Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Posting in Tamil | Login Problems? | Archives | Contact Us | Hub Policies

The Hub : Tamil Films Archived Hello Guest, Login to post.

Sivaji vs MGR

Topic started by pammalar on Tue Oct 27 11:42:33 2009.

குமுதம் (21.10.2009) இதழில் வெளியாகி , எமது நெஞ்சை நெருடிய , அந்த இன்னொரு கேள்வி - பதில் :

எம்.ஜி.ஆர். படங்களில் சுமாராக ஓடிய படங்கள் உண்டா ?

எம்.ஜி.ஆர். படங்கள் யாருக்கும் நஷ்டம் கொடுத்ததே இல்லை. சுமாராக ஓடிய படங்கள் என்றால் 'தேர்த்திருவிழா', 'தாலி பாக்கியம்', 'காதல் வாகனம்', 'கணவன்', 'தாழம்பூ' என ஒரு சில படங்கள் மட்டுமே என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.


இறைவனால் படைக்கப்பட்டுள்ள மனிதர்கள் அனைவருக்கும், வெற்றிகளும் , தோல்விகளும் மாறி மாறி வரும் என்பது படைத்தவனே வகுத்த நியதி. கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நியதி, விதி பொருந்தும். அப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு மட்டும் தோல்விகளோ, தோல்விப்படங்களோ இல்லை , அவரது படங்கள் நஷ்டம் கொடுத்தத்தே இல்லை என்றெல்லாம் வாதிப்பதோ , எழுதுவதோ அபத்தத்திலும் அபத்தம் மட்டுமல்ல , வரலாற்றுப் பொய்யும் கூட.

தமிழ்த்திரையுலகில் கோலூச்சிய , கோலூச்சுகின்ற பாகவதர், சின்னப்பா, நடிகர் திலகம், மக்கள் திலகம், கமல், ரஜினி போன்ற மிகப் பெரிய நட்சத்திர நடிகர்களுக்கும் சரி, அவர்களுக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் நட்சத்திர நடிகர்களுக்கும் சரி தோல்விப்படங்களும், படுதோல்விப்படங்களும் , தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை அளித்த படங்களும் உண்டு. அது மட்டுமல்ல. எல்லா தரப்பு, எல்லா மொழி நடிகர்களுக்கும் (ஹாலிவுட் நடிகர்கள் உள்பட), மெகாஹிட் படங்களும், சூப்பர்ஹிட் படங்களும், நல்ல வெற்றிப் படங்களும், சராசரி வெற்றிப் படங்களும், சுமாராக ஓடிய படங்களும், தோல்விப்படங்களும், படுதோல்விப்படங்களும், அவரவர்களது காலகட்டத்தில் அவரவர்களுக்கு உண்டு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது அந்த 5 திரைப்படங்களும் நஷ்டத்தை அளித்த படுதோல்விபடங்களே என்பது திரையுலக ஞானமுள்ளவர்களுக்கு தெரிந்த விஷயம்.

மக்கள் திலகத்தைப் பொறுத்த வரை,

மதுரை வீரன், நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை,.......... போன்றவை மெகாஹிட் படங்கள் !

மலைக்கள்ளன், திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே,........... போன்றவை சூப்பர்ஹிட் படங்கள் !

குலேபகாவலி, தாய்க்குப்பின் தாரம், தர்மம் தலை காக்கும்,........... போன்றவை நல்ல வெற்றிப்படங்கள் !

புதுமைப்பித்தன், குடும்பத் தலைவன், பணம் படைத்தவன்,............. போன்றவை சராசரி வெற்றிப்படங்கள் !

மகாதேவி, அரசிளங்குமரி, பரிசு,................. போன்றவை சுமாராக ஒடிய படங்கள் !

பாசம், ஆனந்த ஜோதி, என்கடமை,.............. போன்றவை தோல்விப்படங்கள் !

ராஜராஜன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, ராஜா தேசிங்கு,...............போன்றவை படுதோல்விப்படங்கள் !

(,........... = இன்னும் சில, பல படங்கள் உண்டு எனக் கொள்ள வேண்டும்)

இவ்வகைப்படங்கள் மக்கள் திலகத்துக்கு மட்டுமல்ல, எல்லா நடிகர்களுக்கும் உண்டு !

குமுதம் மற்றும் இது போன்று எழுதுவோருக்கெல்லாம் யாம் அளிக்கும் காட்டமான பதில் இது தான் :

உண்மைகளை மட்டுமே உழுது விதைக்க வேண்டிய பத்திரிகையாளர்கள், பொய்த் தகவல்களை வெளியிடுவது தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் நல்லதல்ல. பொய்களைப் புரள விடுவதன் மூலம், நடந்தேறிய வரலாற்று உண்மைகளை மாற்றி விட முடியாது.இளைய தலைமுறையின் நலன்களைக் கருத்தில் கொண்டு, இனியாவது, வரலாற்று உண்மைகளை எழுதுவது மட்டுமே, எழுதுகோலை ஏந்துபவர்களின் நோக்கமாக இருக்கட்டும் !


உண்மையை நாடும்,
பம்மலார்.



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


This topic has been locked.
Back to Tamil Films Archived forum