-
12th March 2012, 06:22 PM
#11
Senior Member
Senior Hubber
அனிமேஷன் படத்திலும் நடிக்க முடியாத ரஜினி!
இந்தச் செய்தியின் தலைப்பு ரஜினியின் ரசிகர்களை புன்படுத்தும் நோக்கத்தோடு வைக்கப்பட்டது அல்ல!
ரஜினியை உயிருக்கு உயிராக நேசிக்கும் அவரது ரசிகர்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதே நமது விருப்பம்.
ராணா தடைபட்ட பிறகு ரஜினி அடுத்து நடிக்கும் அதிகார பூர்வமான படம் கோச்சடையன் என்று அதிகார பூர்வமாக அறிவித்தார், அந்தப் படத்தை இயக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா ஆர். அஸ்வின்.
கோச்சடையனைப் பொறுத்தவரை அது ‘மோசன் கேப்சரிங்’ எனப்படும் நடிகர்களின் உடமொழியை மட்டும் கேப்சர் செய்து கொண்டு, 2டியில் வரையப்பட்ட ஓவியங்கள் 3டிக்கு மாற்றப்பட்டு, அந்த 3டி ஓவியங்களில் நடிகர்களின் உடல் மொழியைப் புகுத்தி அனிமேட் செய்து உருவாகப்படுவதாகும்.
இதில் சம்பந்தப்பட்ட நடிகரின் உடல்மொழி ஒருமுறை பதிவு செய்யப்பட்டாலே அதை வைத்து அவரது கேரக்டரை பல படங்களில் வேறு வேறு பரிமாணங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நாம் ஏற்கனவே முந்தித்தந்த தகவல்படி, கோச்சடையனியில் ரஜியுடன், நாகேஷின் கதாபாத்திரமும் மோசன் கேப்சரிங் முறையில் சேர்க்கப்பட இருக்கிறது. இதற்காக நாகேஷ் உடல்மொழியில் நிபுணத்துவம் பெற்ற மிமிக்ரி மேடை கலைஞர்கள் பயன்படுத்த இருக்கிறார்கள் என்ற செய்தியை 4தமிழ் மீடியாவே முதலில் தனது வாசர்களுக்கு தந்தது.
தற்போது இதே சப்ஸூட் முறையில் ரஜினிக்கும் ஒரு மிமிக்கிரி கலைஞர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார் என்பதுதான் அந்த ஷாக் நியூஸ்! பிரபல தனியார் தொலைகாட்சியின் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியான லொள்ளு சபாவின் கதாநாயகன் ஜீவாவை, ரஜினிக்காக ‘மோசன் கேப்சரிங்’ மாடலாக கோச்சடையன் படக்குழு தேர்வு செய்திருப்பதாக மிக நம்பகமான வட்டாராம் நமக்கு தகவல் தருகிறது.
இம்மாத இறுதியில் லண்டனில் தொடங்க இருக்கும் கோச்சடையன் படப்பிடிப்புக்கு ஜீவாவை அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படிருக்கும் தகவலையும் நமக்குத் தருகிறார்கள். இதன் மூலம் வேறும் உடல்மொழியை மட்டுமே தரக்கூடிய கோச்சடையான் படத்தில் கூட ரஜினி நடிக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்கிறார்கள்.
இதைவிடவும் ஹாட்டான செய்தி, தனக்கான மோசன் கேப்சரிங் டூப்பாக ஜீவாவை தேர்வு செய்ததே ரஜினிதான் என்கிறார்கள்!
I'M WAITING...
-
12th March 2012 06:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks