+ Reply to Thread
Page 2 of 2 FirstFirst 1 2
Results 11 to 16 of 16

Thread: SIVAJI SEASON - MALARNDHUM MALARAADHA

 1. #11
  ஜோ,

  நன்றி.

  Nerd,

  உளங்கனிந்த நன்றி. அனைவருக்கும் பிடித்த பாடல் என்பதானால் தான் இந்த பாடலை நடிகர் திலகத்தின் பிறந்த நாளன்று போஸ்ட் செய்தேன். அது அனைவருக்கும் மிகுந்த மகிழ்வை அளித்திருக்கிறது என்பதை அறியும் போது மனம் நிறைகின்றது. உங்கள் எதிர்பார்ப்பு ஒரு பயத்தையும் அதே நேரத்தில் உற்சாகத்தையும் கொடுக்கிறது.

  <dig>

  ஜோ சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.

  <end dig>

  NOV,

  நன்றி. உங்கள் உணர்வு புரிகிறது.

  wrap,

  மிக்க நன்றி. நீங்கள் சொல்வது போல் இது கல் மனதையும் கரைக்கும் பாடல். எந்த காலக்கட்டத்திலும் சத்தியமான உண்மை.

  அன்புடன்

 2. #12

  Join Date
  Oct 2005
  Location
  Chennai
  Posts
  255
  Murali sir

  No words to describe your efforts . AS OUR MELLISAI MANNAR USE TO SAY QUITE OFTEN "IRRAKUM MANITHARGAL IRAVA PADALGAL".

  I got the opportunity to listen this song with instrument only in recent MSV show. Tears in everyone eyes .

  What a meldious composistion. Even small humm in the end by TMS will made us cry.

  Thanks.

  regards
  ramesh

 3. #13
  Murali-sar, this time you moved us b bringing back teh memory of having seen this film teary eyed. Thank you very much for the posting. It's going to be an emotional weekend for me, now that I am motivated to watch Paasa Malar...a film I have been avoiding for a long time because of its heavy emotional content.

  Thanks again, sar, awaiting your next blockbuster!
  "Smart people believe weird things because they are skilled at defending beliefs they arrived at for non-smart reasons" - Michael Shermer.


  My occasional blog:

  http://grouchydays.blogspot.com

 4. #14

  Join Date
  Oct 2004
  Location
  MI
  Posts
  2,347
  நான் குழந்தையாய் இருந்தபோது என் அம்மா நிச்சயம் இந்தப்பாட்டைப்பாடி இருப்பார். (என் தம்பி/ தங்கைகளுக்கும் மற்ற நிறைய உறவினர் குழந்தைகளுக்கும் அவர் பாடியதைக்கேட்டு வளர்ந்ததால் இந்த முடிவுக்கு வருவது எளிது).

  எனினும், இது எந்தப்படம் என்று தெரியாது, தெரிந்து கொள்ள அந்தப்பருவத்தில் முயற்சியோ / வாய்ப்போ இல்லை. வானொலியில் கேட்கும்போதும் கவனித்ததில்லை.

  80'களின் ஆரம்பத்தில் கல்லூரி ஆடி'யில் 'பாச மலர்' திரையிட்டார்கள். அது வரை நான் பழைய (குறிப்பாக அழுகை நிறைந்த) பட விரும்பி அல்ல. சொல்லப்போனால், ஆடி'யில் இப்படிப்பட்ட படங்கள் வந்தால் கத்தி, கேலி செய்து இன்புறுவது தான் வழக்கம்.

  இந்தப்படத்தின் பெயர் மற்றும் அழுகைக்குப்பெயர் பெற்ற சிவாஜி, சாவித்திரி என்பதால் கண்டிப்பாக அழுகையாயிருக்கும் எனத்தெரிந்தது. என்றாலும் 3 வாரத்துக்கொரு முறை தான் ஆடி'யில் தமிழ்ப்படம் என்பதால் பார்க்க முடிவு செய்தேன். மற்றபடி கதையோ, பாடல்களோ பற்றித்தெரியாது.

  அப்படி ஒரு வித முன்விவரமுமில்லாமல் 6 மணிக்கு ஆடி'க்கு, நண்பர்களோடு போனது நன்றாக நினைவிலிருக்கிறது. வேறு ஏதேதோ பேசிக்கொண்டு போனதால், படத்தை ஏற்கனவே பார்த்த நண்பர்களிடமும் கதை பற்றியோ, பாடல்கள் பற்றியோ உரையாடமல் போனதும் தெளிவாக நினைவிருக்கிறது (அது எவ்வள்வு நல்லதாகப்போயிற்று!)

  படம் தொடங்கிக்கொஞ்ச நேரத்தில் சீரியஸ் ஆனேன் (முழு ஆடி'யும் என்னை விட சீரியஸாக இருந்ததும் ஒரு காரணம் - நோ சத்தம் ஃப்ரம் ஆடியன்ஸ்)

  பழைய ப்ரிண்ட் ஆனதால் அப்பப்போது கட் ஆனது. மொத்தம் 4 மணி நேரம் - இடைவேளை தவிர மற்ற நேரம் யாரும் அசையவில்லை.

  உணர்ச்சிவசப்படுவதன் மிக வேறுபட்ட ஒரு சொந்த அனுபவம் அன்று என் வாழ்க்கையில். மனமுதிர்ச்சி அடைந்து வயதுக்கு வந்த உணர்வு.

  நான் உள்பட யாரும் கண்களைத்துடைக்க முயலவில்லை. (வீணாக எதற்கு?)

  வெட்கம் தேவைப்படாததால் மாலை மாலையாய்க்கண்ணீர் விட்டு ஆடைகளை நனைத்துக் கொண்டிருந்தோம்.

  திரைப்படங்களைப்பார்ப்பதில் மட்டுமல்ல, மனிதர்களைப்பார்ப்பதிலும் என் கண்ணோட்டம் என்றென்றைக்குமாக மாறிய நாள் அது!

 5. #15
  Thanks Ramesh. It is good talking to you after a long time. What MSV said is 100% true. Hope you would continue to participate.

  Raakesh,

  Thanks. Hope you would be having a great week end.

  app,

  இந்த பாடல்கள் பலவிதம் தொடரின் மூலமாக எனக்கு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சந்தோஷம், பலர் மனதையும் தொட்டது மட்டுமல்ல, அவர்களின் எண்ணங்களுக்கும் எழுத்து வடிவம் கிடைக்கப் பெற்று இங்கே பதிவு செய்யப்படுவதும் தான். நீங்கள் முதன் முதலில் படம் பார்த்த போது இருந்த மனநிலையை உங்கள் எழுத்தின் மூலமாக நாங்கள் இங்கு உணர்கிறோம். தொடர்ந்து இது போல் எழுதுங்கள்.

  அன்புடன்

 6. #16

  Join Date
  Oct 2004
  Location
  MI
  Posts
  2,347
  மீண்டும் நன்றி, முரளி!

  பாசமலர் - மேம்போக்காக வாழும் மனிதரை ஆழமான உணர்வுகள் உள்ளோராக்கும் காவியம்.

  என் கருத்துப்படி, தற்காலப்பெற்றோர் இதை எங்காவது தேடிப்பிடித்துப்பிள்ளைகளுக்குக்காட்ட வேண்டிய 'கட்டாயப்பாடம்'!

  இந்தப்படம் பார்த்த பின் அது வரை மிஸ் பண்ணியிருந்த ஏகப்பட்ட 'அழுவாச்சி'ப்படங்களை காலேஜைச்சுற்றியுள்ள எந்த தியேட்டரில் வந்தாலும் தேடி, ஒடி (டூரிங் டாக்கீஸ் அடக்கம்) விடாமல் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது:-)

+ Reply to Thread

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts