தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்

உலகத் தமிழர்களுக்காக ‘தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்' என்ற பெயரில் 24 மணி நேர தொலைக்காட்சி சேனலை ஜீ.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இதில் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவைப் பற்றியும் நடிகர்-நடிகையர், பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைப் பற்றியும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

‘தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்' நிகழ்ச்சிகளை இதுவரை சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பி வரும் ஜீ.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம், வரும் மார்ச் மாதம் முதல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவிலும் தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.

http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0