Ilakkanak kaathal

Topic started by Yatchani (@ 202.138.120.37) on Wed May 26 00:47:26 EDT 2004.
All times in EST +10:30 for IST.

இலக்கணக் காதல்
--------------------
நான் - நீ
தன்னிலை- முன்னிலைத் தவிர
மூன்றாம் நிலையில்லை

எனது- உனது
இரண்டு மெய்
ஒரே உயிர்

என் - உன்
எனக்கு- உனக்கு
கழித்துப் பார்த்தால்
மிஞ்சுவது உயிர்தான்.

இதில் குறில் நெடில்
என்ற குறைபாடில்லை.

என்னை நீ
உன்னை நான் நீ என
ஒரு சொல்லால்தானே
உவந்து அழைக்கிறோம்

ஒருமைக்கும்
பன்மைக்கும்
உள்ள வேறுபாட்டை
உணர்வது எப்போது?

இப்படி
நீயும் நானும்
வேறில்லை என்றபோது
உன்னை நான்
வதைப்பேனா
கோபிப்பேனா
வருத்துவேனா

என்னை
என் காதலை
தெரிந்தால் தெரியாது
உணர்ந்தால் புரியும்.



யாட்சனி.


Responses:


  Tell your friend about this topic

Want to post a response?

Post a response:

Name:

E-mail:


Please Reload to see your response


Back to the Forum