அமரராகிவிட்டார் அப்பா ஆனால்
அகலவில்லை அவர் எங்களை விட்டு
அங்கங்கே பிரித்து கொடுத்தார் ஆசையாய்
அவர் இறந்த பின்னும் இருக்கும் சொத்தாய்

அவர் ஆஸ்தி அத்துடன் ஆஸ்துமா என்னிடம்
அவர் முட்டைமுழி முகச்சாயல் என் மகனிடம்
அவர் அறிவு அகச்சாயல் ஆணவப் பேத்தியிடம்
அவர் தம் அழியா பிம்பம் மட்டும் அம்மாவிடம்!

அப்பாவி என்னப்பா! அவரை - அடபாவி மனுஷா
அநியாயாமா எனை அம்போன்னு விட்டாயென
அவர் நினைவை கண்ணீரால் நனைக்காமல்
அனுதினமும் அம்மா உலர்ந்ததேதில்லை !

அவர் நிழலை நிஜமாக நினைந்து அழுதபடி
அவருடன் அளவளாமல் விட்டவளுமில்லை
அவர் எங்கே போனார் எங்களை விட்டு?
அவர் அணுக்கள் எங்களிடம் உள்ள போது!