்கு வேறொருவன் மூலம் பிறந்த பெண்ணை தன் மகளாக அங்கீகரிப்பதிலிருந்து காதலியின் மகனுடன் அவளை இணைத்து வைப்பது வரையிலான அவரது கடமையும் பாசமும் காதலியை கடந்து செல்ல முடியாதபடி அவரை கட்டிப் போடுகிறது.

    வஹிதா ரஹ்மான் வீட்டுக்கு நீத்து சிங் வரும் காட்சியைத்தான் சிந்துபைரவியில் பாலசந்தர் சுகாசினியின் மூலம் சொன்னார் .இதில் என் வீட்டுக்கு ஒரு சிறிய பறவை வந்தது என்று வஹிதா பாடுவதை தமிழில் நானொரு சிந்து என சுகாசினி பாடுவார்.

    இப்படத்தின் பாடல்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். சாஹிரின் அற்புதமான வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் கய்யாம்.
    கிஷோர் குமார், லதா மங்கேஷ்கரின் தேனிசைப் பாடல்களுடன் முகேஷ் பாடிய கபி கபி டைட்டில் பாடலை யார்தான் மறக்க முடியும்
    மறைந்த இயக்குனர் யஷ் சோப்ரா மீது மரியாதை கூடுவதற்கு இப்படமும் ஒரு காரணம்.




    http://www.dailymotion.com/video/x18...hi-kabhi_music

    நன்றி நண்பர் ஜகதீஷ் அவர்களுக்கு
    gkrishna

  17. #2130
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எல்லா க் காலத்துலயும் மனித மனசுக்கு மகிழ்ச்சி பெருக்க வைக்கிற சமாச்சாரம்., அமைதியைத் தருகிற சமாச்சாரம் ஒண்ணு உண்டு தெரியுமா ( நெனச்சேன்..தத்துவம்னு இவன் ஆரம்பிச்சப்பவே என நினைக்க வேண்டாம்..இது அது இல்லை!) அது தான் இயற்கை..

    காலை நேரத் தென்றலைத் தடவியபடி பனித்துளி போர்த்திச் சிரிக்கும் புது மலர்கள், மெல்லிய காற்றில் அசைந்தாடும் பச்சை வயல்வெளிகள், தூரத்தே தெரியும் அருவியின் ஒற்றை வரி பின் தெரியும் பசுமை கிராமங்கள் இன்னும் பல..

    பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
    தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
    வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
    அள்ளும் இயற்கையே ஆம்

    இயற்கையழகைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் உண்டா..அதுவும் கண்ணதாசன்..

    என்னவாக்கும் சொல்றார் இந்தப் பாட்டில..காட்டோட அழகை..

    *

    காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
    காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை

    காட்டிக்காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலம் இல்லை இதிலே
    கலந்து விட்டால் கால நேரம் தெரிவதுமில்லை


    மேகமென்ற தந்தை கண்ணில் நீர் வழிந்தது இங்கே
    விதவிதமாய்க் குழந்தைகள் போல் செடி வளர்ந்தது

    பூமியென்ற தாய்மடியில் தவழ்ந்து வந்தது நோயில்
    புலம்புகின்ற மனிதருக்கும் மருந்து தந்தது

    காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை இங்கு
    காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை

    *

    அழகிய பாடல்..அதுவும் சுசீலாம்மா குரல் சரோஜா தேவியின் வாயசைப்பு என.. அள்ளும்..

    *

    மனதில் நினைவுக்கு வரும் இயற்கைகள்..

    இயற்கை என்னும் இளைய கன்னி..

    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா.

    இன்னும் இருக்கே
    Last edited by chinnakkannan; 10th September 2014 at 01:49 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •