Page 8 of 8 FirstFirst ... 678
Results 71 to 77 of 77

Thread: Raghuvaran Passes Away

  1. #71
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Location
    San Francisco Bay Area
    Posts
    2,695
    Post Thanks / Like
    Just saw the videos on Indiaglitz... Needless to say, a big LOSS for Tamil cinema! Very heart-breaking...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Senior Member Senior Hubber Movie Cop's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    1,026
    Post Thanks / Like
    RIP

    Within less than a space of a month we hear yet another wretched news! First it was Sujatha and now it is Raghuvaran... The most shocking part of the news is that, Raghuvaran is still young enough to pass away!

    One of the very few actors in Kollywood who gets under the skin of the character that he plays, Raghuvaran is a class act! Tamil cinema will miss this unique and one of the finest actors that would be pretty hard to replace.

  4. #73
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    I COULD NOT BELIEVE it when I read the paper today morning.

    I felt Very very sad
    Ive heard that he was such a nice human being

  5. #74
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    Mr Raguvaran was a versatile talented and gifted actor. He did not get the recognition he deserved. It is unfortunate that he is no more at this age. May his soul rest in peace. We to the ALLMIGHTY for that. He will be sorely missed.

  6. #75
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like

  7. #76
    Senior Member Regular Hubber Poornima's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    108
    Post Thanks / Like
    where is raghu, easily the biggest raghuavaran fan of all time?

  8. #77
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Coimbatore,bangalore
    Posts
    1,614
    Post Thanks / Like
    SATHYARAJ ABOUT RAGHUVARAN:

    ரகுவரனின் மரணத்தால் கவலையுடன் இருந்த சத்யராஜுடன் பேசினோம். ‘‘நானும் ரகுவரனும் கோயமுத்தூர்க்காரர்கள். இருவருமே கோவை அரசுக¢ கலைக¢ கல்லூரி மாணவர்கள். கோவையில் இருந்த வரையில் இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. ஆனால், எங்கள் கல்லூரி அருகே ரகுவரனின் தந்தை வேலாயுதம் நடத்தி வந்த ‘ஹரிஸ்டோ‘ ஹோட்டலில்தான் கல்லூரி நண்பர்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவோம். அங்கு பிரியாணி ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும். மாதந்தோறும் எனக்கு பாக்கெட் மணியாக எங்கள் வீட்டில் பதினைந்து ரூபாய் தருவார்கள். அந்தப் பணம் கைக்கு வந்ததும் ரகுவரன் ஹோட்டலுக்குச் சென்று, பிரியாணி சாப்பிடுவேன். அந்த வகையில் ரகுவரனுக்கு முன்பே அவரது அப்பா எனக்குப் பழக்கமாகிவிட்டார்.

    சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ரகுவரனிடம் இந்தச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வேன். நான் வில்லனாக நடித்து ஹீரோவானவன். ஹீரோவாக நடித்துப் பின்னர் வில்லன் கேரக்டரில் பேசப்பட்டவன் ரகுவரன். ஆரம்பத்தில் நான் ஹீரோவாக நடித்த படங்களில் பவர்ஃபுல் வில்லன் வேண்டும் என்று இயக்குநர்கள் முடிவு செய்து ரகுவரனை வில்லனாக நடிக்க வைத்தார்கள். என்னை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ளக¢ காரணமான படங்கள் ‘மக்கள் என் பக்கம்’, பூவிழி வாசலிலே’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக¢கு’. இந்தப் படங்களில் எல்லாம், வில்லன் கேரக்டர் செய்தது ரகுவரன்தான்.

    நான் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு, கேரக்டர் ரோலில் நடித்துப் பெயர் வாங்கிய ‘மிஸ்டர் பாரத்‘ படத்தில்தான் ரகுவரன் முதன் முதலில் வில்லனாக நடித்தான். அதற்கு முன்பு வரை அவன், ஹீரோவாக நடித்துக¢ கொண்டிருந்தான். ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘பூவிழி வாசலிலே’ ஆகிய படங்களின் ஷ¨ட்டிங் கேரளாவில் நடந்தது. அப்போது ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள், அந்தப் படங்களில் ஹீரோவாக நடித்த என்னையும் (நிழல்கள்) ரவியையும் விட்டுவிட்டு, ரகுவரனைத்தான் சூழ்ந்துகொள்வார்கள். காரணம், ரகுவரன் அணியும் டிரெஸ§ம் காரில் வந்து இறங்கும் அவனது ஸ்டைலும் படுஅமர்க்களமாக இருக்கும். உண்மையில் அவன் நிஜ ஹீரோ. ரகுவரனின் அழகான தோற்றம், அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால்தான் தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அவனால் பெயர் வாங்க முடிந்தது.

    கடவுள் நம்பிக்கை இல்லாததால், எனது புது வீட்டுக்கு நான் கிரஹபிரவேச விழா நடத்தவில்லை. காலையில் வாடகை வீட்டில் இருந்து ஷ¨ட்டிங் போன நான், இரவில் புது வீட்டில் வந்து படுத்துக¢ கொண்டேன். ஆனாலும், நான் புது வீட்டிற்குச் சென்றதற்காக ரகுவரனுக்கும் (நிழல்கள்) ரவிக்கும் மட்டும் பார்ட்டி வைத்தேன். அந்தளவுஸ்கு நானும் அவனும் நெருக்கமாக இருந்தோம். இடையில் கொஞ்சம் இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் அவனுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்து சாய்பாபா பக்தனானான். அதுபற்றி அவனிடம் விவாதிக்க எனக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது’’ என்று கண்கலங்கினார் சத்யராஜ்.

    ‘தனது பர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவர் உங்களிடம் பேசுவாரா? ஏதாவது ஆலோசனை வழங்கியிருக்கிறீர்களா?’ என்றோம்.

    ‘‘அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதுபற்றி அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். அண்மையில் நான் நடித்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் ரோகிணியும் நடித்தார். அப்போது அவருடன் ஷ¨ட்டிங்கிற்கு வரும் மகன் சாய்ரிஷி துறுதுறுவென இருப்பான். அவனைப் பார்க்கும்போது, குழந்தை நட்சத்திரமாக ஹிந்திப் படங்களில் நடித்த ரிஷிகபூர்தான் எனது ஞாபகத்துக்கு வருவார். சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஆவணப்படமொன்றை ரோகிணி இயக்கியிருந்தார். அதைப் பார்த்து வியந்து போனேன். இந்தளவுக்குத் திறமைசாலிகளாக உள்ள ரகுவரனும் ரோகிணியும் சேர்ந்து வாழாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிப்பான் ரகுவரன். ஆரம்பத்தில் உலக சினிமாக்கள் குறித்து அவன் பேசும்போது எனக்கொன்றும் புரியாமல் விழிப்பேன். அதன்பின், எனக்கு உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி வைத்து அவற்றைப் பார்க்கத் தூண்டியதும் ரகுவரன்தான். அவனது நடிப்புத் திறமைக்கும் உருவத்துக்கும் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெயர் வாங்கியிருக்க முடியும். ஆனால், அவனுக்கு இருந்த போதைப் பழக்கங்களால், நன்றாகத் தொடங்கிய அவனது வாழ்க்கை, வெகுசீக்கிரத்தில் மோசமாக முடிந்துவிட்டது’’ என்றவர் சற்று இடைவெளிவிட்டு,

    ‘‘ஒவ்வொரு முறையும் ‘குடிப்பழக¢கத்தைவிட்டு விடு’ என்று நான் அறிவுரை சொல்லும்போது, ‘என் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை பாஸ்’ என்று உணர்ச்சிவசப்பட்டு என்னைக¢ கட்டிப் பிடித்து முத்தமிடுவான் ரகுவரன். அவன் இட்ட முத்தங்கள் என் கன்னத்தில் அப்படியே தங்கிவிட்டன. ஆனால், அவன்...’’ என்று கலங்கிய கண்களுடன் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார் சத்யராஜ்.

    :kumudam Reporter:

Page 8 of 8 FirstFirst ... 678

Similar Threads

  1. RAGHUVARAN - The Devil on silver screen
    By raaja_rasigan in forum Tamil Films
    Replies: 189
    Last Post: 27th December 2012, 09:23 PM
  2. VMC Haneefa passes away!!!!!!(RIP)
    By Sudarsh in forum Indian Films
    Replies: 8
    Last Post: 4th February 2010, 03:20 AM
  3. D.K.PattammaL passes away
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 6
    Last Post: 29th August 2009, 10:00 AM
  4. Bob Woolmer passes away
    By Ramakrishna in forum Sports
    Replies: 41
    Last Post: 10th May 2007, 07:59 PM
  5. Subbudu passes away
    By app_engine in forum Current Topics
    Replies: 10
    Last Post: 4th April 2007, 04:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •