நெகடீவ் ரோல்தான் பிடித்திருக்கிறது! -வாணி ராணி ஸ்ருதி


வாணி ராணியில் ராதிகாவின் மருமகளாக பவித்ரா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி. ஆரம்பத்தில் பாசிட்டீவாக இருந்த இவரது கதாபாத்திரம் தற்போது நெகடீவாக மாறி வருகிறது. அதனால் நேயர்களின் நேரடி கவனத்துக்கு வந்துவிட்டார் ஸ்ருதி.


இந்த ரீச் பற்றி அவர் கூறும்போது, வாணி ராணியில் நான் நடித்து வரும் பவித்ரா என்ற வேடம் முதலில் பாசிட்டீவாக இருந்தது. ஆனால் இப்போது நெக டீவாகிக்கொண்டிருக்கிறது. அதனால் நேயர்கள் கவனிக்கப்படும் கேரக்டராகியிருக்கிறது. எனக்கு நடிப்பதற்கும் நிறைய ஸ்கோப் உள்ளது. மேலும், ராதிகா மேடம் காம்பினேசனிலேயே எனக்கான காட்சிகள் இருப்பதால் நேயர்களின் நேரடி கவனத்துக்கு வந்து விட்டேன். அதனால் வாணிராணியில் எனது கேரக்டர் கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு சீன்களில் வந்து விடுகிறேன். இதுவரை நெகடீவ் வேடங்கள் பற்றி தெரியாமல் இருந்த எனக்கு இப்போதுதான் அதன் அருமை புரிந்திருக்கிறது. ஒரு ஆர்ட்டிஸ்டாக நெகடீவ் வேடம்தான் எனக்கு பிடித்திருக்கிறது.


அதோடு, ராதிகா மேடத்துடன் நடிப்பதால் அவ்வப்போது எனக்கு நடிப்பு பற்றிய டிப்ஸ் கொடுக்கிறார். சில காட்சிகளில் நான் அதிகப்படியாக நடித்தால் இவ்வ ளவு வேண்டாம் என்று நான் எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று சொல்லித்தருகிறார். அது எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. அதனால் எனது நடிப்பில் எந்தவித குறையும்இல்லாமல் நடித்து வருகிறேன். மேலும், இப்போது எனது கேரக்டர் பெரிதாக ரீச்சாகி வருவதால், மேலும் சில சீரியல் வாய்ப்புகள் வருகிறது. ஆனால் தற்போது நான் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பைனல் இயர் படித்து வருவதால் என்னால் அதிகப்படியான சீரியல்களில் நடிக்க முடியவில்லை. தற்போது எக்சாம் நடந்து வரும் நிலையில், எக்சாம் முடிந்ததும் கோவையில் இருந்து சென்னையில் குடியேறப்போகிறேன். அதன்பிறகு அதிகப்படியான சீரியல்களில் நடிப்பேன் என்கிறார் ஸ்ருதி.

நன்றி: தினதந்தி