Results 11 to 14 of 14

Thread: இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்

Threaded View

  1. #14
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் தொடருக்கு வாழ்த்துக்கள் நல்கிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். தங்களது வாழ்த்துக்கள் மட்டும் போதாது. இதில் விவாதிக்கப்படும் செய்திகளைப் பற்றிய தங்களது கருத்துக்களை அவ்வப்போது பதிவேற்ற வேண்டுகிறேன்.

    குறிப்பாக தந்தை மடியில் எம்.ஜி.ஆர் புகைப்படம் தொடர்பாக யாருமே எந்த வித கருத்தையும் பதிவிடவில்லை. அது எம்.ஜி.ஆர் அல்ல. அவரது சகோதரி என்ற கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலோ அல்லது அது எம்.ஜி.ஆர் தான் என்றோ சரிவர தெரியாத நிலையில் அது குறித்த சந்தேகத்தை விலக்குவதற்கு பிரதீப் பாலு அவர்கள் திரிக்கு வந்து பதிலளிப்பார் என எதிர்பார்த்தேன். இது அவரது கவனத்திற்கு வந்ததோ இல்லையோ தெரியவில்லை.

    எனது சந்தேகம் இது தான். என் தம்பி எம்.ஜி.ஆர் , அருமைத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உடன் பிறந்த அண்ணன் திரு.எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் முதல் எழுத்துப் பணி. அதற்கு முன்னர் இந்தப் புகைப்படம் எந்த பத்திரிக்கையிலும் வந்ததாக எனக்கு நினைவில்லை. எனவே அந்தப் புகைப்படத்தை பத்திரிக்கைக்கு வழங்கியவர் அவராகத் தான் இருக்க முடியும். அப்படி இல்லையென்றாலும் தனது எழுத்துப் பணியின் முதல் பதிப்பை கண்டிப்பாக அவர் பார்த்திருக்க வேண்டும். அப்படி பார்க்கும் போது அவர் அந்தப் புகைப்படம் எம்.ஜி.ஆருடையது இல்லை என்ற அடிப்படையில் அதை அப்போதே மறுத்திருக்க வேண்டும். மேலும் இதயம் பேசுகிறது இதழில் 1984 வரை பலமுறை இந்தப் புகைப்படம் வெளிவந்திருக்கிறது. மக்கள் திலகத்தின் மறைவு வரை அந்தப் பதிவை யாரும் மறுக்கவில்லை. எனவே அது மக்கள் திலகத்தின் புகைப்படமாகத் தான் இருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. அந்தக் காலக்கட்டங்களில் பிரதீப் பாலு அவர்கள் சிறு குழந்தையாக இருந்திருக்கலாம். எனவே இது குறித்த தகவல்கள் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்பதே எனது கருத்து.
    அதே சமயத்தில் தந்தையை வழிபடும் எம்.ஜி.ஆர் தனது புகைப்படத்தையும் சேர்த்து வழிபடுவதாக அந்தப் புகைப்படம் ஒரு சிறு சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. புகைப்படத்துறையில் பலவிதமான தொழில் நுட்பங்களையும் அறிந்து வைத்திருந்த மக்கள் திலகம் சுலபமாக அதை நீக்கிவிட்டு தந்தையின் உருவத்தை மட்டும் படமாக்கி வழிபட்டிருக்கலாமே என்ற சந்தேகத்தையும் விலக்க முடியவில்லை.
    இது வரை மக்கள் திலகத்தின் தந்தையின் புகைப்படங்கள் இரண்டு மட்டுமே வெளிவந்திருக்கின்றன.

    Last edited by jaisankar68; 11th October 2015 at 08:11 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •