Quote Originally Posted by Aathavan Ravi View Post
மதிப்பிற்குரிய சிவா சார்...

மீண்டும் மகிழ்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகிறேன்.

அன்பு தெய்வம் நடிகர் திலகத்திற்கு தன்னை அர்ப்பணிக்கக் காத்திருக்கும் இந்த இந்த இருபதாம் திரியிலும்
தாங்களே சுடரேற்றியிருப்பது கண்டு...

மீண்டும் மகிழ்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகிறேன்.


மீண்டும் தாங்களே திரி துவக்கித்
தர வேண்டுமென்ற மிகச் சரியான கோரிக்கை விடுத்த அய்யா திரு. ராகவேந்திரா அவர்களுக்கும்,

அந்தக் கோரிக்கைக் குரல் தன் குரலே என அகமகிழ்ந்த திரியின்
நெறியாளர் அய்யா திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும்,

முடக்கப் புயலால் திரியின் ஒளிச்சுடர் அணைந்து விடாதபடி
ஒற்றை ஆளாய் கைகள் பொத்திக்
காத்ததோடு, திரியில் அதிகம் பதிவிட முடியாத எங்களின் பதிவுகளையும் எடுத்துப் பதிவிட்டு எங்கள் ஏக்கம் போக்கிய தங்களுக்கும்...

எனது இதய நன்றிகள்.


முன்னை விட முனைப்போடு, ஒற்றை ஆளாய் உங்களைத் தனித்து விடாமல் உங்களுக்கு உறுதுணையாக வலம் வர வேண்டும் என்கிற திடமான நினைப்போடு திரி -20 ல் என்
பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்
என்று உறுதியளிக்கிறேன்.

நல்வாழ்த்துகள்.. மீண்டும்.
வாழ்த்துக்கு நன்றி ஆதவன் அவர்களே.

தனித்துவிடாமல் உறுதுணையாய் வருவேன் என்ற தங்களின்,

அன்புக்கு நன்றி! நன்றி !நன்றி!