-
22nd January 2017, 09:23 PM
#421
Moderator
Diamond Hubber
நேயர்களை சிரிக்க வைப்பதே என் நோக்கம்! - அசார்
காமெடி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் அசார். தற்போது தல-தளபதி என்ற நிகழ்ச்சிக்கு அவரே கான்செப்ட் ரெடி பண்ணி நடித்து வருகிறார்.
இதுபற்றி அசார் கூறும்போது, நான் பங்குபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையுமே நேயர்கள் மகிழ்வுடன் ரசிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் நான் காமெடி நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து வருகிறேன். அந்த வகையில் லைவ் நிகழ்ச்சி மட்டுமின்றி கான்செப்ட் நிகழ்ச்சியாக இருந்தாலும் முடிந்தவரை காமெடி செய்து வருகிறேன். தற்போது ஆதித்யா சேனலில் தல-தளபதி என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.
இந்த நிகழ்ச்சியின் பெயர் தல-தளபதி என்று இருந்தாலும் இது சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு கான்செப்ட்டை ரெடி பண்ணி அதில் நடித்து வருகிறேன். எடுத்துக்கொள்ளும் விசயத்திற்கேற்ப என்னுடன் மற்றவர்களும் நடிப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் நடிக்கிற விசயமோ அல்லது சரித்திர கால விசயங்களோ எதுவாக இருந்தாலும் அதற்கேற்ற கெட்டப்பில், அந்த காலத்தில் மக்கள் பேசியது போன்ற வார்த்தைகளை அந்த சாயலில் பேசி நடித்து வருகிறேன். இதற்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முக்கியமாக, இந்த நிகழ்ச்சிக்கு தேவையான கான்செப் ட்டை நானே ரெடி பண்ணி நடிப்பது சந்தோசமாக உள்ளது என்கிறார் அசார்.
நன்றி: தினமலர்
-
22nd January 2017 09:23 PM
# ADS
Circuit advertisement
-
22nd January 2017, 09:24 PM
#422
Moderator
Diamond Hubber
வில்லியாக நடிப்பது ரொம்ப பிடிக்கும்! -நடிகை பிரியா
விஜய் டிவியில் ஒளிபரப்பான என் பெயர் மீனாட்சி தொடரில் வில்லியாக நடித்தவர் பிரியா. தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை தொடரில் மிர்ச்சி செந்திலுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதுபற்றி பிரியா கூறுகையில், மாப்பிள்ளை தொடரில் மிர்ச்சி செந்திலை ஒன்சைடாக லவ் பண்ணும் கேரக்டரில் நடிக்கிறேன். திருமணத்திற்கு முன்பு அவரை காதலிக்கும் நான், பின்னர் திருமணமான பிறகு அவருடன் நட்பாக பழகி வருகிறேன். ரொம்ப இயல்பான கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும், என் பெயர் மீனாட்சி என்ற தொடரில் நெகடீவ் ரோலில் நடித்தேன். அதைப்பார்த்து நேயர்கள் திட்டினாலும், பெரிதாக ரீச் ஆனது. அதோடு எனக்கும் வில்லி வேடங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் அதிகம். அதனால் என்னையுமறியாமல் அந்த மாதிரியான வேடங்களில் அதிக ஈடுபாட்டுடன் நடிப்பேன். சீரியல் வில்லிகளை திட்டித்தீர்க்கும் நேயர்கள் இப்போது திட்டுவது குறைந்து விட்டது. வில்லிகளின் நடிப்பையும் ரசிக்கிறார்கள். அந்த அளவுக்கு பெண்கள் மனப்பக்குவம் பெற்று விட்டனர்.
அதோடு, சினிமாவில் பசங்க-2 உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் சில படங்களில் நடிக்கிறேன். தேவதர்ஷினி போன்று ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அவர் அளவுக்கு எனக்கு காமெடி வராது என்றாலும், செண்டிமென்ட், எமோசனல், நெகடீவ் என மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து ஒரு நல்ல குணசித்ர நடிகையாக சினிமாவில் இடம்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், சீரியலில் நடித்துக் கொண்டே நல்ல சினிமா வாய்ப்புகளுக்காகவும் முயற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் பிரியா.
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:26 PM
#423
Moderator
Diamond Hubber
டைரக்டர் பாலாவின் 25 நிமிடத்துக்கு சொந்தக்காரி நான்! -நடிகை ஜீவிதா
பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய, என்று தணியும் படத்தில் நாயகியாக நடித்தவர் ஜீவிதா. இவருக்கு சமீபத்தில் டைரக்டர் பாலாவின் புதிய படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. பாலா படம் என்றதும் சொல்ல முடியாத சந்தோசத் துடன் ஓடோடிச்சென்று அவரை சந்தித்துள்ள ஜீவிதா, டைரக்டர் பாலாவின் 25 நிமிடத்துக்கு சொந்தக்காரி நான் என்று நினைக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.
அந்த சந்திப்பு குறித்து ஜீவிதா கூறும்போது, டைரக்டர் பாலா சார் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் இன்ப அதிர்ச்சியடைந்தேன். அவரை சந்திக்க காலை 11 மணிக்கு வரச்சொல்லியிருந்தனர். ஆனால் நான் ஆர்வத்தில் 10.30க்கே சென்று விட்டேன். ஆனால் பாலா சார் நான் போய் இரண்டறை மணி நேரம் கழித்துதான் வந்தார். வந்தவர் என்னைப்பார்த்ததும், ஸாரிம்மா உங்களை காக்க வச்சிட்டேன் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எவ்வளவு பெரிய டைரக்டர் அவர். அவரது வருகைக்காக எத்தனை மணி நேரமென்றாலும் காத்திருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு, பெறவாயில்ல சார் என்றேன்.
அதையடுத்து, என்னைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தவர், காபி சாப்பிட சொன்னார். இப்பத்தான் சார் சாப்பிட்டேன் என்றேன். எனக்காக இன்னொரு காபி சாப்பிடுங்க என்றார். பின்னர் சிகரெட் பிடிக்க முற்பட்டபோது, உங்களுக்கு சிகரெட் புகை ஒன்றும் அலர்ஜி இல்லியே என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்ன பிறகுதான் சிகரெட் பிடித்தார். பின்னர், நீங்கள் பார்ப்பதற்கு என் பேமிலி டாக்டர் மாதிரி இருக்கிறீர்கள் என்றவர், இப்போது நான் இயக்கும் படத்தில் ஒரு பிளஸ்-2 படிக்கும் பெண்ணுக்கு அம்மா வேடம் இருக்கிறது. அதை நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பீல் பண்ணுகிறேன் என்றார்.
அதைக்கேட்டு, இப்போதே நான் அவ்வளவு வயதான அம்மாவாக எப்படி சார் நடிப் பது என்றேன். அதற்கு பெறவாயில்லை அப்படின்னா வில்லனின் மனைவியாக நடிக்கிறீர்களா? என்று சொன்னவர், ஆனால் அதில் உங்களுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இருக்காது. உங்களது திறமையை வீணடிக்க விரும்பவில்லை. நன்றாக யோசித்து முடிவெடுங்கள். உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை என்றார். அப்போது நான், சார் இப்ப நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று சொல்லவில்லை. மாறாக, உங்கள் படம் என்பதால் அழுத்தமான அக்கா, அண்ணி வேடங்கள் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றேன்.
