PDA

View Full Version : TV tid bits



Pages : 1 [2] 3

aanaa
26th September 2009, 09:21 PM
சின்னத்திரை, பெரியத்திரை என்று இரு திரைகளிலும் கோலோச்சியுள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை சூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். தங்கம் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த ரம்யா கிருஷ்ணன் நேற்று (15-09-09) தனது பிறந்த நாளை **உற்சாகத்துடன் கொண்டாடினார். கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட ரம்யா கிருஷ்ணனை நடிகர்கள் விஜயகுமார், ரவி வர்மா, ஜாய், நடிகைகம் சீமா, அனுராதா, மஞ்சு பார்கவி, காவேரி, ஜோதி மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் நாச்சியார், தங்கம் தொடரின் இணை தயாரிப்பாளரும் ரம்யாவின் தங்கையுமான வினயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.

[html:2fea258baa]<div align="center">http://img1.dinamalar.com/cini/CNewsImages/955Ramyakrishnan.jpg </div>[/html:2fea258baa]


நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:15 AM
கலைஞர் டி.வி.க்கு விருது



சென்னை மைலாப்பூர் அகாடமி, ஆண்டுதோறும் சிறந்த நாட்டியம், நாடகம், ஆடல், பாடல்களுக்கென விருதுகள் வழங்கிவருகிறது.

2008-ம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொடராக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``தெக்கத்தி பொண்ணு' தொடர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதோடு சிறந்த சின்னத்திரை இயக்குனராக `தெக்கத்தி பொண்ணு' தொடரின் இயக்குநர் பாரதிராஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆவணப்படமாக, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ``மறக்க முடியுமா'' தேர்வு செய்யப்பட்டு, அதன் இயக்குநர் கவுரிசங்கர் விருது பெற்றார். சிறந்த நடிகராக `தங்கமான புருஷன்' நாயகன் சாய்பிரேம், மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக ``தெக்கத்திப் பொண்ணு' கேமிராமேன் தனபால் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:18 AM
இப்போது நடிகை



`மானாட மயிலாட'நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான நயனாவுக்கு இப்போது சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன.`ஷோக்காலி' என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் 2 படங்களுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி: தினதந்தி

aanaa
4th October 2009, 12:21 AM
நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் நடிகர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் புதுப்புது அர்த்தங்கள், கரிமேடு கருவாயன் உள்ளிட்ட பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் கணேசுக்கும் காதல் இருந்து வந்தது. கலைஞர் ஒளிப்பரப்பாகி வரும் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து ஆடினர். அதனைதொடர்ந்து இருவரும் இணைந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கினர். இருவரும் நட்பாக பழகியது பின்னர் காதலாக மாறியது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து இரு*வரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். கணேஷ்-ஆர்த்தி திருமணம் வரும் அக்டோபர் 23ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

[html:a66e04f4f4]<div align="center">http://img1.dinamalar.com/cini/CNewsImages/1049arthi-1111.jpg</div>[/html:a66e04f4f4]


நன்றி: தினமலர்

aanaa
8th October 2009, 02:16 AM
கேரள கன்னியாஸ்திரி போல் நடிகை புவனேஸ்வரி சுயசரிதை எழுதுகிறார்

http://www.newindianews.com/view.php?2edRVm4c3cc026oOY3e4d4WC0cKca00avJOYA24d4 3AYlvxa0acSc4Cq4de2eYOMo603bc2c4DRXde



புவனேஸ்வரி விவகாரம் நடிகைகள் அப்செட்
http://www.viduppu.com/view.php?2e2YOFDcb42iaHFe4d45Vn5ca0bd5JX24d4T1n530 0aVnLVvde23H5iG0cc3rhYAde

VinodKumar's
8th October 2009, 02:57 AM
நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் நடிகர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் புதுப்புது அர்த்தங்கள், கரிமேடு கருவாயன் உள்ளிட்ட பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் கணேசுக்கும் காதல் இருந்து வந்தது. கலைஞர் ஒளிப்பரப்பாகி வரும் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து ஆடினர். அதனைதொடர்ந்து இருவரும் இணைந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கினர். இருவரும் நட்பாக பழகியது பின்னர் காதலாக மாறியது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து இரு*வரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். கணேஷ்-ஆர்த்தி திருமணம் வரும் அக்டோபர் 23ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.



நன்றி: தினமலர்

Congrats guys !!!

aanaa
8th October 2009, 05:24 AM
சின்னத்திரையில் எல்லா டி.வி.,க்களும் வணிகம் சம்பந்தமான செய்திகளை வழங்கி வரும் நிலையில், வசந்த் டி.வி. தினமும் வர்த்தக செய்திகளை வழங்கி வருகிறது. தினமும் நான்கு முறை ஒளிபரப்பாகி வரும் செய்திகள் முடியும்போது, வணிகச் செய்திகள் தொடர்கிறது. உலக பொருளாதாரத்திலிருந்து உள்ளூர் வர்த்தகங்கள் வரை அனைத்து வகை வணிக பரிமாற்றங்கள் குறித்த செய்திகளும், பங்குச்சந்தை நிலவரம் குறித்த செய்திகளும் முழுமையாக இடம் பெறுகின்றன. அதோடு சந்தைக்கு வரும் புதிய தயாரிப்பு பொருள் பற்றிய அறிமுகமும் இடம் பெறுகிறது.



நன்றி: தினமலர்

aanaa
8th October 2009, 05:25 AM
சினிமா போட்டி நிகழ்ச்சிகளில் இப்போது விஜய் "டிவி'க்கும், "ஜீ' சேனலுக்கும்தான் சூப்பர் போட்டி. இரண்டு சேனல்களுமே, இரவு 9 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சேனலைப் பார்ப்பது என்று பலரும் குழம்புவது நிச்சயம். அந்த அளவுக்கு விஜய் "டிவி'யில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் வாண்டூஸ்கள் அட்டகாசமாக பாடுகின்றனர். எல்லா குழந்தைகளுமே கொஞ்சம் கூட அலட்டாமல், ஏதோ மேடைப்பாடகர்கள் போல பாடியது அருமை. நடுவர்களில் சித்ரா மிதமாக பேசினார் என்றால், மனோ "ஓவர்' உற்சாகம் காட்டியதும் சொல்லித்தான் ஆக வேண்டும்.



நன்றி: தினமலர்

aanaa
8th October 2009, 05:25 AM
டென் ஸ்போர்ட்ஸ் சேனல் கடந்த சில நாளாக திணறிப்போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட சர்வதேச போட்டிகள்; எல்லாவற்றையும் காட்ட முயன்று படாதபாடு பட்டு விட்டது. அமெரிக்காவில் இருந்த யு.எஸ்., ஓபன், இலங்கையில் இருந்து இந்தியா இலங்கை நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி, ஜி.பி.,மோட்டார் ரேஸ், டபிள்யு. டபிள்யு., மல்யுத்தம் என்று ஒரே நேரத்தில் அவ்வளவு போட்டிகளையும் காட்ட மிகவும் தவித்து விட்டது சேனல். என்ன இருந்தாலும், ஒளிபரப்பிலும் கொடி நாட்டியது கிரிக்கெட்தான்.



நன்றி: தினமலர்

R.Latha
13th October 2009, 10:32 AM
கஸ்தூரி தொடரில் மீண்டும் `ஈஸ்வரி ராவ்'



சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் கஸ்தூரி தொடர் 800-வது எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது. இதில் கஸ்தூரியாக நடித்த ஈஸ்வரிராவ், இடையில் சில காலம் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் கஸ்தூரியாக தன் நடிப்பைத் தொடர்கிறார்.

கதைப்படி கஸ்தூரியைக் கொல்ல திட்டமிடப்பட்ட சதியால் கஸ்தூரி தனது முகத்தை தொலைக்க நேர்ந்தது. முக மாற்றம் நேர்ந்த பிறகு கஸ்தூரி கேரக்டரில் ஈஸ்வரிராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க வேண்டியதாயிற்று.. இப்போது விதி கஸ்தூரி வாழ்வில் மீண்டும் விளையாட, இந்த விளையாட்டின் ஒரு நன்மையாக மருத்துவ வல்லுனர்களால் கஸ்தூரிக்கு அவளது முகமே மீண்டும் கிடைக்கிறது.

`திரும்பக் கிடைத்த தனது முகத்தோடு பழைய பிரச்சினைகள் மீண்டும் துரத்த, கஸ்தூரியின் போராட்டம் தொடர்கிறது. ஒரு பக்கம் திரும்பக் கிடைத்த பழைய முகம், மறுபுறம் தன்னை மன்னித்து ஏற்கும்படி உருகி நிற்கும் முன்னாள் கணவன், இன்னொரு புறத்தில் தொலைந்துபோன இந்நாள் கணவன் என போராட்டங்கள் கஸ்தூரியின் வாழ்வில் தொடர்கிறது.

"மீண்டும் ஈஸ்வரிராவே கஸ்தூரியாக வருவதால், உணர்வு ரீதியாக கஸ்தூரியுடன் தொடர்ந்து பயணப்பட்டு வரும் ரசிகர்கள் அவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பில் உருகி நிற்கப்போவது உறுதி!'' என்கிறார், பாலாஜி டெலிபிலிம்ஸின் தென்னிந்திய கிரியேட்டிவ் ஹெட் சுபாவெங்கட்.

கதை: ஏக்தா கபூர், திரைக்கதை: குருசம்பத்,
வசனம்: தவமணி வசீகரன், இயக்கம்: கே. ஷிவா.
தயாரிப்பு: ஏக்தாகபூர், ஷோபாகபூர்.

R.Latha
13th October 2009, 10:48 AM
"அத்திப் பூக்கள்' உள்ளிட்ட சீரியல்களில் பிஸியாக இருக்கும் தேவதர்ஷினி ரஜினியின் "எந்திரன்' படத்தில் நடிக்கிறார். 90 சதவீதம் முடிந்த நிலையில் தேவதர்ஷினி நடிக்கும் காட்சிகள் இப்போதுதான் படமாக்கப்பட்டு வருகிறது. ""இதற்காக இயக்குநர் ஷங்கருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஷங்கர் -ரஜினியின் கூட்டணியில் நடிப்பது பெருமையாக இருக்கிறது'' என பெருமிதம் கொள்கிறார் தேவதர்ஷினி.

aanaa
13th October 2009, 10:03 PM
இந்தி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளைத் தொகுக்கப் போகிறார். ""இந்தியில் புதிதாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனம்தான் அந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது. அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டதால் மட்டுமே தொகுப்பாளினியாக மாறி உள்ளேன். இது சில காலங்கள்தான். படம் தொடங்கியவுடன் அந்தப் பொறுப்பு என்னை விட்டு போய் விடும்'' என்கிறார் ஜெனிலியா.

நன்றி: தினமணி

aanaa
13th October 2009, 10:05 PM
[tscii:39ba8ab17a]

சீரியல்களில் நடித்துக் கொண்டே, மெகா டி.வி.யில் தொகுப்பாளராக இருந்த ஐஸ்வர்யா திருமணத்துக்குப் பின் அந்தப் பணியைத் தொடர முடியாத நிலையில் உள்ளார். இந்நிலையில் சீரியல் நடிகை பிருந்தாதாûஸ தொகுப்பாளராக நியமித்து இருக்கிறது மெகா டி.வி. குறிப்பிட்ட சீரியல்கள் எதுவும் கையில் இல்லாத நிலையில் தொகுப்பாளர் பணியை தொடர்ந்திருக்கிறார் பிருந்தாதாஸ். இதனிடையே சில கேம் ஷோக்களையும் தயாரிக்க போகிறாராம்.




நன்றி: தினமணி [/tscii:39ba8ab17a]

aanaa
13th October 2009, 10:07 PM
திருமணத்துக்குப் பின் பெங்களூரில் 15 நாள்களும், சென்னையில் 15 நாள்களும் வசித்து வருகிறார் மீனா. ""விஜய் டி.வி.யின் நடன நிகழ்ச்சிக்காகத்தான் சென்னை வந்து போகிறேன். திருமணத்துக்குப் பின்னும் சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. கேரக்டர் ரோல் கொண்ட ஒரு கதையை கேட்டிருக்கிறேன். அதில் உடன்பாடு ஏற்பட்டால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார் மீனா




நன்றி: தினமணி .

aanaa
17th October 2009, 06:39 PM
கலைஞர் குரல்



கமல்ஹாசனின் ``உன்னைப் போல் ஒருவன்'' திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி பேசுவது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.

இந்தப் பின்னணி குரலைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் ஒரு கருத்தரங்கமே நடைபெற்றது. இந்த பின்னணி குரல் யாருடையது என்று கமலுக்கே தெரியாமல் இருந்தது.

கடந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக, கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த கமலுக்கு, அந்த பின்னணிக் குரலின் சொந்தக்காரர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

``இசையருவி'' தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் `என்னோடு பேசுங்கள்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சேது தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர். அவரது குரல் மிக தத்ரூபமாக இருந்தது என்று சேதுவை பாராட்டினார், கமல். அன்று அறிஞர் அண்ணாவிற்கு குரல் கொடுத்த சிவகங்கை சேதுராசனின் புதல்வர் தான் இந்த சேது .

அப்பா அண்ணாவுக்கு குரல் கொடுத்தார் அன்று.

மகன் கலைஞருக்கு குரல் கொடுத்தார் இன்று!.


[html:c2549a7ce3]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20091017/TV-05%20scan0036.jpg</div>[/html:c2549a7ce3]

நன்றி: தினதந்தி

aanaa
19th October 2009, 06:07 AM
Popular Carnatic musician and Arasi serial's charming face Anuradha Krishnamurthy is now appearing for the Kalaignar TV Channel's Matrimonial programme. She interviews all the grooms and brides who are willing to enroll themselves through the Tamil Matrimony dotcom. Unlike other channels which organise the very same programme in a different manner, she questions the grooms and brides about the sort of hobby they follow and the way they wanted their jacks and jills. If the grooms needed a particular qualified brides, then she would not hesitate in asking them reason for such demands. When the programme is on, the tv viewers forgetting that they witness a carnatic musician and an actress who is talking in a gentle manner as they never would have dreamt about her intrinsic value.

aanaa
19th October 2009, 06:08 AM
One-time TV serial director now film director and actor Samuthirakani has now good stories with good scripts. The director has become popular after his Nadodigal film never misses to think back his past life. Samuthirakani had the experiences of directing Radaan TV's various tv serials. Hence, the director is now thinking of directing some more serials, for which he has come out with a story as an initiative measure for some other producers to come and produce trusting the calibre of Samuthirakani.

aanaa
19th October 2009, 06:08 AM
Most popular Jaya TV Channel's compere Mahalakshmi who is now doing a role in Radaan's Chellamey is going to act in another mega-serial of the Jaya TV Channel. Mahalakshmi has been popular among the Jaya TV Channel viewers, when she was at the peak of the channel's compere. Mahalakshmi was attracted by many with her glamorous dresses wherever she went to participate in various functions. Besides Mahalakshmi another compere is likely to act in the Jaya TV Channel's new serial.

aanaa
19th October 2009, 06:09 AM
Sethu film fame Abhitha who married a few months ago, has been planning to act in Malayalam film serials. Now she is acting for the Sun TV Channel's mega-serial Thirumathi Selvam. The actor who is now living with her husband in Kerala spends 15 days in a month in Kerala comes back to Chennai to act in the Tamil Serial. She is also acting in another serial Thangamana Purushan. After completing her roles in both the serials, she is going to concentrate only on Malayalam mega-serials.

R.Latha
23rd October 2009, 12:38 PM
த்ரிஷா, லட்சுமிராய், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட மாடல்கள் கலந்து கொண்ட சமீபத்திய பேஷன் ஷோ ஒன்றில் தலைக்காட்டி இருக்கிறார் சோனியா அகர்வால். சினிமாவுக்கு மீண்டும் வருவதற்காகதான் இது போன்ற ஷோக்களில் கலந்து கொள்கிறாராம் சோனியா. விரைவில் சினிமா பிரவேசம் இருக்குமாம். கதாநாயகியாக சோனியாவை பார்த்தாலும் பார்க்கலாம் என்கிறது அவரது தரப்பு.

"கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது விஜய் டி.வி. "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவர்களில் குறிப்பிட்ட சிலர் இதில் முக்கிய வேடம் ஏற்கிறார்கள். தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் மண் சார்ந்த கதையாக இது உருவாகியிருக்கிறது. பள்ளி வாழ்க்கையின் குதூகலமும், அனுபவங்களும்தான் கதை களன். ஜெரால்டு இயக்குகிறார்.

வெளிநாட்டு சினிமாக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சியின் பணி தொடர்கிறது. தமிழ் சினிமா பக்கமே திரும்பாமல் வெளிநாட்டு சினிமாக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப் போகிறார்களாம். இதைத் தவிர ஜாலி, கேலி, விளையாட்டு என நிர்வாகம் புதுமையடைகிறது. இந்த ஆபரேஷனுக்கு தலைமை சௌமியா அன்புமணி. மக்கள் தொலைக்காட்சியை மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதுதான் அவரின் முதல் வேலையாம்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதை சின்மயி தவிர்க்கவில்லை. எந்த நிகழ்ச்சிகள் ஆனாலும் "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் பாடிய தன் முதல் பாடலான ""வெள்ளைப் பூக்களை'' பாடி விடுகிறார். அதே போல் வாய்ப்பு கொடுத்த ரஹ்மானுக்கும் வைரமுத்துவுக்கும் நன்றி சொல்லி விடுகிறார். இவரின் அடுத்த இலக்கு தனியாக ஆல்பம் போடுவதுதானாம். அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டார்.

இயக்குநர் பாலசந்தரின் "சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடரை முடித்து விட்டார் ரம்யா. பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களை முடித்த இவர் சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ""கேரக்டர் ரோல் மட்டுமே என் இலக்கு. சீரியல்களில் நடித்த அனுபவங்கள் அதற்கு துணை புரியும் என நினைக்கிறேன். சீரியல்களிலிருந்து சினிமாவுக்கு பயணமாக காத்திருக்கிறேன்'' என்றார் ரம்யா.

"கோலங்கள்' சீரியலில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தீபா வெங்கட் சினிமாவில் டப்பிங் பேசுவதில் பிஸியாகிறார். ""கோலங்கள்' சீரியலில் மட்டுமே நடிப்பதற்கு மக்களிடம் உள்ள எதிர்பார்ப்புகள்தான் காரணம். தொடர்ந்து ஆறு வருடங்களாக முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்பதால் வேறு எதிலும் நடிக்க விருப்பமில்லை. சீரியலைத் தவிர டப்பிங்கில் கவனம் செலுத்துகிறேன். "அறுவடை' படத்தில் சிநேகாவுக்கு நான்தான் குரல் கொடுக்கிறேன்'' என்றார் தீபா.

நெருங்கிய தோழிகளான ரோகிணியும், ரேவதியும் ஜீ டி.வி. நிறுவனத்துக்காக தயாரித்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் சொர்ணமால்யாதான் ஹீரோயின். பொது பிரச்னைகள் மற்றும் சமுக சேவைகளில் ஆர்வம் காட்டும் இருவரும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கப் போகிறார்கள். இதை தவிர இவர்களின் தற்போதைய கவனம் மேடை நாடகம்.

விஜய் டி.வி.யின் "அன்பே வா' சீரியல் நாயகி சோனு, மலையாள சீரியலுக்கும் விஜயம் செய்திருக்கிறார். சூர்யா டி.வி.க்காக தயாரிக்கப்பட்டுள்ள "துலாபாரம்' சீரியலிலும் அவர்தான் நாயகி. ""சென்னை கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்துக் கொண்டு இரு சீரியல்களிலும் நடிப்பது சிரமமாகத்தான் இருக்கிறது. "துலாபாரம்' மலையாள சீரியல் உலகில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது. சினிமா பற்றி யோசிக்கவில்லை'' என்றார் சோனு.

லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கும் அர்ஜுன் மகள் அஞ்சனாவை சக மாணவிகள் ஆக்ஷன் கிங் ஆர் ஜே என்றுதான் அழைக்கிறார்கள். குச்சுப்புடி, பரதம், கராத்தேயில் தேர்ச்சி பெற்றவராக உள்ள இவருக்கு கதகளியும் தெரியுமாம். அர்ஜுனின் சமீபத்திய காஸ்ட்யூம் வடிவமைப்பாளர் இவர்தானாம்.

aanaa
3rd November 2009, 03:35 AM
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது!
"தங்கம்' தொலைக்காட்சி தொடரில் ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்துகொள்ளும் கலெக்டர் வேடத்தில் நடித்திருப்பவர் கே.கே. அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது சுவாரஸ்யமான ஒரு தகவல். அது என்ன என்பதை அவரே சொல்கிறார்.

""நான் "பாலாஜி டெலிஃபிலிம்ஸ்' நிறுவனத்துக்கு போயிருந்தேன். அப்போ எனக்கு ஃபோன் வந்தது. நான் ஃபோன் எடுத்துப் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அந்த ஆள் நம்மளையே பார்க்கிறாரேன்னு நான் வேறு பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தேன். அப்போதும் அவர் என்னை கவனித்துக் கொண்டிருந்தார். நான் பேசி முடித்ததும் அந்த ஆள் என் அருகே வந்து, ""உங்களுக்கு நடிக்க விருப்பமா?''னு கேட்டார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இருந்தது எனக்கு! தலையாட்டினேன்.

""நீங்க இப்பவே ஒருத்தரை போய் சந்திக்கணும்''னு சொல்லி ஒரு முகவரி கொடுத்துட்டு அவர் ஃபோன்ல யாரிடமோ, ""நமக்கு ஹீரோ கிடைச்சாச்சு'' என்றார். எனக்கு ஒன்னும் புரியல. நம்மளை வைத்து காமெடி கீமெடி பண்றாங்களா?ன்னு முழிச்சேன். இருந்தாலும் அவங்க கொடுத்த முகவரிக்குச் சென்றேன். அங்கே ரம்யாகிருஷ்ணனின் தங்கை வினயா கிருஷ்ணன் இருந்தார். டி.வி.நிறுவனம் என்றதும் எனக்கு பக்குன்னு இருந்தது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வராதா?ன்னு முயற்சி செய்துகிட்டிருந்த எனக்கு டி.வி. சீரியல் என்றதும் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் பெரிய நடிகையான ரம்யாகிருஷ்ணனுடன் நடிக்கும் வாய்ப்பு என்றபோது மறுக்கவும் மனம் வரவில்லை. உடனே ஒத்துக்கிட்டேன்.

நான் நடித்த கேரக்டருக்காக ஒன்றரை மாதக் காலம் தேடியிருக்காங்க. யாரும் பொருத்தமா அமையல. அதனால் என்னைக் கிடைத்த மறு நாளே ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க. என்னைப் பார்த்து, ""நடிக்க விருப்பமா?''ன்னு கேட்டவர் ஸ்கிரிப்ட் ரைட்டர் அசோக் குமார். என்னை நடிக்கத் தேர்வு செய்தவர் ரம்யாகிருஷ்ணனின் தங்கை வினயா கிருஷ்ணன்.

இன்னைக்கு எங்கே போனாலும் ரசிகர்கள், ""நீங்க கலெக்டர்தானே?''னு கேட்கிறாங்க. மக்களுக்கு என்னை நல்லா அடையாளம் தெரியுது. அந்தளவுக்கு அந்தப் பாத்திரம் மக்களிடம் "ரீச்' ஆகியிருக்கு. இதுவரைக்கும் பதிமூன்று நாள்தான் நடிச்சிருக்கேன். அதுக்குள்ள இவ்வளவு புகழ் கிடைக்கும்ன்னு நான் எதிர்பார்க்கல.

""நீங்க ஐ.ஏ.எஸ். படிச்சவரா?''ன்னு சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ஒருத்தர் கேட்டார். உண்மையில் நான் படிக்கும்போதிலிருந்தே நடிப்புன்னு இருந்ததால எம்.ஏ.எக்கனாமிக்ஸ் வரைதான் படிச்சேன். அவர் அப்படி கேட்டதும் நான் ஐ.ஏ.எஸ். படித்த மாதிரி இருந்தது.

மலையாளத்தில் வில்லன், அண்ணன், தம்பின்னு நாற்பத்தி ரெண்டு படங்களில் நடித்து விட்டேன். தமிழில் வில்லனாக நடிக்கணும்னு வந்திருக்கேன். கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் கண்களில் பட மாட்டோமா? நமக்கு வாய்ப்பு கிடைக்காதா? என்று முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். அதற்குள் இந்த கலெக்டர் வாய்ப்பு வந்து என்னை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கு. இருந்தாலும் சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்து வர்றேன். என் திறமையை நிரூபிக்கக் கூடிய நல்ல வேடங்கள் கிடைத்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்'' என்றார் கே.கே. என்ற கிருஷ்ணகுமார்.

இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. காரணம், நடிகர் ஜெயராம் போன்று நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். பிழைத்துக் கொள்வார்.

aanaa
3rd November 2009, 03:37 AM
சங்கீத பயிற்சியில் சொர்ணமால்யா

"தெற்கத்திப் பொண்ணு' மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க ஜீ.டி.விக்காக நடித்த "யாதுமாகி நின்றாய்' இன்னும் ஒளிபரப்பாகவில்லை; இதையடுத்து தற்போது கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறார் சொர்ணமால்யா. நாட்டியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இதற்காக கும்பகோணத்தில் உள்ள குரு ஒருவரிடம் வாரத்தில் இரு நாள்கள் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

R.Latha
11th November 2009, 01:21 PM
ரூ.11/4 கோடியில்...



சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அந்த சின்னத்திரை நடிகை சென்னை வளசரவாக்கத்தில் ரூ.11/4 கோடியில் மூவாயிரம் சதுர அடி கொண்ட ஒரு ஆடம்பர பிளாட் வாங்கியிருக்கிறார்.

aanaa
12th November 2009, 05:37 AM
[tscii:5f28a86feb]அந்த நடிகர் எப்போதும் கழுத்துல இருக்கிற செயினை கடிச்சிகிட்டே இருக்காரே ஏன்?

தெரியலையே?

அவரு ‘நகை’ சுவை நடிகர். அதனாலதான்![/tscii:5f28a86feb]

aanaa
20th November 2009, 06:46 AM
For the first time in the history of giving away awards to the excellent serials, directors and actors of the Tamil Screen, a panel consisting of judges like directors Ezhil, Ramadoss, lyricist Kamakotiyan, music director Sirpi and the dance master Kadhal Kandhas will nominate three persons, asis being done Grammy Awards.

'Vision Time' Ramamurthy and small screen actor Vishvaa have undertaken the task of announcing the awards, from the 16 serials that were telecast in the year 2008.

The awards will be announced on November 14 and will be presented on the same day at a function to be held at the Chennai Kamarajar Arangam.

aanaa
20th November 2009, 06:47 AM
[tscii:6f21aadae8]
J K Ritheesh whose film Nayagan which ran for more than 100 days won the Parliamentary elections on a DMK ticket from Ramnad. Now he is donning a new avatar as the producer of the mega -serial, Aandal, for Kalaignar TV channel which will begin telecast from November third or fourth week. According to K.Suresh, Executive Producer, actress Suganya dons the role of an IPS officer.

Speaking to the Deccan Chronicle, Suresh said that Ritheesh wanted the role of Suganya should be different from the stereotyped women police officer. He was very particular that the character should not have one dimension of a tough cop but also must very kind to those who are good. Story writer M.M.S.Murthy and Raj Prabhu who has written the screenplay has woven an interesting plot on these lines, ” said Suresh.

When contacted J.K.Ritheesh who had just arrived from Delhi told DC “ My wife has been telling me to produce a serial like this quite a long time. When the story was narrated, first I spoke to the Kalaignar TV and they have promised me to provide me a slot in the primetime. I am happy the way the serial has shaped out,"

As per the storyline, Suganya as Aandal as a citizen takes up the cudgels against those who commit atrocities on women and the helpless. She realises that she has her limitations and hence becomes an IPS officer and achieves what she aimed to do. “The story also a romantic angle set in the backdrop of a village. Leading artistes like Yugendran, Devi Priya, Sumangali, Latha, Rishi and Sivan Srinivasan play pivotal roles” says Suresh.

Ritheesh juggling his time between his film career and his duties as an MP has now added this new venture to his busy schedule.‘ I keep in touch with my production office on what scene they are going to shoot for the day and sometimes I might suggest changes. I played an offbeat role of a police officer in Nayagan and that was appreciated. In fact the inspiration for the role of Aandal is my wife who without my help manages the home and my public life demands,” says Ritheesh.

"So far, shoot more than 100 episodes have completed on a very tight budget, ” says the MP who is confident that his debut venture on small screen too will click.

Viduthalai is directing the Aandal for the Aarick Media Productions. [/tscii:6f21aadae8]

aanaa
20th November 2009, 06:52 AM
One-time TV serial director now film director and actor Samuthirakani has now good stories with good scripts. The director has become popular after his Nadodigal film never misses to think back his past life. Samuthirakani had the experiences of directing Radaan TV's various tv serials. Hence, the director is now thinking of directing some more serials, for which he has come out with a story as an initiative measure for some other producers to come and produce trusting the calibre of Samuthirakani.

aanaa
20th November 2009, 06:52 AM
Most popular Jaya TV Channel's compere Mahalakshmi who is now doing a role in Radaan's Chellamey is going to act in another mega-serial of the Jaya TV Channel. Mahalakshmi has been popular among the Jaya TV Channel viewers, when she was at the peak of the channel's compere. Mahalakshmi was attracted by many with her glamorous dresses wherever she went to participate in various functions. Besides Mahalakshmi another compere is likely to act in the Jaya TV Channel's new serial.

aanaa
20th November 2009, 06:53 AM
Sethu film fame Abhitha who married a few months ago, has been planning to act in Malayalam film serials. Now she is acting for the Sun TV Channel's mega-serial Thirumathi Selvam. The actor who is now living with her husband in Kerala spends 15 days in a month in Kerala comes back to Chennai to act in the Tamil Serial. She is also acting in another serial Thangamana Purushan. After completing her roles in both the serials, she is going to concentrate only on Malayalam mega-serials.

aanaa
21st November 2009, 11:58 PM
[tscii:d05755e6ef]

செல்போன்... 150 ரூபாய்...



சீரியல்களில் இப்போதெல்லாம் கதையை விடவும் சீரியசான விஷயம் செல்போன்கள். டைரக்டர் காட்சியை விவரித்து நடிகை நடிக்கத் தயாராகிவிடுவார். டைரக்டர் `ரோல்' என்று குரல் கொடுக்கும் நேரத்தில் சரியாக நடிகையின் கையில் உள்ள செல்போன் குரல் கொடுக்கும்.

உடனே நடிக்கும் மூடில் இருந்து மாறுபடும் நடிகை, டைரக்டரிடம் `ஒரு நிமிஷம் சார்' என்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளிச் சென்று பேசுவார். பேசுவார்..பேசிக்கொண்டேயிருப்பார்.

நடிகை இப்படி பேசிக்கொண்டிருப்பதில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டுமே... அதற்காக இரண்டு உதவி இயக்குனர்கள் நடிÛகையின் பார்வையில் படுகிறமாதிரி நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் நடிகை அவர்களை கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ள மாட்டார். `தானுண்டு தன் செல்லுண்டு' என்று பேசுவதை தொடர்ந்து கொண்டிருப்பார்.

நடிகை ஒருவழியாக பேசிமுடித்து ஷாட்டுக்கு வரும்நேரத்தில் நடிகையுடன் அந்தக்காட்சியில் நடிக்கவேண்டியவர்கள் மட்டுமின்றி இயக்குனரும் சோர்ந்து போய் விடுவார்.

நடிகைகள் என்றில்லை., சிலநடிகர்களும் செட்டுகளில் இயக்குனருக்கு `செல்போன் டென்ஷன்' கொடுத்தபடி இருக்கிறார்கள்.

இதை முதன்முதலில் சரி செய்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு. அவர் தயாரித்து நடித்த தொடர்களில் யாராவது படப்பிடிப்பு நேரத்தில் செல்லில் பேசினால் உடனடியாக 150 ரூபாய் அங்கேயே வசூலிக்கப்படும். இதனால் குஷ்புவின் செட்டில் செல்போன் சத்தத்தையே கேட்கமுடியாத நிலை ஏற்பட்டது நிஜம்.

தயாரிப்பாளர் `சத்யஜோதி' தியாகராஜன் தயாரிக்கும் தொடர்களின் படப்பிடிப்பு செட்களிலும் செல் ஒலி கேட்பதில்லை. இயக்குனரே படப்பிடிப்புக்கு வந்ததும் முதல்வேலையாய் செல்லை அணைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகி விடுகிறார்.

தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபல தயாரிப்பாளர்களின் குமுறலும் இந்த செல்போன் தொல்லை பற்றியது தான்.

இதற்கு பதிலளித்த குஷ்பு தனது தொடர்கள் நடக்கும் செட்களில் செல்போன் பேசுவோருக்கு பைன் போட்ட கதையை விலாவாரியாக விவரித்தார். ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதே ரூட்டில் போனால் `செல்போன் தொல்லை செட்டுக்குள் இல்லை' என்ற நிலை வந்துவிடும் என்று தலைவர் குஷ்பு சொன்னபோது தயாரிப்பாளர்களிடம் இருந்து எழுந்தது பலத்த கரகோஷம்.



நன்றி: தினதந்தி [/tscii:d05755e6ef]

aanaa
22nd November 2009, 12:05 AM
. நடிகர்-நடிகை தேர்வில் மோசடி
சிறந்த நடிகை விருதை திருப்பி அனுப்பினார் நடிகை ராதிகா


சென்னை, நவ.19-

சிறந்த டி.வி. நடிகர்-நடிகைகள் தேர்வில் மோசடி நடந்து இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட விருதை நடிகை ராதிகா திருப்பி அனுப்பினார்.

சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சீரியலில் சிறந்த நடிகர்- நடிகை மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அரசி சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை ராதிகாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கப்பட்ட பின்னணியில் இருந்த அணுகுமுறை தனக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்று கருதிய ராதிகா, அந்த விருதை சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கே திருப்பி அனுப்பி விட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மனதை பாதித்த விருது

கடந்த 14-ந் தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு (பெஸ்ட்) சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், கதை, வசனகர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன என்பதும் தெரியவில்லை.

தகுதியும் திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து, அதை படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

திருப்பி அனுப்புகிறேன்

எனவே, தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும், இதேபோல் திறமை வாய்ந்த பல பேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி இடம் தரவில்லை. இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடம் திருப்பி ஒப்படைக்கிறேன்.

மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்ளிட்ட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ராதிகா கூறியிருக்கிறார்.


நன்றி: தினதந்தி



[html:46fbca4972]<div align="center"><img src="
http://www.dinamani.com/Images/article/2009/11/18/19tv.jpg"></div>[/html:46fbca4972]

சிறந்த சின்னத்திரை நடிகையாக ராதிகா தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்புடன் விஷன் புரோ மற்றும் காஸ்மிக் டவுன் நிறுவனங்கள் இணைந்து 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை கடந்த சனிக்கிழமை வழங்கியது.

இதில் சிறந்த நடிகைக்கான விருது "அரசி' தொடருக்காக ராதிகாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது "திருமதி செல்வம்' தொடருக்காக சஞ்சய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக குமரன் தேர்வு செய்யப்பட்டார். "திருமதி செல்வம்' தொடருக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த திரைக்கதைக்கான விருதை "கோலங்கள்' திருச்செல்வம் பெற்றார். இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த வில்லி நடிகைக்கான விருது நடிகை வடிவுக்கரசிக்கும், வசனகர்த்தாவுக்கான விருது பாஸ்கர் சக்திக்கும், நகைச்சுவை நடிகருக்கான விருது ஜெயமணிக்கும், ஒளிப்பதிவாளருக்கான விருது வசீகரனுக்கும் வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் நடிகை எஸ்.என்.வரலட்சுமிக்கு வழங்கப்பட்டது.

விழாவில் நடிகர்கள் ஜீவா, பாக்யராஜ், டெல்லி கணேஷ், நடிகைகள் குஷ்பு, தேவயானி, சங்கீதா, அபிதா, இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள




நன்றி: தினமணி

aanaa
26th November 2009, 07:05 AM
தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, விஷன் பீரோ ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் காஸ்மிக் டவுன் இணைந்து 2009ஆம் ஆண்டிற்கான சின்னத் திரை நெடுந்தொடர்களுக்கான விவேல் சின்னத்திரை விருது வழங்கப்பட்டது. இதில் திருமதி செல்வம் தொடருக்காக நடிகர் சஞ்சீவ் சிறந்த நடிகர் விருது பெற்றார். நடிகர் ஜீவா மற்றும் நடிகை சங்கீதா ஆகியோர் இணைந்து விருதை வழங்கினார்கள். சிறந்த இயக்குநர் மற்றும் கதாசிரியருக்கான விருதை திருமதி செல்வம் தொடருக்காகக் குமரன் பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதைக் கோலங்கள் தொடருக்காகத் திருச்செல்வம் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை டி.இமானுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருதை யுகபாரதியும், சிறந்த நடன ஆசிரியர் விருதை கலாவும் தட்டிச் சென்றனர். வசனத்துக்கான விருதைப் பாஸ்கர் சக்திக்கும், சிறந்த புதுமுகத்துக்கான விருதை லியாகத் அலிகானுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வி.சி.ஜெயமணியும் பெற்றனர். சிறந்த வில்லனுக்கான விருது அஜய்க்கும், சிறந்த வில்லிக்கான விருது வடிவுக்கரசிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிக்கருக்கான விருதை டெல்லி கணேஷ் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வசீகரன் பெற்றார். கோலங்கள் தொடரைத் தயாரித்த விகடன் ஒளித்திரை பா.சீனிவாசனுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. இத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருது, பழம்பெரும் நடிகை எஸ்.என்.லஷ்மிக்கு வழங்கப்பட்டது.

aanaa
26th November 2009, 07:08 AM
சினிமா வாய்ப்பு குறைந்ததும் திருமணம் செய்து கொள்ளும் நடிகைகள் பட்டியலில் இணைந்த நடிக*ை கஸ்தூரி, திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதன் பின்னர் குடும்ப பிரச்னை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிய அவர், ரீ-எண்ட்ரிக்காக காத்திருக்கிறார். ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் என்றாலும் ஓ.கே., சொல்லி விட வேண்டியதுதான் என்ற முடிவோடு கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்த அவருக்கு கதிர்வேல் படத்தில் குத்தாட்டம் போட வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த பாத்திரத்தை சரியாக செய்து முடித்திருக்கும் கஸ்தூரியை இப்போது சின்னத்திரை வாய்ப்புகள் சுற்றி வருகின்றனவாம். சின்னத்தி*ரை இயக்குனர்கள் பலர் கஸ்தூரியை அணுகி கதை சொல்லி இருக்கிறார்களாம். சின்னத்திரைக்கு இன்னமும் ஓ.கே., சொல்லாதது ஒருபுறம் இருந்தாலும், சினிமா விழாக்களில் தனது கவர்ச்சி மேனியை காட்டிக் கொண்டுதான் மேடையேறி வருகிறார் கஸ்தூரி. அதற்கு சமீபத்தில் நடந்த பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒரு சின்ன சாம்பிள்! (வாய்ப்பு வாங்காமல் விட மாட்டார் போலிருக்கி*றதே?)

[html:3fb09cbc6a]<div align="center">http://img1.dinamalar.com/cini/CNewsImages/1317kasthuri.jpg</div>[/html:3fb09cbc6a]



நன்றி: தினமலர்

aanaa
26th November 2009, 07:10 AM
இளமை புதுமை நிகழ்ச்சியில் தோன்றி பறக்கும் முத்தம் கொடுத்து சின்னத்திரை ரசிகர்களை கிறங்கடித்த சொர்ணமால்யா திருமணத்துக்கு பிறகு சின்னத்திரையில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு சில சினிமாக்களில் தலைகாட்டிய அவர் இப்போது மீண்டும் சின்னத்திரையில் தோன்ற உள்ளார். இந்த முறை சீரியல் நாயகி. ஸீ தமிழ் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் யாதுமாகி நின்றாய் என்ற நெடுந்தொடரில் சொர்ணமால்யா நடிக்கிறார். திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகும். இதில் சொர்ணமால்யாவுடன் நீரஜா, ஸ்ரீரேகா, காத்தாடி ராமமூர்த்தி, நரேந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். சரவணன் இந்தத் தொடரை இயக்குகிறார். மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் யாதுமாகி நின்றாய் தொடரை தயா*ரித்துள்ளது. வழக்கமான அழுகாச்சி தொடராக இல்லாமல், குற்றமே செய்யாத சில நிரபராதிகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தண்டிக்கப்படும் துர்பாக்கிய சூழலை கதைக்களமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. பெண்கள்தான் இந்தத் தொட**ரின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒரு போலீஸ் அதிகா*ரி, ஒரு சமூக சேவகி, ஒரு வழக்குரைஞர்... இவர்கள் தங்களுடைய சவால்களை எதிர்கொள்ளும்போது கணவனும், குடும்பமும் அதற்கு உறுதுணையாக இருந்தார்களா? என்ற குடும்ப சென்டிமெண்டும் இந்த*த் தொட*ரில் உண்டு.

இ*த்தொட*ரி*ன் *கி*ரியே*ட்டி**வ் பொறு*ப்பை நடிகை ரேவ*தியு*ம், ரோ*கி*ணியு*ம் பா*ர்*த்து*க் கொ*ள்*கிறா*ர்க*ள் எ*ன்பது எக்ஸ்ட்ரா தகவல்.

aanaa
26th November 2009, 07:11 AM
1990ல் இருந்து 2000 வரை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே அவர் நடித்தாலும், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். இதன் மூலம் நிறைய சம்பாதிக்கிறாராம். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ரூ. 75 லட்சம் சம்பளம் நிர்ணயித்துள்ளார். தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் வாங்குகிறார். கூடுதலாக இரவில் நடிக்க ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சம் வாங்குகிறார்.

aanaa
12th December 2009, 10:45 PM
பாடல் வாய்ப்புக்கு காத்திருக்கும் ஷில்பா
Shilpa waiting for cinema chance
விஜய் டிவியின் நம்ம வீட்​டுக் கல்​யா​ணம் நிகழ்ச்சியின் தொகுப்​பா​ளினி ஷில்பா கர்​னா​டிக்,​ ஹிந்​துஸ்​தானி இசை​யில் தேர்ச்சி பெற்​ற​வ​ராம். கேர​ளத்தை இருப்பிடமாக கொண்ட இவர்,​ தற்​போது தமிழ் சினி​மாக்​க​ளில் பாடும் வாய்ப்பை எதிர்​நோக்கி இருக்​கி​றார். இதற்​காக தான் பாடிய பாடல்​கள் அடங்​கிய சி.டி.யை தெரிந்த இயக்​கு​நர் மற்​றும் தயா​ரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்​தி​ருக்​கி​றா​ராம். "பாட​கி​யா​னார் ஷில்பா' என்ற செய்​திக்​காக ஆர்​வ​மு​டன் காத்​தி​

நன்றி: தினமலர்

aanaa
19th December 2009, 09:09 PM
சாதனை விருது

இதுவரை 12 ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் இயக்கி சாதனை செய்தவர் டைரக்டர் சுந்தர்கே.விஜயன். சின்னத்திரையின் ஜனரஞ்சக இயக்குனரான சுந்தர்கே.விஜயனுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. "என் கலைப்பணிக்கு அரசு தந்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதை எடுத்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார், இயக்குனர்.

நன்றி: தினதந்தி

aanaa
19th December 2009, 09:10 PM
நேற்று இல்லாத மாற்றம்

நடிக்காத சீரியல்களே இல்லை என்கிற அளவுக்கு பிசியாக இருந்து கொண்டிருந்த தீபா வெங்கட் இப்போதெல்லாம் சீரியல் வாய்ப்பு என்றாலே தவிர்த்து விடுகிறார். நடிகைகள் ரேவதி, ரோகிணி மாதிரி பட்டிமன்றம், பெண்கள் அரங்கம் என்று தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார். நடிகையின் இந்த மாற்றத்துக்கு காரணம் புரியாமல் சீரியல் இயக்குனர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
26th December 2009, 08:11 PM
திரையுலகின் பொற்காலம்



தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பொற்காலமாக இருந்தது, எம்.ஜி.ஆர்.-சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் கோலோச்சிய காலகட்டம். 1971-வரை இந்த சாதனைக்கலைஞர்கள் காலத்தில் வந்த படங்களைப் பற்றிய ஒரு நேரடி கண்ணோட்ட நிகழ்ச்சி, `பொற்காலம்' என்ற பெயரில் தயாராகிறது. இதற்காக ஏவி.எம்.மில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பில் டைரக்டர் ஸ்ரீதரின் காலத்தால் அழியாத படங்களில் ஒன்றான `காதலிக்கநேரமில்லை' படம் பற்றிய பகிர்தல் நடந்தது. நடிகர்கள் ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரா இருவரும் இந்தப்படத்தின் சிறப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர். அதுவே படம்பற்றிய நல்லதொரு விமர்சனமாகவும் இருந்தது.

இந்தப் படம் குறித்த விவாதத்தின்போது படத்தில் நடித்த நட்சத்திரங்கள், பங்காற்றிய தொழில் நுட்பக்கலைஞர்களையும் அழைத்திருந்தார்கள். படத்தில் நாயகன்-நாயகியாக நடித்த ரவிச்சந்திரன்- காஞ்சனா வந்திருந்தார்கள். டைரக்டர் ஸ்ரீதரின் வலதுகரமாக இருந்த சி.வி.ராஜேந்திரன், சித்ராலயா கோபு கலந்து கொண்டார்கள்.

படத்தில் நாகேசுடன் காமெடிக் கலாட்டா செய்த சச்சு முதல்ஆளாக வந்துவிட்டார். நாகேஷ் சார்பில் அவர் மகனும் நடிகருமான ஆனந்தபாபு, டி.எஸ்.பாலையா பற்றி பேச அவது மகன் ஜுனியர்பாலையாவும் அரங்கில் இருந்தார். படம் பற்றிய அலசலின்போது நடித்தவர்களும் பங்காற்றியவர்களும் தங்களின் அன்றைய உணர்வை நெஞ்சம் நெகிழ பகிர்ந்து கொண்டார்கள்.

காமாட்சிவிஷன் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியில் பாகப்பிரிவினை, கர்ணன், பார்த்தால்பசிதீரும், அன்பே வா, தில்லானா மோகனாம்பாள் என அடுத்தடுத்த படங்கள்பற்றிய பகிர்தலும்தொடரவிருக்கிறது.

விரைவில் தனியார் சேனல் ஒன்றில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
26th December 2009, 08:11 PM
டைரக்டர் ஆனாலும்...

