BharathiRaja's Pommalattam

Thread started by joe on 6th August 2007 01:30 PM



சென்னை சத்யம் தியேட்டரில், அந்த விழா துவங்கும்போது சின்னதாக ஒரு இறுக்கம் அரங்கத்தில் நிலவியது. ஆனால், ஒவ்-வொரு வி.ஐ.பி&யாகப் பேசப் பேச நெகிழ்வான ஒரு நிகழ்வாக மாறிய அந்த விழா அனுபவம் பரவசமானது! பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாதான் அது.

பாலசந்தர், இளையராஜா, கமல், அர்ஜூன், எஸ்.பி.முத்துராமன், ஏவி.எம். சரவணன், பஞ்சு அருணாசலம், கே.எஸ்.ரவிகுமார் எனத் தமிழ் சினிமாவில் சாதித்தவர்களும், சாதித்துக்கொண்டு இருப்பவர்களும் சங்கமித்திருந்தனர்.

பொதுவாக இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்வதை அறவே தவிர்க்கும் பழக்கமுள்ள இசைஞானி, பாரதிராஜாவின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொண்டது கமல், பாலசந்தர் உட்பட அனைவருக்குமே ஆச்சர்யம்தான்! இடையில் சில காலம் பேசிக்கொள்ளாமல் இருந்த இளைய ராஜாவும் பாரதிராஜாவும் எந்த உறுத்தலும் இல்லாமல் இயல்பாகப் பழகியது அடுத்த ஆச்சர்யம்! இளையராஜாவைக் கைப்பிடித்து மேடையேற்றிய பாரதிராஜா, ‘‘உனக்கு வயசாகிடுச்சுப்பா... பார்த்து மெதுவா வா!’’ என்று அக்கறையாகச் சொல்ல, ‘‘அதெல்லாம் இல்லைப்பா!’’ என்று அவரின் தோளைத் தட்டி, குஷியாகக் குதித்து ஓடி வந்தார் இளையராஜா. அத்தனை உற்சாகம்... அத்தனை சந்தோஷம் அவர் முகத்தில்!

‘‘என் இனிய பாரதிராஜாவே!’’ என்று கரகர குரலில் பாரதிராஜா பாணியிலேயே ஆரம்பித்து அதிர வைத்த கே.எஸ்.ரவிகுமார் தொடர்ந்து, ‘‘ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜால்லாம் இல்லாத தமிழ் சினிமா, அறுசுவை விருந்து இல்லாத கல்யாண வீடு போல இருக்கும். நாங்கள்லாம் ஏதோ எங்களால முடிஞ்ச சிறுசுவை வழங்கிட்டு இருக்கோம். அறுசுவை மட்டுமே சாப்பிட்டாலும் அலுத் துப் போயிரும். சிறுசுவை மட்டுமே சாப்பிட்-டாலும் வெறுத்துப் போயிரும். ரெண்டுமே அளவோடு வேண்டும். அதனால, ஜாம்பவான்கள் எல்-லாம் தங்கள் படை, பரிவாரத்தை மீண்டும் திரட்டிக் கிட்டு வரணும். நீங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழுறது பெருமையா இருக்குனு வழக்கம் போலச் சொல்ல மாட்-டேன். நீங்--கள்-லாம் வாழுறவரைக்-கும் சந்தோஷமா வாழணும்கிறது-தான் என்னோட ஆசை!’’ என்று சென்டிமென்ட்டாக முடித்தார். எஸ்.பி.முத்துராமன் தனது நினைவலைகளில் நீந்திப் பயணிக்க, அடுத்துப் பேச வந்த பாலசந்தர் நெகிழ்ச்சி உரையை ஆரம்பித்து வைத்தார்.

‘‘எனக்கு பாரதிராஜா, ‘பொம்ம-லாட்டம்’ படத்தோட டபுள்பாசிட்-டிவ்வைப் போட்டுக் காட்டினார். அசந்து போயிட்டேன். எனக்கும் அவருக்கும் 20 வயசு வித்தியாசம் இருக்கும்னு நினைக்-கிறேன். ஆனா, மனுஷன் இன்றைய இளந்தலை முறை இயக்குநர்களுக்குச் சவால் விடுற அளவுக்குப் படம் பண்ணி யிருக்கார். நானெல்லாம் புது டைரக்டர்கள்கிட்ட கத்துக்க ஏதா-வது இருக்குமானு யோசிச்சுட்டு இருக்க, பாரதிராஜா ‘என்கிட்ட வாங்க எல்லோரும்! நான் கத்துத் தரேன் உங்களுக்கு!’னு சொல்ற மாதிரி இருக்கு. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஒரு இயக்குநர் இன்னொரு இயக்குநருக்குத் தன் படத்தோட டபுள் பாசிட்டிவ்வைப் போட்டுக்காட்ட மாட்டார். ஆனா, பாரதி செஞ்சுருக்கார். எனக்கு சினி-மா-வுல விரல் விடாமலே எண்ணக் கூடிய அளவுக்குத்தான் நண்பர்கள் உண்டு. அதுல பாரதிராஜாவுக்கு முதல் இடம் இப்பவும்.... எப்பவும்!’’ என்று கடைசி வரிகளில் உருகிவிட்டு அமர்ந்தார்.



உற்சாக ஊற்றாக மைக் முன் வந்து நின்ற இளையராஜா, பாரதியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டுப் பேசத் தொடங்கினார்... ‘‘சமீபத்தில் ஒரு நாளிதழில் என் வாழ்க்-கை வரலாற்றைத் தொடராக வெளியிட்டார்கள். அதைத் தினமும்படிக்கும் போது அது என் வரலாறா, பாரதிராஜாவின் வரலாறான்னே ஒரு கட்டத்தில் எனக்கு சந்தேகம் வந்துருச்சு. அந்த-ளவுக்கு உடலில் உதிரம் போல என் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளவன் பாரதிராஜா! அந்த ராஜா இல்-லேன்னா, இந்த ராஜா இல்லே. அவன்தான் என்னை சென்னைக்கு கைப் பிடிச்சுக் கூட்டிட்டு வந்து ‘இதான் பீச்! அதான் ஏவி.எம். ஸ்டுடியோ, அழகழகா பொண்ணுங்க வெளியே வர்றாங்-களே, அதான் எஸ்.ஐ.டி. காலேஜ்’னு வழி காட்டினான். ஆனால், சில சமயம் அவன் காட்-டிய வழிகளில் நான் போகாமல் தப்பித்துவிட்டேன். குறிப்பா எஸ்.ஐ.டி. காலேஜ் பக்கம்!’’ என்று நிறுத்தி அதிர அதிரச் சிரித்தவர்,

‘‘பிரசாத் ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூமுக்குள்ள போயிட்டேன்னா இசைக் குறிப்புகள்-தான் என் உலகம்! என் படத்தோட இசை வெளியீட்டு விழா-வுக்கே நான் வரமாட்டேன். ‘விருமாண்டி’ படத்துக்-கே கமல் எனக்கு போன் பண்ணி, ‘நீங்க வர மாட்டீங்-கன்னு தெரியும். ஆனா, உங்களுக்குச் சொல்ல-வேண்டி-யது என் கடமை’ன்-னாரு. அப்-படிப்பட்ட நான் இந்த விழாவுக்கு வந்திருக்கேன்னா, அதுக்கு ஒரே கார-ணம் பாரதிராஜா! அவன் என-க்கு நண்பனுக்கும் மேலே! என்ன விதமான உறவு அதுனு சொல்லத் தெரியலை’’ என்று ஏகத்துக்-கும் நெகிழ்ந்து மகிழ்-ந்து பேசிச் சென்றார்.



அடுத்துப் பேச வந்த கமலுக்கு முதல் சில விநாடிகள் என்ன பேசுவ-தென்றே தெரியவில்லை. ‘‘பாலசந்தர், பாரதிராஜா, இளைய-ராஜா... இந்த நட்புக் கூட்டணியில் லேட்டா வந்து சேர்ந்துகிட்ட குட்டி சகோதரன் நான். மூணு பேரும் என்மேல உரிமையோடு கோபிச்சுக்கு-வாங்க. இவங்களையெல்-லாம் பார்த்து-தான் நான் சினிமா கத்துக்கிட்-டேன். கத்துட்டு இருக்கேன். பாரதிராஜா சார் கொடுத்த ‘பொம்ம-லாட்டம்’ ரஷ்ஷை வீட்டுல போட்டுப் பார்த்தேன். பிரமிச்சுப் போயிட்டேன். பாருங்க, அவ்வளவு பெரிய இயக்குநர் என்னை நம்பித் தன் படத்தோட ரஷ்ஷை கொடுத்திருக்-கார். இது போதும் நான் சினிமாவில் இருந்ததுக்-கான சாட்சி’’ என்று தன் பங்குக்குப் பார்வையாளர்களை உருக வைத்தார்.

ஏற்புரை வழங்க வந்த பாரதிராஜா நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தழுதழுத்தபடியே பேசத் தொடங்கினார்... ‘‘என்னை இன்னமும் இயங்க வைத்துக்கொண்டிருப்பது இது போன்ற நண்பர்களின் நட்பு தான். இளையராஜா ஒரு ஜீனியஸ். ஆனா, அவன்கிட்டே ஒரு சின்ன கர்வம்... திமிர் இருக்கும். அது மேதைகளுக்கே உண்டானது. பொம்மலாட்டத்துல நடிச்ச நானா படேகர் பிரமாதமான நடிகன். ஆனா, அவனை என் வழிக்குக் கொண்டுவரச் சிரமப் பட்டேன். அர்ஜுன் மட்டும் இல்லேன்னா இந்தப் படம் முடிஞ்சிருக்காது. இப்படி என்னை என் கோபத்தோடவும், வேகத்தோடவும் ஏத்துக்கிட்ட நண்பர்கள் அனைவருக்-கும் நன்றி!’’ என்று கரகர குரலில் முடித்தபோது, திருப்தியான ஒரு கைதட்டல் அரங்கை வெகுநேரம் ஆக்ரமித்தது.


நன்றி -விகடன்.



Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)