ஒவ்வொரு டி.வி. சேனலும் தங்கள் கோணத்தில் புதுமையான முறையில் தொடர்களை தருவதில் போட்டி போட்டு வருகின்றன. தொடர் என்றால் அழுகை என்ற எண்ணத்தை மாற்ற இப்போது டி.வி.க்கள் தயாராகி விட்டன.

ராஜ் டி.வி.யில் வெளிவரும் தொடர்களில் திருமதி ஜானகிராமன், காலத்துக்கேற்ற வகையில் புதுமையான கதையம்சத்துடன் உள்ளது. விருப்பமில்லாமல் மணந்து கொண்டதால், புகுந்த வீட்டில் ஒரு பெண் அவதிப்படுவது தான் கதை. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30க்கு.

இன்னொரு மெகா தொடர் சித்தாரா. பிரபல சினிமா நடிகை, அவளை பணம் கறக்கும் இயந் திரமாக்கிய அண்ணன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து பின்னப் பட்டுள்ளது. வார நாட்களில் மாலை 6.05க்கு.

இது போல, நட்பின் பெருமை பேசும் தொடர், சிநேகிதி வார நாட்களில் மாலை 6.30 மணிக்கு.