.அதற்கு, அந்த மாதிரி வேடம் இந்த படத்தில் இல்லை. நான் சொன்ன இந்த கேரக்டர்களில் ஏதேனும் ஒன்றில் நீங்க நடிப்பதாய் இருந்தால் உங்கள் கேரக்டரை இன்னும் பெரிதாக்குகிறேன். அப்படி நடிக்க விரும்பவில்லை என்றாலும் பெறவாயில்லை. அடுத்து நான் உங்களுக்காக ஒரு கதை ரெடி பண்ணுகிறேன். அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வைக்கிறேன் என்று சொன்னார்
அப்படி அவர் சொன்னது எனக்கு பெரிய சந்தோசமாகி விட்டது. எவ்வளவு பெரிய டைரக்டர் அவர். என்னிடம், உனக்கான வேடம் இதுதான். முடிந்தால் நடி, இல்லையேல் போய் விடு என்று சொல்லாமல் என் விருப்பத்தை தெரிந்து கொண்டு என்னை கட்டாயப்படுத்தாமல் பேசினார். அதோடு, அடுத்து உனக்காக ஒரு கதை ரெடி பண்ணுகிறேன் என்றார். இதையெல்லாம் நினைத்துப்பார்த்தால் நடப்பது நனவா இல்லை கனவா என்றே எனக்கு புரியவில்லை. என் வாழ்க்கை யில் டைரக்டர் பாலாவை சந்தித்த அந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அவர் படத்தில் நடிக்கிறேனோ இல்லையோ அவரை சந்தித்த அந்த 25 நிமிடங்கள் என் வாழ்நாளில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஜீவிதா.
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:28 PM
#424
Moderator
Diamond Hubber
திக்குவாய் கேரக்டர் சிம்பத்தி ஏற்படுத்தியுள்ளது - ராமச்சந்திரன்
சின்னத்திரைகளில் ஏராளமான சீரியல்களில் நடித்திருப்பவர் ராமச்சந்திரன். பெரும்பாலும் நெகட்டீவ் வேடங்களாக நடித்துள்ள அவர், தற்போது ராதிகாவின் வாணி ராணி தொடரில் பாசிட்டீவான திக்குவாய் கேரக்டரில் நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
வாணி ராணி தொடரில் ராதிகாவின் சம்மந்தி வேடத்தில் நடித்து வருகிறேன். வழக்கமாக நெகட்டீவ் ரோல்களிலேயே நடித்து வந்த நான் இதில் ஒரு பாசிட்டீவான அப்பா வேடத்தில் நடிக்கிறேன். இந்த கேரக்டரின் சிறப்பு தன்மை என்னவென்றால், திக்குவாய் கேரக்டர். முதலில் இந்த கேரக்டர் பற்றி என்னிடம் சொல்லவில்லை. ஸ்பாட்டுக்கு சென்ற பிறகுதான் திக்குவாய் கேரக்டர் என்பதை சொன்னார்கள். எனக்கும் அது ரொம்ப புதுசாக இருந்தது. இப்போது அந்த கேரக்ட ருக்கு நேயர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளனர். இந்த கேரக்டர் சிம்பத்தி ஏற்படுத்தியுள்ளது. நெகட்டீவ் இமேஜை ஓரங்கட்டி அய்யோ பாவம் என்று நேயர்கள் சொல்லும் அளவுக்கு எனது இமேஜை மாற்றியுள்ளது. நெகட்டீவ் வேடங்களில் கெத்தாக நடிப்பது ஒரு டைப்பாக இருந்தபோதும், இயல்பாக வித்தியாசமான ஒரு கேரக்டர் அமைந்தது ரொம்ப சந்தோசமாக உள்ளது.
ராதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்து சொல்ல வேண்டுமென்றால், இந்த சீரியலில் அதிக காட்சிகள் ராதிகாவுடன் தான் நடித்து வருகிறேன். முதலில் ராதிகாவுடன் நடிக்கிறோமே என்பது யோசனையாகத்தான் இருந்தது. முக்கியமாக, ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அவங்க முதலாளி, பெரிய சீனியர் ஆர்ட்டிஸ்ட். மிகச்சிறந்த நடிகை. எந்த கேரக்டராக இருந்தாலும் சிறப்பாக செய்யக்கூடிய நடிகை. அந்த கேரக்டராகவே மாறி பண்ணக்கூடியவர். அந்த மாதிரி ஒரு திறமையுள்ள ஆர்ட்டிஸ்டுடன் நடிக்கும்போது ஜாக்கிரதையாகத்தான் நடிக்க வேண்டும். அந்த வகையில், சரியாக பண்ண வேண்டும் என்று கவனமாக நடித்து வருகிறேன்.
மேலும், இந்த வாணி ராணி தொடரில் ஆயிரமாவது எபிசோடில்தான் என்ட்ரி ஆனேன். தொடர்ந்து கேரக்டர் நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது மக்களிடம் நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது. ஆர்ட்டிஸ்டுகளுக்கு பிராண்ட் கிடையாது. திக்குவாய் பண்ணும்போது ஒரு காமெடியாகவும் பண்ணலாம். சீரியஸ் வேடங்களில் நடித்து விட்டு இப்போது ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்து ரசிகர்களை கவருவது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இதற்கு முன்பு இந்த மாதிரி மாற்றுத்திறனாளி வேடங்களில் நான் நடித்ததில்லை. ஆனால் இனிமேல் நிறைய மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இப்போது வெரைட்டியான வேடம் கிடைத்தாலும் லட்டு மாதிரி எடுத்துக்கொண்டு நடிப்பேன் என்கிறார் ராமச்சந்திரன்.
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:29 AM
#425
Moderator
Diamond Hubber
வாழ்நாள் முழுக்க நடித்துக்கொண்டிருக்க வேண்டும்!- நடிகை நேத்ராஸ்ரீ
ஜெயா டிவியில் ஒளிபரப்பான காலபைரவர் சீரியலில் அறிமுகமானவர் நடிகை நேத்ராஸ்ரீ. தொடர்ந்து தென்றல், பொன்னூஞ்சல், சபீதா என்கிற சபாபதி போன்ற சீரியல்களில் நடித்தவர், தற்போது வாணி ராணி, தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். இதுதவிர நேத்ரா, புயலாய் கிளம்பி வர்றோம் உள்பட சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக நேத்ராஸ்ரீ அளித்த பேட்டி...
மீடியாவில் உங்களது என்ட்ரி குறித்து சொல்லுங்கள்?
2011-ல் சென்னை கிண்டியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போது தினமும் எண்ணூரில் இருந்து கிண்டிக்கு ரயிலில் செல்வேன். அப்போது எனது 6 வருட ரயில் நண்பரான மீஞ்சூரைச் சேர்ந்த டைரக்டர் ராஜீவ் பிரியன் மோகன்ராஜ் தான் இயக்கும் சீரியலில் என்னை நடிக்க அழைத்தார். எனக்கு நடிக்கத் தெரியாது என்று மறுத்தேன். ஆனால் அவர் உன்னிடம் நடிப்புத்திறமை உள்ளது. உன்னால் முடியும் என்று சொல்லி ஜெயா டிவிக்காக தான் இயக்கிய காலபைரவர் சீரியலில் நடிக்க வைத்தார். அந்த சீரியலில் சங்கவி நாயகியாக நடித்தார். அதில் எனது நடிப்பு பேசப்பட்டதால், அடுத்தடுத்து பல சீரியல்கள் கிடைத்தன. இப்போது சீரியல்களில் பிசியாக இருக்கிறேன்.
எந்த மாதிரியான கேரக்டர்களில் நடித்திருக்கிறீர்கள்?
காலபைரவர் சீரியலில் வில்லியாக நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. அதில் எனது நடிப்பைப்பார்த்து விட்டு தென்றல், பொன்னூஞ்சல், சபீதா என்கிற சபாபதி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தன. பாசிட்டீவ், நெகடீவ் ரோல்களில் கலந்து நடித்தேன். தற்போது வாணி ராணியில் சப்-இன்ஸ்பெக்டராகவும், தாமரையில் இன்ஸ்பெக்டராகவும் நடித்து வருகிறேன். இதில் வாணி-ராணியில் பிரபல நடிகையான ராதிகா மேடத்துடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது. அதை பெருமையாக கருதுகிறேன். மற்றபடி, எந்தமாதிரி வேடமாக இருந்தாலும் எனது திறமைக்கு தீனி போடும் வேடங்களாக இருக்க வேண் டும் என்று எதிர்பார்க்கிறேன்.
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:39 AM
#426
Moderator
Diamond Hubber
மீண்டும் நடிக்க வந்த மகிமா
பொம்மலாட்டம் தொடரில் வந்த சிவகாமி சித்தியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அந்த கேரக்டரில் நடித்தவர் மகிமா. அதன்பிறகு அழகி உள்ளிட்ட சில தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். பெரும்பாலான தொடர்களில் அண்ணி, அக்கா, அத்தை மாதிரியான குணசித்திர கேரக்டர்களில் நடித்து வந்தார். திடீரென சின்னத்திரையிலிருந்து விலகி இருந்தார்.
குழந்தைகளுக்கு அம்மாவாகவும், கணவருக்கு நல்ல மனைவியாகவும் இருந்து குடும்ப பொறுப்புகளை சுமக்க வேண்டியது இருந்தால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமல்ல சினிமாவிலும் அம்மா கேரக்டரில் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.
"குடும்ப பொறுப்புகள் சிலவற்றை முடிக்க வேண்டியது இருந்ததால் சீரியல்களிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தேன். இப்போது மகன் கல்லூரிக்கு போகிறான். அவனே "விரும்பம் இருந்தா நடிம்மா" என்ற ஊக்கப்படுத்தினான். அதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். சின்னத்திரையில் மட்டுல்ல சினிமாவிலும் அம்மாவாக நடிக்க இருக்கிறேன். இதற்காக கதை கேட்டு வருகிறேன். விரைவில் சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் என்னை பார்க்கலாம் என்கிறார்" மகிமா
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:42 AM
#427
Moderator
Diamond Hubber
திரிஷாவின் தீவிர ரசிகை நான்! -நடிகை ஸ்ருதி -
திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற தங்கை வேடத்தில் அறிமுகமானவர் ஸ்ருதி. அதையடுத்து தனுஷின் கொடி படத்தில் அனுபமாவின் தங்கையாக நடித்தவர், இப்போது வாணி ராணி தொடரில் ராதிகாவின் மருமகளாக நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக ஸ்ருதி அளித்த பேட்டி...
நாதஸ்வரம் தொடரில் ஒரு சாப்ட்டான தங்கை வேடத்தில் நடித்தேன். அந்த வேடம் குடும்பப் பெண்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத் தது. ஐந்து வருடங்கள் அந்த சீரியலில் நடித்துவிட்டு ஒரு வருடம் பிரேக் கொடுத்தேன். பின்னர் கொடி படத்தில் அனுபமாவின் தங்கையாக நடித்தேன். அதையடுத்து இப்போது வாணி ராணியில் ராதிகா மேடத்தின் மருமகளாக நடிக்கிறேன். இதுவரை சாப்ட்டாக இருந்த எனது கேரக்டர் இப்போது நெகடீவாக மாறத்தொடங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் என்னிடமிருந்து மாறுபட்ட பர்பாமென்ஸை எதிர்பார்க்கலாம்.
மேலும், சீரியல்களில் அமைதியான அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித் துள்ள நான், நிஜத்தில் ஜாலி டைப். அனைவரிடமும் கலகலப்பாக பேசுவேன். அதோடு, எனது பெற்றோர் ஆசிரியராக பணியாற்றுகிறார்கள். அதனால் நான் நடிக்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்தபோது, எக்காரணம் கொண்டும் படிப்பை விடக்கூடாது. படித்துக்கொண்டேதான் நடிக்க வேண்டும் என்றனர். அதனால் அவர்களது விருப்பப்படியே படிப்புக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் நடித்து வருகிறேன். அதோடு, கோவையில் நான் படிக்கும் கல்லூரி கரஸ்பாண்டன்ட் நான் நடிப்பதற்கு அனுமதி கொடுத்து வருகிறார். நாதஸ்வரம் சீரியலில் நான் நடித்ததில் இருந்தே அவரும் எனது ரசிகையாகி விட்டார். எனது பெற்றோரைப்போலவே அவரும் என்னை உற்சாகப்படுத்துகிறார். எனது பெற்றோரும், கரஸ்பாண்டன்டும் எனது நடிப்பில் உள்ள நிறைகுறைகளையும் சுட்டிக்காட்டி எப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் ஐடியாவும் கொடுக்கிறார்கள். அது எனக்கு பெரிய உதவியாக உள்ளது. அந்த வகையில், கடந்த 7 வருடங்களாக படித்துக்கொண்டே நடித்து வருகிறேன்.
மேலும், சீரியல்களைப்பொறுத்தவரை நெகடீவ் ரோல்களில் நடித்தால் நேயர்கள் திட்டித்தீர்ப்பார்கள். ஆனால் அந்த மாதிரி வேடங்களில்தான் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருக்கும். அது ஆடியன்ஸ் மனதிலும் பதியும். அதனால் நான் அதிரடியான நெகடீவ் வேடங்களையும் வரவேற்கிறேன். சமீபகாலமாக சீரியல்களில் பழிவாங்கும் காட்சிகள் குறைந்து வருகிறது. இது நல்ல விசயம். அதேபோல் முழுக்க முழுக்க பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையும் இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது. அது மட்டுமின்றி, தரமான கதைகளில் தயாராகி வரும் தமிழ் சீரியல்களில் தற்போது பிரமாண்டமும் அதிகரித்துள்ளது. சில சீரியல்களை சினிமா அளவுக்கு எடுக்கிறார்கள். அதைப்பார்க்கையில் சந்தோசமாக உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் சீரியல்களின் தரமும், பிரமாண்டமும் இன்னும் பன்மடங்கு உயரும் என்று தெரிகிறது. குறிப்பாக, இந்தி டப்பிங் சீரியல்கள் தமிழ்நாட்டில் நிலைக்க முடியாது. காரணம், அவற்றில் யதார்த்தம் இல்லை. தமிழ் சீரியல்களில்தான் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாக உள்ளன. அதனால்தான் சீரியல் பார்க்கும் பெண்மணிகள் சீரியல்களோடு ஒன்றி விடுகிறார்கள்.
.அதோடு, தனுஷின் கொடி படத்தில் நடித்த எனக்கு சினிமாவிலும் நல்ல ஹோம்லியான, மாடர்ன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. முக்கியமாக, திரிஷா சினிமாவில் நடிப்பது போன்று நடிப்பேன். நான் அவரது தீவிரமான ரசிகை. சினிமாவில் நான் நடிகையானால் அவரைத்தான் பின்பற்றுவேன். அவருடன் கொடி படத்தில் ஒரேயொரு சீனில்தான் நடித்தேன். என்றாலும், திரிஷா நடித்த படத்தில் நானும் நடித்தது பெருமையாக உள்ளது. திரிஷா மாதிரி சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும். கதைக்கு தேவையான அளவு ரசிக்கும் வகையில் கிளாமரை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையெல்லாம் உள்ளது. அதோடு, தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாட வேண்டும் என்றை ஆசையும் உள்ளது. காலம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஸ்ருதி.
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:43 AM
#428
Moderator
Diamond Hubber
சீரியல் வாய்ப்பு குறைந்து விட்டதால் சினிமாவில் நடிக்கிறேன்! -நிலானி
சின்னத்திரையில் பல சீரியல்களில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நிலானி. தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெல்ல திறந்தது கதவு சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு, ஆண்தேவதை, சரவணன் இருக்க பயமேன், மன்னர் வகையறா ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக நிலானி அளித்த பேட்டி...
தற்போது நான் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மெல்ல திறந்தது கதவு சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். அதோடு, சமுத்திரகனியின் ஆண்தேவதை, விமல் நடிக்கும் மன்னர் வகையறா, உதயநிதியின் சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கிறேன். அதனால் இனிமேல் சினிமா ரசிகர்களுக்கும் நான் நன்கு பரிட்சயமான நடிகையாகி விடுவேன். இந்த படங்களில் போலீஸ், வில்லனின் மனைவி, ஹீரோவின் முக்கியமான தோழி என கவனிக்கப்படும் கேரக்டர்களில் நடித்து வருகிறேன். ஏற்கனவே சீரியல்களில் நடித்து நல்ல அனுபவம் இருப்பதால் முடிந்தவரை கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறேன்.
மேலும், நான் இப்படி சினிமாவில் நடிப்பதற்கு முக்கிய காரணம், சீரியல்களில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்து வந்த நான், இப்போது மெல்ல திறந்தது கதவு சீரியலில் மட்டுமே நடிக்கிறேன். சின்னத்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் சினிமாவிலும் நடித்து வருகிறேன். அதோடு, சீரியல்களில் நடித்தது போன்று சினிமாவிலும் குடும்பப் பாங்கான வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன். அதோடு மாடர்ன் கேரக்டர்களிலும் நடிப்பேன். ஆனால், கிளாமர் மற்றும் ஆபாச வசனங்கள் பேசி நடிக்க மாட்டேன். சீரியல்களில் நடித்து சம்பாதித்த நல்ல நடிகை என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சினிமாவிலும் தரமான கேரக்டர்களுக்கே முதலிடம் கொடுப்பேன் என்கிறார் நிலானி.
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:45 AM
#429
Moderator
Diamond Hubber
தமிழ்நாட்டு பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள்! -சமையல் மந்திரம் திவ்யா
சமையல் மந்திரம், ஐ அந்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் திவ்யா. அது தவிர, சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார்
.தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
சமையல் மந்திரம், ஐ அந்தரங்கம் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதை விமர்சிக்கிறார்கள். 50 சதவிகிதத்தினர் ஏற்றுக்கொண்டபோதும், 50 சதவிகிதத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன். அதோடு, இதை நான் ஒரு விழிப்புணர்வாகத்தான் பார்க்கிறேன். இன்னும் நம்முடைய மக்களிடையே செக்ஸ் குறித்த சந்தேகங்கள் நிறையவே உள்ளது. அதனால் அந்த மாதிரி நபர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு ஒரு தீர்வு சொல்வதை ஒரு சமூக சேவை போன்றுதான் நான் கருதுகிறேன். வெளிநாடுகளில் இதுபோன்ற விசயங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில இன்னும் செக்ஸை தவறான விசயமாகவேதான் பார்க்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
மேலும், இந்த நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக உடைகளை எக்ஸ்போஸ் செய்வதாகவும் சொல்கிறார்கள். ஆனால் நான் அதிகமாக செய்யவில்லை. அந்த நிகழ்ச்சியில் அப்படித்தான் பங்கேற்க வேண்டும் என்பதால் அப்படி உடையணிகிறேன். என்னைப்பொறுத்தவரை அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இதில் சமையல் மந்திரம் நிகழ்ச்சி முடிந்து விட்டது. இப்போது ஐ அந்தரங்கம் நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்று வருகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்கு கிடைத்ததை நினைத்து மனதளவில் திருப்தியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.
இந்த நிகழ்ச்சி தவிர தற்போது திரிஷா நடிக்கும் மோகினி படத்தில் மயில்சாமிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். காமெடி கலந்த வேடம். அதேபோல், இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ள நான் இப்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் வள்ளி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நான் ரொம்ப போல்டான பெண். ஆனால் இந்த தொடரில் சாப்ட்டான டீக்கடை நடத்தும் பெண்ணாக நடிக்கிறேன். கிராமத்து வேடம் என்பதால் அந்த கேரக்டருக்காக என்னை முழுமையாக மாற்றி நடிக்கிறேன். அதனால் என்னை நேரில் பார்ப்பவர்களுக்கு அந்த சீரியலில் நடித்திருப்பது நான்தான் என்று சொன்னால் நம்பவே மாட்டார் கள். அந்த அளவுக்கு அந்த கெட்டப்பில் மாறிப்போயிருக்கிறேன்.
மேலும், இந்த பேட்டிவாயிலாக நான் இன்னொரு விசயத்தையும் பதிவு செய்தாக வேண்டும். அதாவது, சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, பீட்டா அமைப்பைச்சேர்ந்த ராதாராஜன் என்ற பெண்மணி இளைஞர்களின் அமைதிப்போராட்டத்தை ப்ரீ செக்ஸ் என்ற வார்த்தையை முன்வைத்து கொச் சைப்படுத்தியிருந்தார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். அவர்களைப்பார்த்து அப்படியொரு வார்த்தையை அவர் சொன்னதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. துடித்துப்போய் விட்டேன். அதனால் அதுகுறித்து அப்போதே ஒரு வீடியோ வெளியிட நினைத் தேன். அந்த அளவுக்கு அவரது வார்த்தை என்னை கடும் கோபத்துக்கு ஆளாக்கி விட்டது என்கிறார் சமையல் மந்திரம் திவ்யா.
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:47 AM
#430
Moderator
Diamond Hubber
ஹீரோ எனது டார்க்கெட் இல்லை - ‛அது இது எது ஜார்ஜ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் ஜார்ஜ். குறிப்பாக, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற எபிசோடில் நடித்த பிறகு தனுஷின் மாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற அவர், தற்போது மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தான் நடிகரானது பற்றி ஜார்ஜ் கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் மிகுதி. அதனால் பள்ளிகளில் நடக்கும் நாடகங்களில் நடித்து வந்தேன். எனது நடிப்புத்திறமையைப்பார்த்து எனது பெற்றோர் என்னை உற்சாகப்படுத்தினர். எனது அம்மா ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா போன்ற நடிகனாக வேண்டும் என்பார். எனது தந்தையோ மணிவண்ணன், ஜனகராஜ் போன்று நடிகராக வேண்டும் என்று சொல்வார். இப்படி பெற்றோரே என்னை உற்சாகப் படுத்தியதால் நடிப்பில் எனக்கான ஆர்வம் அதிகரித்தது.
அதனால் விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் கான்சப்ட் ரைட்டராக என்ட்ரி கொடுத்தேன். பின்னர் அது இது எது நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கினேன். பல நடிகர்களின் கெட்டப்பில் நடித்தபோதிலும் மணிவண்ணன் கெட்டப்பில் நடித்த போது எனக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அதையடுத்து, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -என்ற எபிசோடில் எனது நடிப்பைப்பார்த்த இயக்குனர் பாலாஜிமோகன், மாரி படத்தில் என்னை நடிக்க வைத்தார்.
அதன்பிறகு இப்போது விக்ரம் வேதா, நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்ல, ஜூலியும் 4 நண்பர்களும் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளேன். அதனால் இப்படங்கள் வெளியாகும்போது சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் கிடைக்கும். அதோடு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது எனது டார்க்கெட் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்கவே ஆசைப்படுகிறேன். மேலும், என்னதான் சினிமாவில் பிசியானாலும் சின்னத்திரையில் எப்போதும் போல் எனது பயணம் தொடரும் என்று கூறும் அது இது எது ஜார்ஜ், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அது எனக்கு ஆத்மதிருப்தியை கொடுக்கிறது என்கிறார்.
நன்றி: தினமலர்
Bookmarks