சின்னத்திரையில் நடிக்கவரும் முன்பே `மோகமுள்' என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் அபிஷேக். தொடர்ந்து பெரியதிரை வாய்ப்பு இல்லாத சூழலில் சின்னத்திரையில் இருந்துவந்த வாய்ப்புக்களை கெட்டியாக பிடித்துக் கொண்டார். கோலங்கள் தொடர் ஒரு சிறந்த நடிகராக அவரை வெளிப்படுத்தியது.

இப்போது மீண்டும் பெரியதிரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார், அபிஷேக். இம்முறை நடிகராகஅல்ல...இயக்குனராக! ஒரே வீச்சில் `கதை' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

"இனி சினிமாதானா?'' அபிஷேக்கிடம் கேட்டால்...

"எனக்கு பணம், புகழ் எல்லாம் தந்தது சின்னத்திரை தான். எனவே சினிமாவில் இயக்குனராக எத்தனை பிசியாக இருந்தாலும் சின்னத்திரையில் இருந்துவரும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் அழைப்பைக் கூட தவிர்க்க மாட்டேன்'' என்கிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
26th December 2009, 08:13 PM
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

வரும் வியாழன் டிசம்பர் 31 முதலே பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நேயர்களுக்காக ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

31-ந் தேதி இரவு 10 மணிக்கு `நடந்தது என்ன' ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சிறந்த பத்து பிரபலமானவர்களை வெவ்வேறு துறைகளிலிருந்து அழைத்து வந்து 2009-ம் ஆண்டில் நடைபெற்ற சிறந்த பத்து நிகழ்வுகளை பற்றி நினைவு கூர்ந்து வழங்கவுள்ளனர். சினிமா, அரசியல், சமுதாய வாழ்க்கை முறை, கல்வி, சீர்திருத்தம் என எல்லா வகையிலும் இந்த நினைவு கூறல் இருக்கும்.

2010-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி-1 அன்று காலை முதல் வித்தியாசமான பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது விஜய் டிவி.

காலை 9 மணிக்கு `காபி வித் அனு சீசன்-3' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக `ஆயிரத்தில் ஒருவன்' ஜோடி கார்த்தி- ரீமாசென், படத்தின் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் பங்குபெறுகிறார்கள்.

காலை 10 மணிக்கு `புத்தாண்டு சிறப்பு `நீயா? நானா?' நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் புத்தாண்டு பலன்கள், அவரவர் ராசிகளுக்கு ஏற்ற நன்மைகளையும் எடுத்துக்கூற ஜோதிட நிபுணர்கள் வருகின்றனர்.

நன்றி: தினதந்தி

aanaa
26th December 2009, 08:20 PM
ஆரிக் மீடியா சார்பில் நடிகரும் எம்,பியுமான ஜே.கே.ரித்தீஸ் கலைஞர் டிவியில் விரைவில் சுகன்யா நடிப்பில் வெளிவர இருக்கும் ஆண்டாள் சீரியலை வெகு விமரிசையாக எடுத்து முடித்திருக்கிறார். ஜனவரி 2ம் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாக விருக்கிறது.இதையடுத்து தனது பலவருட நண்பர் ஆதம் பாவா இயக்கத்தில் வேட்டைப் புலி திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார்.இந்தி மற்றும் தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தாயாராக உள்ளது. பூஜையை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ், இந்தியில் தயாராவதால் - இரு மொழிகளிலும் உள்ள முக்கிய நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.


நன்றி: தினமலர்

aanaa
26th December 2009, 08:21 PM
சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக இருந்து வந்த நடிகை தேவயானி, இப்போது எல்லா சீரியல்களையும் முடித்து கொடுத்து விட்டு அடுத்த களத்திற்கு செல்ல தயாராகி விட்டார். சின்னத்திரையில் இருந்து *மீண்டும் வெள்ளித்திரைக்கு வாருங்கள் என்று பலரும் தேவயானிக்கு அழைப்பு விடுக்கிறார்களாம். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் தற்போது அம்மணி தினமும் 5 கதைகளை கேட்டு வருகிறாராம். கதையோடு, தனது கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வாராம். விரைவில் தேவயானியை பெரிய திரையில் பார்க்கலாம்!


நன்றி: தினமலர்

aanaa
26th December 2009, 08:21 PM
பிரபுதேவா நடனப்புயலாக சுழன்று கொண்டிருந்த வேளையில் சோனி டி.வி.,யின் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார். அதன் பின்னர் நடிப்பு - இயக்கம் என பிஸியாகி விட்டதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டு விட்டார். இந்நிடலயில் சோனி டி.வி., மீண்டும் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக்க முயற்சி *மேற்கொண்டு வருகிறதாம். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் பிரபு*தேவாவும் இந்நிகழ்ச்சியை புதுப்பொலிவுடன் தொகுத்து வழங்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.


நன்றி: தினமலர்

R.Latha
30th December 2009, 02:37 PM
திக்... திக்... ஷூட்டிங்

First Published : 27 Dec 2009 02:38:00 PM IST

Last Updated :

சின்னத்திரையில் வரும் "செல்லமே',​ "இதயம்',​ "பவானி',​ "தென்றல்'தொடர்களையும்,​ பெரியதிரையில் "ஜக்குபாய்',​ "புகைப்படம்',​ "நான் மகான் அல்ல' போன்ற படங்களையும் கைவசம் வைத்துக் கொண்டு மிகவும்,​​ சுறுசுறுப்பாகவும்,​​ பரபரப்பாகவும் இருக்கும் நீலிமாராணியை படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்.

உங்கள் ​ நிஜப்பெயரே நீலிமாராணி தானா?​​

அப்பா அம்மா வைத்த நிஜப்பெயர் ​ நீலிமா.​ இடையில் அப்பாதான் ராணியைச் சேர்த்தார்.​ இப்போ மறுபடியும் ​ நீலிமா மட்டும்தான்.​ ​ ​

செல்லமே தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படி?​​

ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு.​ எல்லாருமே பெரிய ​ ஆர்ட்டிஸ்ட்.​ ஒவ்வொரு ​ பிரேமிலும் அவங்ககூட நிற்கும்போது ​ நல்லா நடிக்கணுங்கிற பயம் இருந்துகிட்டே இருக்கும்.​ ராதிகா மேடமுக்குதான் ரொம்ப நன்றி சொல்லணும்.​ அவங்கதான் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு ரெக்கமண்ட் பண்ணினாங்க.​ நான் இதுவரை இந்த டைரக்டரோட ஒர்க் பண்ணினது கிடையாது.​ அவரைப் போய் பார்க்கும்போது சொன்னார்.​ ராதிகா மேடம் உங்களுக்கு அண்ணியா வருவாங்கன்னு.​ உடனே ஒத்துக்கிட்டேன்.​ அவுங்ககூட நடிப்பதோடு,​​ அமுதா மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்கும் போது அதை மிஸ் பண்ண எனக்கு மனசில்லை.​ ​ ​

வருடக்கணக்கில் கோலங்கள் தொடரில் நடிக்கும் போது போர் அடிக்கவில்லையா எப்படி பீல் பண்ணிங்க?​​

"கோலங்கள்' தொடர் ஆறு வருடங்கள் ஓடியது.​ அதில் நான் நாலு வருடங்கள் ஒர்க் பண்ணினேன்.​ ஆதி பின்னாடியே போகும் போதும்.​ கணவனை ஒதுக்குறமாதிரி வரும் போதும் சில சமயம் அப்படி தோணும்.​ ஆனா அந்த கேரக்டருக்கு எனக்கு நல்ல ரீச் இருந்தது.​ ரேகா என்றதும் உடனே அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு ரீச் கிடைச்சது.​ இனிமே ரேகா மாதிரி ஒரு கேரக்டர் பண்ண முடியுமான்னு தெரியாது.​ "மெட்டி ஒலி'யில் சக்தின்னு ஒரு பாஸிடிவ்வான கேரக்டர் பண்ணிட்டு,​ அடுத்து உடனே ஒரு மாதம்கூட இடைவெளி இல்லாம நெகடிவ்வான கேரக்டர் செய்ததும் அதை பார்ப்பவர்களால உடனே ஏத்துக்க முடியல.​ எங்க போனாலும் திட்ட ​ ஆரம்பித்துவிட்டார்கள்.​ என்ன இப்படி பண்றீங்கன்னு கேட்க ஆரம்பித்தார்கள்.​ போகப் போக பார்த்துவிட்டு எல்லாரும் பாராட்டினாங்க.​ ​ ​

அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எப்படி இருந்தது?​​

முதல்ல தைரியமா போயிட்டேன்.​ அங்கு போன பிறகுதான் ஒவ்வொரு டாஸ்க் பற்றி சொல்லும் போதும்.​ மனசு திக்திக்ன்னு அடித்துக் கொள்ளும்.​ செய்ய முடியுமா இல்ல போயிடுவமான்னு தோணும்.இருந்தாலும் மத்தவுங்க எல்லாம் செய்யும்போது என்னால ஏன் முடியாது செய்து தான் பார்ப்போமேன்னு தைரியத்தை வரவழைத்துக் கொள்வேன்.​ இன்னும் அணுஅளவு ஷூட்டிங் முடியல.​ ஒவ்வொரு முறை ஷூட்டிங் இருக்குன்னு சொல்லும்போது மூன்று நாட்களுக்கு முன்பே வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து விடும்.​ அடுத்து என்ன கொடுக்க போறாங்களோன்னு பயமா இருக்கும்.​ ​

பாத் ரூம்ல ஒரு கரப்பான்பூச்சியைப் பார்த்தாக்கூட உள்ளவே போகமாட்டேன் அப்படி இருக்கும் போது ஷூட்டிங்கில் கிட்டத் தட்ட ஐம்பது கரப்பான் பூச்சிகள் என் மேலே இருந்ததுனா அது கடவுள் துணைதான்.​ ​ ​

சின்னத்திரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறீங்க.​

பெரியதிரையில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கு?​​

சின்னத்திரை, ​​ பெரியதிரை ரெண்டுமே ​ நல்லா இருக்கு.​ அப்படி ஒண்ணும் பெரிய வித்தியாசம் தெரியல.​ சம்பளம்,​​ ஒர்க் பண்ற டைம்ல வித்தியாசம் இருக்கலாமே தவிர ஆர்ட்டிஸ்ட்டா ​ எந்த வித்தியாசமும் இல்ல.​ அது மட்டுமில்லாம நான் "தேவர்மகன்' படத்தின் மூலம் பெரியதிரையில்தான் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன்.​ பெரியதிரையில் ​ நல்ல கேரக்டர்ஸ் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.​ சின்னத்திரையில் அந்தப் பிரச்சனை இருக்காது.​ பெரியதிரையில் பெரிய பெரிய ஆர்டிஸ்ட்ங்களோட ​ நாமளும் நிற்பது கொஞ்சம் கஷ்டம்.​ ​

பெரியதிரையில் ​ இந்த மாதிரி ​ கேரக்டர் ​ வந்தால் நல்லா ​ இருக்கும்னு ​ ​ எதிர்பார்த்ததுண்டா?​​

கண்டிப்பா அந்த எதிர்பார்ப்பு எல்லாருக்குமே இருக்கும்.​ இப்போ​ "நான் மகான் அல்ல' படத்தில் ஒரு கேரக்டர் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.​ ரொம்ப நல்ல கேரக்டர்.​ "மொழி' படத்தில் எனக்கு அமைந்த கேரக்டருக்கு பிறகு எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் படமா கண்டிப்பா அமையும்ன்னு எதிர்பார்க்கிறேன்.​ ​

வேறு என்ன தொடர்கள்,​​ படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?​​

சன்டிவியில் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "இதயம்',​ ஒன்பது மணிக்கு வரும் "தென்றல்'.​ "செல்லமே' தொடரில் வரும் அமுதாவுக்கும்,​​ "தென்றல்' லாவண்யாவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.​ அடுத்து கலைஞர் டிவியில் வரும் "பவானி' தொடர்.​ அதில் ஒரு ஏழை பொண்ணா பண்ணியிருக்கேன்.​ இந்த மாதிரி நாலு தொடர்ல நாலு வித்தியாசமான கேரக்டர்ஸ் அமைவது ரொம்ப கஷ்டம்.​ எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு.​ அதை நல்லா யூஸ் பண்ணனும்னு பயமும் இருக்கு.​ ​

பெரிய திரையைப் பொறுத்தவரை "ஜக்குபாய்' செய்றேன்.​ அதில் ஒரு சின்ன கேரக்டர் தான் ஆனா ரொம்ப லவ்லியா இருக்கும்.​ அடுத்து "புகைப்படம்' அதில் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ கல்லூரியில் ஒர்க் பண்ற டெக்னீஷியனா நடித்திருக்கேன்.​ டைரக்டர்,​​ நடிகர்ன்னு எல்லாமே புது டீம் புதுசு என்பதால அந்த எனர்ஜிய ரொம்ப நல்லா இருக்கு.​ அதை அடுத்து "ரசிக்கும் சீமானே'.​ அதில் காதல் தண்டபாணி சாரோட பொண்ணா ​ நடிச்சிருக்கேன்.​ வில்லனுக்கு பொண்ணா,​​ ஹீரோயினுக்கு ஃப்ரண்டா வருவேன்.​ க்ளைமாக்ஸ் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.​ ​ ​

பாஸிடிவ்,​​ நெகடிவ் கேரக்டர் இந்த ரெண்டில் எது நல்ல ரீச் ஆகும்னு ​ ​ நினைக்கிறீங்க?​​

நெகட்டிவ் கேரக்டர்தான் சீக்கிரமா ஒருத்தர் மனசுல போய் சேரும்.​ பாஸிடிவ் கேரக்டர்ன்னா அடுத்து இதுதான் பண்ணுவாங்க,இப்படி தான் வருவாங்கன்னு மக்கள் நினைப்பாங்க.​ ஆனா நெகட்டிவ் கேரக்டர் அப்படியில்லை.​ அடுத்து என்ன பண்ணப்போறங்கன்னு தெரியலையேன்னு ஒரு டென்ஷன் இருக்கும்.​ பேர் கிடைக்கறது ​ நெகடிவ்க்கு தான்.​ ​

என்ன படிச்சிருக்கீங்க உங்கள் ஃபேமலிப் பற்றி சொல்லுங்க?​​

பி.சி.ஏ ​ முடிச்சிருக்கேன்.​ ப்ளஸ்டு வரைக்கும் ரெகுலர்,​​ அதுக்கு பிறகு மெட்ராஸ்ல ​ யூனிவர்சிட்டியில் ​ கரஸ்ல பண்ணினேன்.​ அப்பா எட்டு மாதத்திற்கு முன்பு தவறிட்டார்.​ அம்மா அவுஸ் ஒய்ப்.​ தம்பி ப்ளஸ் ஒன் படிக்கிறான்.​ என் கணவர் பேரு இசை.​ அவரும் மீடியாவில்தான் இருக்கிறாரு.​ ​ ​

aanaa
9th January 2010, 10:48 PM
ஜீ டி.வி.யின் தமிழ் ஒளிபரப்பு விரைவில் 24 மணி நேர நியூஸ் சேனல் ஆகிறது. வழக்கமான நியூஸ் சேனல் பாணியில் இல்லாமல் சினிமா மற்றும் சீரியல் சம்மந்தமான பொழுதுபோக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்குமாம். வெளிநாட்டு செய்திகளும் வந்து போகுமாம். மியூசிக் சேனல் ஒன்றும் துவக்கம் பெறுகிறதாம்.

aanaa
9th January 2010, 10:49 PM
நடிகர் விஜய்யின் சித்தி ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்துக்கும், ஒளிப்பதிவாளர் ஹேமசந்தரின் மகள் மானஸாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலையாளத்தில் டி.வி., சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற மானஸா, இப்போது தமிழிலும் சின்னத்திரை தொடர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். மலையாள சின்னத்திரையை கலக்கி, மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற நான், விரைவில் தமிழ் ரசிகர்களையும் கவருவேன், என்கிறார் மானஸா.

R.Latha
11th January 2010, 01:50 PM
[tscii:6436a68b6a] சாமி​கிட்ட கேட்​டுட்​டுத்​தான் நடிக்க வந்​தேன்!

ஜெயா டிவி​யில் சிவ​பக்​தை​யா​க​வும்,​​ சன்​டி​வி​யில் குழந்​தை​யைத் தொலைத்​து​விட்டு தேடும் தாயா​க​வும் அந்​தந்த கதா​பாத்​தி​ரத்​துக்கு ஏற்​றாற் போல் தன்னை மாற்​றிக்​கொண்டு மெகா சீரி​யல் இள​வ​ர​சி​யாக வலம் வந்து கொண்​டி​ருக்​கும் சந்​திரா லஷ்​மனை மலை​யாள மணம் கம​ழும் அவ​ரது இல்​லத்​தில் சந்​தித்​தோம்.​ ஷூட்​டிங் இல்​லையா என்​ற​தும் பள்​ளிக் குழந்​தை​யைப் போல் ரெண்டு நாள் லீவு என்று உற்​சா​கத்​தோடு சொல்​லி​விட்டு ஜாலி​யா​கப் பேசி​னார்.​



* முதல்ல உங்​க​ளைப் பற்றி சொல்​லுங்க எப்​படி இந்த

ஃபீல்​டுக்கு வந்​தீங்க?​



நான் கேர​ளத்​துத் தமிழ்ப் பெண்.​ ​ ஓட்​டல் மேனேஜ்​மண்ட் படிச்​சி​ருக்​கேன்.​ திரைத்​து​றைக்கு வந்து பத்து வரு​டங்​கள் ஆகி​றது.​ ஆரம்​பத்​தில் மலை​யாள படங்​கள்,​​ தொடர்​கள் நடித்​துக் கொண்​டி​ருந்​தேன்.​ மூன்று வரு​டங்​க​ளாக தமிழ் இன்​டஸ்ட்​ரி​யில் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ எங்க அப்பா இந்​துஸ்​தான் லீவ​ரில் ஒர்க் பண்​ணி​னார்,​அம்மா பேங்க்ல ஒர்க் பண்​றாங்க.​ கூட பிறந்​த​வங்க யாரும் இல்லை.​ பர​த​நாட்​டி​யம் இரண்​டரை வய​தில் இருந்து கற்​றுக்​கொண்​டேன்.​

எல்​லா​ரும் சொல்​லு​வது மாதி​ரி​தான் ஆக்​ஸி​டன்ட்டா நடிக்க வந்​தேன்.​ ஒரு​முறை நண்​பர்​க​ளோட ஒய்.எம்.சி.ஏ.​ போய் இருந்​தோம்.​ அங்கே "ஏப்​ரல் மாதத்​தில்' படத்​தின் ஷூட்​டிங் நடந்​தது.​ அப்போ அந்த இடத்​தில் என்னை பார்த்​து​விட்டு நடிக்க கேட்​டாங்க.​

ரொம்ப கம்​பல் பண்​ண​தால ரெண்டு ஷாட் ஸ்ரீகாந்த் காம்​பி​னே​ஷன்ல நடித்​தேன்.​ அதுக்​கு​பி​றகு நடிக்​கல.​ டைரக்​டர் ஸ்டேன்லி சார் இப்போ பார்த்​தப்​போ​கூட "சினி​மா​வுக்கு வர​மாட்​டேன்னு சொல்​லிட்டு இப்போ பாருங்க அதே பீல்​டுக்​கு​தான் வந்​தி​ருக்கே' என்​றார்.​ எனக்கு ஃபி​லிம் பேக்​ர​வுண்ட் கிடை​யாது.​ யார்​கிட்ட கேட்​ப​ன்னு தெரி​யல.​ சாமி முன்​னாடி சீட்டு குலுக்​கிப் போட்டு பார்த்​தோம்.​ அதில் முன்று முறை​யும் நடி​கைன்​னு​தான் வந்​தது.​ பிற​கு​தான் நடிக்க வந்​தேன்.​ ​



* "காத​லிக்க நேர​மில்லை' தொடர் ஏன் பாதி​யில் நின்​று​விட்​டது?​ அதில் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ உங்​கள் நடிப்பு பிர​மா​த​மாக இருந்தே சிங்​கப்​பூ​ரில் நடந்த மறக்க முடி​யாத அனு​ப​வம் என்ன?​



பாதி ​யில் ​ நிற்​க​வில்லை.​ பிர​ஜ​னோட என்​னோட டிராக் மட்​டும் ​ நின்​று​விட்​டது.​ கதை மாறி​போ​ன​து​னால விரை​வாக முடித்​து​விட்​டார்​கள்.​ இப்​போ​கூட நிறைய பேர் என்​னி​டம் ​ "காத​லிக்க நேர​மில்லை' தொடர் பற்​றி​தான் ரொம்ப விசா​ரிப்​பார்​கள்.​ அந்​தத் தொட​ரின் டைட்​டில் சாங் பற்றி நிறைய சொல்​வார்​கள்.​

அது ஒரு படத்​தின் பாட​லுக்கு இணை​யாக இருந்​தது.​ இன்​ன​மும் நிறைய பேர் அந்த டைட்​டில் சாங்கை தான் செல்​போ​னில் காலர் ட்யூ​னாக வைத்​துக்​கொண்டு இருக்​கி​றார்​கள்.​ ஒரு தொட​ருக்​காக சிங்​கப்​பூர் வரை போனதே மறக்க முடி​யாத அனு​ப​வம்​தான்.​ அந்​தத் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தொட​ருக்​காக என் சொந்​தக் குர​லில் டப் செய்​த​தும்,​​ முதன் முறையா என் குரலை ஸ்கீ​ரின்ல கேட்​ட​தை​யும் மறக்​கவே முடி​யாது.​

​நாங்​கள் ​ கேர​ளா​வில் இருந்த தமிழ் பெண் என்​ப​தால மைக்​கேல் மதன காம​ரா​ஜன் படத்​தில் வரு​கிற கமல் போல​தான் வீட்​டில் தமி​ழில் பேசிக்​கொள்​வோம்.​ எப்​ப​வுமே ஆத்​துக்கு போறேன்,​​ போய்ன்​றி​ருக்​கேன்.​ இப்​படி தான் வரும். ஆனால் அந்​தத் தொட​ரில் மதுரை பொண்ணு கேரக்​டர்.​ அந்த பேச்சே வேற மாதிரி இருக்​க​ணும்.​ பேசும் போது என் தமிழ் வந்​தி​டும்.​ பிர​ஜன் மலை​யாளி.​ ஆனா அவர் மலை​யா​ளத்தை விட தமிழ்​தான் நல்லா பேசு​வார்.​ அதே மாதிரி அந்​தத் தொட​ரின் டைரக்​ட​ரும் ஒரு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ மலை​யாளி.​ நான் பேசும் போது தப்பு வந்தா கரெக்ட்டா கண்டு பிடிச்​சி​டு​வார்.​ இப்போ இந்​த​ள​வுக்​குத் தமிழ் பேசு​றேன்னா அது அந்​தத் தொடர் மூல​மா​தான்.​ ​

​​

* மலை​யா​ள சினி​மா​வில் ​ நடித்​து​விட்டு,​​ இங்கே சீரிய​லில் நடிக்க வந்த போது எப்​படி பீல் பண்​ணிங்க என்ன வித்​தி​யா​சம் உணர்ந்​தீங்க?​



மலை​யா​ ளத்​தி​லும் சீரி​யல் நிறைய நடித்​தி​ருக்​கி​றேன்.​ அங்கே ஒரு படத்​தோட செட்​டப் எப்​ப​டி​யி​ருக்​குமோ அந்த செட்​டப் இங்கே சீரி​ய​லுக்கே இருக்​கும்.​ அங்கே படத்​திற்கு ​ இருக்​கும் பிர​மாண்​டம் இங்கே சீரி​யல்ல இருக்​கும்.​ ​

நிறைய வித்​தி​யா​சம் இருக்கு.​ ஒர்க்​கிங் ஸ்டைல்,​​ பட்​ஜட்,​​ ஒர்க்​கிங் டைம் என எல்​லாத்​து​லை​யும் வித்​தி​யா​சம் இருக்​கும்.​ மலை​யாள,​​ கன்​னட ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ இண்​டஸ்ட்ரி ​ கொஞ்​சம் சிறி​யது.​ காம்​பெக்ட்டா இருக்​கும்.​ தமிழ் இண்​டஸ்ட்ரி பெரிய இன்​டஸ்ட்ரி .​ இங்கே டெக்​னீக்​கல இருந்து எல்​லா​வற்​றி​லும் ரொம்ப அட்​வான்ஸô இருக்​கும்.​ இங்கே நிறைய டைம் கிடைக்​கும்.​ அங்கே கால்​ஷீட் எல்​லாம் கிடை​யாது.​ இரவு ஒன்​ப​தரை,​பத்​து​வ​ரைக்​கும் ஒர்க் பண்ண வேண்​டி​யி​ருக்​கும்.​ இங்கே கால்​ஷீட் வைத்து ஒர்க் பண்​றது ரொம்ப வச​தியா இருக்கு.​ ​



* ஜோடி நம்​பர் ஒன் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்டு பாதி​யில் வெளி​யேறி விட்​டீர்​களே அப்போ என்ன நினைத்​தீர்​கள்?​



பாதி ​யில் வெளி​யே​ற​வில்லை.​ அந்த நேரத்​தில் எங்​க​ளுக்கு டைட் ஷெட்​யூல் போய்​கிட்டு இருந்​த​தால அதில் கலந்து கொள்​ளவே ரொம்ப யோசித்​தோம்.​ இருந்​தா​லும் எல்​லா​ரும் நிறைய நம்​பிக்கை கொடுத்​தார்​கள்.​ அப்போ நாங்​கள் தான் ஹிட்​ஜோ​டி​யாக இருந்​த​தால கட்​டா​ய​மாக கலந்து கொள்ள வேண்​டி​ருந்​தது.​ டான்ஸ்​ பி​ராக்​டிஸ் பண்ண எங்​க​ளுக்கு நேரமே கிடை​யாது.​

முதல் ரவுண்​டி​லேயே எளி​மி​னேட் ஆகி​வி​டு​வோம் என்று நினைத்​தோம்.​ இருந்​தா​லும் டிரைப் பண்​ணிப் பார்க்​க​லாம் என்​று​தான் கலந்து கொண்​டோம்.​ அந்த சம​யத்​தில் நான் கேர​ளா​வில்​தான் தங்​கி​யி​ருந்​தேன்.​ கேர​ளா​வுக்​கும் சென்​னைக்​கும் போய்ட்டு போய்ட்டு வரு​வது ரொம்ப கஷ்​ட​மாக இருந்​தது.​ நாங்​கள் எதிர்​பார்த்த மாதிரி வெளி​யே​றி​விட்​டோம்.​ ​ ​

​ ​

* பெரி​ய ​தி​ரை​யில் ​ வாய்ப்​பு​கள் வரு​கி​றதா?​



இப்போ நிறையப் படத்​துக்​கா​கக் கூப்​பிட்​டார்​கள்.​ படங்​கள் நிறைய நடிப்​ப​தற்கு ஆசை​யி​ருக்​கி​றது.​ ஆனால் லீட் ரோல்​தான் பண்​ணு​வேன்னு கிடை​யாது.​ ஒரு படத்​தில் நடித்​தால் அதில் என்னை ஆடி​யன்ஸ் ஞாப​கம் வைத்​துக் கொள்ள வேண்​டும்.​ அந்த மாதிரி ரோல்ஸ் பண்​ண​னும்.​ இப்போ மூன்று படங்​கள் ​ நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​

ஒண்ணு தில்​லா​லங்​கடி அதில் மூவி ஓப்​ப​னிங்கே நானும்,​​ சத்​தி​யன் சார்,​​ தமன்னா தான் வரு​வோம்.​ "கிக்'ங்​கிற தெலுங்கு படத்​தோட ரீமேக் இது.​ ரொம்ப காம​டியா மிக்ஸ்​டா​இ​ருக்​கும்.​ நாலைந்து நாள் சூட்​டிங் மகாப​லி​பு​ரத்​தில் இருந்​தது.​ மகாப​லி​பு​ரமே களைக்​கட்டி விட்​டது.​ ​

அடுத் ​தது சத்​ய​ஜோதி பிலிம்​úஸôட டூவன்ட்டி டூவன்ட்டி நடிக்​கி​றேன்.​ ஹீரோ​வோட அக்​காவா பண்​றேன்.​ ​ அதற்கு அடுத்து பி.வாசு சாரோட படம் அது பிப்​ர​வ​ரி​தான் ஸ்டார்ட் பண்​றாங்க.​ ​ ​



* என்ன மாதிரி கேரக்​டர்ஸ் பிடிக்​கும். நடிக்க

விரும்​பு​கி​றீர்​கள்?​

​ ஆரம்​பத்​தில் இருந்தே ரொம்ப செலக்​டீவ்​வான கேரக்​டர்ஸ்​தான் நான் பண்​றேன்.​ ஒரு எக்ஸ்​பி​ரி​மண்ட்​டான கேரக்​டரா இருக்​க​னும்.​ அதே மாதிரி எல்​லா​வி​த​மான கேரக்​ட​ரும் பண்​ண​னும்.​ ​ அப்​போ​தான் ஒரு ஆர்​டிஸ்ட்டா கம்ப்​ளிட் ஆவ​தாக அர்த்​தம்.​ மலை​யா​ளத்​தில் என் முதல் படம் பிர்த்​வி​ராஜ் கூட பண்​ணி​னேன்,​​ அதில் ரொம்ப மென்​மை​யான ரோல் பண்​ணி​னேன்.​ அதை தொடர்ந்து உடனே ஒரு சீரி​யல்ல பக்கா நெக​டீவ் ரோல் வந்​தது.​ மென்​மை​யான ரோல்ல பார்த்​த​வங்​க​ளுக்கு சர்​பி​ரை​ஸôக இருந்​தது.​ அதை ​ தொடர்ந்து சைக்​கோவா பண்​ணி​னேன்.​ சினிமா,​​ சீரி​யல்ன்னு வித்​தி​யா​சம் எது​வும் பார்க்​க​வில்லை.​ என்ன கேரக்​டர் பண்​றேன் என்​பது தான் முக்​கி​யம்.​ ​



நட​னப் பயிற்​சிக்கு நேரம் ​ கிடைக்​கி​றதா?​

நாட் ​டி​யம் எல்​லாம் பத்​தா​வது படிக்​கும் போதே நிறுத்​தி​விட்​டேன்.​ அரங்​கேற்​றம் பண்​ண​வில்​லை​யென்​றா​லும் நிறைய கற்​றுக் கொண்​டேன்.​ என்​னோட முதல் டான்ஸ் குரு சாந்தி கிருஷ்ணா.​ "மணல் கயிறு' படத்​தில் எஸ்.வி.சேக​ருக்கு ஜோடியா நடித்​தாரே அவர்​தான்.​ ​ ​

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=181239&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=


[/tscii:6436a68b6a]

HonestRaj
28th January 2010, 09:19 PM
Anybody watching "JAI SRIKRISHNA" in RAJ TV..

The child acting as KRISHNA is soooooooooo cute both in expressions & look :)

aanaa
31st January 2010, 12:41 AM
துளிகள்

* குடும்பப்பாங்கான படங்களை நகைச்சுவை கலந்து தந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டைரக்டர் வி.சேகர். பெரியதிரையைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் தொடர்களை இயக்கிவரும் வி.சேகர் இப்போது ராஜ் டிவிக்காக ஒரு தொடரை இயக்குகிறார். இந்த தொடருக்கு `வீட்டுக்கு வீடு' என்று பெயர் வைத்திருக்கிறார்.

* டைரக்டர் திருமுருகன் தனது மெட்டி ஒலி தொடருக்குப் பின் இயக்கவிருக்கும் புதிய தொடர் நாதஸ்வரம். தஞ்சை மாவட்டப் பின்னணியில் உருவாகவிருக்கும் இந்தக் குடும்பக்கதையை முதல் கட்டமாக காரைக்குடியில் படமாக்க விருக்கிறார். தொடரில் பெருமளவில் புதுமுகங்கள் நடிக்கவிருப்பதால் இந்த தொடர்மூலம் பல நட்சத்திரங்கள் திரைக்கு கிடைப்பார்கள்.

* நடிகை லட்சுமியும் சின்னத்திரை தொடருக்கு வந்து விட்டார். கணவர் சிவச்சந்திரனுடன் இணைந்து இவர் தயாரிக்கும் மகாலட்சுமி தொடரில் இந்த தம்பதிகள் தான் நாயக-நாயகி. காரணம் இவர்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது.

* பிரபல கர்நாடக இசைப்பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, இசைக்கச்சேரியுடன் சின்னத்திரை நடிப்பையும் தொடர்கிறார். நடிப்பு விஷயத்தில் நல்ல கதையம்சம் கொண்ட சீரியல்களே இவர் சாய்ஸ் என்பதால், திருப்பாவை மாதிரியான தொடர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2010, 09:17 PM
சீரியல் இயக்குனருக்கு தடை

சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு சீரியல் இயக்குனருக்கு தடை போட்டது பற்றித்தான் இப்போது பரபரப்பான பேச்சு.

சமீபத்தில் தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. சின்னத்திரை நடிகர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து சின்னத்திரை கூட்டமைப்பு சங்கமாக செயல்பட்டு வரும் இந்த கூட்டத்தில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்தியில் அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றும் அரங்கேறியது. சத்யவான் குடும்பத்தோடு இணைந்த பெயரில் இப்போது சீரியல் ஒன்றை இயக்கிவரும் பிரபல இயக்குனர் பற்றி சின்னத்திரை நடிகர் சங்கத்தில் ஒரு இளம் நடிகர் கொடுத்த புகாரின் பேரில் தான் அந்த உடனடி நடவடிக்கை. அந்த நடிகர் விஷயத்தில் தேவையே இல்லாமல் இயக்குனர் கடுமையாக நடந்து கொண்டார் என்பது எழுத்து பூர்வமான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை ஆராய்ந்த சங்கம், அதுவிஷயமாக சம்பந்தப்பட்ட சீரியல் இயக்குனரிடமும் பேசியபின் இனி அந்த இயக்குர் இயக்கும் எந்த சீரியலுக்கும் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்று அதிரடி தீர்ப்பை கொடுத்தார்கள். அதோடு அந்த இயக்குனர் இயக்கி வந்த சீரியல் ஒளிபரப்பாகும் சேனலுக்கும் இந்த தகவலை பாஸ் செய்தார்கள்.

சேனல் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது இனிதான் தெரியவரும்.

நன்றி: தினதந்தி

aanaa
14th February 2010, 08:16 AM
கலைஞர் டிவியின் `மானாட மயிலாட' பாகம்4-க்கான இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ரம்பா மேடையேறி ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். ரம்பாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதால் அவரை தங்கள் மனதில் கனவுக்கன்னியாக வைத்திருந்த ரசிகர்கள் அத்தனை பேரும் மனம் உடைந்து விட்டதாக குறிப்பிட்ட ரம்பா, "என் திருமண அறிவிப்பின் மூலம் உங்கள் இதயங்களை சுக்குநூறாக உடைத்து விட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன்'' என்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிம்பு வெற்றிபெற்ற ஜோடிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முதல்பரிசு ரூ. 10 லட்சத்தை கோகுல்- நீபா ஜோடியும், இரண்டாம் பரிசு ரூ. 5 லட்சத்தை நிவாஸ்-கிருத்திகா ஜோடியும், மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சத்தை லோகேஷ்-ஸ்வேதா ஜோடியும் தட்டிச்சென்றனர். ரகுமான்-நிகிஷா ஜோடிக்கு ஆறுதல்பரிசாக எல்.சி.டி. டிவி வழங்கப்பட்டது.

`மானாட மயிலாட' பாகம்-4 முடிவடைந்ததைத் தொடர்ந்து பாகம்-5 தொடக்கவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


நன்றி: தினதந்தி

aanaa
20th February 2010, 09:00 PM
ரம்யாகிருஷ்ணனுடன் நடிக்கலாம்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் தங்கம் தொடர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ரம்யாகிருஷ்ணனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை திரையுலகம் சாராத ஒரு பெண்ணுக்கு வழங்க முன்வந்திருக்கிறார், ரம்யா.

இதுபற்றி அவர் கூறும்போது, "தொடரை பார்க்கும் பெண்கள் பலர் என்னை சந்திக்கும்போது `உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமே' என்கிறார்கள். அவர்

களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் தங்கம் தொடரிலேயே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். 20 வயதுக்குமேற்பட்ட சிறந்த சரும அழகியான ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். சிந்தால் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படும் அவர், தொடர் முழுக்கவே என்னுடன் நடிப்பார்'' என்கிறார்.

aanaa
20th February 2010, 09:05 PM
தமிழ் திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த இவ்விழாவில் முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள். அவர்களில் அஜித்தின் பேச்சு மட்டும் ஹைலைட்டாக இருந்தது. விழா மேடையில், முதல்வர் முன்னிலையில் பேசிய அஜித், கொஞ்சம் காட்டமாகவே தனது கருத்தை தெரிவித்தார். இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க நடிகர் - நடிகைகளை மிரட்டுகிறார்கள்... என்று பேசி கைத்தட்*டலை பெற்றார் அஜித். அவரது பேச்சு *தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்படி அவர் என்ன பேசினார், எப்படி பேசினார் என்பதை டி.வி.,யில் சிறப்பு நிகழ்ச்சியாக வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் கலைஞர் டி.வி.,யில் விளம்பரம் வெளியாகி வருகிறது. மேற்படி விழாவை விரைவில் ஒளிபரப்ப உள்ள கலைஞர் டி.வி., அதுதொடர்பான விளம்பரத்தை வெளயிட்டு வருகிறது. அதில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் பெயர்களை குறிப்பிடும் அறிவிப்பாளர் அஜித் *பெயரை குறிப்பிடவில்லை. அஜித் தொடர்பான க்ளிப்பிங்கும் தவிர்க்கப்பட்டு வருவதாக அவரது ரசிகர்கள் குமுறுகிறார்கள். சரி... விழா நிகழ்ச்சியிலாவது அஜித்தை காட்டுகிறார்களா என்று பார்ப்போம்!

aanaa
27th February 2010, 08:36 PM
இரண்டு திரையிலும்...

சின்னத்திரையில் இருந்து கொண்டே பெரியதிரையிலும் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர் நீலிமாராணி தான். "இரண்டு திரைகளிலும் பிசியாக நடிக்கும்போது கால்ஷீட் பிரச்சினை வராதா?'' நீலிமாராணியிடம் கேட்டால், "மாதத்தில் குறிப்பிட்ட நாட்களை முன்கூட்டியே டிவிக்கு ஒதுக்கி விடுகிறேன்.

அதனால் மீதியுள்ள நாட்களை சினிமாவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்'' என்கிறார். என்றாலும் சின்னத்திரையின் இந்த கதாநாயகிக்கு பெரிய திரையில் `கதாநாயகியின் தோழி' வரைக்கும் தான் வரமுடிகிறது என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்.

aanaa
27th February 2010, 08:50 PM
"மெட்டி ஒலி' சீரியல் இயக்குநர் திருமுருகன் அடுத்து இயக்கும் சீரியலுக்கு "நாதஸ்வரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.​ தஞ்சை மாவட்டப் பின்னணியில் உருவாகும் இக்கதைக்கு தேவயானியை நாயகியாக போடுவதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியிருக்கிறது.​ இதைத் தவிர "மெட்டி ஒலி' மகேஸ்வரியையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க போகிறார்களாம்.

aanaa
13th March 2010, 04:13 AM
நீலிமா ராணியின் துணிச்சல்!

சன் டி.வி.யில் இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் "இதயம்' ஒன்பது மணிக்கு வரும் "தென்றல்', ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் "செல்லமே' ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் நீலிமா ராணி. "செல்லமே' தொடரில் வரும் அமுதா கேரக்டருக்கும், "தென்றல்' தொடரில் வரும் லாவண்யா பாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் கொடுத்து நடித்து வருகிறார் நீலிமா ராணி. கலைஞர் டி.வி.யில் வரும் "பவானி' தொடரில் ஒரு ஏழை பெண்ணின் பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

நான்கு தொடர்களில் நான்கு விதமான பாத்திரங்களில் நடித்து வரும் அவர் பெரியத் திரையில் சமீபத்தில் வெளியான "புகைப்படம்', மற்றும் சரத்குமாரின் "ஜக்குபாய்' படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது "வெண்ணிலா கபடிக் குழு' சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும், "நான் மகான் அல்ல' படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

""எனக்கு நெகட்டீவ் கேரக்டர்களில் நடிக்க விருப்பம்தான். காரணம் அதுபோன்ற வேடங்கள்தான் ரசிகர்களின் மனதில் எளிதாக போய் சேரும். பாஸிட்டிவான வேடங்கள் என்றால் அதில் இப்படித்தான் வருவாங்க, அடுத்து இதுதான் பண்ணுவாங்கன்னு ஒரு புரிதல் இருக்கும். ஆனால் நெகட்டிவ் கேரக்டர்கள் அப்படியில்லை. அடுத்து என்ன செய்யப் போறாங்கன்னு ஒரு டென்ஷன் இருந்துகிட்டே இருக்கும். அதனால்தான் எனக்கு நெகட்டீவ் ரோல்கள் பிடிக்கிறது'' என்கிறார் நீலிமா ராணி துணிச்சலோடு!

aanaa
13th March 2010, 04:14 AM
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் "தங்கம்'. பார்வையாளர்களை தன் வசப்படுத்தி இருக்கும் இந்தத் தொடரில் நடிக்க நேயர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளனர். இது பற்றி அந்த தொடரின் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் நாயகியுமான ரம்யா கிருஷ்ணன் கூறுகையில்,

""இந்தத் தொடர் ஆரம்பத்தில் இருந்தே பார்வையாளர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. இந்தத் தொடரை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு பார்த்து வருவதை எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதனால் இதில் நடிப்பதற்கு நிறைய பேர் ஆர்வமாக இருக்கின்றனர். அதனால் இதில் தோன்றி நடிக்க ரசிகர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

அதற்கான போட்டியை சிந்தால் சோப் நிறுவனம் நடத்துகிறது. இருபது வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கான திறமை போட்டி என்கிற தலைப்பில் நடக்கும் அந்த போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், "தங்கம்' தொடரை பார்க்கும்போது அதற்கான தகவல் தெரிவிக்கப்படும். அதன் படி தங்களுடைய மொபைல் ஃபோனிலிருந்து பெயர், வயது, முகவரியை டைப் செய்து எஸ்.எம்.எஸ்.அனுப்பினால் போதும். இந்த போட்டிக்கான முதல் கட்ட தேர்வு சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற நகரங்களில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு நகரிலும் முதல்கட்ட தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் நடைபெற இருக்கும் இறுதிகட்ட தேர்வில் பங்குபெற்று அங்கு நானும், திரையுலக இயக்குனர் குழு மற்றும் சரும மருத்துவர் ஒருவர் நடுவர்களாக இருந்து போட்டியில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்போம். அவருக்கு தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறோம்.

aanaa
13th March 2010, 04:16 AM
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' சேனல் வருகிற ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் 24 மணிநேர ஒளிபரப்பு சேவையைத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுக் குறித்து "கேப்டன்' தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் எல்.கே. சுதீஷ் கூறுகையில், ""கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை நேரத்தில் புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.

பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெறுகின்றன. நேர்மையான நடுநிலைச் செய்திகள் மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி ஒளிபரப்பப்படும். இது தவிர பிற நிகழ்ச்சிகளில் திறமையுள்ளவர்களை வெளிக்கொண்டு வர கேப்டன் தொலைக்காட்சி முன்னுரிமை அளிக்கும்.

கேப்டன் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு மார்ச் 15 முதல் எப்ரல் 13 வரை இருக்கும். ஏப்ரல் 14 முதல், 24 மணி நேரமும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் புதிய நிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகும். இது முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தொலைக்காட்சியாக அமையும். இவை அனைத்தையும் இன்சாட் 4 பி செயற்கைகோள் ஒளிபரப்பு மூலம் காணலாம்'' என்றார்.

R.Latha
17th March 2010, 12:23 PM
"அரசி' மற்றும் "அபிராமி' தொடர்களில் பிஸியாக இருக்கும் ராதிகாவும், கௌதமியும் முதன் முறையாக விஜய் டி.வி.யின் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்கு நடுவராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியின் ஒரு பகுதிக்கு சிறப்பு விருந்தினராக வந்ததுதான் கௌதமியின் கடைசி விஜய் டி.வி. விஜயம். ராதிகாவுக்கு இதுதான் முதல் விஜயம்.

கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த ஜெயா டி.வி.யின் "ராகமாலிகா', இனி வரும் சுற்றுகளில் 8 முதல் 13 வயதுக்குள்ளானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் போகிறது. இந்த சுற்றுகளுக்கு நடுவராகப் பொறுப்பேற்கிறார் பாடகி பி.சுசீலா. இந்த வரிசையில் அடுத்த மாதம் முதல் "ஹரியுடன் நான்' என்ற இசை நிகழ்ச்சியையும் களம் இறக்குகிறது ஜெயா தரப்பு.

பாண்டியராஜன் - அர்ச்சனாவை வைத்து "கலக்கப் போவது யாரு? ஜூனியரை' இந்த வாரம் முடிக்கப் போகிறது விஜய் டி.வி. தமிழ் தொலைக்காட்சியின் காமெடி ரியாலிட்டி ஷோவுக்கு முன்னோடியான இந்த நிகழ்ச்சியை மீண்டும் புதுப் பாணி மற்றும் பொலிவுடன் இறக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறதாம் விஜய் நிர்வாகம். இதற்காக முன்னணி நகைச்சுவை நடிகர்களை நடுவராக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

தமிழ்ப் படத்தைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனம், சீரியல் என வாய்ப்புகள் வந்த போதிலும், அனைத்தையும் மறுத்து, தற்போது "சன் குடும்ப விருது'களில் அமர்ந்திருக்கிறார் கஸ்தூரி. இந்த நிகழ்ச்சிக்காக இதற்கு முன் சீரியல்களே பார்த்திராத அவருக்கு "கோலங்கள்', "அரசி' உள்ளிட்ட சீரியல்களின் முக்கிய காட்சிகள் தனியே காட்சியிடப்பட்டிருக்கிறது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=212490&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

R.Latha
17th March 2010, 12:24 PM
சோனியா அகர்வாலுக்கு சிம்ரன் சிபாரிசு

First Published : 17 Mar 2010 12:00:00 AM IST

Last Updated :

குடும்ப வாழ்க்கை கசந்த நிலையில் மண வாழ்க்கையில் இருந்து வெளியேறிய, சோனியா அகர்வால் கன்னடப் படங்களில் நடிக்கப் போகிறாராம்.

இதற்காக ஒரு சில கன்னட இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கு சீரியல்களில் நடித்து வரும் சிம்ரன் தெலுங்கு சீரியல் இயக்குநர்களிடம் சோனியாவை சிபாரிசு செய்து இருக்கிறாராம்.

aanaa
3rd April 2010, 11:03 PM

இந்திய இசையில் சர்வதேச புகழ் பெற்ற ஹரிஹரன்,​​ தனது இசை அகடமிக்காக ஐந்து பேரை ஜெயா தொலைக்காட்சியில் மிகப்பெரிய "ரியாலிட்டி ஷோ' நடத்தி தேர்ந்தெடுக்க உள்ளார்.​ இதில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் ஹரிஹரனுடன் இணைந்து உலக மேடைகளில் பாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.​ இதன் தொடக்கமாக திருச்சி மற்றும் கோவையில் திப்பு,​​ ஹரிணி,​​ ஜேம்ஸ் வசந்தன்,​​ தரண் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.​ இந்நிகழ்ச்சி "ஹரியுடன் நான்' என்னும் பெயரில் ஜெயா டி.வி.யில் சென்ற பதினோறாம் தேதி முதல் வியாழன்,​​ வெள்ளி,​​ சனிக்கிழமைகளில் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.​
நன்றி: தினமணி

aanaa
3rd April 2010, 11:04 PM
நேயர்களோடு பிரபலங்கள்!

பாலிமர் தொலைக்காட்சி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறது.​ அந்த வகையில் புதியதாக "ஸ்டார் டாக்' என்னும் பெயரில் திரையுலக பிரபலங்கள்,​​ நேயர்களுடன் தொலைபேசி மூலம் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.​ இதில் தினம் ஒரு பிரபலம் கலந்து கொள்வது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.​ இந்நிகழ்ச்சியில் நடிகர்,​​ நடிகையர்கள் மட்டுமின்றி,​​ திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கு கொண்டு நேயர்களிடம் உரையாடுகிறார்கள்.​ இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினமணி

aanaa
3rd April 2010, 11:05 PM
[tscii:7bf629a85f]
சன் குடும்ப விருதுகள்!


2009-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை,​​ சன்.டி.வி.யில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்தவர்களுக்கு "சன் குடும்ப விருதுகள்' என்ற பெயரில் விருது வழங்க சன்.டி.வி.​ முடிவு செய்துள்ளது.​ இதற்காக சன் குடும்ப விருதுக்குரியவர்களை,​​ பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.​ இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகர்,​​ சிறந்த நடிகை,​​ சிறந்த வில்லன்,​​ சிறந்த தந்தை,​​ சிறந்த சகோதரர் உட்பட 12 பிரிவுகளில் விருதுக்குரியவர்களை ​ தேர்ந்தெடுக்கின்றனர்.​ இந்நிகழ்ச்சியை கஸ்தூரி தொகுத்து வழங்கி வருகிறார்.​ போட்டியில் கலந்து கொள்ளும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை ஆகியோரிடமிருந்து,​​ அவர்களுக்குப் பிடித்த காட்சிகளைக் கேட்டு,​​ அக்காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.​ இதில் சிறந்தவர்களை பார்வையாளர்கள் எஸ்.எம்.எஸ்.​ மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

​ இவ்வாறு ஆறு வாரங்களாக நிகழ்ச்சி பிரிக்கப்பட்டு அதிலிருந்து விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.​ இவ்விருதுகள் சன்.டி.வி.யின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி அன்று வழங்கப்பட்டு,​​ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.​ இந்த 12 பிரிவுகள் தவிர,​​ சிறந்த இயக்குனர்,​​ சிறந்த வசனகர்த்தா,​​ சிறந்த திரைக்கதையாசிரியர் உட்பட தொழில்நுட்ப பிரிவினர்களை மட்டும் நடுவர் குழு தேர்ந்தெடுக்கும்.​ இவர்களுக்கும் 14-ம் தேதி அன்று விருதுகள் வழங்கி கெüரவிக்கப்படும்.


நன்றி: தினமணி [/tscii:7bf629a85f]

aanaa
11th April 2010, 08:48 PM
நடிகர் விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்குகிறது.​ இதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கும் கேப்டன் டி.வி.யின் செயல் தலைவரான எல்.கே.சுதீஷ்,​​ ""மற்ற சேனல்களுக்கு இணையாக புது திரைப்படங்களை வாங்குவதற்காகவே பெரும் தொகையை ஒதுக்கியிருக்கிறோம்.​ கேப்டன் டி.வி.​ புதுப்படங்களின் உரிமையைப் பெற்று,​​ அந்த படங்களுக்கான உரிய விலைக் கொடுத்து வாங்கும்.​ அதற்கான வேலைகளை தற்போது தொடங்கியிருக்கிறோம்.​ தினமும் நான்கு முறை நடுநிலை செய்திகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

aanaa
11th April 2010, 08:51 PM
சின்னத்திரையும், சினிமா நட்சத்திரங்களுக்கான கட்டுப்பாடும்!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சினிமா நட்சத்திரங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க கேரள திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்துள்ளது. 'டிவி'யா, திரைப்படமா என்பதை நடிக, நடிகையர் சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளலாம்' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள 'டிவி' சேனல்களில் திரைப்பட துறையை சேர்ந்த நடிக, நடிகையர், பின்னணி பாடகர்கள், இசை கலைஞர்கள் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். திரைப்படத் துறையினர் 'டிவி' சேனல்களில் பங்கேற்பதால் திரையரங்குகளில் அதிகளவில் வசூல் குறைந்து வருகிறது. இதனால் திரைப்படத் துறை பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க பிலிம் சேம்பர் கூட்டம் கொச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு கே.சி.இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு பின் நிர்வாகிகள் கூறியதாவது: திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் டி.வி., நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் தியேட்டர்களில் அதிகளவு வசூல் குறைந்து வருகிறது. இது திரைப்படத் துறையை பாதிக்கிறது. டிவி சேனல்கள் சார்பாக, நட்சத்திர கலை விழா, விருது வழங்கும் விழா, இசை நிகழ்ச்சி என பல தரப்பட்ட நிகழ்ச்சிகளில் திரைப்படத் துறையினர் பங்கேற்கின்றனர். திரைப்படத் துறையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மே மாதம் 1ம்தேதியில் இருந்து டிவி சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர், பின்னணி பாடகர்கள், இசை கலைஞர்கள் என திரைப்படத் துறையினர் தோன்றும் திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிம் சேம்பர் முன் அனுமதியின்றி டிவி சேனல் நிகழ்ச்சிகளில் திரைப்படத் துறையினர் பங்கேற்க கூடாது. அதற்கான அனுமதி வழங்க பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும். அவ்வாறு அனுமதி பெற்று பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பக்கூடாது என்று டிவி சேனல்களிடம் கோரப்படும். 'டிவி'யா அல்லது திரைப்படமா என்பதை திரைப்பட கலைஞர்களே சுதந்திரமாக தீர்மானித்துக் கொள்ளலாம். திரைப்படத் துறை நலிந்து வரும் வேளையில் இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பிலிம் சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


நன்றி: தினமலர்

aanaa
17th April 2010, 07:26 PM
கொண்டாட்டத்தின் நடுவில்...


சீரியல் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது 15-வது ஆண்டுவிழாவை நிறைவாக கொண்டாடியது. இந்த விழாவில் தங்கள் புதிய சீரியலான அனுபல்லவி தொடரின் பூஜையையும் நடத்தினார் தயாரிப்பாளர் ஜே.கே.

விழா கொண்டாட்டத்தையொட்டி சின்னத்திரை கூட்டமைப்புக்கு ரூ.2 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு ரூ. 2 லட்சமும் வழங்கினார், ஜே.கே. சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவர் விடுதலையும், திரைப்பட சம்மேளன தலைவர் வி.சி.குகநாதனும் பெற்றுக்கொண்டார்கள்.

இந்தப்பணத்தை வங்கி சேமிப்பில் போட்டு அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகையில் இருந்து ஆண்டு தோறும் 3 சின்னத்திரை கலைஞர்களுக்கும், 3 பெரியதிரை கலைஞர்களுக்கும் நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
27th April 2010, 06:02 AM
சினிமா வில்லனாகும் சின்னத்திரை இயக்குனர்\

சன் டிவியில் `அசத்தப்போவது யாரு' காமெடி நிகழ்ச்சியை இயக்கி வரும் டைரக்டர் ராஜ்குமார், `வம்சம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார். முதல்வர் கலைஞரின் பேரன் அருள்நிதி நாயகனாக நடிக்கும் படம் இது.

நன்றி: தினதந்தி

aanaa
2nd May 2010, 12:52 AM
சின்னத்திரைக்கு வரும் நதியா

திருமணத்துக்குப் பிறகு கணவருடன் லண்டனில் செட்டிலான நதியா, 2 குழந்தைகளுக்கு அம்மா ஆனபிறகு மீண்டும் நடிக்க முன்வந்தார். சண்டை, பட்டாளம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைக்கிறார், நதியா. முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாகும் குரு என்ற தொடரில் நதியாவுடன் சேர்ந்து நடிக்கும் இன்னொரு பிரபலம், நடிகை சமிக்ஷா.

தொடரை இயக்கும் ராஜா, ஏற்கனவே சிந்துபாத், விக்ரமாதித்யன் போன்ற தொடர்களை இயக்கியவர்.


நன்றி: தினதந்தி

aanaa
2nd May 2010, 12:53 AM
நடிகையின் நடனப்பள்ளி

அனுபல்லவி தொடரில் நாயகியாக நடிக்கும் நடிகை தீபா நரேந்திரன் நடனத்திலும் தேர்ந்தவர். இவர் சென்னையில் அவிக்னா என்ற பெயரில் ஒரு நடனப்பள்ளியையும் நடத்தி வருகிறார்.

நன்றி: தினதந்தி

R.Latha
11th May 2010, 12:17 PM
டெலி சிப்ஸ்

First Published : 11 May 2010 12:47:56 AM IST

Last Updated :

கலை ​ஞர் டி.வி.க்காக மற்​றொ​ரு​ நிகழ்ச்​சி​யைத் தொகுத்து வழங்​கப் போகி​றது கணேஷ் -​ ஆர்த்தி ஜோடி.​ முழுக்க முழுக்க முதி​ய​வர்​களை சந்​தோ​ஷப்​ப​டுத்​தும் நோக்​கில் இந்த நிகழ்ச்​சியை களம் இறக்​கு​கி​றது கலை​ஞர்​டிவி குழு​மம்.​ 50 வய​துக்கு மேற்​பட்​ட​வர்​கள் கலந்து கொள்​ளும் இந்த நிகழ்ச்​சி​யில் டான்ஸ்,​​ காமெடி உள்​ளிட்ட அனைத்து அம்​சங்​க​ளும் இருக்​கு​மாம்.​ வாரம் ஒரு சிறப்பு விருந்​தி​ன​ரும் உண்​டாம்.​



திரு​ம​ணத்​துக்​குப் பின் முதன் முறை​யாக டி.வி.​ நிகழ்ச்​சிக்கு வரு​கி​றார் அமலா.​ விஜய் டி.வி.யின் "சூப்​பர் மாம்' நிகழ்ச்​சிக்​காக தமி​ழ​கத்​தின் சிறந்த அம்​மாக்​களை தேர்வு செய்​யப் போகி​றார்.​ நாகார்​ஜு​னாவை திரு​ம​ணம் செய்து கொண்ட பின் ​ புளூ கிராஸ் உறுப்​பி​னர்,​​ தன்​னார்​வத் தொண்டு நிறு​வ​னங்​க​ளில் ஈடு​பாடு என்​றி​ருந்த அம​லா​வுக்கு சீரி​யல்,​​ சினிமா,​​ டி.வி.ஷோ என வாய்ப்​பு​கள் வந்த நிலை​யில் ரியா​லிட்டி ஷோவை டிக் அடித்​தது நாகார்​ஜு​னா​வாம்.​

​"நிஜம்',​ "நடந்​தது என்ன',​ "நம்​பி​னால் நம்​புங்​கள்' என சேனல்​கள் போட்​டிப் போட்டு இரவு நேரங்​களை த்ரில்​லர் ஆக்கி வரும் வேளை​யில்,​​ புதிய வர​வான கேப்​டன் டி.வி.யும் த்ரில்​லர் ஷோவை இறக்​கப் போகி​ற​தாம்.​ வழக்​க​மான மூட நம்​பிக்கை பாணி​க​ளில் பய​ணிக்​கா​மல் சேரி பகுதி மக்​க​ளின் வாழ்க்கை முறை,​​ கிராம மக்​க​ளின் வாழ்க்கை நிலை,​​ நகர வாழ்க்​கை​யின் சிர​மங்​கள் என வரி​சைப்​ப​டுத்​தப் போகி​றார்​க​ளாம்.​ நிகழ்ச்​சிக்கு பெயர் தேடும் பட​ல​மும் தொடங்கி விட்​டது.​

​கோடை விடு​மு​றை​யில் சிறு​வர்​களை கவ​ரும் வகை​யில் "இஷான்' என்ற தொடரை களம் இறக்​கு​கி​றது டிஷ்னி குழு​மம்.​ ஒரு சிறு​வ​னின் இசைப் பய​ணத்தை ஊக்​கு​விக்​கும் வண்​ணம் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​தத் தொடர் முழுக்க முழுக்க இசைச் சார்ந்த நாடக வடி​வில் அமைக்​கப்​பட்​டுள்​ளது.​ பிர​பல சீரி​யல் இயக்​கு​நர் ஜெயடி சர்க்​கார் இயக்​கி​யுள்ள இந்​தத் தொடரை மே 15 முதல் காண​லாம்.​

​சென்னை முட்​டுக்​காடு பகு​தி​யில் பிர​மாண்ட பங்​க​ளாவை கட்டி வரு​கி​றார் சிம்​ரன்.​ இதற்​காக அதன் அரு​கி​லேயே வாட​கைக்கு வீடு எடுத்து,​​ கட்​ட​டப் பணி​களை கண்​கா​ணித்து வரு​கி​றார்.​ பங்​களா பணி​கள் முடிந்த பின் சினிமா மற்​றும் சீரி​யல்​க​ளில் மும்​மு​ர​மாக ஈடு​ப​டப் போகி​றார்.​ தன் படங்​க​ளில் பணி​யாற்​றிய சில உதவி இயக்​கு​நர்​க​ளுக்கு முதல் சினிமா வாய்ப்​பைத் தரப் போகி​றா​ராம்.​

​​சினிமா வாய்ப்​பு​கள் குறைந்த நிலை​யி​லும்,​​ விளம்​பர வாய்ப்​பு​க​ளில் நடி​கை​க​ளைப் போல் கவ​னம் செலுத்​து​கி​றார்​கள் நடி​கர்​கள்.​ மோகன்​லா​லு​டன் வேஷ்டி விளம்​ப​ரத்​தில் வலம் வரு​கி​றார் சரத்​கு​மார்.​ நகைக்​கடை விளம்​ப​ரங்​க​ளுக்கு பெயர் போன பிரபு மேலும் சில புதிய விளம்​ப​ரங்​க​ளில் வரு​கி​றார்.​ கார்த்​திக்​கும் விளம்​ப​ரங்​க​ளில் நடிக்க ஒப்​பந்​த​மாகி உள்​ளா​ராம்.​ விளம்​பர கவ​னத்​தில் சிவ​மைந்​தன் முக்​கி​ய​மா​ன​வர்.​

விளம்​ப​ரங்​கள்,​​ பார்ட்டி என ஐ.பி.எல்.​ கொண்​டாட்​டத்​தில் இருந்த பாலி​வுட் நடி​கை​க​ளில் சிலர்,​​ 20-20 உல​கக் கோப்பை போட்​டி​களை பார்க்க மேற்​கிந்​திய தீவு​க​ளுக்​கும் சென்று விட்​டார்​க​ளாம்.​ ப்ரித்தி ஜிந்தா,​​ ஷில்பா ஷெட்டி,​​ தீபிகா படு​கோன்,​​ பிபாஷா பாசு என நீள​கி​றது இந்​தப் பட்​டி​யல்.​ சமீரா ரெட்டி,​​ ஜெனி​லியா என சிலர் புறப்​ப​டத் தயா​ராகி வரு​கி​றார்​கள்.​

தனது ஒவ்​வொரு பிரே​மி​லும் அதிர வைக்​கும் பேர​ழி​வு​களை பட​மாக்கி உள்​ளார் ரான் பிட்ஸ்.​ பெரும் கட்​டி​டங்​கள் திட்​ட​மிட்டு தகர்க்​கப்​ப​டு​வதி​லி​ருந்து,​​ பெரும் சூறா​வளி,​​ நடு வானில் நிக​ழும் பேர​ழிவு மோதல்,​​ எதிர்​பா​ராத தீவி​ர​வா​தத் தாக்​கு​தல் என பல்​வேறு பேர​ழி​வு​களை டிஸ்​க​வரி சேன​லின் "டெஸ்ட்​ராய்ட் இன் செகன்ட்ஸ்' என்ற தொட​ருக்​காக படம் பிடித்​தி​ருக்​கி​றார்.​ வாரந்​தோ​றும் ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளில் இந்​நி​கழ்ச்சி ஒளி​ப​ரப்​பா​கி​றது.​

"சேலஞ் ​சஸ் ஆஃப் லைஃப்' என்ற பெய​ரில் புதிய தொடரை களம் இறக்​கப் போகி​றது டிஸ்​க​வரி குழு​மம்.​ பல கண்​டங்​க​ளை​யும்,​​ வாழ்​வி​டங்​க​ளை​யும் தழு​விய இந்​தத் தொடரை 70 ஒளிப்​ப​தி​வா​ளர்​கள் 3000 நாள்​கள் பட​மாக்​கி​யி​ருக்​கி​றார்​கள்.​ உயி​ரி​னங்​கள் தங்​கள் இனம் தொடர்ந்து நீடித்து வாழ்​வ​தற்​காக செய்​யும் செயல்​களை இந்​தத் தொடர் படம் பிடித்து காட்​டப்​போ​கி​றது.​ விலங்​கு​கள் வேட்​டை​யா​டப்​ப​டும் கென்யா காடு​க​ளின் த்ரில்​லர் வேட்​டை​க​ளும் இடம் பெறு​கி​றது.



http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=240032&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

aanaa
29th May 2010, 10:10 PM
நடிக்க வந்தாச்சு

`அசத்தப் போவது யாரு' நகைச்சுவைத் தொடரை இயக்கி வரும் ராஜ்குமார், இப்போது `பசங்க' பாண்டிராஜ் இயக்கும் `வம்சம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.மு.க.தமிழரசு தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பவர் அருள்நிதி.

"வில்லன் என்றில்லை, நடிப்புக்கு சவாலான எந்த மாதிரியான கேரக்டரிலும் நடிப்பேன்'' என்கிறார், ராஜ்குமார்.

நன்றி: தினதந்தி

aanaa
29th May 2010, 10:15 PM
[tscii:fb8104d436]
இன்று `விஜய் விருதுகள்'

நான்காவது ஆண்டில் அடியெடுத்துள்ள ` விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி, திரை நட்சத்திரங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2009- ம் ஆண்டு வெளியான 131 திரைப்படங்களிலிருந்து சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்ய `விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ்' வாகனம் தமிழகம் முழுவதும் சுற்றி ரசிகர்களின் வாக்குகளை சேகரித்து வந்துள்ளது.

இந்த விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கில் இதற்காக நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்திரையுலக நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள்.

ரசிகர்கள் தேர்ந்தெடுத்த பேவரைட் பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான விருதுகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாக ஏ.ஆர்.முருகதாஸ், ரவி.கே.சந்திரன், ராதிகா, மதன் மற்றும் ïகிசேது இடம் பெற்றுள்ளனர்.

[html:fb8104d436]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20100529/TVAward.jpg</div>[/html:fb8104d436]

நன்றி: தினதந்தி [/tscii:fb8104d436]

aanaa
29th May 2010, 10:15 PM
`புதிய' சித்திரம்

கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து மற்றுமொரு தொலைக்காட்சியான `சித்திரம்' விரைவில் உதயமாகிறது.

சிறுவர்களை மகிழ்விக்க, நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட கார்ட்டூன் படங்கள் இதில் இடம் பிடிக்கும். அதோடு உலகப் பொதுமறையாம் திருக்குறள், மற்றும் புகழ்மிக்க காப்பியங்களும், எளிய முறையில் புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களின் விளக்க உரைகளுடன் ஒளிபரப்பு செய்யப்படும்.

2007-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி துவங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி குறுகிய காலத்திலேயே, இசைக்கென்று `இசையருவி' சேனல், செய்திகளுக்காகவே `செய்திகள்' சேனல், நகைச்சுவைக்கு `சிரிப்பொலி' சேனல் என்று ஒவ்வொரு சுவைக்கும் ஒரு தொலைக்காட்சியாக நான்கு செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளை உருவாக்கி வெற்றி கண்டது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து குழந்தைகளுக்கென்று உருவானதே `சித்திரம்' தொலைக்காட்சி.

aanaa
5th June 2010, 05:25 AM
தயாரிப்பாளர் சிம்ரன்


பெரியதிரையில் இருந்து சின்னத்திரைக்கு நடிக்க வந்த சிம்ரன், எதிர்பார்த்த தொடர் வாய்ப்புகள் கிடைக்காததால் தயாரிப்பாளராக தடம் பதிக்கிறார். தயாரிக்கும் தொடரில் முக்கிய கேரக்டர் இருந்தால் நிச்சயம் நடிக்கவும் செய்வாராம்.

நடிகையே தயாரிப்பாளர் என்னும்போது அவர் நடிக்க விரும்பினால் முக்கிய கேரக்டர் தானே உருவாகி விடாதா...!

aanaa
8th June 2010, 05:15 AM
எந்த டிவியும் தங்களைக் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பைக் கையாண்டதால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தானே ஒரு டிவியை தொடங்கினார். கேப்டன் டிவி என பெயரிடப்பட்ட அந்த சானல் கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

வித்தியாசமான சில நிகழ்ச்சிகளுடன் சினிமாவையே பிரதானமாக கொண்ட பல நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது கேப்டன் டிவி.


இந்த நிலையில் நாளை முதல் கேப்டன் டிவியில் செய்திகள் ஒளிபரப்பாகவுள்ளன.

தினமும் காலை 7.30 மணி; பகல் 1 மணி; மாலை 6 மணிக்கு தலைப்புச் செய்திகள்; இரவு 7.30 மணி மற்றும் இரவு 10 மணி ஆகிய நேரங்களில் கேப்டன் செய்திகள் ஒளிபரப்பாகவுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் செய்தியாளர்களை நியமித்துள்ளதாக கேப்டன் டிவி கூறுகிறது.

சன், கலைஞர் என திமுகவுக்கு இரண்டு முக்கியமான சானல்களும், அதிமுகவுக்கு ஜெயா டிவியும், பாமகவுக்கு மக்கள் டிவியும், காங்கிரஸுக்கு வசந்த், மெகா டிவி என இரு சானல்களும் செய்திகளை வாரி வழங்கி வரும் நிலையில், தற்போது தேமுதிகவின் செய்திகளை மக்களுக்கு அளிக்க வருகிறது கேப்டன் டிவி.

aanaa
8th June 2010, 05:16 AM
Tamil entertainment industry is growing leaps and bounds. If the number of films produced is growing every year the number of television channels is also growing in Tamil Nadu. The newest entrant into the home television world is Dhayanidhi Alagiri.
Cloud Nine Movies Dhayanidhi Alagiri is already a producer and distributor of repute. He is also a name in cable television MSO. Now the energetic producer is planning start a new general entertainment television channel in Tamil. The channel name under wraps is 'Dhaya' according to sources.
Sources also say the work for the new channel has already started and an office is already functioning.

aanaa
11th June 2010, 05:19 AM
சிம்ரனின் சீரியல் தயாரிப்பு திட்டம் ஒரு வழியாக வரும் மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் சீரியல் தயாரிப்பில் களம் இறங்குகிறார். தமிழில் கஸ்தூரி, சங்கீதா, சங்கவி என பெயர் பட்டியல் இருக்க, கஸ்தூரிக்கே அதிர்ஷ்டம் அடித்திருக்கிறதாம். மலையாளத்திலும் தமிழ் நடிகை ஒருவர் நடிக்கலாம் எனத் தெரிகிறது. ஹிந்தியில் மனீஷா கொய்ராலா என்பது புதுத் தகவல்.

aanaa
11th June 2010, 05:21 AM
பிரபு, சரத்குமார், மோகன்லால் வரிசையில் விளம்பரத்துக்கு வந்து விட்டார் அர்ஜுன். சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், இப்போதுதான் விளம்பரத்தில் நடித்துள்ளார். தன் படங்களின் தொடர் தோல்வியும் அவர் விளம்பரங்களில் கவனம் செலுத்த ஒரு முக்கிய காரணமாம். இனியும் விளம்பரங்கள் வரலாம் என்கிறார்கள்.

aanaa
13th June 2010, 11:24 PM
நடிகர்- இயக்குனர்

நடிகர் சேத்தன் பெரிய திரையில் இயக்குனராகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். நாயகன்- நாயகி புதுமுகங்கள்.

aanaa
17th June 2010, 10:43 PM
தமிழ் - தெலுங்கில் பிரபலமான நடிகையும் எம்பியுமான ஜெயப்ரதா மலையாளத்தில் படம் தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படவுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தீவிர அரசியலில் புகுந்த அவர் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. ஆனார். பின்னர் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

முலாயம்சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகிய அமர்சிங்குக்கு ஆதரவாக தானும் கட்சியில் இருந்து வெளியேறினார். தற்பேது இவர் சினிமா படம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக ஜெயப்பிரதா எண்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனம் முதன் முதலாக மலையாளத்தில் படம் தயாரிக்கிறது. அந்த படத்தை மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஆர்.சரத் இயக்குகிறார்.

நடிகர் முகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயப்பிரதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக வேறொருவர் நடிக்கிறார். ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது. கன்யாகுமரி, நாகர்கோயிலில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள்.

aanaa
26th June 2010, 05:23 AM
[tscii:7eebcc0b99]
Television is the most preferred entertainment medium and women have established their supremacy over men in living rooms, a media study has found.

TV sealed the first slot with as many as 92 per cent of respondents voting for it in a survey conducted by commercial consultancy firm Deloitte on ‘State of the Media Democracy Survey,’

Among 2,000 respondents across the country, women were found to be watching more TV programmes (93 per cent), compared to men (91 per cent).

Analysing the reason behind TV’s sway among respondents from cities like Bangalore, Lucknow, Ludhiana, Surat and Indore, the study said, “this may be because TV has a wider reach than any other medium and the ‘visuals’ have a greater impact irrespective of their educational background, status etc.”

It further said “in India, the growth of the DTH platform has ensured that the remotest corner of the country can now get hooked onto numerous soaps, sports, news and other powerful visuals that modern day television beams out“.

Even the senior citizens rate TV as the preferred entertainment medium, with their score being as high as 95 per cent.

Newspaper occupies the second position.

“Indians, unlike the westerners, want to read dailies with their morning cup of tea. This reading habit is more visible in the younger bracket of respondents (those above 26 years), with 68 per cent of them preferring newspaper.

Among the younger generations, going to the movies, listening to music and radio are high on their next preferred entertainment areas. The tech-savvy generation is more inclined to Internet, gaming and cell phones as means of recreation,” the survey said.

Cell phone came out as the most preferred entertainment device as 64 per cent of the respondents falling in the age group of 14-25 voted for it. [/tscii:7eebcc0b99]

aanaa
26th June 2010, 05:29 AM
Gowthami, who has come back with a bang through the small screen mega-serial Abirami, on Kalaignar TV, says she was blessed by the Almighty, for the offer came to her at a right time when she wanted to do some roles. The story of Abirami is the story of a woman from different walks of lives. The actress feels that she was always delighted to act in the serial and she has thanked the producer Abirami Ramanathan and the team of artistes.

Because, the serial earned title among general public the director is introducing two more characters, which means Gowthami will be appearing in three different roles. A journalist said, that she caught the idea from her well-wisher Kamalhassan who did ten roles in Dasavatharam. In this serial Gauthami will appear as a district collector and a brahmin mami-- the three characters representing Durga, Lakshmi and Saraswathi- the Goddesses of the Hindu mythology

Producer Abirami Ramanathan, said he is planning to roll out his new production venture soon. He said the work of the new production would be started once the severn theater complex construction was over.
.

aanaa
7th July 2010, 05:41 PM
சினிமா தயாரிக்கப் போகிறார் கனிமொழி!
Kanimozhi to produce Tamil cinema
உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரியைத் தொடர்ந்து கனிமொழியும் சினிமா தயாரிப்பாளர் ஆகப்போவதாக கோடம்பாக்கத்தில் புது புயல் செய்தி கிளம்பியிருக்கிறது. முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பி.,யுமான கனிமொழிக்*கு சினிமா மீதான ஆர்வம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. முதல்வரின் குடும்பத்தில் ஏற்கனவே மு.க.முத்து, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சினிமாவில் நடித்துள்ளனர். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியும், மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தமிழ் சினிமாவின் பிஸியான தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். உதயநிதி சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.க.முத்துவின் மகன் பாடகராக, நடிகராக மாறி வருகிறார். மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி ஹீரோ ஆகி விட்டார்.

இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள கனிமொழி எம்.பி., முடிவு செய்திருக்கிறாராம். அவர் தயாரிக்கப்போகும் படத்தினை இயக்கப்போவது யார்? நடிகர் - நடிகைகள் குறித்த விவரங்கள் இன்னமும் வெளியாகவி*ல்லை. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகப்போகும் இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்கிறது விவரமறிந்த அரசியல் வட்டாரம்.

நன்றி: தினமலர்

aanaa
7th July 2010, 05:45 PM
தொகுப்பாளினி சுவேதாவுக்கு மிஸ் சின்னத்திரை பட்டம்

A beauty pageant for TV stars
தொகுப்பாளினி சுவேதாவுக்கு மிஸ் சின்னத்திரை பட்டம் கிடைத்துள்ளது. சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கான `மிஸ்.சின்னத்திரை' அழகிப்போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் சின்னத்திரை நடிகைகள் தேவிபிரியா, லாவண்யா, விலாசினி, மோனிகா, மோபின், நிகழ்ச்சித் தொகுப்பாளினிகள் சுவேதா, காயத்ரி, மணிமேகலை, ரஜனி, அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத்தில் நடந்த இந்த போட்டிக்கு நடிகர் `மிளகா' நட்ராஜ், டைரக்டர் ரவிமரியா, நடிகை `பாண்டவர் பூமி' சமீதா, `மிஸ்.சென்னை' திவ்யா, அழகுக்கலை நிபுணர் மது, மாடல் பயிற்சியாளர் சுனில் மேனன் நடுவர்களாக இருந்தனர்.

மூன்று சுற்றுகள் நடந்த இந்த போட்டியில் தொகுப்பாளினி சுவேதா `மிஸ் சின்னத்திரை -2010' பட்டத்தை வென்றார். அவருக்கு நடிகை கீர்த்தி சாவ்லா கிரீடம் சூட்டி வாழ்த்தினார். இரண்டாவது இடத்தை இன்னொரு தொகுப்பாளினி ரஜனியும், மூன்றாவது இடத்தை நடிகை தேவிபிரியாவும் பிடித்தனர்.


[html:8bdf6850ca]<div align="center">http://img1.dinamalar.com/cini//CNewsImages/2286misschinnathirai.jpg</div>[/html:8bdf6850ca]

நன்றி: தினமலர்

aanaa
25th July 2010, 06:35 PM
பாலிவுட்டில் ஏற்கனவே இரு பாடல்களை பாடியுள்ள சின்மயி, ஸ்டார் குழுமத்துக்கான ரியாலிட்டி ஷோவை தொகுக்கப் போகிறார். இந்த ரியாலிட்டி ஷோவிற்கான சூட்டிங் நடைபெற்று வருகிறது. இசை சம்பந்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமிதாப் முதல் ஸ்ரீதேவி வரை பாலிவுட் நட்சத்திரங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் *தொகுப்பாளினியாக வரும் சின்மயி, எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இளையராஜா வரை கோலிவுட் இசையமைப்பாளர்கள் இசையமைத்தப் பாடல்களை பாடி அசத்த போகிறாரார்.


நன்றி: தினமலர்


[html:4c1887f2a2]<div align="center">http://img1.dinamalar.com/cini//CNewsImages/2397Chinmayi_lg.jpg </div>[/html:4c1887f2a2]

aanaa
25th July 2010, 06:40 PM
சின்னத்திரை பிரஜின் வெள்ளித்திரையில் பிஸி! (http://cinema.dinamalar.com/tamil-news/2380/cinema/Kollywood/Prajin-busy-with-films.htm)

aanaa
25th July 2010, 06:48 PM
நடிக்கும் இயக்குனர்கள்



சின்னத்திரை இயக்குனர்கள் பலரும் இப்போது நடிக்கத் தொடங்கி விட்டார்கள். மெட்டிஒலி தொடரின் இயக்குனர் திருமுருகன் நடிகராகவும் புகழ் பெற்றார். இந்த தொடரில் அப்போது இணை இயக்குனராக இருந்த திருச்செல்வத்துக்கும் ஒரு கேரக்டர் கொடுத்து நடிக்கவைத்தார் திருமுருகன்.

இதைத்தொடர்ந்தே கோலங்கள் தொடரை இயக்கும் வாய்ப்பு வந்தபோது திருச்செல்வம் முழுநேர நடிகராகவும் தொடர் முழுக்க நீடித்தார். இப்போது வாடகை வீடு தொடரை இயக்கும் விஸ்வநாத்தும் அந்ததொடரில் ஒரு முக்கிய கேரக்டரை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்போது பல தொடர்களில் அப்பா கேரக்டரில் வரும் ஜெயமணி ஏற்கனவே தொடர்களை இயக்கியவர்.

இப்படி இயக்கும் தொடரில் நடிக்கவும் செய்யும் சில இயக்குனர்கள் அந்த தொடரில் இயக்குவதற்கு மட்டுமே சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள். நடிப்பு `ப்ரீ' என்பதால் தயாரிப்பாளரும் ஒரு நடிகருக்கான சம்பளம் லாபம் என்ற கண்ணோட்டத்தில் சந்தோஷமாய் சம்மதம் சொல்லிவிடுகிறார்கள்.


நன்றி: தினதந்தி

aanaa
21st November 2010, 02:59 AM
சீரியலில் பாண்டியராஜன்

நடிகரும், டைரக்டருமான பாண்டியராஜன் `மாமா மாப்ளே' என்ற காமெடி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார். இந்த தொடரை டைரக்டர் எஸ்.என்.சக்திவேல் இயக்குகிறார்.

மோகன்ராம், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

aanaa
21st November 2010, 03:02 AM
`வாழ்வை மாற்றலாம் வாங்க'



பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவின் ஜோடியாக வந்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து முன்னணி நடிகையாக திரைஉலகில் கோலோச்சியவர், கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு இப்போது நடிகர் ஆர்யாவின் அண்ணியாக பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் குணச்சித்ரநடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படங்களில் நடிப்பைத் தொடர்ந்து கொண்டே சின்னத்திரையிலும் கால்பதித்திருக்கிறார். சன் டிவியில் ஞாயிறு தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `வாழ்வை மாற்றலாம் வாங்க' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் இவர் தான். இந்த நிகழ்ச்சியை கோத்ரேஜ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

நிகழ்ச்சியில் ஸ்லோகன் போட்டியில் வென்றவர்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பர்னிச்சர்களை வழங்கிய கையோடு பேசியவரிடம்,

"சின்னத்திரை அனுபவம் எப்படி இருக்கிறது?'' கேட்டோம்.

"திறமையாளர்களை சந்திக்கிறேன். அவர்களின் முயற்சி களும், வெற்றிஅனுபவங்களும் சுவாரசியமாய் இந்த

நிகழ்ச்சிக்குள் என்னை இணைத்து விட்டது. சினிமாவில் நடிகையாக தொடர்ந்தாலும் சின்னத்திரையில் கிடைக்கும் அனுபவம் நிச்சயம் புதுசு தான்.''


நன்றி: தினதந்தி

aanaa
27th November 2010, 10:30 PM
சிகரங்களின் சங்கமம்

பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா தனது அறக்கட்டளை மூலம் பழம்பெரும் இசைக் கலைஞர்களுக்கு சிறப்பு செய்தார். 3-வது ஆண்டாக இசை விருது வழங்கி வரும் இந்த அறக்கட்டளை மூலம், முதல் ஆண்டில் பாடகி எஸ்.ஜானகியும், இரண்டாவது ஆண்டில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் விருதுகள் பெற்றனர். இந்த ஆண்டுக்கான விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டது. ரூ.1 லட்சம் மதிப்பு கொண்டது, இந்த விருது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் இதற்கான விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் பி.சுசிலாவுடன் இணைந்து `தங்கரதம் வந்தது வீதியிலே' என்ற பாடலை பாடி ரசிகர்களின் உற்சாக கரகோஷத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் `வாழ்நாள் சாதனையாளர் விருது' பிரபல பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜனுக்கும், பி.பி.சீனிவாசுக்கும் வழங்கப்பட்டது. தலா ரூ.20 ஆயிரம் மதிப்பு கொண்டது இந்த விருது.

விழாவின் சிறப்பு அம்சமாக டி.எம்.சவுந்தர்ராஜன் - பி.சுசிலா இருவரும் `நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்' என்ற பாடலை பாடி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு போனார்கள். தனது பாடல்களில் புகழ் பெற்ற `உன்னைக்காணாத கண்ணல்ல' பாடலை பி.சுசிலா பாடினார். `உன்னை ஒன்று கேட்பேன்' என்ற பி.சுசிலா பாடலை சித்ரா அதேபாவத்துடன் பாடினார். `காதோடுதான் நான் பாடுவேன்' பாடலை படத்தில் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரியே நிகழ்ச்சியிலும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் ஹரிகரன், வாணி ஜெயராம், உன்னிமேனன், ஏ.எல்.ராகவன், ஹரீஸ் ராகவேந்தர், மனோ, பி.சுசிலாவின் மருமகள் சந்தியா ஆகியோரும் பாடினார்கள். `சாதகப்பறவைகள்' சங்கர் பாடல்களுக்கு இசை வடிவம் வழங்கினார்.

இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் வந்திருந்தார். மும்பையில் இருந்து ஹரிகரன் வந்தார்.

விஜய் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகிறது, இந்த இசை நிகழ்ச்சி.



நன்றி: தினதந்தி

aanaa
4th December 2010, 09:01 PM
ஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெருந்தன்மை



மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இசை நிகழ்ச்சி, `பாடி அழைத்தேன்'. திரைப்பட பின்னணி பாடகர்கள் தங்கள் இசைப்பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நெஞ்சை வருடும் இதமான நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம் கலந்துகொண்டு தன் இசைஅனுபவங்களை பட்டியலிடுகிறார். இதற்காக அவர் கடந்தவாரம் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது இசை அனுபவங்கள் பலவற்றை உள்ளம் உருக எடுத்துரைத்தார்.

அதில் ஒன்று:

பாரதிராஜா இயக்கத்தில் உருவான `காதல் ஓவியம்' படத்துக்காக `பூஜைக்காக...' என்ற பாடலை பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்தார். இந்தப் பாடலை தீபன்சக் கரவர்த்தி `டிராக்' பாடியிருந்தார். பாடல் பதிவு நாளில் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்த பாலசுப்பிரமணியம் இந்த `டிராக்' பாடலைக் கேட்டார். கண்மூடி மெய்யுருக பாடலை ரசித்தவர், இசையமைப்பாளர் இளையராஜாவிடம், "இதுவே அற்புதமாகத்தானே இருக்கிறது. இதையே பயன்படுத்திக் கொள்ளுங்களேன்'' என்று கேட்டுக் கொள்ள, இசைத்தட்டிலும், படத்திலும் தீபன்சக்கரவர்த்தி பாடியதே இடம் பெற்றது.

`யார் எப்படி பாடியிருந்தால் நமக்கென்ன...நமக்கு ஒரு பாட்டு பாட வாய்ப்பு வருகிறது. பணம் வருகிறது. பாடிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போவோமே' என்று பாலசுப்பிரமணியம் நினைக்கவில்லை. இது அவர் பெருந்தன்மை.

"இந்த நிகழ்ச்சியின் சிறப்புஅம்சமே பாடலின் வரிகள் தெள்ளத்தெளிவாக ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பது தான். அதற்காக இசை நிகழ்ச்சியில் பியானோ மட்டுமே இசைக்கிறோம். இதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரொம்பவே ரசித்தார். அதோடு காதல், வீரம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்கள் மட்டுமே பாடப்படுகிறது'' என்கிறார், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், இசையமைப்பாளருமான மைக்கேல். இவர் சமீப காலமாக சினிமாவின் பின்னணிப் பாடகராகவும், வளர்ந்து வரும் `வசந்தமுல்லை, இந்தியா' படங்களின் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார்.

நிகழ்ச்சியின் ஹைலைட், இதுவரை யாரும் தன்னிடம் கேட்டிராத கேள்விகளை எஸ்.பி.பி.யே கேட்டு அதற்கு பதிலும் சொன்னது தான். பாடல்கள், பதில்கள் என்று நிகழ்ச்சி முழுக்க சுவாரசியம் கூட்டியவரிடம் இருந்து விடைபெற்று அரங்கை விட்டு வெளியே வந்தபோது, அந்த காந்தர்வக் குரல் இசையரங்கைத் தாண்டி நம் காதுகளை ஊடுருவியது. இதோ அந்தப் பாடல்: `வா பொன்மயிலே...நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'


நன்றி: தினதந்தி

aanaa
4th December 2010, 09:02 PM
மீண்டும் புவனேஸ்வரி


சின்னத்திரையில் நடிகை புவனேஸ்வரி நடிக்காத சீரியல்களே இல்லை என்றிருந்தது ஒரு காலம். போகப்போக சீரியல்களை குறைத்துக்கொண்ட புவனேஸ்வரி, தெலுங்கில் தொடர்களை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார். இடையில் அரசியல் அழைக்க, அதிலும் பிசியானதில் சின்னத்திரைக்கும் அவருக்கும் சிறு இடைவெளி தவிர்க்க முடியாததாகி விட்டது.

இப்போது இந்த இடைவெளியைக் குறைக்கும்விதத்தில் `பாவத்தின் சம்பளம்' என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார், புவனேஸ்வரி. வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ் தினத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான்சுவாங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக் கிறார்கள்.

எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.

நன்றி: தினதந்தி

aanaa
26th January 2011, 09:40 PM
[tscii:17a0cc5275] [/tscii:17a0cc5275] ராதிகா, தேவயானிக்கு தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள்


சென்னை, ஜன. 25: தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. நடிகைகள் ராதிகா, தேவயானி, பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன் உள்ளிட்டோருக்கு சிறந்த நடிகை-நடிகர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதிபதி மு. மருதமுத்து தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு 2007ஆம் ஆண்டுக்கான 7 விண்ணப்பங்களும், 2008 ஆம் ஆண்டுக்கான 12 விண்ணப்பங்களும் வரப்பெற்றன. மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களைக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அந்தப் பரிந்துரைகளை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு விருதுக்குரிய தொடர்கள், மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளார். விவரங்கள் வருமாறு:-

2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த நெடுந்தொடர்

முதல் பரிசு: கோலங்கள் (விகடன் டெலிவிஸ்டாஸ்) ரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

இரண்டாம் பரிசு: லட்சுமி (ஹோம் மூவி மேக்கர்ஸ்) ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

சிறந்த சாதனையாளர் விருது: ராதிகா. ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

வாழ்நாள் சாதனையாளர்: வி.எஸ். ராகவன். ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்:

சிறந்த கதாநாயகன்: விஜய் ஆதிராஜ் (லட்சுமி). 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த கதாநாயகி: தேவயானி. (கோலங்கள்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த குணச்சித்திர நடிகர்: பிருத்விராஜ். (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த குணச்சித்திர நடிகை: சத்யபிரியா (கோலங்கள்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த வில்லன் நடிகர்: ராஜ்காந்த் (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த வில்லி நடிகை: நளினி (பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த குழந்தை நட்சத்திரம்: நிவேதா (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த இயக்குநர்: சுந்தர் கே. விஜயன் (லட்சுமி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த கதையாசிரியர்: அறிவானந்தம் (அகமும் புறமும்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த திரைக்கதை ஆசிரியர்: முத்துசெல்வம் (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த உரையாடல் ஆசிரியர்: பாஸ்கர் சக்தி (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த ஒளிப்பதிவாளர்: வசீகரன் (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த படத் தொகுப்பாளர்: ரமேஷ் (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ரேகான் (பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்: (ஆண்) மதி (லட்சுமி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்: (பெண்) நித்யா (பாசம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த நெடுந்தொடர்

முதல் பரிசு-ஆனந்தம் (சத்யஜோதி பிலிம்ஸ்) ரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

இரண்டாம் பரிசு-நம்ம குடும்பம் (எவர் ஸ்மைல் எண்டர்பிரைசஸ்) ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

சிறந்த சாதனையாளர் விருது-ஆண்டின் சிறந்த சாதனையாளர் வ.கெüதமன் ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்-ஒய்.ஜி.மகேந்திரா, ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்.

சிறந்த கதாநாயகன்-சஞ்சீவ் (திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த கதாநாயகி-சுகன்யா (ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த குணச்சித்திர நடிகர் மோகன் வி.ராமன் (வைர நெஞ்சம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த குணச்சித்திர நடிகை அனுராதா கிருஷ்ணமூர்த்தி (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த வில்லன் நடிகர்-சாக்ஷி சிவா (நம்ம குடும்பம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த வில்லி நடிகை- மாளவிகா (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த குழந்தை நட்சத்திரம்-மோனிகா (ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த இயக்குநர்-செய்யாறு ரவி (ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,
நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த கதாசிரியர்-குமரன் (திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,
நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த திரைக்கதை ஆசிரியர்- அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ் (திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த உரையாடல் ஆசிரியர் - லியாகத் அலிகான் (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த ஒளிப்பதிவாளர் - அசோக்ராஜன் (சிவசக்தி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த படத் தொகுப்பாளர்-ராஜீ (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்-ஆதித்யன் (சந்தனக்காடு) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) சங்கர் (பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) அனுராதா (தவம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி பரிசுகளையும், விருதுகளையும் வழங்குவார். நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Thanks : Dinamani

aanaa
6th February 2011, 11:42 PM
விருதுகள் தந்த அடையாளம்


தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டபோது விருதுக்குரியவர்கள் மகிழ்ந்தனர். பெறாதவர்கள் அடுத்தமுறை வென்றே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

இந்த விருதுப்பட்டியல் சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரை ரொம்பவே மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது. அவர் தயாரிப்பில் வந்த `லட்சுமி' தொடர் மட்டும் 4 விருதுகளை அள்ளியதில் தான் அத்தனை சந்தோஷம். சிறந்த நடிகர் விஜய்ஆதிராஜ், சிறந்த இயக்குனர் சுந்தர்கே.விஜயன், சிறந்த பின்னணி குரல் மதி, சிறந்த சீரியலுக்கான இரண்டாம் பரிசு என 4 விருதுகள். இதுபோக இன்னொரு தொடரான `சிவசக்தி' தொடருக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்ராஜாவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் ஐந்தாவதாக சேர்ந்து கொண்டதில் இவரது தயாரிப்பு நிறுவனமான `ஹோம் மீடியா' தரமான தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் இப்போது திருச்செல்வம் இயக்கத்தில் மாதவி என்றொரு சீரியலையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விருதுகள் அதுவும் மொத்தம் 5 விருதுகள் அள்ளியது பற்றி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்ன சொல்கிறார்?

