Page 194 of 401 FirstFirst ... 94144184192193194195196204244294 ... LastLast
Results 1,931 to 1,940 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1931
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் ராஜேஷ் சார்,

    வானொலி அறிவிப்பாளர்கள் பற்றிய தொகுப்பு அருமை. ஆள் இந்தியா ரேடியோவில் (முந்தைய பெயர் ஆகாசவாணி) சரோஜ் நாராயணசாமி போலவே குரலாலேயே பிரபலமான இன்னும் சிலர்.. விஜயம், சாம்பசிவன், சுப்ரமணியம், பத்மநாபன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஜெயம்கொண்டான், கூத்தபிரான் போன்றவர்கள். இவர்களில் ஜெயம்கொண்டான் சில திரைப்படங்களிலும் நடித்ததால் அவர் முகம் பரிச்சயம். கூத்தபிரானை ஒரேயொருமுறை கருப்பு வெள்ளை கால தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் குரலால் மட்டுமே அறிமுகம்.

    நல்ல தொகுப்புக்கு நன்றி...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1932
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    PR வரலக்ஷ்மி அந்நாட்களில் அபிமான நடிகை .சினிமா பைத்தியம் திரை படத்தில் கான்வென்ட் ஸ்டுடென்ட் ஆக வந்து ஜெயசித்ரா உடன் சாக்லேட் சண்டை போடுவார் . மலை நாட்டு மங்கை (நீளமான.....) கடல் அலையே
    சசி குமார் ஜோடி


    புது வசந்தம் படத்திலும் நன்றாக நடித்து இருப்பார் . ஆனால் உடும்பு கொஞ்சம் பூசின உடம்பு

    ஹிந்து நாள் இதழில் அவர் கொடுத்த 2013 பேட்டி ஒன்று

    Can you name five of your films you would like your grandchildren to watch?

    Vazhaiyadi Vazhai, Ore Sakshi, Deivamsham, Shankarlal and Kaadu (Malayalam).
    gkrishna

  4. #1933
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீத் கண்ணே பாப்பா பதிவுகளுக்கு நன்றி கிருஷ்ணா சார்.. மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறிவிடைபெறுவது கே.எஸ். ராஜா.. மயில்வாகனம் மோஸ்ட்லி பாட்டும்பதமும், இசையும் கதையும் சொல்பவர் என நினைக்கிறேன்.. வாழ்க்கையில் நல்லவை செய்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் என ஒரு வாக்கியம் எடுத்து அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் ஆரம்பிக்குமொரு பாடல் போடுவார்கள் மாலை 5 டு 5.30 என நினைவு..இசையும் கதையும் மோஸ்ட்லி 5.30 ட்டு 6.00 அவன் மனதில் துயரம் அடிக்கிறது காதலில் தோல்வி அடைந்துவிட்டான்..அவன் மனம் பாடுகிறது என்று சொல்லி உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டுப் போடுவார்கள்..

    இசைக்களஞ்சியம் பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் 4 டு 4.30 கண்டிப்பாகக் கேட்டுவிடுவேன்..அது பி.ஹெச்.அப்துல் ஹமீதாய் இருக்கும்..ம்ம்
    ராஜேஷ் முக நூலில் இட்ட கட்டுரை அருமை..தொடருங்கள்.. நன்றி

    கண்ணே பாப்பாவில் சத்திய முத்திரை கட்டளை இட்டது பாட்டு எதற்காகவோ எடுத்து வைத்திருந்தேன்.. பார்த்தால் படப்பாடல் எஸ்வி சார் படம் பற்றி கிருஷ்ணா ஜி நன்றி

    எஸ்.வி.சார் குமுதம் பக்கங்கள், மதுரை தியேட்டர்கள் என தூள் பரத்துகிறீர்கள்..மிக்க நன்றி..
    வாசு சார் வழக்கம் போல கலக்குகிறார்..உடுப்பி லஷ்மி நாராயணன் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி

    சுமதி என் சுந்தரி நான் மிகவும் ரசித்த ஒரு படம்..(ஆனால் சினிமாவே தெரியாத ஒரு ஆள் என்பதை ஏனோ என் மனம் ஏற்கவில்லை..அதுவும் கதைகள் நாவல்கள் ரசித்துப் படிக்கும் கதா நாயகன்)..பாடல்கள் ந.தி, லொகேஷன் மிக அழகு.. ஜெயலலிதா சற்றே பூசினாற் போல இருப்பார்.. இருந்தாலும் சில இடங்களில் தவிப்பதும் சில ரொமான்ஸ் பார்வைகளும் நன்றாக இருக்கும்..

    பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ
    ஒரு தரம் ஒரே தரம்
    ஓராயிரம் நாடகம் ஆடினாள்.. ரொம்பப் பிடிக்கும்
    ஆலயமாகும் மங்கை மனது பாட்டு மற்றவைகளைக் கம்பேர் செய்கையில் கொஞ்சம் ஸ்லோதான்..அதுவும் பட ஆரம்பத்தில் வேறு யாருடனோ ஜெயலலிதா பாடுவது போல வந்த போது இண்ட்ரஸ்ட் இல்லை.. அதைப்பற்றிய கார்த்திக் சாரின் பதிவுக்கு நன்றி + ஒரு ஓ.. சு.எ.சு பிற்காலத்தில் பார்த்த போது என் சகோதரிசொன்னஒரு தகவல்.. ந.தியின் ஷர்ட் போல கட்டம்போட்ட சட்டை அந்தக் காலகட்டத்தில் ஃபேஷனாக இருந்ததாம்..

    அப்புறம். மதுரை தியேட்டர்கள்..எழுதணும்.. அப்புறம்வரேனே..

  5. #1934
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வினோத் சார், அசத்தல் ஆவணப்பதிவுகளுக்கு மிக்க நன்றி. கண்ணே பாப்பா, துணைவன் மற்றும் குமுதம் ஆவணங்கள் மிக அருமை. இதன் மூலம் வினோத் ஸ்டைல் என்ற புதிய முறையைத் துவங்கியுள்ளீர்கள்.

    பாடலைப்பற்றிய விளக்கங்கள் எழுதி வீடியோவைப் பதிவிடுவது ஒரு வகை.

    பாடலின் ஸ்டில்களை போட்டு வீடியோவைப் பதிவிடுவது ஒரு வகை.

    எதுவுமே எழுதாமல் வெறும் வீடியோவை மட்டும் இணைப்பது இன்னொருவகை.

    இவற்றிலிருந்து வேறுபட்டு, படத்தின் விளம்பர ஆவணத்தைத் தந்து கூடவே வீடியோவைப் பதிவிடுவது புதியவகை. இதுதான் வினோத் ஸ்டைல்.

    அருமை... அற்புதம்... அட்டகாசம்... அசத்துங்கள்.

  6. #1935
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வி.எஸ். ராகவன்.. கண்பார்த்த ஜாடையிலே காவியம் கண்டேன் என்று செளகார் ஜானகி உருக்கமாகப் பாடிக் கொண்டிருக்க கோடுபோட்ட சட்டையுடன் கத்தியைக் கைகளில் வைத்த படி அந்த உருவம் நெருங்க, செளகார் திரும்பிப் பார்க்காமலேயே – ஹேய் டாக்டர் நீங்கள் தான் எனக்குத் தெரியும் ..என் உயிரையும் வாங்கிவிடுங்கள் என்று சொல்ல – என்ன என்னைப் பற்றிப் பேசுகிறாய் என்ற படி டாக்டரான வீணை எஸ்.பாலச்சந்தர் மாடியிலிருந்துகுரல் கொடுக்க.. கத்தியுடன் வந்தது யார் என அதிர்ச்சியுடன் செளகார் பார்த்தால்… வி.எஸ். ராகவன்.. வித்தியாசமான வில்லனாக நடு இரவில் (அச்சோ சஸ்பென்ஸ் சொல்லிட்டேனே)
    அதே போல் பட்டணத்தில் பூதத்திலும் வில்லன்.. எதிர் நீச்சலில் பேப்பர் மாமா..இருகோடுகளில்..அவ அம்மா போட்டா ஒரு கோடு அதுக்குப் பக்கத்துல உன்னைப் பெரிய கோடாக்கிக் காட்டறேம்மா எனச் சொல்லும் வெறி.. அது போல க்ளைமாக்ஸில் ஜெமினியின் குழந்தை தானே என நீச்சல் குளத்தில் உதவி செய்யாமல் திரும்பும் அலட்சியம்..விஎஸ் ஆர் முத்திரை..

    இம்சை அரசனில் – இரட்டைக் குழந்தை என்றால் கதை இப்படித் தான் இருக்கவேண்டும் என்ற சிரிப்பு.. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பால குமாராவில் ஹீரோ “தண்ணி’ தாகம் எடுத்துத் தவிக்க – பார்த்தால் எல்லாவற்றையும் இவர் குடித்திருப்பார்..

    சோடை போன படங்கள் என்றுஎதுவுமே இல்லை..பாரேன் என் காரை விக்கச் சொல்லியிருந்தேன் நல்ல லாபத்துலயே வித்துட்டான் என பாலையாவிடம் சொல்வது (காதலிக்க நேரமில்லை) ம்ம் வாழையடி வாழை நினைவிலில்லை.. ஒரு நல்ல நடிகர்.. நீடூழி வாழட்டும்.. தாங்க்ஸ் கிருஷ்ணா சார்..

  7. #1936
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Ref gkkrishna பதிவு எண் 1881.


    கன்னட "Nanna Nee Gelalare" படத்தில் dubbing தான் "நெஞ்சில் ஆடும் பூ ஒன்று". கன்னட படம் வெளியானதே 1980-81இல். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் இசைஞானியின் முதல் படம். இந்த படம் ஓடியதே இளயராஜாவின் இசைகாக தான்.

    இதே படத்தில் கர்நாடக - மேற்கத்தி இசையில் ஒரு பாடல்.




    மேலும் "I love U" என்ற பாடல். இசையை மட்டும் கேளுங்கள். இசைஞானியின் இசையில் மயங்காதவர் இருக்கிறார்களா ?




    இசைஞானியின் இசையில் மற்றும் ஒரு கன்னட பாடல் SPB - SJ பாடிய பாடல் -
    படம் ஜென்ம ஜென்ம தா அனுபந்தா .


  8. Thanks gkrishna thanked for this post
  9. #1937
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    many thanks bala sir for your reference of nenjil aadum poo ondru
    gkrishna

  10. #1938
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நெஞ்சிலாடும் பூ ஒன்று கன்னடப் பாடல்களுக்கு தாங்க்ஸ் பாலா சார்.. நெஞ்சில் ஒரு முள்னு ஒரு படம்..அதுவும் ஹிந்திப் படத் தழுவலா வேறு மொழியா தெரியவில்லை பூர்ணிமா ஜெயராம் விதவை வேஷம் என நினைவு..

  11. #1939
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    எஸ்வி சார் அவர்கள் கண்ணகி படும் பாடு என்று பழைய ஆவணம் பதிபிட்டு இருந்தார் . அதில் கொடுங்கல்லுரம்மா என்ற படத்தில் ஜோதி லக்ஷ்மி கே ஆர் விஜயா நடித்து உள்ளதாக தகவல் உண்டு

    அந்த படத்தில் நடிகை கே ஆர் விஜயாவின் நிழல்படம்

    மஞ்சுபாஷினி ...........
    மஞ்சுபாஷினி மணியர வீணையில்
    மயங்கி உணருன்னதேதொரு ராகம் ..
    ஏதொரு கீதம் ...ஊஒ ஒஹ் ...

    மஞ்சுபாஷினி மணியர வீணையில்
    மயங்கி உணருன்னதேதொரு ராகம் ..
    ஏதொரு கீதம் ...ஊஒ ஒஹ்

    மஞ்சுபாஷினி ...



    Pictorial Review of the film
    Kodungallooramma ( 1968 )
    Director : Kunchacko
    Producer : Geetha Salam, Excel
    Songs : K J Yesudas, S Janaki, P Leela, Balamuraleekrishna
    ( Vayalar Ramavarma, Raghavan K )
    Cast : Prem Nazir and K R Vijaya (as Kovalan and Kannagi)
    Thikkurissi(rich merchant, Kovalan"s father)
    Jyothilakshmi ( as Madhavi )
    S P Pillai and Adoor Pankajam (Madhavi"s parents)
    Adoor Bhasi (Chinese trader)
    Script : Jagathy N K Achari

    The hit songs are
    "Manju bhashini .." (K. J. Yesudas)
    the soulful solo "Bhadradeepam ..." (S. Janaki)
    the group song led by M. Balamuralikrishna "Kodungallooramme ..."
    "Rithukanyakayude..." (P. Susheela)
    "Kaveri poompattanathil..." (Balamuralikrishna-Susheela )
    "Udayasthamanangale..." (Yesudas)
    "Narthaki nisha narthaki..." (Yesudas-P. Leela)

    The story of the film is based on legend of Kannagi, the central character of the epic Silapathikaram. Kannagi is eulogized as the epitome of chastity and is worshiped as goddess Pattini in Sri Lanka by the Sinhalese Buddhists and as Kodungallur Bhagavathy and Attukal Devi in Kerala. kovalan, the son of a wealthy merchant in Kaveripattinam, married Kannagi, a young woman of legendary beauty.

    The events related to Kannaki have high influence in the traditions and culture of Tamil Nadu and Kerala. After setting fire to Madurai City, Kannagi finally reached Kodungalloor and settled at Kodungallur Bhagavathy Temple south of Guruvayoor.

    gkrishna

  12. #1940
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    வாழையடி வாழை படத்தில் இடம்பெற்ற சீர்காழியின் பாடல் பற்றிய பதிவு நல்ல அலசல். இன்றைய ஸ்பெஷலுக்காக எடுத்துக்கொண்டோமே என்பதால் நிறைகளை மட்டும் அலசாமல், குறைகளை அதிகமாக விவரித்துள்ளீர்கள். நடுநிலையான நல்ல பதிவு.

    ஏனோ இப்படத்தில் சீர்காழியின் குரல் முத்துராமனுக்கு பொருந்தவில்லை என்பது உண்மை. 'அழகிருக்குது உடம்பிலே ஆசையிருக்குது மனசிலே' மற்றும் 'வெண்பளிங்கு மேடை கட்டி' பாடல்கள் நன்கு பொருந்தின. இவற்றைவிட அட்டகாசமாகப் பொருந்தியது 'காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை' பாடல்தான்.

    முதல் படமானாலும் மிகவும் அழகாக செய்திருந்தார் நம்ம பிரமீளா. இரண்டாவது படமான அரங்கேற்றத்தில்தான் அதிரடி பெர்பாமன்ஸ் கொடுத்து திணறடித்தார் (கே.பி.யின் தயவால்)

    இந்தப்பாடல் சுமார் ரகம்தான். குன்னக்குடியிடமிருந்து சமூகப் படங்களில் இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும். கதையும் அரதப்பழசு. இருந்தாலும் படம் நன்றாக ஓடி கே.எஸ்.ஜி.க்கு கல்லா நிரம்பியது.

    டியர் கிருஷ்ணாஜி,

    வாசு சாரின் இன்றைய ஸ்பெஷலுக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் பி.ஆர்.வரலட்சுமி மற்றும் வி.எஸ்.ராகவன் ஆகியோரின் பதிவுகளுக்கு நன்றி. (வி.எஸ்.ஆர். எந்த பேட்டியிலும் நமது சவாலே சமாளி படம் பற்றி சொல்லத்தவற மாட்டார்.).

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •