Ending the year on a high note! Super excited to be a part of Robot 2 with the one & only @superstarrajini sir!
— Akshay Kumar (@akshaykumar) December 16, 2015

3டியில் உருவாக்கப்படும் 2.0 படத்தில் ஐயன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களில் வேலை பார்த்த லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் அனிமட்ரானிக்ஸை கவனித்துக்கொள்ள, ட்ரான் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் தயார் செய்த மேரி.இ.வோட் 2.0-ல் இணைகிறார். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஆக்*ஷன் இயக்குனர் கென்னி பேட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு லைஃப் ஆஃப் பை புகழ் ஜான் ஹியூஸ் போன்றவர்கள் பட்டையைக் கிளப்ப உள்ளார்கள்.
இசைக்கு இசைப்புயல். அதனால், ‘இரும்பிலே ஒரு இதயம்’ மீண்டும் முளைக்கும் என எதிர்பார்க்கலாம். வசனத்துக்கு ஜெயமோகன். முதல்முறையாக ஷங்கருடன் கைகோர்க்கிறார் ஜெயமோகன்.