"நல்ல படைப்புக்கு அரசின் `விருது மரியாதை' கிடைத்திருக்கிறது என்பது மிகப்பெரிய சந்தோஷம். தரமான படைப்பை ரசிகர்களுக்குத் தரும்போது அது விருதுக்குரியதும் ஆகும் என்ற நம்பிக்கையையும் இந்த விருதுகள் உணர்த்தியிருக்கின்றன. அதோடு இனிவரும் படைப்புக்களை இதைவிடவும் தரமாகத் தரவேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.''


நன்றி: தினதந்தி

aanaa
19th February 2011, 04:36 AM
அடுத்த விருது



கோலங்கள் தொடரில் அபி கேரக்டரில் வாழ்ந்து காட்டிய தேவயானிக்கு தமிழக அரசு சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருது கொடுத்து சிறப்பித்தது. `விருது' மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியபோது...

"பெண் என்பவள் போராட்ட குணம் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் தடைகளை தகர்க்கவும், எதிர்ப்பாளர்களை வெல்லவும் இந்த போராட்ட குணத்தை பயன்படுத்த வேண்டும் என்ற `கோலங்கள்' கதைக்களம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த கேரக்டர் மூலம் நிறைய பெண்கள் அபி கேரக்டரை தங்கள் ரோல் மாடலாக்கிக் கொண்டார்கள். என்னை பல இடங்களில் சந்திக்கும் பெண்கள் `நீங்கள் நடிக்கும் அபி கேரக்டர் மூலம் தன்னம்பிக்கையை பெற்றுக் கொண்டேன்' என்று சொல்லும்போது இந்த கேரக்டரை உருவாக்கித்தந்த டைரக்டர் திருச்செல்வத்துக்கு மனதார நன்றி சொல்வேன்.''

"இப்போது நடிக்கும் `கொடி முல்லை' தொடரில் வயதான அன்னக்கொடி கேரக்டரிலும் முத்திரை பதிக்கிறீர்களே? அடுத்த விருதுக்கு குறியா?''

"கோலங்கள் தொடரில் ஒருகட்டத்துக்கு மேல் அபி தான் என்னை செலுத்தினாள். அன்னக்கொடி கேரக்டரோ ஆரம்பம் முதலே என்னை பாதித்ததில் அதற்குள்ளாக ஐக்கியமாகி விட்டேன். இந்த ஐக்கியமும் விருதானால் மகிழ்ச்சியே.''


நன்றி: தினதந்தி

aanaa
19th February 2011, 04:44 AM
பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்க்கு பாராட்டு விழா
P.B.srinivas has to be felicitate
காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்க்கு பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது.

காலங்களில் அவள் வசந்தம்..., அவள் பறந்து போனாளே..., மயக்கமா கலக்கமா... உள்ளிட்ட காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளார் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவரை கவுரவிக்கும் வகையில் "எவர் பி.பி.எஸ்" எனும் பெயரில் சென்னை அண்ணா அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரபல பின்னணி பாடகர்கள் பி.சுசிலா, எஸ்.ஜானகி, மனோ, ஹரிஸ் ராகவேந்தர், திப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வாடா இன்ப்ரா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.


நன்றி: தினமலர்

R.Latha
8th April 2011, 01:26 PM
I wont abuse anyone, claims Radhika

Posted in 2011 Elections, Cinenews on April 8, 2011 / 0 Comments
Radhika

Radhika

Actress Radhika has said that it’s not her style of campaigning to verbally abuse her political opponents and others. Radhika’s husband and actor Sarath Kumar’s AISMK is part of the AIADMK alliance and is contesting in two seats for the ensuing Assembly elections in the State.








Though not seen in films quite often, Radhika is hugely popular among the womenfolk in the State, thanks to the continuous soap operas she has been dishing out on a popular regional channel’s prime-time slot for the past few years. She campaigned extensively in support of Sarathkumar for two days.

During one of her meetings, she said “It has become a common trend for actors and actresses campaigning for political parties to talk in a bad manner about their peers who are on the other side of the fence. It’s not a welcome trend at all and I, for one, would never indulge in such a style of campaigning.

“I appeal to the people to carefully go through the election manifesto of Amma and to cast their votes in favour of the AIADMK and its allies,” said Radhika.

aanaa
9th April 2011, 07:06 PM
வெள்ளித்திரையில் தனித்தனியே சிலபல *வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பார்த்திபனும், டைரக்டர் கவுதம் மேனனும் சின்னத்திரைக்காக கைகோர்க்கிறார்கள்.
இவர்கள் இருவரும் இணையப் போகும் தொடர் ஒரு விறுவிறுப்பான துப்பறியும் தொடராம். இதுபற்றி கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில், வெள்ளித்திரை அனுபவத்தை சின்னத்திரையில் பெற முடியாது என்ற தவறான கருத்*தை தகர்த்தெரியும் வகையில் என்னுடைய திகில் தொடர் இருக்கும். பெரிய திரை அனுபவத்தை தரும் அளவுக்கு பரபரப்பும், புதுமையும் நிறைந்த கச்சிதமான தொடராக அதனை இயக்கவுள்ளேன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும், என்றார்.

நடிகர் பார்த்திபன் கூறுகையில், தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது உண்மைதான். இதுதொடர்பாக ரொம்ப நாளாகவே நானும், கவுதமும் விவாதிச்சிட்டு இருந்தோம். இந்த முயற்சி மிக வித்தியானமாதாகவும், இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகவும் இருக்கும். ஹாலிவுட் தரத்தில் சின்னத்திரை தொடரை எடுக்கலாம் என்பதை எங்களது சீரியல் நிரூபிக்கும். சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த இயக்குனர்கள் சங்க விழாவின்போதுதான் இதுகுறித்த திட்டம் உருவானது. இந்தத் தொடரை தயாரிப்பவரும் டைரக்டர் கவுதம்*மேனன்தான், என்றார்.

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய த்ரில் தொடருக்கு இசையமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


நன்றி: தினமலர்

aanaa
9th April 2011, 07:15 PM
சீரியலில் நடிக்கப்போகிறார் விக்ராந்த் மனைவி

நடிகர் விஜய்யின் சித்தி ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்துக்கும், ஒளிப்பதிவாளர் ஹேமசந்தரின் மகள் மானஸாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலையாளத்தில் டி.வி., சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற மானஸா, இப்போது தமிழிலும் சின்னத்திரை தொடர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். மலையாள சின்னத்திரையை கலக்கி, மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற நான், விரைவில் தமிழ் ரசிகர்களையும் கவருவேன், என்கிறார்


நன்றி: தினமலர்

aanaa
8th May 2011, 05:50 AM
"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூடன் இவர் ஆடிய "மன்மத ராசா..." பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்தபடத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் அம்மணி அதனை மறுக்கவில்லை. வந்தவரைக்கும் லாபம் என்பது போல ஒத்தபாட்டுக்கு ஆடத் தொடங்கினார்.

மன்மத ராசாவை தொடர்ந்து, விக்ரமுடன் "அருள்" படத்தில் ஒரு பாடல், விஜய்யுடன் "திருப்பாச்சி" படத்தில் "கும்பிடபோன தெய்வம்..." என்று நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பார்த்திபனுடன் "வல்லமை தாராயோ" படத்தில் நடித்தார். அதன்பின்னர் சிறிது இடைவெளிக்கு பின்னர் ஷங்கரின் "அனந்தபுரத்து வீடு" படத்தில் நடித்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் ஏதும் வராததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிட்டார். தமிழில் முன்னணி டி.வி., சானல் ஒன்றில் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து சாயா சிங் கூறுகையில், சின்னத்திரையில் நடிக்க இருந்தது உண்மை தான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்ததொடரின் கதை மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_151513000000.jpg


நன்றி: தினமலர்

aanaa
4th June 2011, 06:13 PM
கலைஞர் முரசு


கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து மற்றுமொரு தொலைக்காட்சியாக வரவிருக்கிறது `கலைஞர் முரசு'

2007 செப்டம்பர் 15-ம்தேதி ஒளிபரப்பை துவங்கிய கலைஞர் தொலைக்காட்சி, இன்று 5 சாட்டிலைட் சானல்களாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நான்கு வருடத்தில் இசையருவி, செய்திகள், சிரிப்பொலி, சித்திரம் என்று பல கிளைகளை பரப்பி நிற்கிறது.

விரைவில் ``கலைஞர் முரசு'' என்ற புதிய சாட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் துவங்க உள்ளது. இதில் திரைப்படங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

aanaa
4th June 2011, 06:26 PM
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விஜய் டி.வி., மியூசிக் அவார்ட்!


விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் இசை விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான இசை விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த பாடகருக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "ஹோசானா..." பாடலுக்காக, விஜய் பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது.

சிறந்த பாடகிக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "மன்னிப்பாயா..." பாடலுக்காக, ஸ்ரேயா ஹோசலுக்கும், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "மாலை நேரம்..." பாடலுக்காக, ஆண்ட்ரியாவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது, நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது.

நடிகர் பாடிய பாடலுக்கான விருது, "மன்மதன் அம்பு" படத்தில், "நீல வானம்..." பாடலுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த பாடல் கம்போசிங்கான விருது, "பையா" படத்தில் "என் காதல் சொல்ல நேரமில்லை..." பாடலுக்காக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

புதுமுக இசையமைப்பாளர் விருது, "தமிழ்படம்" படத்திற்காக கண்ணனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சவுண்ட் மிக்சிங்கான விருது, கே.ஜெ.சிங், தீபக், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்க்கு வழங்கப்பட்டது.

இசை சக்கரவர்த்தி விருது, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.

இந்திய அளவில் இசையமைப்பில் சாதனை புரிந்ததற்காக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

2010ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு வழங்கப்பட்டது.

பிரபல பின்னணி பாடகருக்கான விருது "ராவணன்" படத்தில் "உசுறே போகுது..." பாடலுக்காக, கார்த்திக்கு வழங்கப்பட்டது.

சிறந்த டூயட் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "அடடா மழை..." பாடலுக்கு கிடைத்தது.

சிறந்த மெலோடிஸ் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "துளி.. துளி..." பாடலுக்கு கிடைத்தது.


நன்றி: தினமலர்

aanaa
4th June 2011, 06:31 PM
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ்


சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நட்சத்திரங்கள் சின்னத்திரைக்குள் நுழைந்த காலம் மாறி, பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் கூட சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தது பற்றி முன்பொருமுறை கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தொலைக்காட்சி தொட*ரில் நடிப்பதில் எந்த மனத்தடையும் இல்லை என்று கூறினார். காலம் அவரையும் சின்னத்திரைசிக்கு அழைத்து வந்துள்ளது.

மா தொலைக்காட்சியில் கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார் பிரகாஷ்ரா*ஜ். 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ப*ரிசு கொண்டதாம் இந்த கேம் ஷோ. தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களுடன் பிரகாஷ்ரா*ஜின் மனைவி போனி வர்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷோவின் பெயர் இட்ஸ் மை ஷோ!



நன்றி: தினமலர்

aanaa
13th July 2011, 05:32 PM
...........

சோனாவுக்கு இரண்டு சினிமா கனவுகள் உண்டு. ஒன்று விஜய் நடிக்கும் படத்தை பிரமாண்டமாகத் தயாரிப்பது. இன்னொன்று தன் சொந்த வாழ்க்கையை படமாக்குவது. படத்தில் வாழ்க்கையில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களையும், துரோகம் செய்தவர்களைப் பற்றியும் சொல்லுவேன் என்கிறார் நடிகை சோனா.


ஜெயா டி.வி.யில் "திரும்பி பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் தன் இசை உலக அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிறார் பாடகர் தீபன் சக்ரவர்த்தி. ""பூங்கதவே தாழ் திறவாய்....'',


""அரும்பாகி மொட்டாகி...'' உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு கனிந்து, கர்ஜித்து குரல் கொடுத்த தீபன், தன் தந்தையும், பின்னணிப் பாடகருமான திருச்சி லோகநாதனை பற்றிய நினைவுகளையும் இதில் பகிர்ந்து கொள்கிறார். தினமும் இரவு 10 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.


வாழ்க்கை வரலாற்று படங்களில் இடம் பிடிக்கப் போகிறார் பாபா. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கை சினிமாவாகிறது. பாபாவாக நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ் தரப்பில் இருந்து இன்னும் ஓ.கே. சொல்லப்படவில்லை. சின்ன வயது பாபாவாக நடிக்க இந்தியாவின் பிரபல குழந்தை நட்சத்திரங்களின் பட்டியலை வாங்கியிருக்கிறார் கோடி.

aanaa
6th August 2011, 02:51 AM
இந்த ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரை அழகியாக டி.வி., நடிகை லீலாவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிஸ் சின்னத்திரை என்ற பெயரில் ஆண்டுதோறும் டிவி நடிகைகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்டும், காஸ்மிக் டவுனும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. விவெல் ஆக்டிவ் பேர் சின்னத்திரை விருது 2011 என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான போட்டி சென்னையில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜூலி, ஸ்ரவாணி, தரிஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தினி, லீலாவதி என 10 சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் பங்கேற்றனர்.

ஆடல், பாடல், கேட் வாக்கிங், அறிவுத்திறன் போட்டி என பல சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் முதலிடம் பிடித்து மிஸ் சின்னத்திரை 2011 ஆக லீலாவதி தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு சென்ற ஆண்டின் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாம் இடத்தை ஸ்ரவாணியும் மூன்றாம் இடத்தை சபர்ணாவும் பெற்றனர். விஜய் ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_110803120213000000.jpg


நன்றி: தினமலர்



சின்னத்திரை அழகிகள்!

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மிஸ் சின்னத்திரை-2011 அழகிப் போட்டி நடந்தது.

சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜ×லி, ஸ்ரவாணி, தர்ஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தி, லீலாவதி என மொத்தம் 10 பேர் போட்டியில் கலந்துகொண்டு பாட்டு, நடனம், நடிப்பு, பேச்சாற்றல், அறிவுத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினார்கள். அழகுக்கலை நிபுணர்கள், முன்னணி மாடல்கள், தொலைக்காட்சி இயக்குனர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த அழகிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

`மிஸ் சின்னத்திரை-2011' அழகிப் பட்டத்தை லீலாவதி வென்றார். அவருக்கு கடந்த ஆண்டின் மிஸ் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாவது இடத்தை ஸ்ரவாணி பெற்றார். மூன்றாவது இடம் சபர்ணாவுக்கு.

பிரீத்தா, ஸ்ரீ, நேத்ரன், ஐஸ்வர்யா, பிரியா, சத்யன் ஆகியோர் விழாவில் கலைநிகழ்ச்சிகளை இடையிடையே நடத்தினார்கள். விஜய் ஆனந்த் தொகுத்து வழங்கினார்.

விஷன் ப்ரோ ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்டும், காஸ்மிக் டவுனும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின் தொகுப்பை `கே' டிவியில் நாளை காலை 10.30 மணிக்கு காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
7th August 2011, 08:09 AM
`மானாட... மயிலாட...' போட்டியில் `வீடு' வென்ற ஜோடி



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளி பரப்பாகி வந்த``மானாட... மயிலாட... 6-ம் பகுதி'' நிறைவுக்கு வந்தது.

இறுதிப்போட்டி, ஆயிரக்கணக்கான பார்வையாளர் முன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் சிறந்த ஜோடியை தேர்வு செய்யும் பொறுப்பு பார்வையாளர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அவர்கள், எஸ்.எம்.எஸ் மூலமாக தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்தனர். அவர்கள் தேர்வு செய்த சத்யா - மோனிகா ஜோடி, அதிக வாக்குகளைப் பெற்று முதல் பரிசு ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு வீடுகளை ஆளுக்கொன்றாகத் தட்டிச் சென்றார்கள்.

இரண்டாவது பரிசு ரூ.5 லட்சம் ஆசிப்-பாவனா ஜோடிக்கும், மூன்றாம் பரிசான ரூ.3 லட்சம் கார்த்திக்-சவுந்தர்யா ஜோடிக்கும் கிடைத்தது. ஆறுதல் பரிசாக, தேர்வு பெற்ற கிரிஷ்-சுனிதா ஆளுக்கொரு எல்.சி.டி, மற்றும் டி.வி.டி பெற்றுக்கொண்டார்கள்.

பரிசுகளை நடிகர் தனுஷ் வழங்க, கலைஞர் தொலைக்காட்சியின் மூத்த அதிகாரிகள் இயக்குநர் அமிர்தம் மற்றும் இயக்குநர் இராம.நாராயணன் உடனிருந்தனர். கலைஞர் தொலைக்காட்சியின் பொதுமேலாளர் ப்ளாரன்ட் சி. பெரைரா வரவேற்று பேசினார்.



http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110806/TV01.jpg

aanaa
13th August 2011, 06:42 AM
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு..!



சின்னத்திரை இயக்குனர்கள் திருமுருகன், திருச்செல்வம் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் இயக்குனருக்குப் படித்த நேரத்தில் நடிப்புக்காக சேர்ந்தவர் ரவிவர்மா. ஆனாலும் சின்னத்திரை நடிப்பு வாய்ப்பு கொஞ்சம் தாமதமாகத்தான் வரத் தொடங்கியது. லட்சுமி சீரியலில் மீனாவின் அண்ணன் கேரக்டரில் இவர் நடிப்பை பார்த்தபிறகே சின்னத்திரை சீரியல்கள் இவரது நடிப்புக்கான கேரக்டர்களை இடஒதுக்கீடு செய்யத்தொடங்கின. செல்வி, அஞ்சலி, முகூர்த்தம், அரசி, செல்லமே என நடிக்கும் சீரியல்கள் அதிகரிக்கத் தொடங்கின. தங்கம் சீரியலில் இவர் ஏற்ற `பஞ்சாயத்து பழனிமாணிக்கம்' கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது.

இவரது சீரியல் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம், பெரியதிரைக்கு நகர்த்தியது. தனது `தேனீர் விடுதி' படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடம் கொடுத்தார், டைரக்டர் எஸ்.எஸ்.குமரன். டைரக்டர் பி.வாசு இயக்கும் புலிவேஷம் படத்தில் இவரை டாக்டர் ரவிவர்மா என்ற சொந்தப்பெயரிலேயே நடிக்க வைத்திருக்கிறார்.

"இனி பெரியதிரை தானா?'' ரவிவர்மாவைக் கேட்டால்... "நான் அண்ணன் எம்.ஜி.ஆரின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு திரைக்கு வந்தவன். நடிப்பில் என்னை வெளிப்படுத்துகிற எந்த திரையானாலும் ஓ.கே'' என்கிறார்.


http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20110813/TV08.jpg

நன்றி: தினதந்தி

aanaa
23rd September 2011, 04:23 AM
http://www.youtube.com/watch?v=_VXznizLtD8



http://www.youtube.com/watch?v=Zn8yI5cn8UE




http://www.youtube.com/watch?v=_-fs2ULQD6I




http://www.youtube.com/watch?v=CkknomD0ioM

aanaa
28th September 2011, 04:22 AM
பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயா டி.வி., புதுமையான நிகழ்ச்சிகள் பலவற்றையும், பழைய நிகழ்ச்சிகள் சிலவற்றில் புதிய மெருகேற்றியும் வழங்க இருக்கிறது.

அதன் முதற்கட்டமாக நதியா நடத்தி வந்த "ஜாக்பாட்' நிகழ்ச்சியை நடிகை சிம்ரன் நடத்த இருக்கிறார். அதுபோன்றே திங்கட்கிழமை பத்திரிகையாளர் மதன் திரைவிமர்சனம், வியாழக்கிழமை நடிகர் சுரேஷ் நடத்தும் ஜெயிக்கப்போவது யாரு, வெள்ளிக்கிழமை தமிழகத்தின் சமையல் சாம்பியன் யாரு.. எனும் சமையல் நிகழ்ச்சி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை யூகியுடன் யூகியுங்கள் எனும் வித்தியாசமான வினாடி-வினா போட்டி நிகழ்ச்சி மற்றும் சனிக்கிழமைகளில் அனுஹாசன் நடத்தும் சூப்பர் கிட் எனும் பள்ளி மாணவர்களுக்கான பரிசு போட்டி என களைகட்ட இருக்கிறது ஜெயா டி.வி.

aanaa
28th September 2011, 04:23 AM
"ஒரு சிலர் கொஞ்சி கொஞ்சிப் பேசுவாங்க, சிலர் மென்மையாப் பேசுவாங்க, சிலர் கணீர் குரலில் பேசுவாங்க. முதல்ல அவங்க எப்படி பேசுவாங்கங்கறதை கவனிப்பேன். இவங்களுக்கு இப்படிப் பேசினால் நல்லாருக்கும்னு அனலைஸ் பண்ணி அதற்குத் தகுந்த மாதிரி பேசுவேன்' என்கிறார் சின்னத்திரை நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும் ஸ்ரீஜா. தற்பொழுது இவர் சின்னத்திரையில் "அத்திப்பூக்கள்' தொடரில் வரும் கற்பகத்துக்குக் குரல் கொடுத்து வருகிறார்.

aanaa
1st October 2011, 07:23 PM
சுன்சுன் தாத்தா



வீட்டில் தனிமைப்படுத்தப்படும் பிள்ளைகள் எந்த மாதிரி வளர்கிறார்கள் என்பதை விவரிக்கும் குறும் படம் `சுன் சுன் தாத்தா'.

நடிப்பிலும் இயக்கத்திலும் தனக்கென்று தனிமுத்திரை பதித்திருக்கும் நாசர் இயக்கும் இந்தக் குறும் படத்தில், தனிமைப் படுத்தப்படும் சிறுவனாக நடிப்பவர் அவர் மகன் அபி மெஹதி ஹசன். நாசரின் மூன்று வாரிசுகளில் இவர் இளையவர். எட்டாம் வகுப்பில் படிப்பை தொடர்கிறார்.

மலேசியாவில் நிகழ்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் முழு படப்பிடிப்பும் மலேசியாவிலேயே நடந்தது. அங்கே கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போகிற குடும்பத்தில் தனிமையில் தவிக்கும் அவர்கள் வாரிசு அனுபவிக்கும் நெருக்கடி தான் கதைப்பின்னணி. ஆரம்பத்தில் அந்த சிறுவனுக்கு சுன்சுன் தாத்தா துணையிருக்கிறார். அவன் தனிமையை உணராதவண்ணம் தாத்தா அவனில் கலகலப்பு பக்கமாக இருக்கிறார்.

ஆனால் கொஞ்ச நாளில் தாத்தா இறந்து விட, சிறுவனை தனிமை சூழ்ந்து கொள்கிறது. ஒருநாள் மதியவேளையில் அம்மா தன் அலுவலகத்தில் இருந்து போனில் மகனை தொடர்புகொள்ள, மகனோ உற்சாகமாக பேசுகிறான். பேச்சினூடே `சும்மாயிரு சுன்சுன்' என்கிறான்.

இப்போது அம்மாவுக்கு பயம். சுன்சுன் தாத்தா தான் இறந்து விட்டாரே, பிறகு மகன் சுன்சுன் என்று சொல்வது யாரை? அதேபயத்தில் வீடு வரும் அம்மாவுக்கு மகன் ஒரு வண்ணத்துப் பூச்சியை பிடித்து அதற்கு சுன்சுன் என்று பெயர்வைத்து பொழுதுபோக்கியது தெரிய வருகிறது. இதற்குப் பிறகு அந்த சிறுவனின் பெற்றோர் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா? சிறுவனுக்கு பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக கிட்டியதா என்பது கதையின் உச்சக்கட்டம்.

மலேசிய பிரபல நடிகர் ஜமாலிசாதத் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இசை: பிரபாகரன். ஒளிப்பதிவு: வி.சேகர். எழுத்தும் இயக்கமும்: நாசர்.

இந்த குறும்படம் மலேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதை தொடர்ந்து, இங்குள்ள பிரபல சேனலிலும் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
15th October 2011, 07:44 PM
சின்னத்திரையில் இருந்து...




சென்னை தொலைக்காட்சியில் `மனைமாட்சி', `சமையல் கலை' நிகழ்ச்சிகளை தயாரித்து புகழ் பெற்றவர் சியாமளா. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் `நலம்தானா,' `வாரம் ஒரு ஜோதிடர்' நிகழ்ச்சிகளை வழங்கினார். அதோடு "ஜோடிப்பொருத்தம்'', "மலரும் மொட்டும்'' போன்ற நிகழ்ச்சிகள் தயாரிப்பிலும் பங்காற்றினார்,

அதன்பிறகு இவர் மேற்கொண்டதே தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பு. சின்னச்சின்னஆசை, துளசி, சிரிப்போ சிரிப்பு, துளசி ஆகிய தொடர்களை தயாரித்ததோடு, இயக்கவும் செய்தார். இந்த தொடர்கள் அனைத்தும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாயின.


சின்னத்திரை தொடர்களை இயக்கிய அனுபவம் இவரை பெரியதிரை பக்கமும் நகர்த்தியிருக்கிறது. இப்போது `கலியுக காதல்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

"இயக்கும் ஆர்வம் எப்படி வந்தது?''

சியாமளாவைக் கேட்டால்...

"படிப்படியாக என் இயக்கும் திறனை வளர்த்துக் கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு என் இயக்கத்தில் "சபாஷ் ராஜா'', "தாய் மாமன்'' போன்ற தொடர்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்போதே என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் `உங்கள் படைப்பில் சினிமாவுக்கான பார்வை இருக்கிறது. பெரிய திரையிலும் இயக்கலாமே' என்றார்கள். அதற்கான நேரம் இப்போது அமைய, காதலை புதிய கோணத்தில் அலசும் `கலியுகக்காதல்' படத்தின் இயக்குனராகி விட்டேன். இந்தப்படத்தில் என்னுடன் பணிபுரியும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனைபேரும் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு.''

http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20111015/TV10.jpg

நன்றி: தினதந்தி

aanaa
22nd October 2011, 09:00 PM
டைரக்டராகும் டெல்லி கணேஷ்

குணசித்ர நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் டெல்லிகணேஷ். இப்போதும் படங்களில் பிசியாக இருப்பதோடு, `செல்லமே' உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேடை நாடகங்களிலும் இவரது அனுபவம் மகத்தானது.

டெல்லிகணேஷ் இப்போது சின்னத்திரையில் ஒரு தொடரை எழுதி இயக்குகிறார். வசந்த் டிவியில் இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகிறது.

நன்றி: தினதந்தி

aanaa
22nd October 2011, 09:01 PM
புதிய தலைவர்

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு முதன் முதலாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

2011-2013-ம் ஆண்டுக்கான தலைவராக எம்.ராஜேந்திரன், செயலாளராக ராஜ்காந்த், பொருளாளராக வி.டி. தினகரன், துணைத் தலைவர்களாக மனோபாலா, அபிஷேக், இணைச் செயலாளர்களாக சத்யப்ரியா, சதீஷ், ஆர்த்தி, கன்யாபாரதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு உயர்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள். தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் சங்க அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

நன்றி: தினதந்தி

aanaa
5th November 2011, 08:05 PM
டிவி நடிகை தற்கொலை வழக்கு : டிவி நடிகர் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-73.jpg
டிவி நடிகை தற்கொலை வழக்கில் நடிகருக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளது. Ôசெல்லமேÕ ÔமனைவிÕ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் தேவ் ஆனந்த் (34). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இவருடன் சில டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. இருவரும் நண்பர்களாய் பழகினர். இந்நிலையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் வைஷ்ணவி தனது தாயுடன் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது, தேவ் ஆனந்த் மற்றும் சக நடிகைகளும் சென்றிருந்தனர்.

அங்கிருந்து திரும்பியதும் ஏப்ரல் 15ம் தேதி வைஷ்ணவியை கிழக்கு கடற்கரை சாலைக்கு தேவ் ஆனந்த் கூட்டிச் சென்றுள்ளார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு வைஷ்ணவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது கண், முகம், மூக்கு ஆகியவற்றில் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து அவரின் பெற்றோர் கேட்டதற்கு தேவ் ஆனந்த், தன்னை 2ம் தாரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று மிரட்டினார்.

தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யாருடனும் வாழ முடியாது என்று மிரட்டி தாக்கினார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் தேவ் ஆனந்த் மீது காயம் விளைவித்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


நன்றி:தினகரன்

aanaa
5th November 2011, 08:06 PM
அமிதாப் பாணியில் சின்னத்திரைக்கு வருகிறார் விஜய்?



நடிகர் விஜய் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் தகவல் கூறுகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் பிரபல சேனல் ஒன்று கோடீஸ்வரன் போன்று ஒரு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதை பிரபலமான ஒருவர் தான் நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியாளர் நினைத்தார்.

அதன்படி பிரபலங்களின் பட்டியல் தயார் செய்து பரிசீலித்தார்கள். இறுதியில் விஜய்யை தேர்வு செய்து அவரை அணுகியுள்ளனர். ஆனால் கோடி கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இருப்பினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது விஜய் தலையை ஆட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த ரூபத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கலாம், விஜய் டிவிக்கு வருகிறாரா, இல்லையா என்று.



நன்றி: தினகரன்

aanaa
5th November 2011, 08:08 PM
டிங்குடன் 2வது திருமணம் : நடிகை கவிதா தலைமறைவு!


டி.வி., நடிகர் டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அன்புள்ள ரஜினிகாந்த், ஜப்பானில் கல்யாணராமன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது சின்னத்திரையில் கலக்கி வருபவர் நடிகர் டிங்கு. இவர் சுப்ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், பின்னர் இவர்களது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிங்குவின் மனைவி சுப்ரியா, தனது கணவர் தனக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ததாகவும், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் *போலீசில் புகார் கொடுத்தார். சுப்ரியாவின் புகாரையடுத்து நடிகர் டிங்கு, கோர்ட்டில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார்.* அதுமட்டுமின்றி தனது மனைவி சுப்ரியா கூறுவதில் உண்மையில்லை என்றும் தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாகன வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் சுப்ரியாவின் புகாரின்பேரில், டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை பிடித்து, விசாரிக்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் கவிதாவோ தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து கவிதாவைக் கைது செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.



நன்றி: தினகரன்

aanaa
11th December 2011, 01:32 AM
இதுவும் ஆச்சரியம்



டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் இப்போது மெரினா படத்தின் நாயகன். இவர் நடிகர் சிம்பு, தனுஷ் இருவருக்கும் நண்பன் என்பது இன்னொரு ஆச்சரியம். சிம்புவின் வேட்டைமனிதன் படத்தில் கதை இலாகாவில் முக்கிய பங்கு வகிக்கும் இவர், தனுஷின் `3' படத்தில் அவர் நண்பராக நடிக்கிறார். ஒரே சமயத்தில் இருவருடனும் நட்பு பாராட்டும் இவரை கோலிவுட்டில் ஆச்சரியமாக பர்க்கிறார்கள்.
நன்றி: தினதந்தி

aanaa
1st January 2012, 04:21 AM
இளையராஜாவின் இன்னிசையில் நனைந்த சென்னை நேரு ஸ்டேடியம்!

ஜெயா டி.வி., சார்பில் 6 வருடங்களுக்கு பிறகு என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த இசைக்கச்சேரியில் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.*யேசுதாஸ், பால முரளிகிருஷ்ணா, சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சரியாக 6மணிக்கு வெளிநாட்டு இசை கலைஞர்களின் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு இளையராஜா மேடையில் தோன்றிய போது ரசிகர்களின் கரகோஷம் ஸ்டேடியத்தை அதிர செய்தது.

முதல் பாடலாக ஜனனி ஜனனி.. பாடலை பாடினார் இளையராஜா. அதனைத்தொடர்ந்து யேசுதாஸ் பேசும்போது, நாங்கள் எல்லாரும் சின்ன வயசில் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்போது இந்த *இசை தான் எங்களை காப்பாற்றியது என்று உருக்கமாக கூறினார். பின்னர் தன்னுடைய இனிமையான குரலில் பூவே செம்பூவே பாடலை பாடியதோடு, இந்த பாடல் தனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி., மறைந்த இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு சமர்ப்பணமாக நானாக நானில்லை பாடலை பாடி அசத்தினார். அவர் பேசுகையில் நானும், ராஜாவும் வேறு வேறு இல்லை. இருவருமே ஒன்று தான் என்றார்.

தொடர்ந்து டைரக்டர் மகேந்திரன் படத்தில் இடம்பெற்ற பாடலை, பாலு பாடி அந்த பாடல் எப்படி உருவானது என்பதையும் மேடையில் விளக்கி அசத்தினார். நிகழ்ச்சியின் இடையே நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை வாழ்த்து பேசிய வீடியோ காட்சி ஒளிப்பரப்பட்டது. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பிரபல பின்னணி பாடகர் பால முரளி கிருஷ்ணா மேடையில் *தோன்றி, பாலுவுடன் சேர்ந்து சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலை பாடினார். அவரைத்தொடர்ந்து இளையராஜாவின் வாரிசுகள் யுவன், பவதாரணி ஆகியோரும், பிரபல பின்னணி பாடகர்கள் சித்ரா, ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் பாடி அசத்தினர்.

இசை நிகழ்ச்சிகளுடன் அவ்வப்போது பல சுவாரஸ்யமான தகவல்களையும் இளையராஜா பகிர்ந்து கொண்டார். கவிஞர் கண்ணாதசன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை கூறிய ராஜா, இந்த உலகத்திலேயே கவிஞர் கண்ணதாசன் போல இன்ஸ்டன்ட் கவிஞர் யாரும் இல்லை. நான் நிறைய பேர் கூட வேலை பார்த்து இருக்கேன். ஆனால் கண்ணாதாசன் அவர்கள் கூட வேலை பார்த்தது சுவாரசியமான அனுபவம். ஒருமுறை ஸ்டுடியோவில் பாட்டு எழுத வந்தார் கண்ணதாசன். நான் டியூன் போட்டு காட்டினேன். தூ என துப்பினார். ஐயோ இவர் இசையை கேட்டு துப்பினாரா அல்லது கதையை கேட்டு துப்பினாரா என்று புரியல. பிறகு இசையை கேட்டு அப்படியே வரிகளை சொல்ல ஆரம்பிச்சார், அந்த பாட்டு தான் ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்... என்ற பாட்டு. அதில் தான் மலேசியா வாசுதேவன் அறிமுகமானார் என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களுடன் ஷோபா, விஜய் அண்டனி, ஜேம்ஸ் வசந்தன், தரன், தேவிஸ்ரீ பிரசாத், சரண்யா, ஜெய சித்ரா, பாலு மகேந்திர போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். கொலவெறிக்கு இசை அமைத்த அனிருத் இடம் கிடைக்காமல் நின்றபடியே இசை நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார். இரவு 12 மணி வரை நீடித்த இளையராஜாவின் என்றென்றும் ராஜா நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்தது.


நன்றி: தினமலர்

aanaa
1st January 2012, 04:22 AM
விருது வழங்கும் விழா: ஜோடியாக வந்த சினேகா, பிரசன்னா

ஜெயா டி.வி. சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு ஜெயா விருது வழங்கும் விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது. கார்த்தி சிறந்த நடிகர் விருது பெற்றார். சினேகா, சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இந்த விருதை சினேகாவும், பிரசன்னாவும் ஜோடியாக வந்து பெற்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கரண், நடிகைகள் அஞ்சலி, பூர்ணா, அனன்யா ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த இயக்குனருக்கான விருதை ஜெயம் ராஜாவும், இசையமைப்பாளருக்கான விருதை விஜய் ஆண்டனியும் பெற்றனர். டைரக்டர் பார்த்திபன், விஜய், வெற்றிமாறன், ஆகியோரும் விருது பெற்றார்கள். நடிகர் பிரபு, ஏவி.எம்.சரவணன், ஆர்.வி.உதயகுமார், தரணி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.


நன்றி: தினமலர்

aanaa
1st January 2012, 04:24 AM
சின்னத்திரைக்கு வந்தார் மாமதுரை மிதுனா!

கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா, மாமதுரை படத்தில் "மதுரை மதுரைதான்... மணக்கும் மல்லிக்கும் மதுரைதான்... " என்ற பாடலில் வாசன் கார்த்திக்குடன் ஆட்டம் போட்டவர். அதன் பிறகு சில படங்களில் நடித்து விட்டு தெலுங்கு பக்கம் போனவர், மறுபடியும் சென்னை வந்திருக்கிறார். இந்த முறை சின்னத்திரையில் நடிப்பதற்காக வந்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும், காதம்பரி எனும் மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. இவருடன் சுதா சந்திரன், லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்து வருகின்றனர். பிரபு சங்கர் கதை, எழுதி, இயக்கும் இந்தத் தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

டி.வி., சீரியலில் நடிப்பது குறித்து மிதுனா அளித்துள்ள பேட்டியில், நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்திருக்கிறேன். இயக்குநர் பிரபு சங்கர் அழைத்து, காதம்பரி தொடரின் கதையை என்னிடம் சொன்னார். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு எபிசோடுக்கும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள், ஒவ்வொரு காட்சியிலும் சுவராஸ்யம், பிரமாண்டம், அதுவும் காதம்பரி என்கிற டைட்டில் ரோலில் நடிக்கிற வாய்ப்பு. அதான் வந்து விட்டேன். சென்னையில் தங்கி தொடர்ந்து நடித்து வருகிறேன். ஹைதராபாத், திருநெல்வேலி, அச்சன்கோவில், பெங்களூரு போன்ற இடங்களிலும், சில காடுகளிலும், அரண்மனைகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள். அந்தளவுக்கு இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கிறது, என்று கூறியுள்ளார்.


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_111222100055000000.jpg

நன்றி: தினமலர்

aanaa
1st January 2012, 11:38 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HDIzmsAbVxA

aanaa
14th January 2012, 08:19 AM
சின்னத்திரைக்கு வந்த அசின்...!


பெரிய கனவோடு பாலிவுட்டிற்கு போன நடிகை அசினுக்கு சரியான வாய்ப்புகள் ஏதும் அமையாததால் சின்னத்திரைக்கு வந்துவிட்டார். தமிழ் சினிமாவிற்கு பல நடிகைகள் வந்தபோதிலும், குறுகிய காலத்திலேயே நம்பர்-1 நடிகை என்ற இடத்தை தக்க வைத்தவர் நடிகை அசின். இப்படி நம்பர்-1 நடிகையாக வலம் வந்த அசினுக்கு, கஜினி படம் மூலம் இந்தியில் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் அறிமுகமான முதல்படமே சூப்பர், டூப்பர் ஹிட்டானதால் பாலிவுட்டிலேயே கவனம் செலுத்தினார் அசின். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை. இருந்தும் அங்கேய தங்கியிருந்து வாய்ப்பு வேட்டையில் இறங்கினார். ஆனால் முன்னணி நடிகைகளான கரீனா, கத்ரீனா, வித்யாபாலன் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், அசினுக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. தற்போது ஒன்றோ, இரண்டு படம் மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் பெரிய திரையில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாலோ என்னவோ, சின்னத்திரைக்கு வந்துவிட்டார் அசின். இந்தியில் யு.டி.வி., நடத்தும் சூப்பர் ஸ்டார் சாண்டா என்ற நிகழ்ச்சியில் அசின் நடிக்கவுள்ளார். சின்னத்திரைக்கு வந்தது பற்றி அசின் கூறுகையில், யு.டி.வி.யின் சூப்பர் சாண்டா நிகழ்ச்சியில் நடிக்கிறேன். பெரிய திரையை காட்டிலும், சின்னத்திரை மூலமாக நேரடியாக ரசிகர்களை சென்றடையலாம். இது ஒரு அருமையான நிகழ்ச்சி, நட்பை விளக்கும் உண்ணதமான நிகழ்ச்சி என்று கூறியுள்ளார்.

இதனிடையே சின்னத்திரைக்கு அசின் வந்துவிட்டதால், இனி யாரும் அவரை பெரிய திரையில் நடிக்க கூப்பிடமாட்டார்கள். அசின் அப்படியே மலையாளத்தில் போய் செட்டிலாகி விட வேண்டியதது தான் பாலிவுட்டில் உள்ளவர்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.

நன்றி: தினமலர்

aanaa
22nd January 2012, 01:40 AM
புதிய சேனல்



கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து மற்றுமொரு தொலைக்காட்சியாக வரும் 26-ந்தேதி ``முரசு'' தொலைக் காட்சி தொடங்குகிறது. `என் ஜீவன் பாடுது' என்ற தலைப்பில் காலையில் ஒரு மணி நேரம் பாடகர்களின் தனிப்பாடல்களும், மாலை ஒரு மணி நேரம் பாடகிகளின் தனிப்பாடல்களும், இரவு 10 மணிக்கு அனைத்து நாட்களிலும் கருப்பு-வெள்ளை படங்களில் இருந்து பாடல்களும் இடம் பெறுகின்றன.

ஜனரஞ்சகப்பாடல்கள், அதிரடிப்பாடல்கள், கவிஞர்களின் பாடல்கள், காதல் பாடல்கள், ஒருபடப் பாடல்கள், இசையமைப்பாளர் நேரம் என்று 1980-க்கு முன் வெளியான படப்பாடல்களின் ஒரு இணையற்ற சங்கமமாக தொடர்கிறது, முரசு தொலைக்காட்சி.


நன்றி: தினதந்தி

aanaa
22nd January 2012, 01:46 AM
சென்னைவாசியான சிநேகா நம்பியார்!
நான் பதினோராம் வகுப்பு படிக்கும்பொழுதே கன்னட திரைத்துறையில் கால்பதித்துவிட்டேன். நிறைய கன்னடத் தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தெலுங்கு பக்கம் சென்றேன். அங்கிருந்து தமிழுக்கு வந்தேன். "அகல்யா' தொடரில்தான் முதலில் தமிழில் அறிமுகமானேன். இப்போது தமிழ் திரைத்துறையிலேயே செட்டிலாகி சென்னைவாசி ஆகிட்டேன்'' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் பெங்களுரைச் சேர்ந்த சிநேகா நம்பியார்.

aanaa
28th January 2012, 07:39 AM
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120128/tv09.jpg

ஆனந்தம் தந்த அகாடமி விருது

புதுடெல்லியில் உள்ள இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தில் சுயேச்சையாக செயல்படும் ஒரு அமைப்பு சங்கீத நாடக அகாடமி. இசை, நாட்டியம், நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பிரபல கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது அளித்து கவுரவிக்கிறது.


2011-ம் ஆண்டுக்கான விருதுகளில் நடிப்பு, இயக்கம் ஆகிய பிரிவில் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 8 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த `கலைமாமணி' `ஏ.ஆர்.எஸ்.'சும் ஒருவர். சுமார் அரை நூற்றாண்டு கால அவரது கலைச்சேவையை பாராட்டி, கவுரவிக்கும் விதத்தில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.


ஒய்.ஜி.பி. மூலம் நாடக உலகத்திற்கு அறிமுகமான இவர் மேடை நாடக உலகில் 47 ஆண்டு கால அனுபவமுள்ளவர். மொத்தம் 39 நாடகங்களுக்காக (தமிழ்-36, ஆங்கிலம்-3) கிட்டத்தட்ட 400 தடவை மேடை ஏறி இருக்கிறார்.


சினிமாவில் நூறு படங்களை நெருங்கும் ஏ.ஆர்.எஸ், சின்னத்திரையிலும் தன் பங்களிப்பை தொடர்ந்து வருகிறார். கே.ஆர்.விஜயாவுடன் `மடிசார் மாமி,' லட்சுமியுடன் `நல்லதோர் வீணை', ஸ்ரீவித்யாவுடன் `கலாட்டா குடும்பம்', ரேவதியுடன் `நிறங்கள்', `ஒய்.ஜி. மகேந்திராவுடன் `துப்பறியும் சாம்பு' குஷ்புவுடன் `கல்கி' உள்ளிட்ட 37 டெலிவிஷன் தொடர்களில் நடித்திருப்பவர். இப்போதும் முக்கிய கேரக்டரில் `அவள்' தொடரில் நடிப்பை தொடர்கிறார்.


ஏற்கனவே இந்த விருது மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த கலைஞர்கள் வருமாறு: 1959-ல் பம்மல் சம்பந்த முதலியார். 1962-ல் டி.கே. சண்முகம். 1968-ல் எஸ்.வி. சஹஸ்ரநாமம். 1992-ல் பூர்ணம் விஸ்வநாதன்.


.
நன்றி: தினதந்தி

aanaa
26th February 2012, 09:09 PM
படுபிஸியான நடிகை தாரிகா (http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=படுபிஸியான நடிகை தாரிகா&artid=109581&SectionID=143&MainSectionID=143&SEO=&SectionName=Tv)

மெகா தொடர்கள், நடன நிகழ்ச்சிகள், பெரியதிரை படங்களில் ஆயிட்டம் டான்ஸ் என்று படுபிஸியாக இருந்த பிரபல சின்னதிரை நடிகை தாரிகா, பாலிவுட் நடிகையாகியிருக்கிறார். தற்போது இரண்டு இந்திப் படங்களில் நடித்து வருகிறாராம் அம்மணி.

aanaa
3rd March 2012, 09:08 AM
நாடகத்தில் நடிக்கிறார் பத்மப்பிரியா
http://cinema.dinakaran.com/cinema/gallery/Television-new-83.jpg

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடகத்தில் நடிக்கப் போகிறேன் என்று பத்மப்பிரியா கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது; நாடகத்துறையிலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். இங்கு வந்த பிறகு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒரே எண்ணம் கொண்ட, மலையாள நடிகை ஆன் ஆகஸ்டின், இயக்குனர் வி.கே.பிரகாஷ், எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் குலூருடன் நானும் பேசிக்கொண்டிருந்தபோது நாடக எண்ணம் மீண்டும் துளிர்த்தது. சிறந்த நாடகங்களை தயாரித்து அதிகமான ரசிகர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி, ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் மற்றும் ஜெயப்பிரகாஷ் குலூர் படைப்புகளை நாடகமாக்கியுள்ளோம். நாடகத்துக்கு வந்துவிட்டதால் சினிமா அவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். தமிழில் 'தங்கமீன்கள்' படத்தில் நடித்துள்ளேன். மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவள் நான். அதனால் சிறந்த கதைகளைத் தேடித் தேடி நடிக்கிறேன். இவ்வாறு பத்மப்பிரியா கூறினார்.


நன்றி: தினகரன்

aanaa
3rd March 2012, 09:11 AM
சின்னத்திரைக்கு வரும் வில்லன்


ஏற்கனவே வெள்ளித்திரையில் கலக்கிய வில்லன் நடிகர் மகாநிதி சங்கர் சன் டிவியில் ஒளிப்பராகும் 'நாதஸ்வரம்' தொடரில் கலக்கி வருகிறார். இவரை தொடர்ந்து இன்னொரு வில்லன் நடிகரும் சின்னத்திரைக்கு வர இருக்கிறார். வசந்த டிவியில் ஒளிபரப்பு ஆக உள்ள 'கன் பைட் கபாலி' என்ற காமெடித் தொடரில் பொன்னம்பலம் நடிக்கயிருக்கிறார்.

நன்றி: தினகரன்

aanaa
10th March 2012, 09:52 PM
Kushboo invited by United Nations (http://chennai365.com/news/kushboo-invited-by-united-nations/)
http://chennai365.com/wp-content/uploads/actress/kushboo/kushboo1.jpg

aanaa
17th March 2012, 10:29 PM
சாதனைப்பெண்கள்

மகளிர் தினத்தில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்களை கவுரவித்து விழா எடுத்தது ராஜ் டிவி.


டாக்டர் சரண்யா நாராயண், கல்வியாளர் பத்மினி மணி, சமூகசேவகியும் நடனக்கலைஞருமான ஷோபனா ரமேஷ், நர்த்தகி நட்ராஜ், இயக்குனர் ஜெயதேவி, கவிஞர் விசாலிகண்ணதாசன், சுமா ஹரிஸ் ஜெயராஜ், சத்யபிரேமா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த சாதனைக்காக விருதுகள் பெற்றார்கள். நடிகர்கள் பார்த்திபன், சேரன், இயக்குனர் வசந்த், நடிகைகள் கவுதமி, தேவயானி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள். விரைவில் ராஜ் டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120317/TV04.jpg
நன்றி: தினதந்தி

aanaa
22nd April 2012, 06:17 PM
சீரியல் பாட்டு!




சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு பாட்டு எழுதி வருபவர் கிருதயா. அத்திப்பூக்கள், பெண்டாட்டி தேவை, பைரவி, வினாயகர் திருவிளையாடல், பிள்ளை நிலா, மகாராணி, பாரிஜாதம், காஞ்சனா, சாந்தி நிலையம், எங்கே பிராமணன், பொக்கிஷம் என இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பல சீரியல்களுக்கும் இவர் பாட்டு தான். இந்த வகையில் சின்னத் திரையில் இதுவரை இவர் எழுதியிருக்கும் பாடல்கள் ஐநூறைத் தொட்டிருக்கிறது.

இதில் அதிக பாடல்கள் எழுதியிருப்பது டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கிய சீரியல்களுக்கு.

`சின்னத்திரையிலேயே செட்டிலாகி விட்டவர், பெரிய திரைக்கு எழுதியிருக்கிறாரா?' கேட்டால் அங்கும் குசேலன், பரமசிவம் உள்ளிட்ட 70 படங்களுக்கு எழுதியிருக்கிறாராம்.

aanaa
22nd April 2012, 06:24 PM
சின்னத்திரையில் இருந்து...

http://dailythanthi.com/muthucharam/images/articles/20120421/TV06.jpg

சன் டிவியில் வரும் `நாதஸ்வரம்' தொடரில் செல்வரங்கம் கேரக்டரில் வந்து ரசிகர்கள் மனதில் பதிந்து போனவர் ரவிராகுல். கதைப்படி இவர் மவுலியின் மூத்த மகள் மகேஸ்வரியின் கணவர். இவர் தடம் மாறிக்கொண்டிருக்கும் காட்சிகள் தான் தொடரின் இப்போதைய `ஹாட் டாபிக்.'

இவருக்கு முன்கதைச் சுருக்கம் அவசியமில்லை. கஸ்தூரிராஜாவால் `ஆத்தா உன்கோயிலிலே' படத்தில் நாயகனாக அறிமுகமானவர். அடுத்து அகத்தியன் இயக்கத்தில் `மாங்கல்யம் தந்துனானே,' முத்துவிஜயன் இயக்கத்தில் தமிழ்ப்பெண்ணு, பிரபுவின் தம்பியாக மிட்டாமிராசு படங்களில் நாயகனாக நீடித்தவர்.

படங்களைத் தொடர்ந்து தேடிவந்த தொடர் வாய்ப்புக்களையும் பற்றிப் பிடித்துக் கொண்டவருக்கு நாதஸ்வரம் 53-வது தொடர். இந்த தொடரில் கிடைத்த பெயர் இதுவரை எந்த தொடரிலும் கிடைத்ததில்லை என்பதை பெருமையாகவே சொல்கிறார். தொடருக்கான படப்பிடிப்பு முழுக்க காரைக்குடியிலேயே நடப்பதால் மாதத்தில் 12 நாள் இவரை காரைக்குடியில் தான் காண முடிகிறது.

இந்த தொடரில் நடிக்க வந்த 6 மாதங்களில் மறுபடியும் பெரிய திரையில் இருந்து `பொல்லாங்கு' படத்துக்கான நாயகன் வாய்ப்புக்கான அழைப்பு. தொடர்ந்து 6 மாதம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அதுபற்றி இவர் நாதஸ்வரம் இயக்குனர் திருமுருகனிடம் வாய் திறக்க, அவரோ, `சினிமா வாய்ப்பை விட்டுடாதீங்க. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்' என்று சந்தோஷமாய் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் 6 மாத்திற்குப் பதிலாக 7 மாதம் ஆகி விட, திருமுருகன் அழைத்துப் பேசியிருக்கிறார். சினிமா இயக்குனராகவும் இருந்தவர் என்ற முறையில் சினிமாவில் இது மாதிரியான தாமதம் சகஜம் என்பதை புரிந்து கொண்டவர், மறுபடியும் செல்வரங்கம் கேரக்டரில் ரவிராகுலை தொடரில் உலவ விட்டிருக்கிறார்.

இதுபற்றி ரவிராகுல் கூறும் போது, "டைரக்டர் நினைத்திருந்தால் என் கேரக்டரில் `இவருக்குப் பதில் இவர்' என்று ஒரு கார்டு போட்டுவிட்டு இன்னொரு நடிகரை நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அந்த செல்வரங்கம் கேரக்டரை இன்னும் விரிவுபடுத்தி கதையின்முக்கிய தளத்தில் அதைக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஒரு தலைசிறந்த படைப்பாளியான அவரது நல்ல மனத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்'' என்கிறார்.

aanaa
5th May 2012, 09:15 PM
அபிநயா-17

சின்னத்திரை உலகில் பல வெற்றித் தொடர்களைத் தயாரித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கும் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனம் பதினேழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதற்கான விழாவில், அந்நிறுவன ஆக்கத் தலைவர், மற்றும் கதையாசிரியர் ஜே.கே.வை சந்தித்து உரையாடினோம். இனி, அவரது மனம் திறந்த கலகலப்பான பேட்டி.


பதினேழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?


"நல்ல கதை இருந்தால் வெற்றி பெறுவோம். அதேபோல் நல்ல நண்பர்களாக இணைந்து ஒரு பிராஜக்ட் செய்யும்போது, பலருடைய ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் அதிகாரம் செய்யக்கூடாது. நட்புதான் சாதிக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.''


இதுவரை வந்த தொடர்கள் பற்றி?


"1996-ம் ஆண்டு மே 7-ந்தேதி எங்களது முதல் தயாரிப்பாக கோவை அனுராதாவின் `காஸ்ட்லி மாப்பிள்ளை' என்கிற முதல் தொடர் ஒளிபரப்பானது. அதிலிருந்து தொடர்ச்சியாக `மாண்புமிகு மாமியார்', `மகாராணி செங்கமலம்', `கிரீன் சிக்னல்', `செல்லம்மா', `மங்கள அட்சதை', `கேள்வியின் நாயகனே', என் பெயர் ரங்கநாயகி' என வாராந்திர தொடர்களாக 8 தயாரித்தோம். 2002 மே மாதம் `மாங்கல்யம்' என்ற முதல் மெகா தொடரை எடுத்தோம். அது 330 எபிசோட்கள் ஒளிபரப்பானது. அதையடுத்து `ஆடுகிறான் கண்ணன்', `தீர்க்க சுமங்கலி', `செல்லமடி நீ எனக்கு', திருப்பாவை', `அனுபல்லவி', இப்போது ஒளிபரப்பாகி வரும் `வெள்ளைத்தாமரை' என எங்கள் தயாரிப்புப் பணி தொடர்கிறது.


"உங்கள் தொடர்கள் சமூக நோக்கு கொண்டதாக இருக்க காரணம்?


"சமுதாயத்தில் புரையோடிப்போன விஷயங்களை மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னால் அது சரியாகப் போய்ச் சேரும் என்று புரிந்து கொண்டேன். ஒரு தொடர் வரதட்சணை கொடுமையை மையப்படுத்தியது, மற்றொன்று தீண்டாமையைப் பற்றியது. அடுத்தது மாமியார் மருமகள் சண்டை ஏன் உருவாகிறது என்பதை சொன்னது. தம்பதிகளுக்குள் புரிதல் இல்லாமையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்காரணம் என்பதை இன்னொரு தொடர் சொன்னது. குடும்ப உறவுகளை மதிக்க வேண்டும், வெறுக்கக்கூடாது என்பதை ஒரு தொடராக்கினோம். கணவன் மனைவிக்குள் இருக்கும் மெல்லிய காதலை சொன்னது `மகாராணி செங்கமலம்'. ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்திச் சொன்னது `கிரீன் சிக்னல்.' கணவன் மனைவிக்குள் ரகசியங்கள் கூடாது என்பதை சொன்னது `மங்கள அட்சதை'. இப்படி எங்களுடைய ஒவ்வொரு தொடரிலும் ஒரு வித்தி யாசமான நல்ல கதையும் மக்களுக்கு நல்ல மெசேஜ×ம் இருக்கும்.


"அவுட்டோர் படப்பிடிப்பில் வித்தியாசமான அனுபவம்?''
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120505/TV-07.jpg
"கொடைக்கானலுக்கு ஒரு முறை சூட்டிங் போனோம். சூட்டிங் எடுக்க அனுமதியே கிடைக்கவில்லை. ஒருத்தர் என்ன தொடர் என்று கேட்க, கம்பெனி பேரைச் சொல்லி, தொடரின் பெயர் `தீர்க்கசுமங்கலி' என்று சொன்னதும், உடனே "தீர்க்க சுமங்கலியா? சூப்பர் கதையாச்சே? நீங்க தாராளமாக சூட்டிங் எடுத்துக்கோங்க''ன்னு சொன்னாங்க. இது தான் எங்கள் தொடருக்கான மரியாதை.''
நன்றி: தினதந்தி

aanaa
17th May 2012, 12:41 AM
http://www.youtube.com/watch?feature=player_embedded&amp;v=uluPSnQtqIY

aanaa
17th May 2012, 06:19 AM
என்.டி.டி.வி- இந்து சேனல் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு! (http://tamil.oneindia.in/movies/television/2012/05/ndtv-hindu-channel-telecast-dth-154014.html)

சென்னையில் மெட்ரோ சேனலாக ஒளிபரப்பாகிவந்த என்.டி.டிவி – இந்து தொலைக்காட்சி இனி தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் என்று அந்த தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

என்.டி.டி.வி. இந்து சேனல் இதுவரை சென்னையில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. இப்போது அரசு கேபிள், எஸ்.சி.வி. கேபிள் மற்றும் டி.டி.எச். மூலமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் என்.டி.டி.வி. இந்து சேனலை பார்க்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல், இப்போது தமிழிலும் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

தமிழ் செய்திகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி, 8.30, 9.30, முற்பகல் 11 மணி, மதியம் 12 மணி, 1.30, பிற்பகல் 3 மணி, மாலை 6.30, இரவு 7.30, 8.30 ஆகிய நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. என்.டி.டி.வி இந்து தொலைக்காட்சியில் செய்தி தவிர பல சுவாரசிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் `கோடம்பாக்கம் அக்கம்பக்கம்' நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. இதில்

தமிழ்த்திரை உலகின் படவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் திரை பிரபலங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் ரசிக்கலாம். ரேவதி ஞானமுருகன் தொகுத்து வழங்குகிறார்.

aanaa
20th May 2012, 09:07 PM
சின்னத்திரையில் இருந்து...


சின்னத்திரையில் தயாரிப்பாளர் ஜே.கே.யின் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் உருவான பெரியதிரை இயக்குனர்கள் அதிகம். ஆரம்பத்தில் அபிநயா கிரியேஷன்சில் 7 வருடம் இயக்க பின்னணியில் இருந்த சமுத்திரக்கனி, பின்னாளில் பெரிய திரையில் `நாடோடிகள்' படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றார்.


இதே நிறுவனத்துக்கு `மாங்கல்யம், ஆடுகிறான் கண்ணன்' தொடர்களை இயக்கிய பத்ரி, அப்புறமாய் பெரிய திரையில் `வீறாப்பு, தம்பிக்கு இந்த ஊரு' படங்களை இயக்கினார். இங்கிருந்த ஒளிப்பதிவாளர் சித்திரைச்செல்வன் சினிமாவில் `ஆக்ரா' என்ற படத்தை இயக்கினார். வசனகர்த்தா பாலு இப்போது சினிமாவில் வசனகர்த்தாவாக நீடிக்கிறார்.


தீர்க்கசுமங்கலி தொடரை இயக்கிய பிரியன், சினிமாவில் `ஐவர்' படத்தை இயக்கினார். இப்போது விஜய்வசந்த் நடிக்கும் `மதில்மேல் பூனை' படத்தை இயக்கி வரும் ஆனந்த் கூட அபிநயாவின் கண்டுபிடிப்பு தான்.


தொடர்ந்து அபிநயா தொடர்களுக்கு இசையமைத்து வரும் சத்யா, `எங்கேயும் எப்போதும்' படம் மூலம் தேர்ந்த இசையமைப்பாளராக புகழ் பெற்றார்.அபிநயாவின் மக்கள்தொடர்பாளர் பாலனும் இப்போது `ஒத்தவீடு' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார்.


அடுத்து அபிநயாவில் இருந்து இயக்குனராகப் போகிறவர் பிரசன்னா. இவர் அபிநயா ஜே.கே.யின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநயாவின் ராசியே ராசி!

aanaa
26th May 2012, 09:01 PM
எம்.ஜி.ஆர். தந்த வாய்ப்பை `கோட்டை' விட்ட வாலி

வசந்த் டிவியில் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு `வாலி-1000' என்ற தலைப்பில் கவிஞர் வாலியின் சுவாரசிய கலைப்பயண அனுபவங்கள் இடம்பெற்று வருகிறது. வாலியை நடிகை குஷ்பு, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியார் சந்தித்து உரையாடிய பகுதிகள் வரும் வாரங்களில் இடம் பிடிக்கிறது.


இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடனான தனது அனுபவங்களை நெஞ்சம் நெகிழும் விதத்தில் வாலி விவரிக்கிறார். ஒருமுறை எம்.ஜி.ஆர். படம் ஒன்றுக்கு வாலி பாட்டெழுதிக் கொண்டிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். திடீரென வாலியிடம், `உங்க அம்மா பெயர் என்ன?' என்று கேட்டிருக்கிறார். வாலியும் `பொன்னம்மா' என்று அம்மா பெயரை சொல்லியிருக்கிறார். `உடனே உங்கம்மா பெயரில் ஒரு படக்கம்பெனியை சேம்பர்ல பதிவு செஞ்சிடுங்க' என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். வாலி புரியாமல் எம்.ஜி.ஆரைப் பார்க்க, அவரோ `நீங்கள்அம்மா பெயரில் ஆரம்பிக்கும் கம்பெனிக்கு நான் கால்ஷீட் தருகிறேன். படத்தில் கிடைக்கும் லாபத்தில் நீங்க நிம்மதியாக செட்டிலாயிடலாம்' என்றிருக்கிறார்.


வாலியின் மேலான பிரியத்தில் எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்ல, வாலியோ, `அண்ணே... நான் எப்போதும் போல பாட்டெழுதிக்கிட்டு உங்க அன்புக்குரியவனாகவே இருந்திடறேனே' என்று சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த வாலி, "எம்.ஜி.ஆர். தனக்குப் பிரியமானவர்களை இப்படி கவுரவிக்க நினைப்பது வழக்கம். ஆனால் எனக்கு பாட்டெழுதுவது தவிர, வேறெதுவும் தெரியாது என்பதால் அவராக தந்த அட்சய பாத்திரத்தை வாங்காமல் தவிர்த்து விட்டேன்'' என்று நெகிழ்கிறார்.


அதுமாதிரி ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து ஒரு பிரபல நிறுவனத்திடம் கொடுக்க, அவர்கள் அதில் இன்னொரு நடிகரை போட்டு படம் எடுக்க முடிவு செய்தபோது, ரஜினிக்காக எழுதிய கதையில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று அந்தக்கதையை வாங்கிக்கொண்டு வந்துவிட்டதையும் நினைவு கூர்ந்தார். ரஜினிக்கான அந்தக்கதை இப்போதும் வாலியிடம் தான் இருக்கிறதாம்!
நன்றி: தினதந்தி

aanaa
26th May 2012, 10:05 PM
ராமருக்கும்... கிருஷ்ணருக்கும்...

பின்னணி பாடகர்களின் மறக்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா. 1945-1970 பீரியடில் இசையமைப்பாளராகவும் வலம் வந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, இந்தி, சிங்களம், பெங்காலி என பல மொழிகளில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.


கண்டசாலாவின் இளையமகன் ரத்னகுமார் இதில் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறார்.அப்பா பாட்டு என்றால் இவர் பேச்சு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் உள்பட 1076 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் ஏறக்குறைய 10 ஆயிரம் எபிசோடுகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஐம்பது டாகுமென்ட்டரி படங்களுக்கும் பேசியுள்ள இவர், மேடைக்கச்சேரி பாடகரும் கூட. 32 வருடமாக இந்தக் கலையை நேசித்து செய்து வருகிறார்.


இவர் டப்பிங் பேசிய படங்களில் கடலோரக்கவிதைகள், கலைஞன், இந்திரன் சந்திரன், தர்மதுரை, ஜீவா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, வீடு, முகமூடி முக்கியமானவை.


நடிகர் சங்கம் வழங்கிய `கலைச்செல்வம்', டப்பிங் ïனியன் வழங்கிய `குரல் செல்வம்', ஆந்திர அரசாங்கம் வழங்கிய `நந்தி அவார்டு' ஆகிய விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, வீணா, வாணி என இரண்டு மகள்கள். இதில் வீணா கல்லூரியில் படித்துக் கொண்டே பாடகியாகவும், அப்பா வழியில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.


`தேன்கூடு' என்ற குடும்பப்பாங்கான படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பின் பொழுதுபோக்கு பிரிவில் செயலாளராகவும் இருக்கிறார்.


இவரது சமீபத்திய சாதனை, இம் மாதம் 4-ம் தேதி நடந்தது. அன்று காலை 10 மணிக்கு டப்பிங் பேச ஆரம்பித்தார். இடைவிடாமல் 8 மணி நேரம் தொடர்ந்து பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, ஆசியா புக், ஆப் ரெக்கார்டு, அமேஸிங் வொர்ல்டு ரெக்கார்டு சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.


தூர்தர்ஷனில் வந்த ராமாயணம் தொடரில் ராமருக்கும், ஸ்ரீகிருஷ்ணர் தொடரில் கிருஷ்ணருக்கும் வருடக் கணக்கில் குரல் கொடுத்து வந்த பெருமையும் இவருக்குண்டு
நன்றி: தினதந்தி

aanaa
15th June 2012, 09:44 PM
சின்னத்திரைக்கு வரும் சூப்பர் ஸ்டார் டைரக்டர்

அண்ணாமலை, பாட்ஷா என்று ரஜினிக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இப்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா. நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும் இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார். இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ஆஹா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான்.
நன்றி: தினகரன்

aanaa
19th June 2012, 06:34 PM
விஜய் டி.வி விருதுகள் 2012 (http://cinema.lankasri.com/view.php?22HHLd3039hOy4e27JnTcb0sa5lddeV5a3bcbLnJ3 e4dSOh302cBLv42)





விஜய் டி.வி சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.


இதன்படி 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தெரிவு செய்தனர்.
http://cinema.lankasri.com/photos/full/others/vijay_awards_003.jpg

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள்.

143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.
விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

சிறந்த நடிகர்: விக்ரம்.
சிறந்த நடிகை: அஞ்சலி.
சிறந்த திரைப்படம்: எங்கேயும் எப்போதும்.
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம்.
சிறந்த நகைச்சுவை நடிகை: கோவை சரளா.
சிறந்த இயக்குனர்: வெற்றி மாறன்.
சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்
சிறந்த பாடல் ஆசிரியர்: வைரமுத்து.


சிறந்த வில்லன் : அஜீத்
சிறந்த பொழுதுபோக்கு நடிகர் : தனுஷ்



பிடித்த நடிகை: அனுஷ்கா.

பிடித்த படம்: கோ.
செவாலியே சிவாஜி கணேசன் விருது: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
விழாவில் கமலின் விஸ்வரூபம் படம் டிரெய்லர் வெளியிடப்பட்டது. மேடையில் தனுஷ், அஞ்சலி, ஸ்ரேயா, வேதிகா ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

aanaa
29th June 2012, 02:58 AM
கன்னட 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில்' ரூ. 1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி! வியாழக்கிழமை,





கன்னட டிவி சேனலில் ஒன்றின் கோடியாதிபதி நிகழ்ச்சியில் ('நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி') பங்கேற்ற நபர் ஒருவர் அனைத்து கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறி ஒரு கோடி ரூபாய் பரிசினை தட்டிச் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் விஜய் டிவியில் சூர்யா நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் போல கர்நாடகாவில் ஸ்வர்ணா டிவி சேனல் ஒன்றில் நடிகர் புனித் ராஜ்குமார் கோடியாதிபதி நிகழ்ச்சி நடத்துகிறார். இது 60 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராய்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பண்ணா என்ற நபர் அனைத்து கேள்விகளுக்கு சரியான பதிலைக்கூறி ஒரு கோடி பரிசினை பெற்றுள்ளார். இந்த தகவலை சுவர்னா தொலைக்காட்சி நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் யாரும் பரிசுத் தொகையினை வென்றதில்லை. இவர்தான் முதன் முறையாக ஒரு கோடி ரூபாய் பரிசினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

aanaa
1st July 2012, 11:48 PM
சீரியலுக்குத்தான் முக்கியத்துவம்! புவனேஸ்வரி


நான் சினிமாவை விட சீரியலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன், என்று நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார். சின்னத்திரை சீரியல், சினிமா, என்று சுற்றி வரும் நடிகை புவனேஸ்வரி, நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத்திரையில் வாழ்வே மாயம் என்ற சீரியலில் களம் இறங்கியுள்ளார்.


இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், சவுபர்ணிகா சீரியல் தொடங்கி வாழ்வே மாயம் வரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து விட்டேன். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்து, இப்போது மீண்டும் சீரியல் பயணத்தை தொடங்கியிருக்கிறேன். சினிமாவை விட சீரியலுக்குத்தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அங்குதான் அமைகின்றன. வில்லி காதாபாத்திரம் தானாக அமைகிறது. இருந்தாலும் அது எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கு அரசியல் வாழ்க்கை தானாக அமைந்து விட்டது. நடிகையானதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் திருமணமாகி செட்டில் ஆகி இருக்கலாமோ என்று எப்போதவாது நினைத்துக்கொள்வேன், என்று கூறியுள்ளார்.



நன்றி: தினமலர்

aanaa
1st July 2012, 11:48 PM
ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியாது! நீபா


பெருசு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நீபா. தொடர்ந்து நாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் திரும்பினார். ஆனாலும் பெரியதிரையில் கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிக்கழிக்காமல் நடித்து வந்தார். அந்த வகையில் தங்கர்பச்சன் இயக்கிய பள்ளிக்கூடம் படத்தில் சீமானுக்கும், காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது உறவுகள் தொடரில் சுவேதாவாக நடித்தவருக்கு பதிலாக இப்போது நீபா நடிக்கிறார். 750 வது எடிசோடுகளை தாண்டி உறவுகள் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் நடிக்கும் கரிகாலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாலீர் நீபா.


இது குறித்து அவர் கூறுகையில், ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினேன். சீரியலில் நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. உறவுகள் தொடரில் இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைய இருக்கு. ஆயிரம் எபிசோடுகளை நிச்சயம் தாண்டும். காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியா காமெடியில் கலக்கியதைத் தொடர்ந்து, விக்ரமோட கரிகாலன் படத்துலேயும் ஒரு சூப்பர் ரோல் கிடைச்சிருக்கு என்று கூறினார்.



நன்றி: தினமலர்

aanaa
1st July 2012, 11:50 PM
கே.பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சர்யக்குறி!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120625143128000000.jpg
கே.பாலசந்தரின் சாந்தி நிலையம் நெடும் தொடர், ஜெயா டிவியில் வார நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் நிறைவடையும் கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில், தற்போது கே.பாலசந்தர் எழுதி இயக்கும் நெடுந்தொடர் ஒன்று கலைஞர் டிவிக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. கே.பாலசந்தரின் ஆஸ்தான நட்சத்திரங்களான கவிதாலயா கிருஷ்ணனும் ரேணுகாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இந்தத் தொடர் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை சமீபத்தில் பாலசந்தர் சந்தித்தார். தொடரின் கதையைக் கேட்டறிந்த கருணாநிதி மகிழ்ச்சியடைந்து பாலசந்தரை பாராட்டியதோடு, தொடரின் தலைப்பைப் பற்றிக் கேட்க பாலசந்தர் கமலா ஒரு கேள்விக்குறி என்று கூறியிருக்கிறார். சில வினாடிகள் யோசித்த கருணாநிதி, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி என்று தலைப்பை மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். பாலசந்தருக்கும் அந்தத் தலைப்பு மிகவும் பிடித்துவிட மகிழ்ச்சியோடு சம்மதித்து விட்டார்.



நன்றி: தினமலர்

aanaa
1st July 2012, 11:51 PM
சினிமாவில் ஆர்வம் இல்லை! சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா பளீச்!!


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120623120051000000.jpg
சினிமாவில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது; ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்று சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா கூறியுள்ளார். விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. ஏராளமான ரசிகர்கள் ரம்யாவின் தொகுப்பை புகழ்ந்து தள்ளி கடிதம் எழுதி வருகிறார்கள்.


இது குறித்து ரம்யா அளித்துள்ள பேட்டியில், வைஷ்ணவா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பயரிங்கில் ஆர்வம் வந்தது. காம்பயரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பயரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால், இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும், என்று கூறியுள்ளார்.



நன்றி: தினமலர்

aanaa
9th July 2012, 05:39 PM
எனக்கு கிளாமர் செட் ஆகாது : மீனாட்சி ஸ்ரீஜா!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120705104041000000.jpg





வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாய் வலம் வந்து, பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் பலர் சின்னத்திரையில் கால்பதித்து முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோதரன் சகோதரி, உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீஜா. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் சென்றார். மதுரை சீரியல் மூலம் அறிமுகமான அவர் தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி உள்ளார்.


இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மதுரை தான் என்னோட முதல் சீரியல். அதிலேயே எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்போது முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சின்னு எனக்குஏற்ற கதை அமைஞ்சிருக்கு. என்னதான் கதாநாயகியாக நடித்தாலும் வில்லியாக நடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் என் முகமும், தோற்றமும் பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக இருப்பதால் வில்லி கேரக்டர்கள் எனக்கு கிடைக்கவில்லை. அதேபோல் எனக்கும் கிளாமருக்கும் செட் ஆகாது. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதேன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.

aanaa
15th July 2012, 03:30 AM
உறவுகள்... கொண்டாடிய உறவுகள்..!

சன் டிவியில் 800 எபிசோடுகளை கடந்த `உறவுகள்' தொடரை தயாரித்த சேன்மீடியா நிறுவனம், அதற்காக சென்னையில் விழா எடுத்தார்கள். தொடரில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமின்றி நட்பு முறையிலான நட்சத்திரங்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இதில் சேன் மீடியா ஏற்கனவே தயாரித்த அகல்யா, பந்தம் தொடர்களில் நடித்த கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். மஞ்சரி, ரூபஸ்ரீ, ராஜசேகர், சஞ்சீவ், நளினி, பிரீத்தி, தீபக், கன்யா, பூவிலங்கு மோகன், மனோகரன், அகிலா, வெங்கட், பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், தீபக், அமரசிகாமணி, பிலிசிவம், சாந்தி வில்லியம்ஸ் என எங்கெங்கு திரும்பினாலும் நட்சத்திர முகங்கள்.


வழக்கமான விழா என்றால் தொடங்கியதும் ஒவ்வொருவராக பேசுவார்கள். அப்பறமாய் விருது கொடுப்பார்கள். அத்தோடு விழா முடிந்து விடை பெற்றுக் கொள்வார்கள்..


இந்த விழாவில் எல்லாமே மாறுபட்டிருந்தது. நட்சத்திரங்களுக்கு மிïசிகல் சேர் போட்டி நடத்தினார்கள். நாற்காலியை பிடிக்க பெரிய நடிகைகளும் ரவுண்ட் வந்தது கலகலப்பு ஏற்படுத்தியது.


விழாவுக்கு வந்த நட்சத்திரங்களில் யாருடைய காஸ்ட்ïம் சிறப்பு, என்று ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு உடனடி நடுவராக நளினியை நியமித்தார்கள். நளினி தேர்ந்தெடுத்தது கவிதா பாரதியை.


விழா நடந்த தினம் தான் நடிகர் ராஜ்காந்துக்கும் பிறந்த நாள். அதற்காக திடீர் சஸ்பென்சாய் ஒரு பெரிய கேக்கை மேடைக்கு வரச்செய்து, ராஜ்காந்தையும் அழைத்து கேக் வெட்டச் செய்தார்கள். இந்த திடீர் உபசரணையில் மனிதர் சட்டென கண் கலங்கி, அப்புறமாய் இயல்பானார். அவருக்கு கேக் ஊட்டிய பல நட்சத்திரங்கள் அப்படியே முகத்திலும் கொஞ்சம் பூசி கலாட்டா செய்து விட்டுப்போனார்கள்.


சேன் மீடியா நிறுவனத்தின் முதல் தொடரான `அகல்யா' தொடரில் நடித்த மஞ்சரி சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். இப்போது முத்தாரம் தொடரில் நடித்து வரும் தகவலை சொன்ன மஞ்சரி, `இது குடும்ப உறவுகள். அதனால் தான் முதல் சீரியலில் நடித்த என்னையும் மறக்காமல் அழைத்திருக்கிறார்கள்' என்று நெகிழ்ந்தார்.


மேடையில் சில குத்தாட்டப் பாடல்களை ஒலிபரப்பி அதற்கு நட்சத்திரங்களை ஆடச் சொன்னார்கள். பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த் உள்ளிட்ட சிலர் ஆடினார்கள். ஏற்கனவே `மானாட மயிலாட' என இவர்கள் ஆடியிருந்ததால் ஸ்டெப்களிலும் அசத்தினார்கள்.


சேன் மீடியாவின் முன்று தொடர்களிலும் நடித்த ஸ்ரீகுமார் இது `என் தாய் வீடு' என்றார். `பந்தம் சீரியல் தான் எனக்கு நட்சத்திர அந்தஸ்தை முதன்முதலில் கொடுத்தது' என்று உருகினார் தீபக். தொடரில் அப்பாவாக நடித்ததில் இன்று அத்தனை இளைய கலைஞர்களும் என்னை அப்பா என்றே அழைப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்' என்று உருகினார் அமரசிகாமணி. `பாதியில் வந்ததால் எங்கே என் கேரக்டர் எப்படி பேசப்படுமோ என பயந்தேன். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது என் பாக்கியம்' நெகிழ்ந்தார் பாவனா.


மேடையில் உறவுகள் டைட்டில் பாடல் காட்சியை திரையிட்டு, பாடலை மட்டும் மைக் பிடித்து அட்சர சுத்தமாய் பாடிய பாடகி சுதா, இன்னொரு ஆச்சரியம்.


சேன் மீடியாவின் தொடர்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர்கள் சிவா, ஹரி, பாலாஜியாதவ் மூவரையும் ஒரேநேரத்தில் மேடையேற்றி விருது கொடுத்தது விழாக்கொண்டாட்டத்தின் உச்சம். ஆஸ்தான கதாசிரியர் குமரேசன் விருதுக்காக மேடையேறியபோது அரங்கு அதிர கரகோஷம். படைப்பாளிக்கு மரியாதை!
நன்றி: தினதந்தி

aanaa
10th August 2012, 01:49 AM
50 தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எம்


சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை.
ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.
1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது.

சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது. பின்னர் சூர்யா, ஜெமினி, பத்துக்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.


கடந்த 20 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் 7500 எபிசோடுகள்வரை ஒளிபரப்பாகியுள்ளன என்று அந்த நிறுவனம் பெருமை பொங்க புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினகரன்

aanaa
12th August 2012, 05:00 AM
http://cinema.vikatan.com/images/Article_Images/03vasanthmaha.jpg

வசந்த் டிவியில் தொகுப்பாளினி ப்ளஸ் செய்தி வாசிப்பாளர் என அதிரடி அசத்தலில் ஆச்சர்யப்படுத்துகிறார் மகாலட்சுமி. ஆல் இந்தியா ரேடியோவுல அறிவிப்பாளர், ஆர்.ஜேன்னு இருந்து பொதிகையில ஷோ பண்ணி இப்போ வசந்த் டிவி என அறிமுகப் படலத்தை சொல்கிறார் மகாலட்சுமி. " 'ஆச்சியுடன் பேச்சு'ன்னு 26 வாரம் ஷோ பண்ணேன். எந்த ஈகோவும் இல்லாம, எந்த கேள்வி கேட்டாலும் ஜாலியா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லி போட்டோ எடுத்துக்கோ பாப்பான்னு அன்பு காட்டின மனோரமா ஆச்சியின் அன்புக்கு நான் அடிமையோ அடிமை.

சூர்யா, விஜய், கமல்னு 300 பேரை பேட்டி எடுத்துட்டேன். ரஜினியை பேட்டி எடுக்கணும்னு ரொம்ப ஆசை. அபிஷேக்கை பேட்டி எடுக்கும்போது போன்ல நிறைய ஃபாரின் அழைப்புகள், உங்க ரசிகர்கள் கூட பேசுனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு! சுரேஷ் கிருஷ்ணாவைப் பேட்டி எடுத்தபோது அவரோட மனைவி நேரில் அழைச்சுப்ப் பாராட்டினாங்க...

நல்லா சிரிச்சுக்கிட்டே எல்லா கேள்விக்கும் பதில் வாங்கிடுறியே! நியூஸ் வாசிக்குறியான்னு கேட்டாங்க!இப்போ சிரிச்சபடி ஒரு நியூஸ் ரீடர் வசந்த் டிவியில மட்டும் பார்க்கலாம்! இறுக்கமா வர்ற உங்களையும் சிரிச்ச மாதிரி பதில் சொல்ல வைக்குறது இந்த மகாலட்சுமியின் தனித்திறமை " சிரிப்பை சிதறவிட்டு, 'ட்ரீம் ஸ்டார்' நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக பை சொல்லி பறக்கிறார் மகா!

aanaa
12th August 2012, 05:01 AM
கோலாலம்பூர் கோயிலும்... நானும்...http://cinema.vikatan.com/images/Article_Images/03archana.jpg
காமெடி டைமில் திறம காட்டிய அர்ச்சனா பெரிய கமர்ஷியல் பிரேக் விட என்னாச்சு என்று அக்கறையோடு விசாரித்தோம். "பெரிசா நல்லா ஆஃபர்ஸ் வரலை. ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷன் இருக்குற மாதிரி புதுமையா நிகழ்ச்சி பண்ண ஆசை. மீண்டும் காமெடி டைம் வந்தாலும் ரொம்ப சந்தோஷம். இப்போ இன்டீரியர் டிசைனிங், ஈவென்ட் மேனேஜ்மென்ட்னு பிஸி ஆகிட்டேன். கார்ப்பரேட் ஷோவுக்கு காம்பயர் பண்றேன்.

கணவர் வினித் கடற்படையில இருக்குறதால கொச்சின்ல ஒரு வீடு ஸ்பெஷலா கொடுத்திருக்காங்க. பத்து நாள் குட்டி தேவதை ஜாரா, கணவரோட சேர்ந்து வீடு அழகா செட் பண்ணிட்டு வந்தேன்.

70 சதவீதம் முஸ்லீம்கள் இருக்குற கோலாலம்பூர்ல முருகன் கோவில் அவ்வளவு அழகு!252 படி ஏறி ஆச்சர்யத்தோட கோயிலைச் சுத்தி சுத்தி வந்தேன். பக்தி எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி... அதான் எட்டுமணி நேரம் அந்த இடத்தை விட்டு நகரலை. இடி, மின்னல், மழை எதுவந்தாலும் இனி என் ஃபேவரைட் கோயில் கோலாலம்பூர் முருகன்தான் " சத்தியம் செய்யாத குறையாய் சொல்கிறார் அர்ச்சனா.

aanaa
12th August 2012, 05:03 AM
பட்டரும் ஹனியும்!

எனக்கு செல்லப்பிராணிகள்ன ரொம்ப்ப... இஷ்ட்...டம் என்று சொல்கிறார் கலா மாஸ்டர். " பட்டர், ஹனின்னு ரெண்டு செல்ல நாய்கள் வளர்க்குறேன்.
அரோனா வாஸ்துமீன்னா எனக்கு கொள்ளைப் பிரியம். கெட்டதை எடுத்துக்கிட்டு நல்லதைத் தர்ற அந்த மீன் இறந்து போனதுல ரொம்ப வருத்தம்.
சமீபத்துல நடந்த பெட் அனிமல் ஷோவுல நிறைய மீன்கள் வாங்கலாம்னு போனா, வித்தியாசமான கலர்ஃபுல் பறவைகள் கவனம் ஈர்த்துச்சு. ஆப்ரிக்கன் கிரே மைனா மனிதன் மாதிரி பேசுமாம்.
பஞ்சுகாட்டன் மாதிரி மிருதுவா இருக்கும்... அதை எப்படியாவது வாங்கிடணும்... என் பையன் வித்யூத்தும், செல்லப்பிராணிகளும் தான் என்னோட ரிலாக்சேஷன் " ரியலாக கெமிஸ்ட்ரியுடன் பேசுகிறார் கலா மாஸ்டர்.

aanaa
12th August 2012, 05:04 AM
புது அம்மா!
இசையருவி சேனலின் கலகல காம்பயர் மகேஷ்வரி பூரிப்போடு இருக்கிறார்.. " கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு. வெங்கட்டுக்கு பைனான்ஸ் பிசினஸ். பாப்பா கேஷவ்வுக்கு ஒரு வயசு. . தொட்டில்ல போடும் போது பெருசா ஃபங்ஷன் வைக்கலை. இப்போதான் ஒரு கெட்டுகெதர் வைச்சேன். குழந்தையை எப்படி கவனிச்சுக்கணும்னு சுத்தமா தெரியாதுங்க. இப்போ ஒவ்வொண்ணா கத்துக்குறது ரொம்ப இன்ட்ரஸ்டிங்... வித்தியாசமான லைவ் ஷோ, ரியாலிட்டி ஷோவுல ரீ என்ட்ரி ஆகலாம்னு இருக்கேன்" மனம் முழுக்க சந்தோஷத்துடன் சிரிக்கிறார் மகேஷ்சிரி.. சாரி.. மகேஷ்வரி!

aanaa
12th August 2012, 05:05 AM
http://cinema.vikatan.com/images/Article_Images/09mahalakshmi.jpg
ஜெயா.டி.வியில் இருமலர்கள், சன்.டி.வியில் செல்லமே, இளவரசி என்று சீரியல் ராணியாக வலம் வரும் மகாலட்சுமி இப்போது விஜய் டி.வி 'அவள்' சீரியலில் வில்லி ரேஞ்சுக்கு நடிப்புத் திறமை காட்டி வருகிறார்.

"ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயி நெகடிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய பேரு திட்டி, சாபம் விட்டாலும் அதை என் கேரக்டருக்கான் கிரெடிட்டா எடுத்துக்குறேன். சிலர் ஓவரா கோவத்தைக் காட்டும்போது அதை மகாலட்சுமி கிட்ட காட்டாதீங்க, கேரக்டர்கிட்ட காட்டுங்கன்னு சொல்லிடுவேன். நான் சஞ்சீவ் ஜோடியா நடிக்குறேன். சஞ்சீவை ஷூட்டிங்லதான் நேர்ல பார்த்தேன். ரொம்ப ஃபிரண்ட்லி.. ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம கலாய்ப்பாரு. செட்டே கலகலன்னு இருக்கும்.

கணவர் அனில்குமார் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட்டே கதின்னு கிடப்பாரு. சீரியல்,படம் பார்க்கவே முடியலன்னு 52 இன்ச் எல்.சி.டி டி.வி வாங்கிட்டேன். இனிமே நான் நடிச்ச அத்தனை சீரியல்களையும் ஒரு எபிசோடு கூட விடாம பார்த்துடுவேன். சின்னதா ஒரு ரெஸ்ட் தேவைப்படுறதால அலப்பி போட் ஹவுசுக்கு கிளம்பிட்டு இருக்கோம். பை" என்று ஆசையாக பறக்கிறார் மகாலட்சுமி.

aanaa
2nd September 2012, 08:21 AM
நடிகர் ரிஷி


ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு ஸ்டேஜ் ஷோவுல நடிக்கறதுக்காக கிளம்பிட்டு இருந்தேன். ஏற்கனவே ஒரு ஷூட்டிங்ல கமிட் ஆகி இருந்ததால, அதை முடிச்சுட்டு கிளம்பும்போதே ரொம்ப லேட் ஆயிடுச்சு. ஸ்பாட்டுக்கு கரெக்ட் டைமுக்கு போயிடலாம்னு கிளம்பினா எல்லாமே தலைகீழ். பயங்கரமான மழை, டிராஃபிக், இருட்டு... எல்லாம் சேர்ந்து என்னை படுத்தி எடுத்துடுச்சு. 7 மணிக்கு நாடகம். டிராஃபிக்லயே ஏழரை மணி வரைக்கும் நின்னுட்டு இருக்கேன். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு காரும் பைக்குமா நிக்குது.


எல்லா வண்டிகளும் திருவிழா தேர் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நகருது. ஒருவழியா ஸ்பாட்டுக்கு போயிட்டேன். அங்க பவர்கட். ரொம்ப டென்ஷனாயிடுச்சு. ஆடியன்ஸ் இருட்டுல உட்கார்ந்திருக்காங்க. ஜெனரேட்டர் வசதி இல்ல. ஒருவழியா மெழுகுவர்த்தி வெளிச்சத்துல மேக்கப்பை போட்டுட்டு ஸ்டேஜுல ஏறினேன். கரன்ட் வந்துடுச்சு. கிட்டத்தட்ட 2 மணி நேரம் லேட். ஆனா, மின்சார வாரியத்தின் மேல பழியைப் போட்டுட்டு நான் தப்பிச்சுட்டேன். சமாளிக்கறதுக்கும் ஒரு சாமர்த்தியம் வேணும்ல!
நன்றி: தினகரன்

aanaa
2nd September 2012, 08:22 AM
நடிகை நீலிமா ராணி




‘லேட்’ - இந்த வார்த்தைக்கு என் அகராதியில இடமே இல்ல. ரொம்ப சமர்த்துப் பொண்ணு. இதுவரைக்கும் நான் லேட்டா போனதால ஷூட்டிங் லேட்டுன்னு யாரும் சொன்னதே இல்ல. சின்ன வயசுலயே டைமை சரியா ஃபாலோ பண்ணணும்னு எங்க வீட்டுல கத்துக் கொடுத்திருக்காங்க. 5 மணிக்கு அலாரம் வச்சா, 4 மணிக்கு எந்திரிச்சு அதை ஆஃப் பண்ற ஆள் நான். எப்பவும் ரொம்ப அலர்ட்டா இருப்பேன். சில நேரங்கள்ல ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைச்சு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே ஷூட்டிங்குக்குப் போயிடுவேன்.


அங்கே, அப்போதான் வண்டியில இருந்து ஜெனரேட்டரை இறக்கிட்டு இருப்பாங்க. மத்தவங்ககிட்ட கோபப்படவும் முடியாது. வேற வழியில்லாம நானே என்னை சமாதானப்படுத்திட்டு காத்திருப்பேன். லேட் ஆகக் கூடாதுன்னு கார்ல போகும் போதே மேக்கப் போட்டுக்குவேன். கிடைக்கிற நேரத்தை அவசியமான, முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படுத்திக்குவேன். சமையல் விஷயத்துலயும் எனக்கு லேட் ஆகாது. எல்லாத்துலயும் இன்னிக்கி வரைக்கும் சரியா இருக்கேன். யாருக்காகவும் என்னோட பாலிசியை மாத்திக்கிட்டதே இல்ல!
நன்றி: தினகரன்

aanaa
2nd September 2012, 08:25 AM
ஜெயித்த பணத்தை தோற்றவர்களுக்கு கொடுத்த பவர் ஸ்டார்!


ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கேம் ஷோ ஒன்றில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் போட்டியில் தான் ஜெயித்த பணத்தை தோல்வியடைந்த பெண்களுக்கு பரிசாகக் கொடுத்தார். நடிகை ரோஜா நடத்தும் கேம்ஷோ லக்கா கிக்கா. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்று பரிசினை பெற்றுச் செல்கின்றனர். கடந்த வார நிகழ்ச்சியில் திரைப்பட நடன பெண்மணிகள் செந்தாமரை, மைனா நாகு ஆகியோருடன் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றார்.


ஒவ்வொரு சுற்றிலும் பவர் ஸ்டாரின் கையே ஓங்கியது. ரூ.36,000 வரை போட்டியில் ஜெயித்தார் சீனிவாசன். போட்டியில் கலந்து கொண்ட பிற பங்கேற்பாளர்களுக்கு 4000, 7000 ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன. இறுதியில் 36000 ரூபாய் ஜெயித்த சீனிவாசன் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பரிசுத் தொகைக்கான செக் வழங்கப்பட்டது. ஆனால் பெருந்தன்மையாக தன்னுடைய பரிசுப்பணத்தை போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்த செந்தாமரை, மைனா நாகு ஆகியோருக்கு வழங்கி விட்டார் பவர் ஸ்டார்.
நன்றி: தினமலர்

yoyisohuni
4th September 2012, 10:18 PM
"ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயி நெகடிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன்.

enakku therinji indhamma negative role dhaan eppome edukkudhu.

aanaa
15th September 2012, 07:03 PM
நினைத்தாலே இனிக்கும்
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120915/TV-09.jpg
ஜெயா டிவி வெற்றிகரமாக 14-வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததைமுன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர்களான இசை இரட்டையர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு விழா எடுத்து கவுரவப்படுத்தினார்கள். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் `நினைத்தாலே இனிக்கும்' என்ற தலைப்பில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். இந்த மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி கவுரவிக்கப் பட்டார்கள்.


எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றிய சக கலைஞர்கள், நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பல முன்னணி திரைப்பட நட்சத்திரங்களும் முன்னணி இயக்குனர்களும், பிரபலங்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த காலத்தால் அழியாத பாடல்கள் இன்னிசையுடன் பின்னணி பாடகர்களால் பாடப்பட்டது.


இந்த பிரமாண்ட நிகழ்ச்சி வருகிற புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நன்றி: தினதந்தி

aanaa
22nd September 2012, 07:56 PM
மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் தென்றல் டிவி!


பணிகளில் சிறந்தது ஆசிரியர் பணி. அதிலும் காதுகேளாத, வாய்பேச முடியாத, பார்வையற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களின் சேவை ரொம்பவே பெரிது. இதை உணர்ந்த தென்றல் தொலைக்காட்சி அப்படி ஒரு உயரிய சேவையை செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கவுரவப்படுத்த இருக்கிறது. அந்த விருதுக்கு ஹெலன் கில்லெர் விருதுகள் என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் பிறந்து குழந்தையிலேயே காதுகேற்கும் திறனையும், வாய்பேசும் திறனையும் இழந்த ஹெலன் கில்லர் என்ற பெண்மணி தனது 24வயதில் பட்டம் பெற்றார். உலகிலேயே இதுபோன்ற குறைகளை வைத்துகொண்டு, படித்து பட்டம் பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இவருடைய பெயரிலேயே ஹெலன் கில்லர் விருது வழங்குகிறது. தென்றல் தொலைக்காட்சி.


இந்த ஆண்டு முதல் இந்த விருதினை வழங்கும் தென்றல் தொலைக்காட்சி இனி ஒவ்வொரு ஆண்டும் இதே பெயரில், இதுபோன்ற சிறப்பு குழந்தைகளுக்கும் , அவர்களுக்கு ஆசிரியர் சேவை செய்பவர்களுக்கும விருதினை வழங்க இருக்கிறது. இந்த விருதுடன் அவர்களுக்கு பரிசு தொகையாக பணம் முடிப்பும் வழங்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகன் கலந்துகொள்கிறார். மேலும் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல் துறை பிரபலங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். இதை தென்றல் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் செழியன் ராதாகிருஷ்ணன் மற்றும் முதன்மை மார்கெட்டிங் மேலாளார் உதயகுமார் இருவரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது தென்றல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பல புதுமையான நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.


இதுப்பற்றி கூறிய செழியன் ராதாகிருஷ்ணன், "தென்றல் டிவி மற்ற டிவி சேனல்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் அழுகாச்சி சீரியல்களை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். மக்களுடைய வாழ்க்கைக்கும், அவர்களை மேம்படுத்தும் வகையிலும் தென்றல் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படும். அதே போல தினமும் சமூதாயத்தில் நடைபெறும் குற்றங்களையும், அதன் பின்னணிகளையும் நேரடியாக குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்தே, அந்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இது போன்ற பல புதுமையான நிகழ்ச்சிகளோடும், உடனுக்கு உடன் செய்திகளோடும் தென்றல் டிவி ஒளிபரப்பாகும்." என்றார்.


தென்றல் டிவியின் முதன்மை மார்கெட்டிங் மேலாளரும், ஹெலன் கில்லர் விருது நிகழ்ச்சியை உருவாகியவருமான உதயகுமார் பேசும் போது, "இது போன்ற மாற்றுத்திறனாலிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை கெளரவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாட்களாக இருந்தது. தென்றல் டிவி மூலம் அதை சாத்தியப்படுத்த முடிந்தது சந்தோசம். இந்த ஆண்டு முதல் இந்த விருதை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்குவோம். தற்போது இந்த விருதை பெரும் ஆசியர்கள் சென்னையைச் சேர்ந்த பள்ளியில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இனி வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்குவோம். இந்த விருதுக்காக தேர்வு குழு ஒன்றையும் உருவாக்குவோம்." என்றார்.


இந்த ஆண்டு ஹெலன் கில்லர் விருது 15 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுடன் 5 சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகிறது.

aanaa
1st October 2012, 12:24 AM
நான் ரொம்ப பிஸியானவள்: அபர்ணா
http://www.cinemaexpress.com/Images/article/2012/9/25/aparna.jpg

இப்போதைக்கு நடிப்பதற்கோ, சீரியல் இயக்கவோ, தயாரிக்கவோ எனக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. கையில் நிறைய புராஜக்ட்ஸ் இருக்கிறது. நான் ரொம்ப பிஸியானவள்' என்கிறார் "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை அபர்ணா.இவர் நீண்ட நாட்களாக சின்னத்திரை தயாரிப்பாளராக வலம் வருகிறார். தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஆரம்பமாகியிருக்கும் "ஆயிரத்தில் ஒருவன்' என்ற நிகழ்ச்சியின் இயக்கம், தயாரிப்பும் இவரே. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன்- வெள்ளி கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. "ஆயிரத்தில் ஒருவன்' என்பது ஒரு கேம் ஷோ. நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகக்கு சரியான பதில் சொல்பவர்கக்கு பரிசு தொகை வழங்கப்படும். இது வரை எந்த சேனலிலுமே வராத, ரொம்ப புதுமையான, வித்தியாசமான நிகழ்ச்சியாக வடிவமைத்திருக்கிறாராம். ஒரு சராசரி மனிதனால் பெரிய பெரிய கேம் ஷோக்களில் கலந்து கொள்ள முடியாது. அதற்கு போதுமான அளவு திறமை அவர்களிடம் இருக்காது. ஆனால் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை நிறைய இருக்கும்.அப்படிப்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் "ஆயிரத்தில் ஒருவன்' ஆகலாம். இதன் முக்கிய அம்சம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருமே அவரவர் திறமைக்கு ஏற்றாற் போல் ஏதாவது ஒரு பரிசு பெறும்படி அமைத்திருக்கிறோம் என்கிறார் அபர்ணா.

aanaa
21st October 2012, 10:43 PM
Remember Shruti, who played the protagonist in K. Balachander’s Kalki which released in the mid-nineties? The cute-looking Shruti stunned many of her fans and movie-goers by taking on a character which was rather unusual. Even many of director Balachander’s ardent fans would agree that the veteran goofed up with the script and the screenplay.
http://chennaionline.com/images/articles/August2012/f086eb87-eb07-4e18-91cf-2768e42d828dOtherImage.jpg
Shruti didn’t do many films in Tamil and starred in few more Telugu and Kannada films before marrying Kannada actor Mahendra and settling into matrimony. After a few years, though, the couple started developing many ‘misunderstanding’ which soon reached a point of no return. Mahendra and Shruti then filed separately for divorce and legal separation.

The divorce came through last year and now Shruti has decided to again give vent to her ‘acting instincts’. She returns to the limelight not as a heroine but by playing the lead role in a tele-serial titled Karthigai Pengal aired at prime time in the night on a popular regional television channel. This serial is produced by Thirumurugan and has Banuchander playing the male lead.

The serial has gone on air starting this Monday (30th July) and Shruti hopes her ‘second innings’ as an actress in tele-serials turns out to be as successful as her stint in movies was prior to her marriage with Mahendra.

aanaa
28th October 2012, 06:27 AM
ஊருக்குப் பெருமை சேர்த்த விருது!
http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20121027/Tv8.jpg

1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி சென்னை தொலைக்காட்சி தொடங்கப்பட்ட தினத்தில் ஒளிபரப்பான `வாலிபம் திரும்பினால்' சிறப்பு நாடகத்தில் நடித்தவர் ஏ.ஆர்.எஸ். ஒய்.ஜி.எம். நாடக குழுவின் நாடககுழு சார்பில் அந்த நாடகம் அரை மணிநேரம் ஒளிபரப்பாகி நேயர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தூர்தர்ஷனில் முதன்முதலாக ஒளிபரப்பான `நல்லதோர் வீணை' தொடரிலும் நடித்தார், ஏ.ஆர்.எஸ்.


இப்போதும் அவள், சூர்ய புத்திரி என தொடர்களில் பிசியாக இருக்கும்


ஏ.ஆர்.எஸ், இதுவரை 63 தொடர்களில் நடித்தவர். நடித்துக் கொண்டிருப்பவர். சினிமாவிலும் 104 படங்களைத் தாண்டியிருக்கிறார். மேடை நாடகங்களிலும் முத்திரை பதித்திருக்கிறார். நின்று நிமிர்ந்த தோற்றம், கணீர் குரலில் தெளிவான உச்சரிப்பு, கடந்து போகும் வார்த்தைகளிலேயே இணைந்து கொள்ளும் நடிப்பு இவரின் ஸ்பெஷல்.


நாடக உலகில் நீண்டகால சேவை புரிந்து வருவோருக்கு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் சிறந்த நாடக நடிகருக்கான இந்த விருது


ஏ.ஆர்.எஸ்.சுக்கு கிடைத்தது. சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப்


முகர்ஜி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த விருதை ஏ.ஆர்.எஸ்.சுக்கு வழங்கினார்.


இவருக்கு முன் இந்த விருதை 1959-ல் பம்மல் கே.சம்பந்த முதலியார், 1962-ல் டிகே.சண்முகம், 1968-ல் எஸ்.வி.சஹஸ்ரநாமம், 1992-ல் பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் மட்டுமே பெற்றிருக்கிறார்கள் என்பது இந்த விருதின் சிறப்பை சொல்லும்.


இந்த விருது பெற்ற அனுபவம் பற்றி ஏ.ஆர்.எஸ்.சிடம் கேட்டபோது, ஜனாதிபதி மாளிகையில் என்னை விருதுக்காக அழைக்கும்போது `ஆலங்காடு ராமமூர்த்தி சீனிவாசன்' என்று என் ஊர்பெயர், தந்தை பெயர் என் பெயரோடு சேர்த்து அழைத்தார்கள். அந்த நிமிடத்தில் நான் பிறந்த ஊருக்கும் என் பெற்றோருக்கும் இந்த விருது மூலம் பெருமை சேர்த்த என் இதயப் பரவசத்தை வார்த்தைகளில் விவரித்து விட


முடியாது!''நெகிழ்ச்சியாகவே சொல்கிறார், ஏ.ஆர்.எஸ்.
நன்றி: தினதந்தி

aanaa
18th November 2012, 11:49 PM
டிவி சீரியல் ஷூட்டிங்கில் நடந்த சோகம்



ஐதராபாத்தில் டிவி சீரியல் ஷூட்டிங் ஒன்று நடந்த போது, ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் பலியானான். ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுவன் நடிகை ஓட்டிய கார் ஏறியது, இதனையடுத்து சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். நடிகை கோபத்துடன் கார் ஓட்டிச் செல்வது போல் காட்சி படமாக்கபட இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக நடிகையின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுவன் ஏறியது. மேலும், சிறுவன் அருகே உட்கார்ந்திருந்து 9 வயது சிறுமியின் மீதும் கார் மோதியது.


இதனால் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் பலத்த காயத்துடன் இருந்த சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு விசாரித்தனர். விசாரணையில், நடிகைக்கு சரியான ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் கார் ஓட்ட தெரியாது என்றும் தெரிய வந்துள்ளது. நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

aanaa
18th November 2012, 11:50 PM
சின்னத்திரை நடிகையின் டைரக்டர் ஆசை!



சின்னத்திரை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யாவுக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். வந்தாளே மகராசி தொடரின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா, தற்போது திரைவிழாக்களைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஆகியிருகிறார். அத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 7சி தொடரில் நடித்தும் வருகிறார். நடிப்பு, தொகுப்பு என எப்போதும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வருங்காலத்தில் டைரக்ஷன் செய்யும் ஆசையும் இருக்கிறதாம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்த கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் கலையுலக பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

iqojoxifidoc
23rd November 2012, 11:25 AM
அடம் பிடித்த ரோஜா

11/22/2012 3:53:12 PM

தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘லக்கா, கிக்கா' நிகழ்ச்சி நடத்தும் ரோஜா புடவை சரியில்லை என்று நிகழ்ச்சியின் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டாராம்.
சின்னத்திரையில் சினிமா நடிகைகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக செலவு என்றால் அவர்களுக்கான காஸ்ட்யூம்தான். ஜீ தமிழ் டிவியில் ரோஜா ‘லக்கா கிக்கா' நிகழ்ச்சியில் புடவை, நகை அலங்காரம் பிரம்மாண்டமாக இருக்கும். புடவை மட்டுமே ஒரு லட்சம் ரூபாயாம்.

சமீபத்தில் டிவி நிர்வாகம் சார்பில் வேறு புடவை கொடுத்திருக்கின்றனர். ஆனால் அதை உடுத்த மறுத்துவிட்டாராம் ரோஜா. ஒரு லட்சம் ரூபாய் புடவை தந்தால்தான் நிகழ்ச்சிக்குத் தருவேன் என்று சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டராம். டிவி நிர்வாகத்தினர் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது
http://http://cinema.dinakaran.com/cinema/TelevisionDetail.aspx?id=7872&id1=6

2சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம்

11/20/2012 11:01:51 AM

சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம் தொடங்கியுள்ளது. இரவு 11 மணிக்கு நடித்த தூறல் நின்னு போச்சு, மௌனகீதங்கள் போன்ற பிரபலமான படங்களை ஒளிபரப்புகின்றனர்.

இயக்குநர் கே. பாக்யராஜ் படங்களுக்கு என்று தனி ரசிகர் வட்டம் உண்டு. ஆண் ரசிகர்களைப் போல பெண் ரசிகர்களும் அதிகம் உண்டு. அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமாச்சாரம் இருக்கும். இன்றைக்கும் டிவியில் பாக்கியராஜ் படம் போட்டால் அது ரசித்து பார்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ரசிக்கும் படியாக இருக்கும்.

சன் டிவியில் இந்தவாரம் இரவு 11 மணிக்கு பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றனர். இன்று இரவு ருத்ரா, புதன்கிழமை இரவு தூறல் நின்னு போச்சு படம் ஒளிபரப்பாகிறது.

1982 லேயே வரதட்சணை கொடுமை பற்றி கூறிய படம் 'தூறல் நின்னு போச்சு'. நம்பியாரை வில்லான பார்த்த தமிழ் ரசிகர்கள் இதில் வித்தியாசமான கெட்டப்பில் பார்த்திருப்பார்கள். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனவை. நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத படம் இது. வியாழக்கிழமை இரவு இன்று போய் நாளை வா என்ற நகைச்சுவை படமும் வெள்ளிக்கிழமை இரவு அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான மௌனகீதங்கள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மௌனகீதங்கள் படத்தில் பாக்யராஜ், சரிதா ஜோடி கெமிஸ்ட்ரி சூப்பர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தினசரி 11 மணிக்கு தூக்கம் வராமல் இருந்தால் பாக்யராஜ்

http://http://cinema.dinakaran.com/cinema/TelevisionDetail.aspx?id=7853&id1=6

iqojoxifidoc
23rd November 2012, 11:29 AM
என்னோட படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைக்கிறது என்கிறார் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய்சேதுபதி. சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகனவர் விஜய்சேதுபதி. தற்போது இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் பீட்சா வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் பீட்சா படத்திற்கு முன்பு வெளிவர வேண்டிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.​

படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு படம் வெளிவராமல் தள்ளிப்போனது. இப்போது வருகிற 30-ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது. இதுபற்றி நிருபர்களிடம் விஜய் சேதுபதி கூறியதாவது:-

சினிமா எண்ட்ரி என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நடிக்க வந்த பிறகுதான் தெரிந்துக் கொண்டேன். என்னோட முதல் படம் சீனுராமசாமி சார் இயக்கிய தென் மேற்கு பருவக்காற்று. இந்த படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடவில்லை. ஆனால், படப்பிடிப்பு நடந்த போது படம் பேசப்படும் படமாக இருக்கும் என்றேன். அதேபோல பேசப்பட்டது. தேசிய விருதுகளை வாங்கி கொடுத்தது. அப்போது நிறைய வாய்ப்புகள் வந்தன. கதை சரியில்லாததால் ஒத்துக் கொள்ளவில்லை. பீட்சா கதை பிடித்திருந்தது, நடித்தேன். இப்போது எதிர்பாராத அளவில் வெற்றி பெற்றியிருக்கிறது.

பீட்சாவுக்கு முன்பு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் வெளிவந்திருக்க வேண்டும். வெளிவரவில்லை அதற்கு முக்கிய காரணம் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு முன்னதாக பத்திரிக்கையாளர் காட்சி போடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் ரசித்து சிறந்த படம் என்று பாராட்டினார்கள். அப்போது முப்பது பிரிண்ட்டுகள் போடுவதாக இருந்தது. இந்த ரிசல்ட் கேட்ட பிறகு இன்னும் நல்லா விளம்பரபடுத்தி அதிக பிரிண்ட் போடலாம் என்று கருதினோம். அதனால் அப்போது படத்தை ரிலீஸ் செய்யவில்லை. தற்போது ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக எஸ்.சதிஷ்குமார் ரிலீஸ் செய்கிறார். இவர் ஏற்கனவே ஆரோகணம் படத்தை ரிலீஸ் செய்தவர். நூற்று ஐம்பது பிரிண்ட் தமிழ்நாடு முழுக்க போடப்பட்டிருக்கிறது. வருகிற 30-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. அடுத்து ரம்மி, சூதுகவ்வும், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் படத்தின் தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமையை நடிகர் இயக்குனர் தியாகராசன் வாங்கியிருக்கிறார். என்னோட படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைக்கிறது. அதேபோல கூத்துப்பட்டறையின் பயிற்சி எடுத்திருந்தாலும் படப்பிடிப்புக்கு முன்பு நடிக்க வேண்டிய காட்சிகளை ரிகல்சர் செய்த பிறகுதான் கேமரா முன்பு நிற்பேன்.
http://http://www.thinaboomi.com/2012/11/22/17192.html

aanaa
5th December 2012, 03:42 AM
சின்னத்திரையில் மீண்டும் சூர்யா




நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா, மீண்டும் அதே நிகழ்ச்சியில் அதே டிவியில் தொடர்கிறாராம்.


சூர்யா இப்போது சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர.


இந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு படங்களில் நடிக்க சில மாதங்கள் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, கோடிகளை அள்ளித்தரும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பப் போகிறாராம். தொடர்ச்சியாக பல எபிசோடுகளை ஒரே நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டு, கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படங்களின் ரிசல்ட் மாற்றான் மாதிரி அமைந்துவிட்டால், டிவியில் தோன்றும் முடிவு மாறக்கூடும்!

http://cinema.dinakaran.com

aanaa
5th December 2012, 03:43 AM
சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை: சிவா


சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பேசிய சிவா தன்னுடைய சினிமா, காதல், பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.


படிப்பதை விட தனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறிய சிவா, முதலில் நாடகத்தில் நடித்து பின்னர் எப்.எம், அப்புறம் சினிமா துறைக்கு வந்ததாக கூறினார்.


சினிமா துறைக்கு சென்றதற்கு தன்னுடைய வீட்டில் யாரும் விரும்பவில்லை என்று கூறிய சிவா, பின்னர் ரஜினி படத்தை வீட்டில் மாட்டிய பின்னர்தான் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.


நடிகர் அஜீத் தனக்கு அண்ணன் மாதிரி என்றும், நடிகர் விஜய்யின் ரசிகன் என்றும் கூறினார். தன்னுடைய படங்களைப் பார்த்து விஜய் பாராட்டியும், ஆலேசானைகளையும் கூறியுள்ளார் என்றார் சிவா.


சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை. அதுதான் தனக்கு ப்ளஸ் என்று கூறிய சிவா தன்னால் சுதந்திரமாக செயல்பட முடிவதற்கு அதுதான் காரணம் என்றார். சினிமாவில் நுழைவதற்கு நானும் போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அந்த நாட்களில் நான் மிகவும் சந்தோசமாக சிரித்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன் என்று கூறிய சிவா இப்போதைய வெற்றிக்கு அந்த நம்பிக்கைதான் காரணம் என்றார்.

http://cinema.dinakaran.com

aanaa
5th December 2012, 03:48 AM
சின்னத்திரையில் கதாநாயகிகளின் ஆதிக்கம்தான்!

சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகம் என்றால் சின்னத்திரையில் கதாநாயகிகளின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப்பறக்கிறது. சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு குறைந்த உடன் சின்னத்திரையில் கால்பதித்து நிரந்தரமாக செட்டிலாகிவிட்ட கதாநாயகிகளின் காட்டில்தான் இப்போது பணமழை கொட்டுகிறது. கண்ணீர் விடும் இல்லத்தரசிகள் இருக்கும் வரை இவர்களுக்கு என்றைக்கும் ஓய்வு இல்லை.


சின்னத்திரை மார்க்கண்டேயி ராதிகா

குட்டிபத்மினி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ராதிகா. பின்னர் ராடான் நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக சித்தி தொடங்கி செல்லமே வரை சன் தொலைக்காட்சியில் தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்திருக்கிறார். தான் நடிக்கும் தொடர்கள் தவிர தனியாக தொடர்களும், நிகழ்ச்சிகளும் ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கி வருகிறார்.


சின்னத்திரை தேவதை தேவயானி

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த கதாநாயகிகளில் இன்றைக்கும் தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தேவயானி. சன் டிவியில் கோலங்கள் 4 வருடகாலம் ஒளிபரப்பானது. ராஜ் டிவியில் கொடிமுல்லை அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்போது மீண்டும் முத்தாரம் தொடரின் மூலம் இரட்டை வேடத்தில் களம் இறங்கியுள்ளார் தேவயானி.


கலகலப்பான ரேணுகா

பாலச்சந்தர் மூலம் சின்னத்திரைக்கு அழைத்து வரப்பட்டவர்தான் ரேணுகா ப்ரேமி தொடங்கி இப்போதைய அமுதா ஒரு ஆச்சர்யக்குறி வரை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கலகலப்பாகவும், போல்டாக சின்னத்திரையில் நடித்துவருகிறார். சின்னத்திரை மூலம் சினிமாவில் ரேணுகாவிற்கு புது எண்ட்ரி கிடைத்தது.

நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்

குட்டிபத்மினியின் கலசம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ரம்யாகிருஷ்ணன். அவர்கள் இருவருக்கு இடையே பிரச்சினை எழவே ரம்யாகிருஷ்ணன் கிரியேட்டிவ் ஹெட் ஆக மாறி தங்கம் சீரியலில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.

போல்டான கல்கி ஸ்ருதி

பாலச்சந்தர் மூலம் கல்கி படத்தில் அறிமுகமாக ஸ்ருதி திருமணத்திற்குப் பின்னர் நடிப்புலகிற்கு டாடா காட்டினார். மண வாழ்க்கையில் முறிவு ஏற்படவே தொலைக்காட்சி சீரியலில் கால்பதித்துள்ளார். திருமுருகன் தயாரித்துள்ள கார்த்திகைப் பெண்கள் சீரியலில் அதே போல்டான ஸ்ருதியை பார்க்கலாம்.

அலங்கார நாயகி சுதாசந்திரன்

தமிழ் திரைப்படங்களில் நடித்துவந்த சுதாசந்திரன் திடீரென வட இந்திய சேனல்கள் பக்கம் ஒதுங்கினார். அங்கு நிகழ்ச்சி தொகுப்பு, சீரியல் என சேவை செய்து வந்த சுதாசந்திரனை நடிகை ராதிகா தமிழ் சீரியல் பக்கம் அழைத்துவந்தார். இங்கே சன்டிவி, ஜெயாடிவி சேனல்களில் அலங்கார நாயகியாக சீரியல்களில் வலம் வருகிறார்.

அழுகை பானுப்ரியா

கண்ணழகி பானுப்பிரியா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின்னர் சில ஆண்டுகளில் இவரை வாழ்க்கை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் செய்தனர் ஏ.வி.எம் நிறுவனத்தினர். அதுவே சினிமாவில் அடுத்த என்ட்ரிக்கு அடித்தளமாக அமைந்தது. தற்போது சுரேஸ் கிருஷ்ணாவின் ஆசை மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.


சுகாசினி தொடங்கி மதுபாலா வரை

இவர்கள் தவிர சிம்ரன், சுகன்யா, மதுபாலா, மீனா, சங்கீதா, சுகாசினி, ரேவதி, ரோகினி என பிரபல கதாநாயகிகளும் சின்னத்திரையில் சில சீரியல்களில் தலை காட்டியுள்ளனர். இவர்களில் சுகாசினியும், சிம்ரனும் இப்போது ஜெயாடிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக பணியை தொடர்கின்றனர். சங்கீதா விஜய் டிவியில் நடுவராகவும், மீனா, சுகன்யா ஆகியோர் சன் டிவியில் நடுவர்களாகவும் கலைச்சேவை செய்துவருகின்றனர்.


கதாநாயகர்களை காணவில்லை

சினிமாவில் எப்படி கதாநாயகர்கள் தங்களை விட வயது குறைந்த கதாநாயகிகளுடன் நடிக்கிறார்களோ அதற்கு உல்டா வாக இங்கே தங்களை விட வயது குறைவான நடிகர்களை கதாநாயகர்களாக மாற்றி பழி தீர்த்துக் கொள்கின்றனர் இந்த சீரியல் கதாநாயகிகள்.




http://cinema.dinakaran.com

aanaa
29th December 2012, 06:09 AM
சின்னத்திரையின் சரவணன், மீனாட்சியின் ‘கடலை‘




சின்னத்திரையின் பிரபல ஜோடிகளான செந்தில், ஸ்ரீஜா இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமாகியுள்ள இந்த ஜோடி அதே உற்சாகத்தோடு சினிமாவில் அடி எடுத்து வைக்கின்றனர். கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை இயக்கிய மூர்த்திதான் இந்த ஜோடியை சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமான இந்த ஜோடி சினிமாவிலும் வெற்றிக்கொடியை பறக்க விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஜோடியை சினிமாவிலும் இணைத்துள்ளார். சரவணன் மீனாட்சி ஜோடி நடித்த விளம்பரப்படம் தற்போது பிரபலமடைந்ததைப்போல இவர்கள் நடிக்கும் சினிமாவும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

aanaa
5th January 2013, 09:18 PM
சின்னத்திரையில் நட்சத்திர வாரிசு


ஜெயா டிவியில் வரும் சினி கிளிப்ஸ் பகுதியில் புதிய படங்களின் விமர்சனங்களை வழங்கும் துடிப்பான இளைஞர் ரூஹன், சின்னத்திரையில் இந்த ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரம். சமீபத்தில் பிரமாண்டமாய் நடந்து முடிந்த ஏ.ஆர்.ரகுமானின் தாய் மண்ணே வணக்கம் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக ஜூனியர் பாடகர்களை மேடையேற்றியதும் இவர் தான். இதற்காக திருச்சி, கோவை, மதுரை, சென்னையில் நடந்த பாட்டுத் தேர்வில் இந்த சிறார்கள் தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தார்கள். வார்த்தைகளில் தெளிவு, உச்சரிப்பில் வேகம் என தமிழில் நம்பிக்கை தொகுப்பாளராக வெளிப்பட்டிருக்கும் ரூஹன், தொடக் கத்தில் ராஜ் டிவியில் நிகழ்ச்சி வழங்கியவர். காதலர்கள் தங்கள் உணர்வுகளை காதலுடன் பரிமாறிக் கொள்ளும் என் மனமே நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடிகளின்பேவரைட் ஆனார். அதோடு ஓல்டு இஸ் கோல்டு நிகழ்ச்சியில் தேனான பழையபாடல்களை ஒளிபரப்புவது, அன்புடன் நிகழ்ச்சியில் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்வது, சொல்லத்தான் நினைக்கிறேன் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது என சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே இவர் பரிச்சயம். இப்போது ஜெயா டிவியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி மூலம் இன்னும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.


பெரியதிரை ரசிகர்களுக்கு இவரின் பெற்றோர் நன்கு அறிமுகம். ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ படத்தில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் பகோடா காதரின் மகன் இவர். அம்மா மும்தாஜூம் நட்சத்திரமே. பெற்றோர் மாதிரி நடிக்கும் எண்ணம் வரவில்லையா? ரூஹனைக் கேட்டால், கலைத்தம்பதியரின் வாரிசாகப் பிறந்து விட்டு நடிப்பு ஆர்வம் இல்லாமல் எப்படி? நடிப்பு வாய்ப்பு வரும்போது வரட்டும். அதுவரை சின்னத்திரையில் எனக்கான களங்களில் வெளிப்படலாமே என்கிறார்.
நன்றி: தினதந்தி

aanaa
25th January 2013, 07:35 PM
சினிமா பிரபலங்களில் டுவிட்டர் பக்கங்கள் … ஜெயா டிவியின் ‘சினிமா’வில் அறிமுகம்





வாரஇதழ் என எதுவாக இருந்தாலும் சினிமா பற்றிய செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குவார்கள். அதேபோலத்தான் இணையதளங்களிலும் சினிமாவிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். இப்போது சின்னத்திரையிலும் சினிமா செய்திகளை எல்லோரும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். ஜெயா டிவியில் ‘சினிமா' என்ற புதிய நிகழ்ச்சியை சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் புதுமையாக சினிமா பிரபலங்களில் சமூகவலைதளப் பதிவுகளைப் பற்றிய செய்திகளை கூறுகின்றனர். இன்றைக்கு சினிமா செய்திகளை படிக்கவும், பார்க்கவும் தனி ரசிகர் வட்டம் உண்டு. அவர்களுக்காகவே ஜெயா டிவியில் சினிமா நிகழ்ச்சியை நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியுள்ளனர் இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் சுய விவரங்கள், பழம்பெரும் நடிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள், தற்போது படப்பிடிப்பில் இருக்கும் புதிய திரைப்படங்கள் பற்றி இதுவரை அறிந்திராத செய்திகள், காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள் என அத்தனையையும் தொகுத்து தருகின்றனர். திரைக்கு வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பிரத்தியேகமான காட்சிகளும் அந்தப் படக்குழுவினரின் அனுபவங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. புதியதாக சினிமா பிரபலங்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள், அவர்களின் பதிவுகளும் இந்த சினிமா நிகழ்ச்சியில் இடம் பிடிப்பது சிறப்பு அம்சம். வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

aanaa
25th January 2013, 07:36 PM
போராட்டம்தான் வாழ்க்கையில சுவாரஸ்யம்: ‘மிர்ச்சி’ சிவா



எனக்கு எந்த பின்னணியும் கிடையாது ஆனால் நான் இன்றைக்கு சினிமா உலகில் இருக்கிறேன்.
இதற்கு காரணம் போராட்டம்தான். அதுதான் என்னுடைய வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறது என்று நடிகர் சிவா கூறியுள்ளார்.

சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பேசிய சிவா தன்னுடைய சினிமா, காதல், பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டார். படிப்பதை விட தனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறிய சிவா, முதலில் நாடகத்தில் நடித்து பின்னர் எப்.எம், அப்புறம் சினிமா துறைக்கு வந்ததாக கூறினார்.
சினிமா துறைக்கு சென்றதற்கு தன்னுடைய வீட்டில் யாரும் விரும்பவில்லை என்று கூறிய சிவா, பின்னர் ரஜினி படத்தை வீட்டில் மாட்டிய பின்னர்தான் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.
நடிகர் அஜீத் தனக்கு அண்ணன் மாதிரி என்றும், நடிகர் விஜய்யின் ரசிகன் என்றும் கூறினார். தன்னுடைய படங்களைப் பார்த்து விஜய் பாராட்டியும், ஆலேசானைகளையும் கூறியுள்ளார் என்றார் சிவா.
சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை.
அதுதான் தனக்கு ப்ளஸ் என்று கூறிய சிவா தன்னால் சுதந்திரமாக செயல்பட முடிவதற்கு அதுதான் காரணம் என்றார்.
சினிமாவில் நுழைவதற்கு நானும் போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
அந்த நாட்களில் நான் மிகவும் சந்தோசமாக சிரித்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன் என்று கூறிய சிவா இப்போதைய வெற்றிக்கு அந்த நம்பிக்கைதான் காரணம் என்றார்.

aanaa
25th January 2013, 07:38 PM
பொம்மலாட்டத்தில் சண்டித்தனம் செய்யும் ப்ரீத்தி!



பற்பல வேடங்களில் நடித்து, இடையில் திரு்மணமாகி வீட்டோடு செட்டிலாகியிருந்த ப்ரீத்தி இப்போது தனது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்து விட்டதைத் தொடர்ந்து மறுபடியும் நடிப்புக் களத்தில் குதித்துக் கலக்க ஆரம்பித்துள்ளார்.


மறுபடியும் வெரைட்டியாக வெளுத்து வாங்கி வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
சிஏ படித்துள்ள ப்ரீத்தி நடிக்க வந்ததே சுவாரஸ்யமான விஷயம்தான். ஆடிட்டர் வேலையா, நடிப்பா என்ற கேள்வி வந்தபோது நடிப்பையே தேர்ந்தெடுத்தார் ப்ரீத்தி.


அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்த அவரும், சக டிவி நடிகரான சஞ்சீவும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டனர். உடனடியாக குழந்தையையும் பெற்றெடுத்தார் ப்ரீத்தி. இதனால் கடந்த இரண்டரை வருடங்களாக நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது குட்டிப் பாப்பா வளர்ந்து விட்டதால் மறுபடியும் நடிக்க வந்துள்ளார். ப்ரீத்தி மறுபடியும் நடிக்க கணவர் சஞ்சீவும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.


தற்போது மனதில் உறுதி வேண்டும், பொம்மலாட்டம் தொடர்களில் நடித்து வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் கலக்கி வருகிறார்.
வீட்டுக்கு அடங்காத, யாருக்கும் பணியாத அல்ட்ரா மாடர்ன் பணக்காரப் பெண்ணாக கலக்கி வருகிறார் ப்ரீத்தி. வீட்டுக்காரர் சஞ்சீவ் திருமதி செல்வத்தில் அதிரடி செய்து கொண்டிருக்கிறார்... ப்ரீத்தி பொம்மலாட்டத்தில் வெளுத்துக் கட்டி வருகிறார்.. செம ஜோடிதான்.

aanaa
9th February 2013, 04:22 AM
ஹாங்காங்கில் தமிழ் சேனல்களுக்கு தடை...?



உலகம் முழுக்க தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள், டி.வி.க்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் தமிழ் டி.வி. சேனல்கள் மூலம் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங் நாட்டில் தமிழ் சேனல்களை முற்றிலுமாக தடை செய்ய இருக்கின்றனர். தற்போது அந்நாட்டில் விஜய் டி.வி. மட்டுமே ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சேனலையும் வருகிற ஜன.31ம் தேதி முதல் தடை செய்ய இருக்கிறார்களாம். இதனால் அங்குள்ள தமிழர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து விஜய் டி.வியை ஒளிப்பரப்பு செய்யவும், தொடர்ந்து தமிழ் சேனல்கள் ஒளிப்பரப்பு ஆவதற்கு அங்குள்ள தமிழ் கலாச்சார அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி வருகின்றனர்.

aanaa
6th April 2013, 07:01 PM
சின்னத்திரையில் இருந்து...





விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமாகி விட்ட செந்திலுக்கு பெரிய திரையும் கைகொடுத்ததில் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார். பெரிய திரையில் அறிமுகமான செங்காத்து நல்ல கதையமைப்பை கொண்டிருந்த படம் என்றாலும், செந்திலின் நடிப்பு பேசப்பட்ட அளவுக்கு படம் போகவில்லை. இதனால் கொஞ்சம் அப்செட் ஆனவருக்கு இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கண்பேசும் வார்த்தைகள் படம் ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் அவரின் நடிப்பு பார்த்து இரண்டு பட நிறுவனங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஜய் டிவியில் இருந்து போன சிவகார்த்திகேயன் மாதிரியே செந்திலும் பெரிய திரையில் பிரகாசிப்பார் என்கிறார்கள்.

aanaa
16th April 2013, 09:00 PM
எனது மதிப்பிற்குரிய ஆசான்கள்! அடக்கத்துடன் சொன்ன கமல்



விஜய் தொலைக்காட்சியில் பிரகாஷ்ராஜ் நடத்தி வரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், தனக்கு கற்றுக்கொடுத்த பள்ளி ஆசான்களை தவிர இன்னும் பலரை நினைவுபடுத்தினார்.


அப்போது, எனக்கு தமிழை கருணாநிதி மற்றும் கண்ணதாசனும், நடிப்பினை சிவாஜி, எம்ஜிஆர்., நான் நடித்த படங்களில் சிறப்பு பாஷை பேசி நடிக்கும்போது கூடவேயிருந்த லூஸ்மோகன், கோவை சரளா, தனது மகள் ஸ்ருதி ஆகியோர்களையும் தனது ஆசான்களாக குறிப்பிட்டார். மேலும் வேலை இல்லாமல் ஓய்வாக இருந்தபோது தான் முகச்சவரம் செய்ய கற்றுக்கொண்டதாகவும் கூறிய கமல், தேவர்மகன், விருமாண்டி படங்களில் தான் வைத்திருந்த மீசைகளை தனது கையால் தானே வடிவமைத்தவை என்றும் கூறினார்.


இதுவரை அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் கதையை சொல்லி விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ், கமல் சொன்ன விசயங்களைக்கேட்டு ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தார். அதோடு, இந்த நாள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று சொல்லி கமலுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், கவுதமியுடன் சேர்ந்து விளையாடி ரூ.50 லட்சம் பரிசு வென்றார். பின்னர் அந்த தொகையை பெற்றால் தான் பிள்ளையை தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்தார்.

aanaa
16th April 2013, 09:03 PM
சினிமா தயாரிப்பதை கைவிட்டார் சிம்ரன்! சீரியல் கதாநாயகி ஆகிறார்!!





கமல், விஜய், அஜீத், சூர்யா என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் சிம்ரன். ஆனால் அவருக்கு திருமணமானதும் எல்லா நடிகைகளையும் போலவே சிம்ரனுக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் நடித்தவர் பின்னர் யாருமே கண்டுகொள்ளாததால், மாஜி ஹீரோயினிகள் தஞ்சமடையும் சின்னத்திரைக்குள் அவரும் களமிறங்கினார். ஜெயா டி.வியில் குஷ்பூ நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதையடுத்து அதில் வெறுப்பு ஏற்பட, சினிமா தயாரித்து அதில் தானும் ஏதாவது வேடத்தில் நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். அதற்காக பல மாதங்களாக கதைகளும் கேட்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று ஒரு நாள் சிம்ரனின் கணவர், வெளியாகும் படஙகள் எதுவுமே ஓடுவதில்லை. இந்த மாதிரி ரிஸ்க்கான நேரத்தில் சினிமா தயாரித்து லாக் ஆக வேண்டாம் என்று தடை போட்டு விட்டாராம்.
அதன்காரணமாக, இப்போது எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சிம்ரனின் கவனம் டி.வி சீரியல்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. ராதிகா, ரம்யாகிருஷ்ணன், தேவயானி உள்ளிட்ட சில மாஜி ஹீரோயினிகள் சின்னத்திரையிலும் கொடி கட்டிப்பறப்பதால் தனது கொடியையும் பறக்க விட பரபரப்பாக இறங்கியிருக்கிறார். அதற்காக சில முன்னணி சீரியல் கம்பெனிகளை அணுகி தான் டைட்டில் வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக அப்ளிகேசன் போட்டு வருகிறார் சிம்ரன்.

aanaa
23rd April 2013, 10:45 PM
சின்னத்திரையில் அதிக கவனம்!

நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்குக் கடமைப்பட்டவள். இது எல்லாம் சின்னத் திரைக்கு வந்த பிறகுதான் நடந்தது. அதே போல சின்னத் திரையில் நிறைய வசதிகள் உள்ளன. சினிமாவில் சொல்ல முடியாத பல விஷயங்களைச் சின்னத் திரையில் சொல்ல முடிகிறது. அதுதான் நான் சின்னத் திரையில் அதிக கவனம் செலுத்தக் காரணம்' என்கிறார் நடிகை தேவயானி.

aanaa
23rd April 2013, 10:45 PM
சன் மசாலா!

சன் சின்னத்திரை தொடர் குடும்பங்கள் பங்கேற்கும் "சன் சூப்பர் குடும்பம்' நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக முதலில் சுகன்யா, மீனா, கங்கை அமரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இப்போது அதன் சூப்பர் 8 சுற்று தொடங்கியுள்ளது. இதற்கு நடுவர்களும் மாறியுள்ளனர். கங்கை அமரன் சன் சிங்கர் நடத்த போய்விட்டதால் அவருக்குப் பதிலாக டி.ராஜேந்தர் நடுவராக வந்துள்ளார். சுகன்யாவிற்குப் பதிலாக நடிகை சங்கீதா. நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் காயத்ரி ஜெயராமுடன் சின்னத்திரை நடிகர் தீபக் இணைந்துள்ளார்.

aanaa
23rd April 2013, 10:46 PM
சுஹாசினி நடிக்கும் சிவசங்கரி!

சனிக்கிழமை தோறும் இரவு 10.00 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திகில் தொடர் "சிவசங்கரி'. இத்தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் சுஹாசினி நடிக்கிறார். இத்தொடரைப் பற்றி இயக்குநர் குருவித்துறை கே. ஜெ. தங்கதுரை கூறுகையில் "இது திகில் தொடர் என்பதால் காட்டு பகுதிகளில் சென்று படப்பிடிப்பு நடத்துவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஆதி மங்கலம் என்ற ஊருக்குள் அந்நியர்கள் புகுந்து பிரச்னையை உண்டாக்குகிறார்கள். அந்த நேரத்தில் அபசகுணமாக கோவிலின் கலசம் வெடித்துச் சிதறுகிறது. அமைதி பூங்காவாக இருந்த ஆதி மங்கலம் பரபரப்பான கிராமமாக மாறுகிறது. இதற்கிடையில் சங்கரிக்கு ஏற்படும் பிரச்னைகள் என்று பரபரப்பான கட்டங்களில் பயணித்து வருகிறது சிவசங்கரி' என்கிறார்.

aanaa
23rd April 2013, 10:47 PM
சின்னத்திரையில் தொகுப்பாளியாக தேவி கிருபா!http://www.cinemaexpress.com/Images/article/2013/4/21/devi-krupa.jpg


ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "வெள்ளித்திரை'. இந்த நிகழ்ச்சியில் சினிமா உலகின் பரபரப்பான செய்திகள், புதிதாக வெளியாகும் படங்கள் பற்றி இயக்குனர்களின் கருத்து, புதுமுகங்கள் பற்றி விபரங்கள், தினமும் ஒரு சினிமா தகவல், கலைஞர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து, திரையுலக திருமண விழாக்கள், பட துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, சினிமா சம்பந்தமான பிரச்சனைகள் குத்த விவாதங்கள் என பல சினிமா தகவல்களை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குகிறார் நடிகை தேவி கிருபா.

aanaa
23rd April 2013, 10:47 PM
வாய்ப்புகளை மறுக்கும் ஜஸ்வர்யா!http://www.cinemaexpress.com/Images/article/2013/4/5/aishwarya.jpg

சின்னத் திரையில் அழகான தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜஸ்வர்யாவை சினிமா வாய்ப்புகள் சுற்றிச் சுற்றி வருகின்றனவாம். "எந்திரன்' படத்தில் நடிக்க அழைத்தார்களாம் அம்மணி போகவில்லை. "பரதேசி'யில் நடிக்க பாலாவும் அழைப்பு விடுத்தாராம் நடிக்கவில்லை. இப்படி பெரிய திரை வாய்ப்புகளை ஏன் தவிர்கிறீர்கள் என்று கேட்டால், "எனக்கு சின்னத் திரையே போதும், அதோடு எனக்கு நடிப்பதில் ஆசையில்லை படிப்பதில்தான் ஆர்வம். நான் ஐ.ஏ.எஸ் ஆகப் போகிறேன்' என்கிறார் ஐஸ்வர்யா.

aanaa
6th June 2013, 11:49 PM
வில்லியாக மாற ஆசை… சின்னத்திரை நடிகை கவிதா


கதாநாயகியாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பதுதான் சவாலான விசயம். எனவே சீரியலில் வில்லத்தனம் செய்வதுதான் என்னுடைய விருப்பம் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கவிதா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக கடந்த 15 ஆண்டுகளாக சீரியல் உலகில் சிறந்த நடிகையாக அறியப்பட்டு வரும் கவிதா அழகு மட்டுமல்ல நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர். சன் தொலைக்காட்சியில் சக்தி தொடரில் அறிமுகமாகி இப்போது இல்லத்தரசி வரை பல தொடர்களில் நடித்துள்ள கவிதா தன்னுடைய சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

aanaa
6th June 2013, 11:51 PM
சீரியலில் இருந்து காணாமல் போகும் கதாநாயகிகள்!




சினிமாவில் என்னதான் சண்டை என்றாலும் இயக்குநருடன் ஒத்துப்போகாவிட்டாலும் படம் முடியும் வரை நடித்துக் கொடுத்துவிட்டுதான் வருவார்கள் கதாநாயகிகள். ஆனால் சின்னத்திரை சீரியல்களில் அப்படியில்லை. சில எபிசோடுகளிலேயே இவருக்குப் பதில் இவர் என்று கார்டு போட்டு ஆளையே மாற்றிவிடுவார்கள். சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்குதான் இதுபோன்று கார்டு போட்டு வந்த சீரியல் இயக்குநர்கள் இப்போது கதாநாயகிகளையே மாற்றிவிடுகின்றனர். பைரவி, சொந்த பந்தம், முத்தாரம், வாணி ராணி போன்ற பல சீரியல்களில் இதுபோன்று கார்டு போட்டு ஆளை மாற்றி நடிக்க வைக்கின்றனர். இதுபோன்ற மாறிய நடிகைகள் வேறு சீரியல்களில் சீரியசாக நடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது சீரியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவார்கள்.

aanaa
30th June 2013, 04:16 AM
சினிமாவா... ஆளை விடுங்க..!




விஜய் டி.வியில் ‘ஜோடி நம்பர் ஒன்’ நடனப் போட்டியில் சிவ.கார்த்திகேயனோடு சேர்ந்து ஆடி ஜெயித்தவர் ஐஸ்வர்யா. இதைத் தொடர்ந்து வந்த சினிமா வாய்ப்புக்களை தவிர்த்து விட்டவர், இலக்கணம் மாறுதோ, மகாபாரதம் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் மகாபாரதம் தொடரில் திரவுபதிஇவர்தான்.


“ஏன் சினிமா வாய்ப்பை தவிர்த்து விட்டீர்கள்?” ஐஸ்வர்யாவைக் கேட்டால்...


‘‘எனக்கு சினிமா பார்ப்பதில் தான் ஆர்வம்.. நடிக்கிறதில் இல்ல. பத்தாவது படிக்கும்போதே சசிகுமார் டைரக்ஷனில் சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்க அழைத்தார்கள். எனக்குத்தான் ஆர்வம் இல்லை. அதனால் மறுத்து விட்டேன். அடுத்து பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’, ‘பரதேசி’ படங்களுக்கு அழைப்பு வந்தது. அதையும் தவிர்த்து விட்டேன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தயாரிப்பாளரா என் எல்லையை விரிவுபடுத்தினால் போதும் அதற்கு என் விஸ்காம் படிப்பு நிச்சயம் உதவும்.’’


‘‘திரவுபதியாக நடித்த அனுபவம் எப்படி?’’


‘‘இன்னும் என் போர்ஷன் வரவில்லை. முன்னோட்டக் காட்சிக்காக கொஞ்சம் நடித்ததோடு சரி. அப்போதே திரவுபதியாக நடிக்க என்னை தயார்ப்படுத்திக் கொண்டு விட்டேன். ஒரு புராணத் தொடரில் அதுவும் புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில் எனக்கு அப்படியொரு சந்தோஷம். மக்கள் ரொம்ப காலத்துக்கு நினைவில் வைத்திருப்பார்களே..!’’
நன்றி: தினதந்தி

aanaa
20th July 2013, 03:16 AM
வேண்டாம், டப்பிங் சீரியல்


சின்னத்திரையில் இப்போது டப்பிங் சீரியல்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சில சேனல்களில் 50 சதவீதம், சில சேனல்களில் 100 சதவீதம் என்று இந்த ஆதிக்க எல்லை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் சின்னத்திரை சீரியலை நம்பி இருக்கும் சின்னத்திரை கலைஞர்களை ஒட்டு மொத்தமாக அது அழித்து விடும். அதனால் இந்த டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்கள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சேனல்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது சின்னத்திரை கூட்டமைப்பு.


இதுபற்றி சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவர் கவிதாபாரதி கூறுகையில், ‘‘இந்த டப்பிங் சீரியல்களால் டப்பிங் கலைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.அதில் கூட குறிப்பிட்ட சிலருக்குத் தான் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே தொடர்ந்தால் மற்ற கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே இந்த டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்கள்அதை நிறுத்த கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வரின் கவனத்திற்கும் எங்கள் கோரிக்கையை முன்வைக்கிறோம்’’ என்கிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
28th July 2013, 04:12 AM
]ஜீன்ஸ், டீ சர்ட் பிடிக்காது! ஸ்ருதிகா9

[size=1
எனக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிவது பிடிக்காது; புடவை அணிவதுதான் பிடித்திருக்கிறது என்று நடிகை ஸ்ருதிகா கூறியுள்ளார். பெரிய திரையில் அறிமுகமாகி, இன்று சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிகா. அவர் அளித்துள்ள பேட்டியில், என் அம்மா பிறந்தது சென்னை, அப்பா மலேசியா. நான் பத்தாவது வரை மலேசியாவில் படிச்சேன். அப்புறம் சென்னை வந்து ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். நான் மீடியாவிற்குள் வருவதற்குக் காரணமே என் அக்கா சுதாதான். டிவி ஆங்கரிங், விளம்பரத்துறை என பிசியாக இருந்த எனக்கு வெண்ணிலா கபடிக்குழு பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வேங்கையில் தனுஷ் தங்கையா நடித்தேன். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.


வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்தபோது சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஜீ தமிழ் சேனலில் மாமியார் தேவை தொடரில் அழகான மருமகள் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. எனக்கு ஜீன்ஸ், டிசர்ட் போட்டு நடிப்பதை விட புடவைதான் பிடித்துள்ளது. அதேபோன்ற நான் நடிக்கும் கதாபாத்திரங்களும் அமைவது என்னுடைய அதிர்ஷ்டம் என்றே கூறுவேன். சினிமாவில் நடித்துவிட்டு உடனே சீரியலுக்கு போனது ஏன் என்று கேட்கின்றனர். எனக்கு எல்லா கதாபாத்திரமும் நடிக்க வராது. குறிப்பா அயிட்டம் டான்ஸ் ஆட வராது. நான் நினைத்த கதாபாத்திரம் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன். அதுவரை எனக்கு சீரியலில் கிடைத்து வரும் பெயர், புகழ் போதும், என்று கூறியிருக்கிறார்..



[/size]

aanaa
3rd August 2013, 10:53 PM
நடிகை நீபா... பெரிய திரை டூ சின்னத்திரை டூ பெரிய திரை!




பெருசு படத்தின் மூலம் நாயகியாக வந்தவர் நீபா. அம்மாவும் அப்பாவும் நடன இயக்குநர்களாக இருந்தும் நடனம் பக்கம் செல்லாமல் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் களமிறங்கினார். ஆனால் சினிமாதுறை கை கொடுக்கவில்லை. சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தினார். பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்ப்புகள் வந்தன. தங்கர்பச்சன் இயக்கிய பள்ளிக்கூடம் படத்தில் சீமானுக்கு ஜோடியானார். காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியானார். இப்பொழுது அதேபோல் பேசப்படும் கதாபாத்திரம் ஒன்று விக்ரம் நடிக்கும் கரிகாலன் படத்தில் கிடைத்திருக்கிறதாம். உறவுகள் தொடரில் சுவேதாவாக நடித்தவருக்கு பதிலாக இப்போது நீபா நடிக்கிறார். 750 வது எடிசோடுகளை தாண்டி உறவுகள் போய்க்கொண்டிருக்கிறது. சூட்டிங் பிஸியில் இருந்தவரிடம் பேசியதில் சிக்கியவை. ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினேன். சீரியலில் நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. நடிக்க மட்டுமே வாய்ப்புகள் நிறைய உண்டு. உறவுகள் தொடரில் இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைய இருக்கு. ஆயிரம் எபிசோடுகளை நிச்சயம் தாண்டும் என்று கூறினார். காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியா காமெடியில் கலக்கினதைத் தொடர்ந்து, விக்ரமோட 'கரிகாலன்' படத்துலயும் ஒரு சூப்பர் ரோல் கிடைச்சிருக்கு என்று கூறினார். ஆல் த பெஸ்ட் நீபா! கலக்குங்க!

aanaa
12th August 2013, 05:25 AM
‘காதல் டாட் காம்’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ருதி. அடுத்தடுத்து வந்த ஒன்றிரெண்டு படங்களும் பெரிதாக பேர் வாங்கிக் கொடுக்காத நிலையில் சின்னத்திரை பக்கம் கவனம் திருப்பினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது, ‘தென்றல்’ தொடர் மூலம். தென்றலில் துளசி என்றகேரக்டரில் கணவனுக்கு அன்பான மனைவி, மாமியாரை எதிர்த்துப் பேசாத மருமகள், அப்பாவிடம் உயிரையே வைத்திருக்கும் மகள் என நடிப்பில் பல பரிமாணம் காட்டும் ஸ்ருதி, இப்போது விஜய் டிவியில் வரும் ‘ஆபீஸ்’ சீரியலில் ராஜி என்ற கேரக்டரிலும் வெளுத்து வாங்குகிறார். இந்த கேரக்டர் காதலனுடனான ஊடல், அதேநேரம் அப்பாவுக்கு அடங்கிய பெண் என்று இரு வேறு கோணங்களில் பிரகாசிக்கிறது.


‘‘சீரியலில் இப்படி விதவிதமான நடிப்பில் அசத்துகிறீர்கள். சினிமாவை மறுபடியும் தொடர்ந்தால் என்ன?’’


–ஸ்ருதியை கேட்டபோது...‘‘சின்னத்திரை என்னை நன்றாகவே வைத்திருக்கிறது. துளசி கேரக்டரிலும் ராஜி கேரக்டரிலும் என்னை பார்க்கும் ரசிகர்கள் வெளியிடங்களில் என்னை சந்திக்கும்போது காட்டும் நேசம் புதிது. குறிப்பாக பெண்கள் தங்கள் வீட்டுப்பெண்ணாகவே நினைக்கிறார்கள். இந்த அன்பு போதும். இனி மறந்தும் சினிமா பக்கம் எட்டிப் பார்ப்பதாக இல்லை. சூர்யா, விஜய் படங்களில் ஹீரோயினாக நடிக்க அழைப்பு வந்தாலும் கூட அந்த அழைப்புக்களை ஏற்பதாக இல்லை.’’


–ரொம்பத் தெளிவாகவே சொல்லும் ஸ்ருதி, வீட்டுக்கு ஒரே வாரிசு.



நன்றி: தினதந்தி

aanaa
31st August 2013, 12:41 AM
சின்னத்திரைக்கு திரும்புகிறார் லைலா!



லைலாவை நினைவிருக்கிறதா? தமிழ் சினிமாவில் லூஸ் ஹீரோயின் என்று பெயர் வாங்கியவர். நந்தா, பிதாமகன், மவுனம் பேசியதே, தீனா, தில் படங்களில் அப்பாவி பெண்ணாக அவர் நடித்த கேரக்டர்களை அத்தனை எளிதில் மறக்க முடியாது நல்ல பீக்கில் இருக்கும்போதே 2006ம் ஆண்டு மெஹடின் என்பரை மேரேஜ் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். இப்போது இரண்டு குழந்தைக்கு தாய்.


சமீபத்தில்கூட லைலா மீண்டும் நடிக்கப்போகிறார். படம் தயாரிக்கப்போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதனை லைலா மறுத்தார். இப்போது அவர் சின்னத்திரைக்கு வருகிறார். ராஜ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் டான்சர் என்ற நடன நிகழ்ச்சியை காம்பியரிங் பண்ணப்போகிறார். இதற்கான ஒத்திகையில் பங்கேற்க சென்னை

aanaa
6th October 2013, 10:47 PM
சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியுள்ளார்.
மக்கள் டிவியில் விழித்தெழு தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ‘வாரம் ஒரு தலைப்பைக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் பாமரனும் தெரிந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது ‘விழித்தெழு தமிழா' நிகழ்ச்சி. மின்சாரம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக் காட்டியும் அதற்கான தீர்வுகளையும் உங்கள் கண் முன்னே காட்சிப்படுத்துகிறார்கள். எதையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளாமல், பிரச்சினைகளுக்கான காரணிகளை அலசி ஆராய்வதோடு, துறை சார்ந்த வல்லுனர்களே இந்நிகழ்ச்சியின் வாயிலாக விளக்கமளிக்கின்றனர். மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 7.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
6th October 2013, 10:54 PM
ஹீரோயின் ஆக விரும்பும் டிவி நடிகை ஆனந்தி



சினிமாவில் நடித்து பிரபலமானவர்கள் ஒரு கட்டத்திற்குப் பின்னர் சின்னத்திரையை தேர்ந்தெடுப்பார்கள். அதேசமயம் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக அறிமுகம் ஆனவர்களின் கனவு சினிமாவாகத்தான் இருக்கும். சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி நடனஷோ, ஆங்கர் என பன்முகத்திறமை காட்டி வரும் ஆனந்தி தற்போது சினிமாவில் ஹீரோயினாக டூயட் பாடி வருகிறார். ஜோடி நிகழ்ச்சியில் நாகேந்திர பிரசாத்துடன் பிரச்சினை அதனால் விலகல், சீரியலுக்கு பிரேக் என்றெல்லாம் பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆனந்தியே இதைப்பற்றி பிரபல வார இதழ் ஒன்றில் பேசியுள்ளார் படியுங்களேன்.


கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம் ஆடியிருக்கிறேன். விஜய் டிவியில் ஜோடி ரியாலிட்டி ஷோவில் நாகேந்திர பிரசாத்துடன் நடனம் ஆடியிருக்கிறேன்.


காதல் எல்லாம் இல்லை நாகேந்திரபிரசாத்துடன் நடனம் ஆடும் போது பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் எலிமினேட் ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டதாக கூறும் ஆனந்தி எங்களுக்கு இடையே காதல் என்றெல்லாம் கூறப்படுவது சுத்தப் பொய் என்கிறார்.


சீரியலுக்கு பிரேக் கனாக்காணும் காலங்கள், கார்த்திகைப் பெண்கள் என இரண்டு சீரியலோடு தற்போது பிரேக் சொல்லிவிட்டார் ஆனந்தி, காரணம் இப்போது சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருப்பதுதானாம்.


பிரபல காமெடி நடிகர் பிளாக் பாண்டியுடன் கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்த ஆனந்தி தற்போது மறுபக்கம் படத்தில் அதே பிளாக் பாண்டியுடன் நடித்து வருகிறார்.


டான்ஸ் தமிழா டான்ஸ் ஜீ தமிழ் சேனலில் சிம்ரனின் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார் ஆனந்தி. நடன நிகழ்ச்சியில் ஆடிய அனுபவம்தான் இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது என்கிறார்.

aanaa
22nd December 2013, 05:52 AM
நான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் இல்லை: நடிகை சங்கீதா



சன்டிவியில் சன் குடும்பம் நிகழ்ச்சியில் ஸ்டிரிக்ட் நடுவராக மார்க் போட்ட நடிகை சங்கீதா. புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியின் கலகலப்பான தொகுப்பாளினி. ஜாலியும், கேலியுமாக நடிகர்களை பேட்டி எடுக்கும் சங்கீதா இதுநாள்வரை அவர் மீது இருந்த இமேஜை உடைத்திருக்கிறார். நான் ரொம்ப ஸ்ரிக்ட் ஆபிசர் இல்லை. சிநேகமானவள் என்கிறார். நடிகையாக, நடுவராக இருந்த தன்னை நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி மாற்றிவிட்டது என்கிறார் சங்கீதா.

aanaa
22nd December 2013, 05:54 AM
2013ல் சின்னத்திரைக்கு வந்த சினேகா, லைலா, நீனு, சங்கீதா....அபிராமி!






சினிமாவில் 2013ம் ஆண்டு பல புதுமுக நடிகைகள் வந்துள்ளனர். அதேபோல சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகைகள் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றுள்ளனர். சீரியலுக்கும், டிவிக்கு நான் வரவே மாட்டேன் என்று கூறிய நடிகைகள் எல்லாம் ஒரு எபிசோடுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் என்று கூறிய உடனே ஓகே சொல்லிவிட்டனர். புது சேனல்களில் நடிகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், டி.ஆர்.பி அதிகரிக்கிறது என்று கருதுவதால் பிரபல சேனல்களிலும் நடுவர்களாக, சீரியல்களில் நடிக்கவும், நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போட்டி போட்டுக்கொண்டு நடிகைகளை அறிமுகம் செய்கின்றனர். புன்னகை இளவரசி தொடங்கி காந்தக்கண்ணழகி வரை 2013ம் ஆண்டில் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் அதிகம்.

R.Latha
8th May 2014, 03:29 PM
hello Aaana where r u? these days u didnt post anything. r u ok?

aanaa
4th June 2014, 11:17 PM
hello Aaana where r u? these days u didnt post anything. r u ok?
on holiday for 3 months. Thanks for the concern

aanaa
6th June 2014, 05:41 AM
சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரைத் தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார்.


அது இது எது நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா.பா.கா ஆனந்த் தான் அவர்.


இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.


'வானவராயன் வல்லவராயன்' படத்தில் கிருஷ்ணா வானவராயனாக நடிக்கிறார்.


கிருஷ்ணாவின் தம்பி வல்லவராயனாக மா.கா.பா. ஆனந்த் நடிக்கிறார்.


இதையடுத்து, 'பஞ்சுமிட்டாய்' என்ற படத்தில் ஹீரோவாக தனி ஆவர்தனம் செய்கிறார் மா.கா.பா. ஆனந்த்.


இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஒருவர் அறிமுகம் ஆகிறார்.


புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தில் வித்யூலேகா, பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.


இயக்குனர் பாண்டிராஜ் மா.கா.பாவை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தாராம். அதற்குள் பல வாய்ப்புகள் வந்தனவாம்.


பிடித்த கதையை செலக்ட் செய்ததில் , இப்போது இரண்டு படங்களில் நடிக்கிறார் மா.கா.பா.ஆனந்த்.



நன்றி: விகடன்

aanaa
6th June 2014, 05:52 AM
மீண்டும் டி.வி., சீரியலில் நடிக்கிறார் எஸ்.பி.பி.சரண்!1




பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண். இவரும் பாடகர்தான். சில படங்களிலும் நடித்துள்ளார். சென்னை 28, குங்குமபூவும் கொஞ்சும் புறாவும், ஆரண்ய காண்டம் உள்பட சில படங்களை தயாரித்தார். சினிமா வாய்ப்பில்லாத காலகட்டத்தில் சரண் ஊஞ்சல், அண்ணாமலை தொடர்களில் நடித்தார். அதன்பிறகு டி.வியில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தீவிர படத் தயாரிப்பில் இறங்கினார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.


வருகிற 23ந் தேதி முதல் சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சிரீயலில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரேணுகா, காயத்திரி நடிக்கிறார்கள். நிறைய புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். 300 எபிசோட்களை கொண்ட இந்த தொடரை பிரபு இயக்குகிறார். தற்போது படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.


"இந்த தொடருக்கு 33 வயது நடுத்தர வயது இளைஞர் தேவைப்பட்டார். சரணை கேட்டபோது தயங்காமல் ஒத்துக் கொண்டார். இரண்டு படங்களை தயாரித்து வரும் அவர், அதற்கிடையில் இந்த தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்" என்கிறார் இயக்குனர் பிரபு.





நன்றி: தினமலர்

aanaa
7th June 2014, 07:38 PM
இதுவரை சீரியல்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் தனது திறமையைக் காட்டி வந்த ஆனந்தி, தற்போது வெள்ளித்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார். எப்போதும் சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூடியூப்பில் லைக்குகளை அள்ளுகிறது. ஆட்டம் தந்த புகழால் இப்போது சினிமா நடிகையாகிவிட்டார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி ஆனந்தியிடம் கேட்டபோது, " சின்ன வயசிலிருந்தே நடனம்தான் எனக்கு உயிர். ஆனாலும் முதலில் சின்னத்திரையில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7 இல் ஆட ஆரம்பித்தபிறகு என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது. எனது ஆட்டத்தை பார்த்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எப்படியோ என் போன்நம்பரை பிடித்து பாராட்டி பேசினார்கள். இயக்குனர் மகிழ்திருமேனியும் எனது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நடிக்க அழைத்தார். மீகாமன் படத்தில் ஹன்சிகாவுக்கு அடுத்து முக்கியமான கேரக்டர். இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதனால் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன். சீசன் 7ல் மட்டும் ஆடுவேன். மற்றபடி இனி சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம்" என்று கூறியுள்ளார் ஆனந்தி.





நன்றி: oneindia

aanaa
7th June 2014, 07:42 PM
வில்லியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்…
http://tamil.oneindia.in/img/2014/04/28-dharshini--1-600.jpg


சீரியல் நடிகை தர்ஷினி சீரியல்களில் அமைதியான பெண்ணாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பதுதான் மிகவும் கஷ்டமானது என்று கூறி வருகிறார் லேட்டஸ்ட் வில்லி தர்ஷினி. சன் டிவியில் வெள்ளைத் தாமரையில் கல்லூரி பெண்ணாக அறிமுகமானவர் தர்ஷினி. நாதஸ்வரம் தொடரில் தங்கையாக நடிக்கிறார். ஜெயாடிவியில் காலபைரவன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது தேவதை தொடரில் "வில்லியாக நடிக்கிறார். வில்லியாக நடிப்பது பற்றி எல்லோரும் விசாரிக்கிறார்கள். அதற்காக நான் வெட்டகப்படவில்லை" என்று கூறியுள்ளார். அழவைக்கும் நடிப்பு நாதஸ்வரம், காலபைரவன் தொடரில் நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். அமைதியான பெண்ணாகவும், பிறரை அழ வைக்கிற பெண்ணாகவும் நடிக்கிறேன். வில்லி கதாபாத்திரம் இதைப் பற்றி யாருமே கேட்கவில்லை. ஆனால் தேவதை தொடரில் வில்லியாக நடிப்பது பற்றி மட்டும் தவறாமல் கேட்கிறார்கள். எனக்கு சந்தோசம்தான் பார்க்கிறதுக்கு அமைதியான பொண்ணா, அழகான பொண்ணா இருக்கிறீங்க, நீங்க ஏன் வில்லியா நடிக்கிறீங்க என்கிறார்கள். நீயா அப்படி நடிக்கிறாய் என்று ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள். இது, எனக்கு சந்தோசம்தான். ரொம்ப கஷ்டம் சீரியலில் வில்லியாக நடிப்பது எவ்ளோ கஷ்டம் என்பது பலருக்குத் தெரியாது. ஷாட் இல்லாத நேரத்துல அப்படி சிரிச்சு பேசிக்கிட்டிருப்போம் ஷாட்ல முறைக்கணும். இது அடுத்தடுத்த நிமிடத்துல நடக்கும். ரொம்ப பிடிச்சிருக்கு ஆனாலும் வில்லியாக நடிப்பது ரொம்ப பிடிச்சிருக்கு. தேவதையில் திட்டினாலும், நாதஸ்வரத்தில் பாராட்டுறாங்க. இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறுகிறார் தர்ஷினி.



நன்றி: oneindia

aanaa
7th June 2014, 07:44 PM
தங்கை நடிகை ஆனார் ஆபீஸ் மதுலிமா!3




ஆபீஸ் தொடர் மூலம் ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி வைத்திருப்பவர் மதுலிமா. யாழ்ப்பாணத்து பொண்ணாக இருந்தாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் அந்த சேனலில் மார்டன் உடை அணிய தடை என்பதாலேயே அங்கிருந்து எஸ்கேப் ஆகி விஜய் டி.வியின் ஆபீஸ் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.


மதுலிமாவுக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. ஜெயம்ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவின் தங்கையாக நடிக்கிறார். விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக நடிக்கிறார். "தற்போது தங்கை வேடங்களில் நடித்தாலும் என் லட்சியம் எல்லாம் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதுதான்.


சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் செல்கிறவர்கள் ஆரம்பத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்துதானே பெரிய இடத்தை பிடிக்கிறார்கள். நானும் பிடிப்பேன்" என்கிறார் மதுலிமா.



நன்றி: தினமலர்

aanaa
19th June 2014, 08:13 PM
டெல்லி: சதாப்தி ரயிலில் பயணிப்போர் கிரிக்கெட் போட்டிகளையும், தங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகளையும் இனிமேல் லைவ்-ஆக கண்டு ரசிக்க முடியும். ரயிலில் டிவி மாட்டியிருப்பது என்னவோ பழைய செய்திதான். ஆனால் ஒவ்வொரு பயணியின் இருக்கைக்கு முன்பும் தனித்தனியாக டிவி மாட்டப்பட உள்ளது புதுசு. ஆம்.. இந்திய ரயில்வே அமைச்சகம் அதுபோன்ற ஒரு வசதியை விரைவில் சதாப்தி ரயில்களில் அளிக்க உள்ளது. இதன்படி ஒவ்வொரு இருக்கையின் பின்புறத்திலும் ஒரு எல்சிடி டிவி பொருத்தப்படும். இதன் மூலம் கைக்கு எட்டிய தூரத்தில் தொலைக்காட்சியை பார்ப்பதுடன் பயணி தனக்கு தேவையான சேனல்களை மாற்றி வைத்து பார்த்துக்கொள்ள முடியும். முதல்கட்டமாக 80 டிவி சேனல்களை வழங்க உள்ளது ரயில்வே நிர்வாகம். டிவியிலிருந்து வெளியாகும் ஒலி பக்கத்து சீட்டில் இருப்பவருக்கு தொல்லை தராமல் இருக்க ஹைட்போன்களும் தொலைக்காட்சி பெட்டியுடன் இணைக்கப்பட்டிருக்குமாம். கல்கா, லக்னோ, அமிருதசரஸ், கான்பூர், அஜ்மீர், போபால் மற்றும் டேராடூன் சதாப்தி ரயில்களில் முதல்கட்டமாக இந்த வசதி வர உள்ளது. இம்மாதம் 29ம்தேதிக்குள் இத்திட்டம் இறுதிவடிவம் பெறும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பெங்களூரில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கப்படும் வோல்வோ பஸ்களில் இதுபோன்ற வசதி உள்ளது. ரயிலில் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.
.
நன்றி: Oneindia

aanaa
19th June 2014, 08:26 PM
சினிமாவை விட சின்னத்திரையில் சந்தோஷமாக இருக்கிறேன்: சங்கவி சொல்கிறார்




அமராவதி படத்தில் அஜீத்துடன் நடித்தவர் சங்கவி, அதன் பிறகு விஜய்யுடன் நான்கு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட சங்கவி, இப்போது ஆஹா என்ன பொருத்தம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


தனது சின்னத்திரை அனுபவம் பற்றி இப்படி கூறுகிறார்: சினிமாவில் நிறைய சாதித்து விட்டேன். இத்தனை வருடத்துக்கு பிறகும் செலிபிரிட்டியாக இருக்கிறதே பெரிய விஷயம். பெரிய ஹீரோக்களுடன் நடித்து விட்டு சின்னத்திரைக்கு வந்தது பற்றி நான் கவலைப்படவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் சினிமாவை விட சின்னத்திரையில் சந்தோஷமாகவே இருக்கிறேன். எங்கே வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக்கணுங்றது என்னோட பாலிசி. அதைத்தான் செய்கிறேன். சினிமாவில் நடிகையாகத்தான் இருந்தேன். சின்னத்திரையில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று அவுங்க வீட்டு பொண்ணாயிட்டேன். இந்த அனுபவம் புதுசா இருக்கு.


சினிமாவுல டைரக்டர் கொடுக்கிற வசனத்தை மனப்பாடம் பண்ணி பேசிடலாம் அது ரொம்ப எளிது. ஆனால் டி.வி ஷோல அப்படி பேச முடியாது. எதிர்ல இருக்கிறவர் என்ன பேசுவார்னு நமக்குத் தெரியாது. அவுங்க எது பேசினாலும் அதுக்கு பதில் பேசி நாம நிக்கணும். இது சவாலான விஷயம் டைமிங் சென்ஸ் இல்லேன்னா டி.வியில பேட்டிகூட கொடுக்க முடியாது.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_140617145559000000.jpg
சினிமால மீண்டும் நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை. நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம்தான். ஆனால் இப்போ உள்ள டைரக்டர்கள் புதுப்புது ஹீரோயின்களைத்தானே தேடுறாங்க. என்கிறார் சங்கவி.





நன்றி: தினமலர்

aanaa
15th July 2014, 11:19 PM
34 வருடத்துக்கு பின் ஒரு தலை ராகம் படக்குழுவினர் உருக்கமான சந்திப்பு
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Jul/16452505-0b46-4ea6-aeec-2c7d021e8f5b_S_secvpf.gif


டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது.


இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில் இடம் பெற்ற ‘நான் ஒரு ராசி இல்லா ராஜா’, ‘வாசமில்லா மலர் இது’, ‘இது குழந்தைபாடும் தாலாட்டு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’ உள்ளிட்ட பாடல்கள் பட்டி, தொட்டியெங்கும் கலக்கின. காதலர்களின் தேசிய கீதங்களாக இவை அமைந்தன.


இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா வடபழனி ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இதில் ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்து இருந்தார்.


‘ஒரு தலை ராக’த்தில் கதாநாயகியாக நடித்து இருந்த ரூபா ஐதராபாத்தில் இருந்து வந்து இருந்தார். தும்புவாக நடித்த கைலாஷ் கேரளாவில் இருந்து வந்து இருந்தார். ஒருவருக்கொருவர் கைகளை பிடித்தபடி கண்ணீர் மல்க நலம் விசாரித்தனர்.


விழாவில் டி.ராஜேந்தர் பேசியதாவது:– ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினரை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் படித்த கல்லூரியிலேயே இந்த படத்தை எடுத்தோம். மேகத்தோடு மோதாத காற்று மாதிரி அப்போது காதல் இருந்தது. ஆனால் இப்போதைய காதல்கள் மேக்கப், பிக்கப், பேக்கப் என்பது போல் ஆகிவிட்டது. காலையில் ஒரு பெண்ணை பார்க்கிறான். அன்று மேட்னி ஷோவுக்கே பிக்கப் பண்ணுகிறான். இரவில் எல்லாம் முடித்து விட்டு பேக்கப் ஆகிவிடுகிறான்.


‘ஒருதலை ராகம்’ படத்தில் ரூபா நாயகனுடன் கிளைமாக்சில் தான் பேசுவார். அப்போது அவன் உயிருடன் இருக்க மாட்டான். காதலில் அப்போது ஜீவன் இருந்தது. அந்த படத்துக்கு முதலில் தடை போடும் மேகங்கள் என்று தான் தலைப்பு வைத்தேன். பிறகு அதை மாற்றினோம்.


சந்திரசேகர் நடித்த கேரக்டரில் என்னை நடிக்கும்படி இப்ராகிம் நிர்பந்தித்தார். ஆனால் அந்த கேரக்டரில் சிகரெட் பிடிக்க வேண்டி இருந்ததால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இன்று வரை சிகரெட்டை தொட்டது இல்லை. 34 வருடம் கழித்து இந்த சந்திப்பு நிகழ்கிறது.


ஆனால் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த உஷாவை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தோடு சேர்ந்து வாழ்வது போன்ற உணர்விலேயே எப்போதும் இருக்கிறேன்.


இவ்வாறு அவர் பேசினார்.


ரூபா பேசும் போது, ‘ஒரு தலை ராகம்’ படத்தில் எனக்கு அதிகம் வசனமே இல்லை. அதில் நாயகனாக நடித்த சங்கர் படம் இயக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் பணியாற்றியவர்களை மீண்டும் சந்திப்பதில் சந்தோஷப்படுகிறேன் என்றார்.


பிறகு ‘மணல் நகரம்’ பாடல்கள் வெளியிடப்பட்டது. இதில் நாயகனாக நடித்த பிரஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



நன்றி: மாலைமலர்

aanaa
15th July 2014, 11:24 PM
தமிழ் சீரியலில் நடிக்கிறார் அமலா!




1986ம் ஆண்டு மைதிலி என்னை காதலி படத்தில் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அமலா. மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம், அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா, ஜீவா, மாப்பிள்ளை உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களில் நடித்தபோது நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அமலாவின் மகன் அகிலும் நடிக்க வந்து விட்டார்.


விலங்குளை பாதுகாக்கும் புளூகிராஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றி வரும் அமலா 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். சினிமாவில் அல்ல சீரியலில். அவர் நடிக்கும் சீரியல் பற்றி இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை என்றாலும். அதன் படிப்பிடிப்புகள் சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.


"கதை எனக்கு பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னை எனக்கு மிகவும்பிடித்த நகரம். நடிக்கும் சீரியல் பற்றி தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும். சினிமாவில் மீண்டும் நடிப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று அமலா தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
15th July 2014, 11:25 PM
விளம்பர படங்களில் ஆர்வம் காட்டும் வாணி போஜன்




தெய்வ மகள் தொடரின் நாயகி வாணி போஜன் ஒரு மூலிகை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் விளம்பர படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.


இதுபற்றி அவர் கூறியதாவது: படிச்சு முடிச்சிட்டு ஏர்வேசில் வேலை பார்த்தபோது விளம்பர படங்களில் நடிக்க ஆசை இருந்தது. வாய்ப்புகளும் நிறைய வந்தது. சில நிமிடங்கள், விநாடிகள் உள்ள விளம்பர படமாக இருந்தாலும் அடிக்கடி ஒளிபரப்பாவதால் மக்கள் மனங்களில் எளிதாக இடம் பிடித்து விட முடியும். நான் நடித்த விளம்பர படங்கள் மூலம்தான் தெய்வ மகள் வாய்ப்பும் கிடைத்தது. சீரியலில் நடித்தாலும் விளம்பர படங்களை விடுவதாக இல்லை. அதுல நடிக்கிற சுகமே தனிதான். என்கிறார் வாணி போஜன்.



நன்றி: தினமலர்

aanaa
15th July 2014, 11:26 PM
செய்தி வாசிப்பாளரான நடிகை4


மெட்டிஒலி, கோலங்கள், மேகலா, உதிரிப்பூக்கள் போன்ற தொடர்களில் நடித்தவர் ரேவதி பிரியா. விதவிதமான கேரக்டர்களில் நடித்த ரேவதி பிரியாவை காணவில்லை என்று பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் சின்னத்திரையை விட்டு விலகவே இல்லை. செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். உற்றுப் பார்த்தால்தான் அது ரேவதி பிரியா என்பதே தெரியவரும். அந்த அளவிற்கு அவரிடம் மாற்றங்கள்.
இதுபற்றி ரேவதி பிரியா கூறியதாவது: சீரியலின் மூலம் தமிழ் நாட்டில் உள்ள எல்லா குடும்பங்களிலும் ஒருத்தியாகிவிட்டேன். ஆனாலும் நான் சின்னத்திரைக்கு வர விரும்பியது ஒரு ஜர்னலிஸ்ட்டாகத்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகையானேன். நான் விரும்பிய வாய்ப்பு அமைந்தபோது செய்தி வாசிப்பாளராக என்னை மாற்றிக் கொண்டேன். ஆனாலும் தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் வந்தது. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாமே என்ற முடிவு செய்துதான் முழுநேர செய்தி வாசிப்பாளராகிவிட்டேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செய்தி வாசித்து வருகிறேன். அதனால் அன்றாட நிலவரம் எனக்கு அத்துப்படி, அரசியல் முதல் தங்கம் விலை விரை விரல் நுனியில் வைத்திருக்கிறேன். இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக செய்திகளின் பின்னணியில் உள்ள நிகழ்வுகளை தொகுத்து நிகழ்ச்சியாக வழங்கும் முயற்சியில் இறங்குகிறேன். சீரியல்களில் நடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் எதுவும் செய்யவில்லை. நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் பரிசீலனை செய்வேன். என்கிறார் ரேவதி பிரியா.



நன்றி: தினமலர்

aanaa
15th July 2014, 11:27 PM
காயத்ரி ரிட்டர்ன்ஸ்!




காயத்ரியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் நாட்டு மக்களையெல்லாம் ஒரே நாளில் அழவைத்து தெருவெங்கும் கண்ணீர் வெள்ளத்தை ஓட வைத்த மெட்டிஒலி சீரியலின் சரோ தான் காயத்ரி. மளமளவென சீரியல்களில் நடித்தவர் திடீரென விலகிச் சென்றார். கல்யாணிதான் அவர் கடைசியாக நடித்த சீரியல். இப்போது மீண்டும் நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.


அதுபற்றி அவர் பகிர்ந்து கொண்டவை... ஒரு சீரியல்ல நடிக்கும்போது இன்னொரு சீரியல்ல நடிக்க கூடாதுங்ற பாலிசி உடையவள் நான். கடைசியா நடிச்ச கல்யாணிக்கு பிறகு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. எந்த கதையுமே பிடிக்கல. நடிக்க வாய்ப்பே இல்லாம அழுது வடியுற சீரியல். நல்லா அழுவுறதுதான் நடிப்புன்னு வந்தாங்க வேண்டாமுன்னு சொல்லிட்டேன். சீரியல்ல நடிச்ச காலத்துல பேமிலியை ரொம்ப மிஸ் பண்ணினேன். இனி பேமிலிக்கு டயம் ஒதுக்குவோம்னு முடிவு பண்ணி சீரியல்லேருந்து விலகி இருந்தேன்.


ரொம்ப நாளைக்கு பிறகு வந்ததுதான் நெஞ்சத்தை கிள்ளாதே 30 வயதை தாண்டினவங்களோட காதல் கதை. அழவைக்கிறதுக்கோ, அனுதாபப்பட வைக்கிறதுக்கோ தேவையே இல்லாத அழகான கதை. எனக்கும் முப்பது வயதை தாண்டிட்டதால உடனே ஒத்துக்கிட்டேன்.


இனி கேப் விடாமல் நல்ல சீரியல்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நல்ல சினிமா வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். சும்மா பத்தோட ஒண்ணா இல்லாம நல்ல கேரக்டரா வந்தால் நடிப்பேன். சினிமாவுக்கு நான் புதிதில்லை. அஜீத்துக்கு ஜோடியா நடிச்சிருக்கேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா. ராஜாவின் பார்வையிலேங்ற படத்துல விஜய்யும், அஜீத்தும் சேர்ந்து நடிச்சாங்க. அதுல நான் அஜீத்துக்கு ஜோடி. அப்போ எனக்கு வயது 15. என்கிறார் காயத்ரி.



நன்றி: தினமலர்

aanaa
15th July 2014, 11:29 PM
சினிமா பின்னணி பாடகியாகவேண்டும்: ஸ்ரீரஞ்சனியின் ஆசை


புதுயுகம் தொலைக்காட்சியில் கேள்வி பாதி கிண்டல் பாதி, ஆர் யு தி அப்பா டக்கர் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. சென்னையில் எலெக்ட்ரானிக் மீடியா படித்து முடித்து விட்டு எப்.எம்.மில் ஆர்.ஜேவாக பணியை துவக்கினார். இந்தி, கன்னட எப்.எம்.களில் ரசிகர்களை கலாய்த்து விட்டு இப்போது புதுயுகம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகி விட்டார். ஆனாலும் சினிமா பாடகியாக வேண்டும் என்பதுதான் ஸ்ரீரஞ்சனியின் விருப்பம்.


தனது ஆசை பற்றி அவர் கூறியிருப்பதாவது: சின்ன வயதிலிருந்தே பாட்டு பாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று முறையாக சங்கீதம் படிச்சிருக்கேன். மேடைகளில், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறேன் எப்.எம் ரேடியோவில் புரமோசன் பாடல்கள் பாடியிருக்கிறேன். அதில் ஒன்றை கேட்டுவிட்டுத்தான் கோலிசோடா படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் நிறைய பாடல்கள் பாட வேண்டும் என்பது ஆசை. சின்னத்திரையில் இசை தொடர்பான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்பதும் எனது ஆசை என்கிறார் ஸ்ரீரஞ்சனி.



நன்றி: தினமலர்

aanaa
15th July 2014, 11:30 PM
செந்தில்-ஸ்ரீஜா ரகசிய திருமணம்: சீரியல் ஜோடி வாழ்க்கையிலும் இணைந்தது5


சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர்கள் நடிகர் செந்திலும், நடிகை ஸ்ரீஜாவும். அதற்கு முன்பே இருவரும் மதுரை என்ற தொடரில் நடித்தார்கள். அந்த தொடரின் கேரக்டர் பெயர்தான் சரவணன், மீனாட்சி. அதில் இருவரின் காதல் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்த தொடருக்கு சரவணன் மீனாட்சி என்றே பெயர் வைத்தனர்.


சரவணன் மீனாட்சி தொடரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருவரும் ரொமான்ஸ் பண்ணினார்கள். அதனால் இருவருக்குமே நிஜமான காதல் ஏற்பட்டது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். இதற்கிடையில் ஸ்ரீஜாவுக்கு பதில் இன்னொருவர் சரவணன் மீனாட்சியில் நடிக்க வந்தார். அவருக்கும் செந்திலுக்கும் காதல் என்ற செய்திகள் வந்தது. பின்னர் இருவரும் பிரிந்தார்கள்.


செந்தில் இப்போது திரைப்படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். அவர் நடித்த பப்பாளி என்ற படம் வருகிற 11ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் செந்திலும் ஸ்ரீஜாவும் ரகசிய திருமணம் செய்து கொண்ட செய்தியும் வெளியாகி இருக்கிறது. கடந்த 4ந் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. இதில் இருவரின் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நெருங்கிய நண்பர்களுக்குகூட அழைப்பில்லை. தற்போது இருவரும் கேரளாவில் உள்ள ஸ்ரீஜாவின் வீட்டில் இருக்கிறார்கள்.


"திருப்பதியில் திருமணத்தை முடித்து விட்டு கேரளாவுக்கு வந்து விட்டோம். பப்பாளி படம் ரிலீசாகுறதால அதுக்கு பிறகு முறைப்படி எல்லோருக்கும் சொல்ல முடிவு பண்ணியிருந்தோம். அதுக்குள்ள லீக் ஆயிடுச்சு" என்கிறார் செந்தில்



நன்றி: தினமலர்

aanaa
15th July 2014, 11:32 PM
ரசிகர்கள் திட்டினால் வெற்றிதான்: வீணா நாயர்


மலையாள நாட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகைகள் வருவதைப்போல சின்னத்திரைக்கும் நடிகைகள் வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் வீணா நாயர். தமிழில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கில் நந்தினி கேரக்டரில் நடித்தவர் வீணா நாயர். அதன் மூலம் இப்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். தென்றல் தொடரின் மிரட்டும் வில்லியான மாயா கேரக்டரில் நடிக்கிறார். நிஜத்தில் 25 வயதான வீணா 35 வயது மாயாவாக நடிக்கிறார்.


இதுபற்றி அவர் கூறியதாவது: மாயா கேரக்டரை பிடிச்சுதான் பண்றேன். அந்த கேரக்டரின் பவர்புல்லான வில்லித்தனம்தான் என்னை நடிக்க வைத்தது. தென்றல் பார்க்கும் எல்லா வீட்டிலும் தினமும் என்னை திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்னை திட்ட திட்ட நான் வெற்றி பெறுகிறேன் என்று பொருள். நான் நன்றாக நடிக்கிறேன் என்று பொருள்.


மலையாள தொடர்கள், தமிழ் தொடர்கள் இரண்டையும் இரு கண்ணாக நினைக்கிறேன். சீரியல் தவிர மலையாள படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்கிறேன். இதுதவிர நான் பரத நாட்டியத்தில் பட்டப்படிப்பு முடித்திருப்பதால் கோட்டயத்தில் நடன பள்ளி நடத்துகிறேன். நடிப்பு இல்லாத நேரத்தில் எனது நடன பள்ளிதான் என் கோவில் என்கிறார் வீணா.



நன்றி: தினமலர்

aanaa
30th July 2014, 11:36 PM
எம்.எஸ் விஸ்வநாதன், வைரமுத்துவுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் சாதனை படைத்தற்காக இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநானுக்கும், புத்தர் கலைக்குழு மணிவாணனுக்கும். இலக்கியத்துறையில் சாதனை படைத்தற்காக பாடலாசிரியர் வைரமுத்து, ஆர்.வெங்கடேசுஷ் ஆகியோருக்கும் தமிழன் விருது வழங்கியது.
அறிவியில்துறைக்காக சுப்பையா அருணன். டாக்டர் இந்திராஅருள்செல்வி ஆகியோருக்கும். சமு்க சேவைக்காக அரவிந்த் கண் மருத்துவணை டாக்டர் நாச்சியாருக்கும். டாக்டர் இளங்கோவிற்கும் வழங்கப்பட்டது.


தொழில் துறையில் சி.கே.ரங்காஜன்,ஆர்.ஜனநாதன் ஆகியோரும். விளையாட்டு துறையில் கிரி க்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும். வீராங்கணை தீபிகாவும் விருது பெற்றனர். சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரி வேந்தர். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைவர் சத்யநாராணயன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.



நன்றி: தினமலர்

aanaa
30th July 2014, 11:39 PM
ஹீரோயின் ஆனார் அஸ்ருதா


சொந்த பந்தம், உயிர்மை, சித்திரம் பேசுதடி தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அஸ்ருதா. தெகிடி படத்தில் ஜனனி அய்யரின் தோழியாகவும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் ஜெய்யின் முறைப்பெண்ணாகவும் நடித்தார். தற்போது கடல் தந்த காவியம் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார்.


இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்து வரும் தொடர்களில் நான் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் எனது கேரக்டர் முக்கியமானதாக இருக்கிறது. சீரியல்களில் எனது நடிப்பை பார்த்துதான் சினிமா வாய்ப்புகள் வந்தது. இப்போது கடல் தந்த காவியம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வடக்கன்குளம் மேரி மாதாவின் அற்புதங்களை சொல்லும் பக்திப் படம். இந்த படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானது நான் செய்த பாக்கியம். என்கிறார் அஸ்ருதா.



நன்றி: தினமலர்

aanaa
14th August 2014, 07:11 PM
சின்னத்திரையில் வளர்ந்து வரும் தொகுப்பாளினி சவுமியா. மற்ற தொகுப்பாளினிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் கையில் எப்போதும் மைக்குடன் இருப்பார்கள். இவர் மட்டும் கையில் கேமராவுடன் இருப்பார். சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதுதான் சவுமியாவின் லட்சியம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
"என்னோட அப்பா ரகுநாத் பெரிய போட்டோகிராபர். அவர் மாதிரியே போட்டோகிராபர் ஆகணுங்கறது என்னோட சைல்டுவுட் ஆம்பிசன். விசுவல் மீடியா படிச்சப்போ இண்டன்ஷிப்புக்காக டி.வி ஸ்டேஷன்களுக்கு போனேன். அந்த வேலை, ஸ்டைல் பிடித்ததால் படிச்சு முடிச்சிட்டு தொகுப்பாளியாக வந்துட்டேன். நிறைய சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க. அதுல எனக்கு விருப்பம் இல்லை.
உலகம் முழுக்க சுற்றி நிறைய படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அதை வைத்து ஒரு கண்காட்சி நடத்தணும். போட்டோகிராபி துறையில பெண்கள் ரொம்ப குறைவு அதை மாற்றி அதுல நிறைய சாதிக்கணும். சினிமால ஒளிப்பதிவாளராகி அதுலேயும் உசரத்தை தொடணும்" என்கிறார் சவுமியா.



நன்றி: தினமலர்

aanaa
14th August 2014, 07:12 PM
சவுகார் ஜானகி இடத்தை பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது: ரேகா சொல்கிறார்


தொடர்ச்சியாக சீரியல்களில் பல வேடங்களை போட்டுக் கொண்டிருந்த ரேகா. இடையில் காணாமல் போனர். சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் பிசியாகிவிட்டார். பாசமலர், மரகதவீணை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடிப்பிலும், தோற்றத்திலும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் சாயல் இருப்பதால் இவரை சின்னத்திரை சவுகார் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
"நான் வில்லியாக நடிக்கவில்லை. ஆனாலும் என்னுடைய கேரக்டர்கள் பெண்கள் திட்டுகிற கேரக்டர்களாகவே அமைந்து விடுகிறது. அடிக்கடி அழுது நடிப்பதால் சின்னத்திரை சவுகார் ஜானகி என்கிறார்கள். அவ்வளவு பெரிய ஜீனியசோடு என்னை ஒப்பிட்டு பேசுவது சந்தோஷமாக இருக்கிறது. 63 நாயன்மார்கள் தொடரில் சிவகாமியாக நடித்ததை பார்த்தவர்கள் திருநீலகண்டர் படத்தில் சவுகார் ஜானகி நடித்த மாதிரியே இருந்தது என்றார்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இடையில் எனது சொந்த பிரச்சினைகள் காரணமாக ஒதுங்கி இருந்தேன். இனி தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்துவேன். என்கிறார் ரேகா.





நன்றி: தினமலர்

aanaa
14th August 2014, 07:13 PM
ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்ததுதான் வாழ்க்கை - சந்தோஷியின் அனுபவம்!1




பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை, பெரிய திரையில் நடித்து வருகிறார் சந்தோஷி, தற்போது இளவரசி தொடரில் ஹீரோயினாகவும், 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையாராகவும் நடித்து வருகிறார். ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்கிறார் சந்தோஷி. இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது... அம்மு தொடர் மூலமாக அறிமுகமானேன் அப்போது எனக்கு 18 வயசுதான். அதற்கு பிறகு நிறைய தொடர்களில் நடித்தேன். ராதிகா மேடத்தின் அத்தனை தொடர்களிலும் நடித்தேன். திடீர்னு பிரண்ட்சுங்க சினிமா ஆசையை தூண்டி விட்டாங்க. ரொம்ப எதிர்பார்ப்போட பாபா படத்துல நடித்தேன். முதல் படமே சூப்பர் ஸ்டார் படம் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும்னு நினைச்சேன். படம் தோல்வி அடைந்ததால் சினிமா வாய்ப்பும் இல்லாமல் சீரியல் வாய்ப்பும் இல்லாமல் தவிச்சேன். இடையில் உன்னை சரணடைந்தேன், ஆசை ஆசையாய் படங்களில் தங்கை கேரக்டரில் நடிச்சேன். அதிலிருந்து தங்கை கேரக்டர்களாக குவிந்ததால் போரடித்து சினிமாவிலிருந்து ஒதுங்கினேன்.


பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராதிகா மேடம் கைகொடுத்தாங்க. இளவரசி தொடர் மீண்டும் லைஃப் கொடுத்தது. அதில் ஜோடியாக நடிச்சவரே நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானார். இப்போது 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையராக நடிக்கிறேன். மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏற்றமும், ஏமாற்றமும் நிறைஞ்சதுதான் வாழ்க்கை இரண்டையும் ஏத்துக்கிட்டு வாழ பழகணும் இது என்னோட அனுபவம். என்கிறார் சந்தோஷி.



நன்றி: தினமலர்

aanaa
14th August 2014, 07:14 PM
கடைசிவரை வில்லியாகத்தான் நடிப்பேன்: ரேகா குமார்1
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_140805163713000000.jpg


கன்னட சீரியல்களில் இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் ரேகா குமார். தெய்வமகள் தொடரில் காயத்திரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். "வில்லியாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வில்லியாகத்தான் நடிப்பேன்" என்கிறார் ரேகா குமார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடிகையாக அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். 75 படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு கன்னட சீரியல்களில் நடித்தேன். அதை பார்த்து விட்டு மலையாள சீரியல்களில் வாய்ப்பு வந்தது. அதை பார்த்து தெய்வதிருமகள் சீரியல் வந்தது. மூன்று மொழிகளிலும் வில்லி கேரக்டர் என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள்.


வாழ்க்கையில் பாசிட்டிவாக இருக்கும்போது சீரியலில் நெகட்டிவாக நடிக்கத்தான் பிடிச்சிருக்கு. வெளியில்போகும் அதோ போறா பாரு அவள் தான் காயத்திரி சண்டாளி என்று பெண்கள் திட்டுகிறார்கள். அது என் நடிப்புக்கு கிடைத்த வெற்றி.


பெங்களூர் சொந்த ஊர். மூன்று மொழிகளில் நடிப்பதால் திருவனந்தபுரம், சென்னை, பெங்களூருக்கு பறந்துகொண்டே இருக்கிறேன். தற்போது தமிழில் ராஜா ராஜேந்திரா என்ற படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவில் பவர்புல் வில்லியாக புகழ்பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளது. என்கிறார் ரேகாகுமார்.



நன்றி: தினமலர்

aanaa
29th August 2014, 03:37 AM
ஒரு நேரத்தில் ஒரு சீரியல்: சமீதாவின் பாலிசி


ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சீரியல்களில் நடிப்பது, தமிழ், மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடிப்பதுதான் இப்போது பேஷன். காரணம் கொட்டும் பணம். ஆனால் சமீதா ஒரு நேரத்தில் ஒரு சீரியல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது பிள்ளைநிலா சீரியலில் நடிக்கும் அவர் வேறு சில சீரியல் வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து விட்டார். காரணத்தை அவரே சொல்கிறார்....


"ஒரு சீரியலில் சிறிய கேரக்டரில் நடிப்பவர்கள் வேறு சீரியலில் நடிக்கலாம். ஆனால் நாயகியாக நடிக்கும்போது ஒரு சீரியலில் நடித்தால்தான் அதில் கவனம் செலுத்த முடியும். இன்னொரு சீரியலில் நடிக்கும்போது காஸ்ட்யூமில் தொடங்கி மேனரிசம், வசன உச்சரிப்பு, அத்தனையிலும் வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும். ஒரு கேரக்டரில் இருந்து வெளியே வந்து அடுத்த கேரக்டருக்குள் நுழைய வேண்டும். இது சில நாள் சூட்டிங் நடக்கும் சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சின்னத்திரையில் முடியாது. எனவே தான் ஒரே நேரத்தில் ஒரு சீரியல் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பிள்ளைநிலா முடிந்த பிறகு அடுத்த சீரியலில் நடிப்பேன். அதுவரைக்கும் பிள்ளை நிலாவில்தான் கவனம் செலுத்துவேன்" என்கிறார் சமீதா.



நன்றி: தினமலர்

aanaa
29th August 2014, 03:38 AM
கேமராவுக்கு பின்னால் பணியாற்ற விரும்பும் ரம்யா1




இது ஒரு காதல் கதை, மதுரை, சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் ரம்யா. பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய தலைமுறைகள் படத்தில் நடித்தார். தற்போது சாட் வித் ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து ரம்யா நடித்துள்ள ஆண்டாள் அழகர் தொடர் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால் ரம்யாவுக்கு நடிப்பதை விட போட்டோகிராபியில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.


இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சாட் வித் ரம்யா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலதரப்பட்ட மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு நல்ல வழிகாட்டும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி தருகிறது. எனக்கு போரடித்தாலோ, அல்லது ஆடியன்சுக்கு போரடித்தாலோ நிகழ்ச்சியிலிருந்து விலகிவிடுவேன்.


என் கணவர் மாடலிங் போட்டோகிராபர். அவரைப்போலவே எனக்கும் போட்டோகிராபராக, கேமராஉமனாக ஆசை. இதற்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த துறையில் அப்டேட் செய்து வருகிறேன். ஒரு நல்ல போட்டோகிராபராக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. கேமராவுக்கு முன்னால் இருப்பதை விட பின்னால் இருந்து நிறைய சாதிக்க ஆசை இருக்கிறது. விரைவில் நடக்கும் என்கிறார் ரம்யா.



நன்றி: தினமலர்

aanaa
29th August 2014, 03:39 AM
மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் நீலிமா ராணி!




தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்த நீலிமா ராணி. மெட்டி ஒலி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். கோலங்கள், தென்றல், செல்லமே ஆகிய தொடர்களில் நடித்தார். இடையில் இதய திருடன், மொழி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல படங்களில் ஹீரோயின்களின் தோழியாக நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சின்னத்திரை, பெரிய திரைக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கினார்.


பின்னர் திடீரென்னு உடம்மை ஸ்லிம்மாக்கி ஹீரோயினாக நடிக்கப்போகிறேன் என்று வந்தார். வந்தவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் படங்களில் கேரக்டர் ரோல்கள்தான் கிடைத்தது. இப்போது அமளி துமளி, இருவர் உள்ளம், வாலிபராஜா படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி விட்டார் நீலிமா ராணி. இதுபற்றி நீலிமாராணி கூறியிருப்பதாவது: ராதிகா மேடம் அழைத்ததால் சின்னத்திரைக்கு மீண்டும் வந்திருக்கிறேன். காரணம் நான் சின்னத்திரையில் பெரிய இடத்தை பிடித்ததற்கு அவர் கொடுத்த வாய்ப்புகள்தான் காரணம். நான் இதுவரை சீரியல்களில் வில்லியாகத்தான் நடித்திருக்கிறேன். முதன் முறையாக பாசிட்டிவான கேரக்டரில் நடிக்கிறேன். ஒன்றை தொலைத்து விட்டு அதை தேடி அலையும் பெண் கேரக்டர். என்ன தொலைத்தேன். தொலைத்ததை கண்டுபிடித்தேனா என்பதை அடுத்து வரும் எபிசோட்களில் தெரிய வரும். சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் நீலிமா.



நன்றி: தினமலர்

aanaa
8th September 2014, 05:34 AM
மீண்டும் தொகுப்பாளி ஆனார் மோனிகா


அரை மணி நேர செய்தியில் ஒரு நமிட வானிலை அறிவிப்பாளராக அறிமுகமானவர் மோனிகா. அவரின் குழந்தை தனமான முகமும், மழலை உச்சரிப்பும் ஒரு காலத்தில் தனக்கும் இப்படி ஒரு குழந்தை இருக்ககூடாது என்று பெற்றோர்களை ஏங்க வைத்தது. அதன் பிறகு மற்ற நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளியான மோனிகா, திரைப்பட விழாக்களுக்கும் தொகுப்பாளினி ஆனார். குடும்ப பாங்கான தோற்றத்தால் தொகுப்பாளினி வாய்ப்புகள் குறைந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.


நடிப்பதில்லை என்ற பாலிசி வைத்திருந்த மோனிகா வேறு வழியில்லாமல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். காமெடி காலனி, செந்தூரபூவே தொடர்களில் நடித்தார். அதன் பிறகு உதவி இயக்குனர் ஹரிராவை திருணம் செய்து கொண்டு செட்டிலானர். சில வருடங்கள் சின்னத்திரைக்கு இடைவெளி விட்டவர். சமீப காலமாக சினிமா விழாக்களை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது தெய்வம் தந்த வீடு தொடர் மூலம் தனது நடிப்பு பயணத்தையும் தொடங்கி விட்டார்.


புதிதாக தொடங்கப்பட்ட சேனலில் சா பூ த்ரீ என்ற குழந்தைகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக மீண்டும் ஆகியிருக்கிறார். "நான் சீரியலில் நடித்தாலும் என்னை எல்லோரும் தொகுப்பாளியாகத்தான் பார்க்கிறார்கள். அதில் எனக்கு சந்தோஷம். தொகுப்பாளினியாக இருப்பது அந்த நிகழ்ச்சியின் ராணியாக இருப்பது போன்ற சுகத்தை தரும். நானும் ஒரு தாயாகிவிட்ட சூழ்நிலையில் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்த கிடைத்த வாய்ப்பு இறைவன் கொடுத்தது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினி ஆகியிருப்பது இழந்தை மீண்டும் பெற்றது மாதிரி இருக்கிறது" என்கிறார் மோனிகா


நன்றி: தினமலர்

aanaa
8th September 2014, 05:36 AM
கல்யாணி ரிட்டர்ன்
அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ப்ரணிதா. மறந்தேன் மெய்மறந்தேன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். கத்திகப்பல், பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00, இளம்புயல் படங்களில் நடித்தார். சினிமா அவருக்கு சரிப்பட்டு வரவில்லை டி.வி பக்கம் வந்துவிட்டார். கல்யாணி என்ற பெயரில் பீச் கேர்ள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சில சீரியல்களிலும் நடித்தார்.
அதன் பின்னர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலம் சின்னத்திரையை விட்டு விலகி இருந்த கல்யாணி இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் பீச் கேர்ள் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்.
"பீச் கேர்ள் என் வாழ்வின் ஒரு அங்கம். புதிய நிகழ்ச்சிக்கான 20 எபிசோட்கள் படமாக்கப்பட்டு விட்டது. முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் மீண்டும் தொடங்குமாறு ரசிகர்களும், விளம்பரதாரர்களும் வற்புறுத்த இப்போது மீண்டும் தொடங்கி விட்டோம். இந்த முறை என்னுடன் ரெபேக்காவும் இணைந்து தொகுத்து வழங்குகிறார். திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக செல்கிறது" என்கிறார் கல்யாணி..



நன்றி: தினமலர்

aanaa
13th September 2014, 10:49 PM
சரவணன் மீனாட்சியிலிருந்து விலகியது ஏன்? இர்பான் விளக்கம்




கனா காணும் காலங்கள் சீரியலில் பள்ளி மாணவராக அறிமுகமானவர் இர்பான். பட்டாளம் படத்திலும் பள்ளி மாணவராக நடித்தார். அதன் பிறகு எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், எதிர்வீச்சு படங்களில் நடித்தார். இதில் சுண்டாட்டம் மட்டும் சுமாராக ஓடிய படம். மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்கு மீண்டும் வந்தார். சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பகுதியில் சரவணனாக நடித்தார். 200 எபிசோட்கள் கடந்த நிலையில் அதிலிருந்து விலகி விட்டார்.
இதுகுறித்து இர்பான் கூறியிருப்பதாவது: சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு நல்ல பாப்புலாரிட்டியை கொடுத்தது உண்மைதான். இப்போதும் நான் வெளியில் சென்றால் என்னை சரவணனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் எனது லட்சியம் சினிமாவில் ஜெயிப்பதுதான். பொங்கி எழு மனோகரா, ரூ என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்கிற சூழ்நிலை. அதனால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சினிமாவுக்காக சின்னத்திரையை விட்டுவிட்டேன்.
பொங்கி எழு மனோகரா முழுநீள காமெடி படம் இந்தப் படம் எனக்கு சினிமாவில் நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறேன். சின்னத்திரை ரசிகர்கள் என்னை புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற நம்புகிறேன். என்கிறார் இர்பான்.



நன்றி: தினமலர்

aanaa
13th September 2014, 10:53 PM
அதிகரிக்கும் "அவருக்கு பதில் இவர்"




சினிமா இரண்டரை மணி நேரம் ஓடும். ஆனால் சின்னத்திரை சீரியல் ஆயிரம் எபிசோட்களை தாண்டும். அதாவது ஆயிரம் மணிநேரத்தையும் தாண்டி ஓடும். சீரியலில் சிறிய கேரக்டர்களில் நடிப்பவர்கள், அதிலிருந்து விலகி விட்டாலோ, அல்லது மரணம் அடைந்து விட்டாலோ கதையிலும் அவர் இறந்துவிட்டதாக காட்டி விடுவார்கள். அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்கள் விலகிக் கொண்டால் அவருக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைப்பார்கள். "அவருக்கு பதில் இவர்" என்று டைட்டில் கார்டு போடுவார்கள். இது எப்போதாவது நடக்கிற ஒன்று. ஆனால் சமீபகாலமாக இது அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்துக் கொண்டிருந்த இர்பான், சினிமாவில் நடிக்க போய்விட்டதால் தற்போது சரவணனாக வெற்றி நடிக்கிறார். இரண்டாவது பகுதியின் 200 வது எபிசோடில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உறவுகள் சங்கமம் தொடரில் 25 எபிசோட்கள் முடிந்துவிட்ட நிலையில் இப்போது பாரதிக்கு பதில் ஸ்ரீதுர்கா நடிக்கிறார். அழகி தொடரில் சாலு குரியன் நடித்த கேரக்டரில் இப்போது குட்டி பூஜா நடிக்கிறார். வாணி ராணி தொடரில் ராதிகாவின் மகனாக 400 எபிசோட்கள் வரை நடித்த அஜீத்துக்கு பதிலாக மானஸ் நடிக்கிறார்.
தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்துக் கொண்டிருந்த சரண்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் அவருக்கு பதிலாக மோனிகா நடிக்கிறார். மல்லி தொடரில் நடித்த சோனியா அகர்வால் அதிலிருந்து விலகிக் கொள்ள, இப்போது சாண்ட்ரியா நடிக்கிறார்.
"இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. முதலில் ரசிகர்கள் கொஞ்சம் குழம்புவார்கள். பின்னர் மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் கவனம் கதையில் ஆழ்ந்து இருப்பதால்தான் இந்த மாற்றங்களை செய்ய முடிகிறது" என்கிறார்கள் சின்னத்திரை இயக்குனர்கள்.



நன்றி: தினமலர்

aanaa
13th September 2014, 10:54 PM
மீண்டும் சீரியலுக்கு திரும்பினார் தேவிகிருபா
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_140909142433000000.jpg
ஜோடி மாற்றம் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தேவிகிருபா. அதன் பிறகு சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இணை கோடுகள், ஆனந்தம், தீர்க்க சுமங்கலி, கஸ்தூரி சீரியல்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். அதற்காக சீரியலை விட்டு விலகினார். உடம்பை குறைத்தார். பயமறியான் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். தற்போது இலக்கணமில்லா காதல் படத்தில் ஜெய் ஆகாசுக்கு தங்கையாக ஒரு படத்திலும், ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். என்றாலும் தேவிகிருபா நினைத்த மாதிரி சினிமா வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மீண்டும் சீரியலுக்கே திரும்பி விட்டார். புகுந்த வீடு, மை நேம் இஸ் மங்கம்மா, மாமா மாப்ளே, மாயா, பிள்ளைநிலா என மீண்டும் சீரியல்களில் பிசியாகிவிட்டார்.
"சின்னத்திரை நடிகைகளின் அடுத்தகட்டம் சினிமாதான். நானும் முயற்சித்தேன். சில படங்களில் நடித்தேன். நடித்துக் கொண்டும் இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் சினிமாவிலும் சாதிப்பேன்" என்கிறார் தேவிகிருபா.



நன்றி: தினமலர்

aanaa
13th September 2014, 10:55 PM
இனி வில்லியாக நடிக்க மாட்டேன்: தேவிப்ரியா சொல்கிறார்


சின்னத்திரையில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் தேவிப்ரியா. தற்போது நடித்து வரும் பாசமலர், ரோமாபுரி பாண்டியன் தொடர்களிலும் வில்லியாகத்தான் நடித்து வருகிறார். ஆனால் இனி வில்லியாக நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இதுவரை நிறைய சீரியல்களில் வில்லியாகவே நடித்து விட்டேன். என் நடிப்புக்காக பாராட்டுகள் கிடைத்தாலும் சீரியலை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளும் தாய்மார்களிடம் நான் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். நானும் எத்தனை ஆண்டுகள்தான் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது அதனால்தான் இனி வில்லி வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடித்தேன். இடையில் நிறுத்திவிட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறேன். கத்துக்குட்டி, விஞ்ஞானி படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். என்கிறார் தேவிப்ரியா.



நன்றி: தினமலர்

aanaa
20th September 2014, 01:22 AM
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் ப்ரியா. அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஹீரோக்களின் தங்கையாக நடித்தார். ப்ரியாவுக்கும், ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லீக்கும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் ப்ரியா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: "அட்லி குடும்பமும், எங்கள் குடும்பமும் பேமிலி பிரண்ட். அட்லியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நல்ல பிரண்டாத்தான் இருந்தார். எங்களுக்குள் லவ் எதுவும் இல்லை. ஒரு நாள் எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்கன்னு சொன்னேன். என் ஜாதகத்தை தரட்டுமான்னு டக்குன்னு கேட்டுட்டார். அதுக்கு பிறகு இரண்டு குடும்பத்தாரும் பேசி கல்யாணத்தை முடிவு பண்ணினாங்க. இது அரேன்ஞ்சுடு மேரேஜ்தான். இப்பதான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.
நடிப்பு எனக்கு பேஷனோ, தொழிலோ இல்லை. வாய்ப்புகள் கிடைச்சுது சும்மா ஒரு ஹாபிக்காக நடித்தேன். நிச்சயமாக கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன். இது நானே எடுத்த முடிவு" என்கிறார் ப்ரியா.



நன்றி: தினமலர்

aanaa
20th September 2014, 01:23 AM
அழகி, பொம்மலாட்டம், குறிஞ்சி மலர் சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறவர் தேசிகாஸ்ரீ. அடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மசாலா குடும்பம் சீரியலில் அறிமுகமாகி இதுவரை 7 சீரியல்களில் நடித்து முடித்து விட்டேன். தற்போது 3 சீரியல்களில் நடித்து வருகிறேன்.
சின்னத்திரையில் நடிப்பதை சிலர் ரொம்ப எளிதானது என்று நினைக்கிறார்கள். பொதுவாக எல்லோருக்கும் 8 மணிநேர வேலை என்றால் எங்களுக்கு மட்டும் 12 மணி நேர வேலை. காலை 9 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு 9 மணிக்குதான் வீடு திரும்புகிறோம். என்றாலும் இந்த வேலையை இஷ்டப்பட்டு செய்வதால் கஷ்டத்தை பற்றி கவலைப்படுவதில்லை.
மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்து ஏராளமானவர்கள் தமிழ் சீரியல்களுக்கு நடிக்க வருகிறார்கள். அதே மாதரி எனக்கு தெலுங்கு, மலையாள சீரியல்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. இதற்காக கதை கேட்டு வருகிறேன். சில வாய்ப்புகள் வந்தது அவை சின்ன கேரக்டர் என்பதால் ஒப்புக் கொள்ளவில்லை. விரைவில் மலையாள சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. என்கிறார் தேசிகாஸ்ரீ.



நன்றி: தினமலர்

aanaa
12th October 2014, 09:08 PM
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு: குஷ்பு பொதுச் செயலாளர் -
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் அக் 11 நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராதிகா சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2014- 2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமாரே மீண்டும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டடார். செயலாளராக குஷ்பு சுந்தரும், பொருளாளராக டி.ஆர்.பாலேஷ்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நடிகை குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஈ.ராம்தாஸ், டி.வி.சங்கர் ஆகியோர் இணை செயலாளர்களாகவும், பி.ராதா, சுஜாதா கோபால், வினயா கிருஷ்ணன், ரவி, கே.ஜி.ஜெயவேல், ஆர்.சதீஷ், பி.சீனிவாசன், எஸ்.சுந்தர், பி.சீனிவாசலு, ஏ.எஸ்.வெங்கடாசலம், ஜி. ஜெயகுமார் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏவிஎம்.சரவணன், டி.ஜி.தியாராஜன், அழகன் தமிழ்மணி ஆகியோர் சங்கத்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டனர். -



நன்றி: தினமலர்

aanaa
12th October 2014, 09:10 PM
ஜெனிபர் சீரியலுக்கு முழுக்கு?


பல ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ஜெனிபர், கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த பிறகு புகழ் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் தங்கையாக நடித்தவர் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். எதுவும் சரியாக வரவில்லை என்றதும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். கடைசியாக தாயுமானவன் சீரியலில் நடித்தார். இந்த சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்து எந்த சீரியலிலும் நடிக்க ஜெனிபர் ஒப்பந்தமாகவில்லை.




இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நாகேஷ் பேரன் கஜேஷ் நடிக்கும் கல்கண்டு படத்தில் ஹீரோயின் டிம்பிள் தோழியாக நடிக்கிறார்.




இதுபற்றி ஜெனிபர் கூறியதாவது: கல்கண்டு படத்தில் முக்கியமான கேரக்டர். ஹீரோயின் தோழியாக நடித்தாலும் கதையை நகர்த்தி செல்வதில் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த படம் வெளிவந்த பிறகுதான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, சீரியலுக்கு செல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்தப் படம் சினிமாவில் நல்ல ரீ எண்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறேன். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல கேரக்டர் கிடைத்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் ஜெனிபர்.

aanaa
12th October 2014, 09:11 PM
எழுத்தாளரான நீலிமா ராணி




சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் அறிந்த முகம் நீலிமா ராணி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு சின்னத்திரை, பெரிய திரை என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பவர். இப்போதும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், வாணி ராணி தொடரில் நடிக்கிறார். ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.




நீலிமாவின் தந்தை விஸ்வமோகன் தமிழில் ராஜேஷ்குமார் மாதிரி தெலுங்கில் துப்பறியும் எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. 300க்கும் மேற்பட்ட கதைகளும், 100க்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் மகள் எழுத்தாளராகாமல் இருப்பாரா. நீலிமாவும் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். அதை தொகுத்து ஒரு புத்தகமாக போடவும் முடிவு செய்திருக்கிறார். நீலிமா எழுதுவது தெலுங்கு கதையல்ல தமிழ் கதைகள். இதுதவிர சில ஆங்கில இதழ்களில் தன்னம்பிக்கை கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஒரு படத்துக்கு கதை எழுதி சீக்கிரமே இயக்குனராக அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.

aanaa
15th October 2014, 08:12 AM
siima awards: 2013 winners- Tamil

http://siima.in/



best cinematographer-rajiv menon / kadal
best dance choreographer-shobhi / en fuse pochu (arrambham)
best fight choreographer-anal arasu / pandiyanadu
best actor in a supporting role (male)-arya / arrambham
best actor in a supporting role (female)-nandita / ethir neechal
best actor in a negative role-neetu chandra / aadhi bhagawan
best lyricist-na muthukumar / aananda yaazhai (thankameenkal)
best music director-anirudh / ethir neechal
best playback singer (female)-shakthisree / nenjukkulla (kadal)
best playback singer (male)-sriram parthasarathy / aanantha yazhai (thankameenkal)
best child actor-sadhana / thangameenkal
best comedian-soori / varuthapadatha valibar sangam
best debutant actress-sri divya / varuthapadatha valibar sangam
best debutant actor-gautham karthik / kadal
best debutant director-nalan kumarasamy / soodhu kaavum
best debutant producer-vishal film factory / pandiyanadu
best actress-trisha / endrendrum punnagai
best actress (critics)-parvathy / maryan
best actor-sivakarthikeyan / ethir neechal
best actor (critics)-dhanush / maryan
best director-bala / paradesi
best film-soodhu kaavum / thirukumaran entertainment-cv kumar
best film - special appreciation-paradesi / b studios-bala

aanaa
20th October 2014, 04:04 AM
சென்னை: சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரே விருது ‘சன் குடும்பம் விருதுகள்தான்’ என்று நடிகர் தீபக் கூறினார்.சன் டி.வியில் ஒளிபரப்பான ‘மனைவி’, ‘திருமதி செல்வம்’ மற்றும் இப்போது ஒளிபரப்பாகும் ‘தென்றல்’ உட்பட பல தொடர்களில் நடித்திருப்பவர் தீபக். இப்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கடந்த முறை நடந்த சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் இவரும் நடிகை ஸ்ருதியும் சிறந்த ஜோடிக்கான விருதைப் பெற்றனர். நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய தீபக் இந்த வருடமும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த விருது பற்றி தீபக்கிடம் கேட்டபோது கூறியதாவது:


சின்னத்திரை கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விருதாக இருக்கிறது. சன் டி.வியில்தான் அதிகமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதைப் பார்க்கின்றனர். வெளிநாடு சென்றால் அங்குள்ள தமிழர்கள் அடையாளம் கண்டுகொண்டு பேசும் அளவுக்குத் தொடர்களின் வீச்சு இருக்கிறது. அப்படி நடிக்கும் எங்களை கவுரவிக்க இந்த விருது விழா நடக்கிறது. இதை சாதாரண விருது விழா என்று சொல்லிவிட முடியாது. சின்னத்திரை கலைஞர்கள் ஒரே குடும்பமாக கலந்துகொண்டு விருது வாங்குகிறோம் என்பதால் இதை எங்கள் குடும்ப விழாவாகத்தான் பார்க்கிறோம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் விருது விழா சிறப்பாக இருக்கும். இவ்வாறு தீபக் கூறினார். -


நன்றி: தினகரன்

aanaa
20th October 2014, 04:05 AM
சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா:மகாபலிபுரத்தில் நடக்கிறது

http://cinema.dinakaran.com/gallery/Television-new-146.jpg


சென்னை: சன் டி.வி.யின், ‘சன் குடும்பம் விருதுகள்’ வழங்கும் விழா, இந்த வருடம் மகாபலிபுரத்தில் மிகப் பிரமாண்டமாக நடக்கிறது.சன் டி.வியில் தினமும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் சிறப்பாக நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சன் டிவி., ‘சன் குடும்பம் விருதுகள்’ என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் விருதுகளை வழங்கி வருகிறது. சின்னத்திரை கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.


கடந்த முறை இந்த விருதுவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமர்க்களமாக நடைபெற்றது. சின்னத்திரை கலைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் கலைவிழாவும் இடம்பெற்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் உள்ள கான்புளூயன்ஸ் கன்வென்சன் சென்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை நடக்கும் இந்த ஆர்ப்பாட்டமான விழாவில், ஏராளமான சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்குபெறுகிறார்கள்.


திரைப்பட நடிகர், நடிகைகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மேலும் சின்னத்திரை கலைஞர்களின் நடனம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது நடிகர், நடிகை ஒத்திகைப் பார்த்து வருகின்றனர்.கடந்த விருது விழாவில் சிறந்த கதாநாயகனுக்கான விருது ‘நாதஸ்வரம்’ தொடரில் நடித்த திருமுருகனுக்கும் சிறந்த கதாநாயகி விருது ‘திருமதி செல்வம்’ தொடரில் நடித்த அபிதாவுக்கும் கிடைத்தது.


டெல்லி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ராதிகா சரத்குமாருக்கு நீண்ட நாள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த வருடம் யார் யாருக்கு விருது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு சின்னத்திரை வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.



நன்றி: தினகரன்

aanaa
1st November 2014, 05:11 AM
உலகிலேயே பெண்கள் மட்டுமே பணியாற்றும் செய்தி சேனல் தமிழில் தொடக்கம்

பிராந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிக செய்தி சேனல்கள் உள்ளன. தற்போது புதிதாக நியூஸ் 7 என்ற புதிய சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் நேற்று (அக் 30) தனது ஒளிபரப்பை தொடங்கி உள்ளது.உலகிலேயே பெண்கள் மட்டுமே பணியாற்றும் செய்தி சேனலாக இது அமைந்திருக்கிறது. செய்தி வாசிப்பாளர்கள், நிருபர்கள், தொழில்நுட்ட கலைஞர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட பெண்களே.
அனைவருக்குமே சராசரி 25 வயது என்பதால் உலகின் இளமையான சேனலும் இதுதான் என்கிறார்கள். பத்திரிகைகளில் பெண்களுக்கான பத்திரிகை என்று தனியாக வெளிவருவதைப் போல முதன் முறையாக பெண்கள் செய்தி சேனல் வந்திருக்கிறது. பெண்களுக்கென்று தனி பொழுதுபோக்கு சேனலும் விரைவில் வரலாம் என்கிறார்கள்.


நன்றி: தினமலர்

aanaa
1st November 2014, 05:13 AM
இனி சீரியல் இயக்க மாட்டேன்: நாகா


சின்னத்திரையில் முதன் முறையாக திகில் சீரியல்களை கொண்டு வந்தவர் நாகா. அவர் இயக்கிய பல திகில் சீரியல்கள் மிகவும் பாப்புலர், மர்மதேசம், ருத்ரவீணா, சிதம்பர ரகசியம் போன்றவை அதில் முக்கியமானவை. அதன் பிறகு அனந்தபுரத்து வீடு என்ற காமெடி திகில் படத்தை இயக்கினார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு திகில் படத்துக்கான கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சீரியல் இயக்க வந்த பல வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் நாகா.


இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அடுத்த சினிமாவுக்கான முன் தயாரிப்பில் இருக்கிறேன். மீண்டும் சீரியல் இயக்கும் எண்ணமே இல்லை. அதனால்தான் சில வாய்ப்புகளை தவிர்த்தேன். எப்போதும் சினிமா தொடர்பான வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது சீரியல்களை பார்ப்பதுகூட இல்லை. பல சீரியல்களின் கதை ஒன்றுபோல இருப்பதாக எங்கள் வீட்டு பெண்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். அந்த நிலை எனக்கும் வரக்கூடாதல்லவா அதுதான் சீரியல் பார்ப்பதில்லை. விரைவில் சினிமாவில் சந்திப்போம். என்கிறார் நாகா.



நன்றி: தினமலர்

aanaa
1st November 2014, 05:14 AM
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சின்னத்திரை நடிகர்கள் பிரார்த்தனை


கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நளினி தலைமையிலான அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பிரார்த்தனை செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன் காக்கும் மக்களின் முதல்வர் சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து, மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்வது திண்ணம். பெற்ற தாய்க்கு மேலாக, தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின் தேவைகளை கொடுத்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க உழைக்கும் மக்கள் முதல்வரின் கசந்த காதம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர் சங்கம் பிரார்த்திக்கிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_141024151300000000.jpg
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





நன்றி: தினமலர்

aanaa
1st November 2014, 05:16 AM
என் காதல் தேர்வு தவறாகிவிட்டது: சபர்னா சொல்கிறார்
நாணயம், ரேகா ஐ.பி.எஸ், அரசி, சொந்தபந்தம், துளசி, பிரிவோம் சந்திப்போம் தொடர்களில் நடித்தவர் சபர்ணா. தற்போது புதுக்கவிதையில் தினேசுடன் நடித்து வருகிறார். சபர்ணாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் பக்கா கோயம்புத்தூர் பொண்ணு. டிகிரி முடிச்சதுமே மீடியாதான் என்னோட சாய்ஸா இருந்தது. சென்னை வந்தேன். மியூசிக் சேனல்ல வேலை பார்த்தேன். நிகழ்ச்சிக்கு வந்த சினிமா பிரபலங்கள் நடிக்க கூப்பிட்டாங்க. படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை உள்பட சில படங்களில் நடிச்சேன். அப்புறம் சீரியல் வாய்ப்பு வந்தது. சினிமாவை விட சீரியல் பெட்டரா தெரிஞ்சுது நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.


அதன் பிறகு வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்துட்டேன். இந்த நடிப்பு வாழ்க்கையில் எனக்கும் காதல் வந்தது. நானும் காதலிச்சேன். ஆனால் என்னோட செலக்ஷன் தப்பாகிவிட்டது. காதலில் இருந்து நானும் வெளியில வந்துட்டேன். இனி அப்பா அம்மா சாய்சுக்கு விட்டுட்டேன். அவுங்க யாரை கை காட்டுறாங்களோ அவரை கட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு பிறகு அவரை லப் பண்ணலாமுங்ற ஐடியாவுல இருக்கேன் என்கிறார் சபர்ணா.



நன்றி: தினமலர்

aanaa
1st November 2014, 05:18 AM
முந்தானை முடிச்சுக்கு வருகிறார் தேவி கிருபா


தென்றல், உறவுகள் சங்கமம் தொடர்களில் நடித்து வந்த தேவி கிருபா, தற்போது முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இதற்கு முந்தைய சீரியல்களில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தேன். வயதை மீறிய தோற்றத்துடன் நடித்தேன். முந்தானை முடிச்சில் மார்டன் டிரஸ் அணியும் பெண்ணாக நடிப்பதால் சந்தோஷமாக இருக்கிறது. காரணம் நான் நிஜத்தில் மார்டன் உடைகளை விரும்பி அணிகிறவள்.




தொடர்களில் நடிப்பதோடு நிகழ்ச்சி தொகுப்பாளினி வாய்ப்புகளும் நிறைய வருகிறது. அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த பணியை செய்யலாம் என்று நினைக்கிறேன். நடிக்கும்போது தவறு செய்தால் ரீடேக் போகலாம். தொகுப்பாளினியாக அப்படி செய்யும் வாய்ப்பு குறைவு. அதனால் நன்றாக பயிற்சி எடுத்த பிறகு தொகுப்பாளினியாவேன். என்கிறார் தேவி கிருபா.



நன்றி: தினமலர்

aanaa
5th November 2014, 07:34 PM
புதுமைப் பெண்கள்

பெண்களை ஊக்குவித்து, அவர்களைத் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் வீட்டுக்கலை, அழகும் ஆரோக்கியமும், பேஷன் உலகம், புதுமைப் பெண்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "அழகிய சினேகிதி'.
உபயோகமற்றப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் தயாரித்தல், ஆபரணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட கைத்தொழில்களை தலைசிறந்த தொழில் முனைவோர்கள் கற்றுத் தருகின்றனர்.

புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் இந்த நிகழ்ச்சி விவாதிக்க உள்ளது.
மேலும், பெண்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் உரைகளும் இதில் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியை நடிகை நீலிமா ராணி தொகுத்து வழங்குகிறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.





* தொழில் குறித்த அறிமுகம், அதற்கான சந்தை வாய்ப்புகள், தொழிலைத் தொடங்குவதற்கான பயிற்சிகள், தேவையான இயந்திரத் தளவாடங்கள், மூலப் பொருட்கள், அவை எங்கே கிடைக்கும் என்ற தகவல், விற்பனை யுக்திகள், வங்கிக் கடன் வாய்ப்புகள், அரசு மானியம், வங்கிக் கடன் பெற தேவைப்படும் மாதிரி திட்ட விவர அறிக்கை என ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான அத்தனை தகவல்களையும் காட்சிப்படுத்துகிறது புதிய தலைமுறையின் "சிறுதொழில்' நிகழ்ச்சி.

தினமும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் "சிக்கனம் சேமிப்பு செல்வம்' நிகழ்ச்சியின் ஒரு பிரிவாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.




* புகுந்த வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், பணியிடத்தில் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகள், வீட்டைக் கவனிக்காத கணவன் ஏற்படுத்தும் அவமானம், சரியாகப் படிக்காத பிள்ளைகளால் ஏற்படும் தலைகுனிவு -
இப்படி அடுக்கடுக்காய் சந்திக்கும் பிரச்னைகளால் மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கு ஆளாகித் தவிக்கிறார்கள் பெண்கள்.
வெளியே சொல்லவும் முடியாமல், பகிர்ந்து கொள்ளவும் வழியில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு, அவர்களின் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் நிகழ்ச்சி "கொட்டித் தீர்த்துவிடு தோழி'. பிற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் போல் முகம் காட்டத் தேவையில்லை. போன் அல்லது மின்னஞ்சல் மூலமாக உங்களுடைய பிரச்னைகளை சொல்லலாம்.
உங்களுடைய சந்தேகங்களுக்கு மனநல மருத்துவர் ஷாலினி பதிலளிக்கிறார். மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.






** கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு "மகளிருக்காக' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் "ஹாய் பியூட்டீஸ்' பகுதியில், இயற்கைப் பொருட்களைக் கொண்டு பெண்கள் தங்களை எவ்வாறு அழகுபடுத்திக் கொள்வது என்பதை அழகுக்கலை நிபுணர் விளக்குகிறார். ஜூம்பா என்ற உடற்பயிற்சி நடனம், இந்த நிகழ்ச்சியில் புதிய பகுதியாகத் தொடங்கப்பட இருக்கிறது. நடனத்துடன் இணைந்த உடற்பயிற்சிதான் ஜூம்பா. இதில் பல நடன முறைகள் இடம்பெறும். உடல் எடை அதிகம் கொண்டவர்கள், இந்த நடனத்தை ஆடுவதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். "ஷாப்பிங்கோ ஷாப்பிங்' பகுதியில், பலவிதமான ஆடைகள், ஆபரணங்கள், அழகுப் பொருட்கள் எங்கு கிடைக்கின்றன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

aanaa
8th December 2014, 07:02 AM
http://www.sunnetwork.in/sunkudumbam/
Sun Kudumbam Virudhugal 2014 Winners List:


Best Actress – Raadhika Sarathkumar (Vaani & Rani)
Best Supporting Actor – Prithviraj (Swaminathan)
Best Child Artist – Neha ( Thenmozhi )
Best Editor – Ramesh Lal (vani rani)
Best Dubbing Artist ( MALE ) – Sathyaraj ( Saravanan’s Voice )
Best Villi Awards – Gayathiri (Deivamagal)
Best Serial – Deivamagal
Best Actor – Deepak (Thendral)
Best Jodi – Deepak Dinkar & Shruthi Raj (Tamil & Thulasi)

http://www.sunnetwork.in/sunkudumbam/images/banner-03.jpg

http://www.sunnetwork.in/sunkudumbam/images/banner-01.jpg


http://www.sunnetwork.in/sunkudumbam/images/banner-02.jpg

aanaa
27th December 2014, 10:59 PM
மீண்டும் மதுமிதா சின்னத்திரையில் (http://cinema.dinamalar.com/tamil-tv-serials/25358/Chinna-thirai-Television-News/Madhumitha-back-to-small-screen.htm)

aanaa
27th December 2014, 11:01 PM
ஏலத்திற்கு வருகின்றது ... (http://cinema.dinamalar.com/tamil-news/25425/cinema/Kollywood/Exim-Bank-attaches-property-of-Rajinikanth's-wife.htm)

aanaa
12th January 2015, 06:27 AM
சின்னத்திரையிலும் பயமுறுத்துகிறார்கள்


2014ம் ஆண்டை தமிழ் சினிமாவில் திகில் ஆண்டு என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு திகில் படங்கள் வெளிவந்தது, 200 படங்களில் 50 படங்களுக்குமேல் திகில் படங்கள்தான். யாமிருக்க பயமே, அரண்மனை, பிசாசு, போன்ற படங்கள் ஹிட்டாகவும் செய்தன. அதே போல சின்னத்திரையிலும் திகில் தொடர்கள் ஒளிபரப்பாகி மக்களின் வரவேற்பை பெற்றன


ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகும் அதே கண்கள், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சிவ ரகசியம், புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனாமிகா உள்பட பல திகில் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இதில் அனாமிகா டப்பிங் சீரியல். இதே போன்று பல திகில் சீரியல்களை ஒளிபரப்ப மற்ற சேனல்களும் முடிவு செய்திருக்கின்றன. முன்னணி சேனல் ஒன்று பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் திகில் தொடருக்கான ஸ்கிரிப்ட் கேட்டிருக்கிறது. சினிமாவுக்கு நிகராக தயாரித்து ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டு அதிகமான திகில் தொடர்கள் ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது





நன்றி: தினமலர்

aanaa
12th January 2015, 06:29 AM
நிகழ்ச்சி தயாரிப்பாளராகிறார் நீலிமா ராணி!




குழந்தை நட்சத்திரமாக இருந்து கோலங்கள் சீரியலில் அறிமுகமான நீலிமா ராணி தொடர்ந்து சீரியல்களில் நடித்தார். பின்னர் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் திருமணமாகி செட்டிலானார். 4 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சினிமாவில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் நல்ல ரீ என்ட்ரியை கொடுத்தது. தற்போது அமளி துமளி, இருவர் உள்ளம், வாலிபராஜா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சின்னத்திரையில், வாணி ராணி மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் மகாபாரதம், தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஆகியிருக்கிறார்.


தற்போது பிசியாக நடித்துக்கொண்டும், நிகழ்ச்சிகளை தொகுத்துக் கொண்டும் இருக்கும் நீலிமா விரைவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகிறார். முன்னனி சேனல் ஒன்றில் டாக் ஷோ நடத்துவதற்கான பேச்சு நடந்து வருகிறது. அது முடிவான பிறகு ஏப்ரல் மாதம் வாக்கில் தயாரிப்பை தொடங்குவார் என்றும் அவரது கணவர் இயக்குவார் என்றும் தெரிகிறது.



நன்றி: தினமலர்

aanaa
3rd February 2015, 12:04 AM
சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வந்தவர் சாண்ட்ரா. தொகுப்பாளர் பிரஜினை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது வந்த சினிமா வாய்ப்புகளிலும் நடித்தார். கஸ்தூரிமான், போராளி, படங்களில் நடித்தார் சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சுற்றுலா, தரணி படங்களில் ஹீரோயின்


சினிமா வாய்ப்புகள் நிறைய வருவதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிட்டார் சாண்ட்ரா. இதுகுறித்து அவர் கூறும்போது "தற்போது சினிமா வாய்ப்புகள் நிறைய வருகிறது. நான்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தரணி படத்துக்கு கிடைக்கும் பாராட்டுகள் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தற்போது 3வது நபரை காணோம் என்ற படத்தில் நடித்து வருகிறேன். சின்னத்திரை, சினிமா இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்" என்றார்.



நன்றி: தினமலர்

aanaa
3rd February 2015, 12:07 AM
சமீபகாலமாக சின்னத்திரையில் முகம் காட்டி புகழ் பெற்றவர்கள் சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


அதிலும் சிவகார்த்திகேயன், மா.கா.பா.வின் வரவுக்கு பிறகு சில பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகின்றனர்.


அந்த வரிசையில் தற்போது, தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான அனுஷ்யாவும் சினிமாவில் என்டரி கொடுக்கிறார்.
ஆனால் இவருக்கு ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையாம். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறார். காரணம் கேட்டால், கதாநாயகி என்று இறங்கி விட்டால் கதைக்கு தேவை என்று கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள். ஆனால் நமக்கு அது சரிப்பட்டு வராது.


அதனால்தான் நடிக்க சில வாய்ப்புகள் வந்தபோதே, கேரக்டர் ரோல்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லி விட்டேன. மேலும், கதாநாயகி என்றால் சில வருடஙக்ள் தான் நீடிக்க முடியும்.


ஆனால் எனக்கு இந்த கலைத்துறையில் நீண்டகாலம் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால்தான் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிப்பதுதான் சரியான வழி என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறும் அனுஷ்கா, தற்போது என் கைவசம் இரண்டு புதிய படங்கள் உள்ளது. மேலும், சினிமாவில் பிசியாகும் வரை சினிமா, சின்னத்திரை என இரணடு துறைகளிலும் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் அனுஷ்யா



நன்றி: தினமலர்