+ Reply to Thread
Page 33 of 41 FirstFirst ... 23 31 32 33 34 35 ... LastLast
Results 321 to 330 of 402

Thread: YUVAN SHANKAR RAJA'S NEW ALBUMS : 08-09 : 4

 1. #321
  இன்னும் ஒரு பாலிவுட் படமா? 8-) 8-)


  பாலிவுட்டுக்கு இசையமைக்கும் யுவன் ராஜா
  (கொழும்பு-லங்காபுவது-மே-30) தந்தை இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து கோலிவுட்டை தன் வசம் இழுத்துக் கொண்டிருக்கும் யுவன் தற்போது பாலிவுட் பக்கமும் தன் திறமையை காட்ட உள்ளார்.

  இந்தி நடிகர் சன்னிதியோலின் படத்தில்தான் யுவன்ராஜா இசையமைக்க உள்ளார். யுவனின் சில பாடல்களை கேட்ட சன்னிதியோல் தன்னுடைய அடுத்த படத்தில் யுவனின் அசத்தும் இளமை இசையை அவிழ்த்துவிட முடிவு செய்து தெரிவித்துள்ளார்.

  அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிசியாக இருக்கிறார் யுவன். கைவசம் உள்ள 13 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

  11:58:32

  http://www.lankapuvath.lk/tamil/inde...=703&Itemid=89

 2. #322
  அளவெடுத்து வைத்தது போல் கச்சிதமாகப் பேசுவார் யுவன்ஷங்கர் ராஜா. ஆனால் ஒரு தேர்ந்த இசைக்கலைஞனின் கைவிரல்கள் பியானோவில் பயணிக்கும்போது எப்படி இசைப் பிரவாகமாக வெளிப்படுமோ அப்படி, அவரை சரியாகப் புரிந்துகொண்டால் போதும் மளமளவென மனதில் உள்ளதைக் கொட்டி விடுவார். `குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' பாட்டு டிஸ்கஷனில் கங்கைஅமரனோடு இருந்த யுவனை சந்தித்தோம்.

  இப்போ இருக்குற இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் இசையமைத்து ராக்கோழிகளாய் இருப்பது ஏன்?

  ``ரெக்கார்டிங் அறையில் இருக்குற இந்த மெல்லிய விளக்கு ஒளி இது இரவா, பகலான்னே தெரியாதபடி வைத்திருக்கும். வாட்சை பார்த்தால்தான் நேரம் போவதே தெரியும். இது வேலை செய்யறதுக்கு வசதியா இருக்கு.''
  டீம் ஒர்க் எப்பவுமே நல்ல படைப்பை உருவாக்க வழி செய்யும். செல்வா_யுவன், சிம்பு_யுவன் என்று இருந்தது. செல்வாவுடன் பிரிவு, இப்போது சிம்பு_அடுத்த படத்தில் புது இசையமைப்பாளரை அறிமுகம் செய்கிறார். என்னதான் நடக்கிறது?

  சிம்புவைப் பொறுத்தமட்டுல் ரொம்ப க்ளியர். `யுவன்... இந்தப் படம் உங்களோட பண்றேன். அடுத்த படம் வேற மியூசிக் டைரக்டரை வெச்சுக்கிறேன்'னு ஓப்பனா பேசிடுவார். அவர் மத்தவங்க மாதிரி கிடையாது. ரொம்ப ஓப்பன் டைப். ஒரு டைரக்டர் யாரோடு சேர்ந்தும் ஒர்க் பண்ணலாம். தப்பில்ல. என்னோட புரொடியூசர் ஒருத்தரே, `சார் உங்க அப்பாவோட ஒரு படம் பண்றேன். ரஹ்மானோட ஒரு படம் பண்றேன்'னு கேட்பாங்க. இதுக்காக அவங்கள கோவிச்சுக்க முடியாது. ஸோ... சிம்புவோட நட்பு ஆரோக்கியமான நட்பு. அவரோட சேர்ந்து பண்ணுன மன்மதன், வல்லவன் இப்போ சிலம்பாட்டம் எல்லாம் மியூசிக் வேல்யூ உள்ள படங்கள்.

  ஆனால் செல்வாவுடன் நிறையக் கருத்து வேறுபாடு இருந்தது. நான் என்ன எதிர்பார்க்கிறேன்னு அவருக்கு சரியா தெரியலை. என்னதான் ஒரு நட்பு இருந்தாலும் ஒரு மியூசிக் டைரக்டரை கமிட் பண்ணும்போது அதுக்கான முறையோடு கமிட் பண்ணணும். நான் நண்பனா பேசல, ஒரு இசையமைப்பாளரா பேசுறேன். உங்க நண்பன்ங்கிறதால, `வாங்க சும்மா வேலை பார்க்கலாம்'னு கூப்பிட்டா எப்படி வேலை செய்யமுடியும்? எங்க நீ என் ஃப்ரெண்ட்னா, வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறோம். ஒண்ணா சாப்பிடுறோம். ஒண்ணா சுத்தறோம். அங்கதான் நண்பர்கள். அவரோட `ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு என்னை அவர் ஒழுங்கா கமிட் பண்ணல.

  `யுவன் நீங்க இதுல இவ்வளவு பண்றீங்க, அதுக்கான அட்வான்ஸ் இது'ன்னு அவர் முறையா ஃபிக்ஸ் பண்ணல. அப்படி கமிட் பண்ணாமலே நான் நட்புக்காக ஒரு பாட்டு அவருக்குக் கொடுத்தேன். அதற்குப் பிறகு என்னோட வீட்ல கொஞ்சம் பிரச்னை இருந்தது. டைவர்ஸ் அது இதுன்னு டென்ஷனான நேரம்... அப்போ எனக்குப் பணம் கூட தேவைப்பட்டது. ஒரு நண்பனா அந்த நேரத்துல அவர் எனக்கு உதவி பண்ணல. ஸோ... அப்படி ஒரு நண்பன் எனக்குத் தேவை கிடையாது. ஒரு ஃப்ரெண்ட்னா கஷ்டப்படுற நேரத்துல ஹெல்ப் பண்ணணும். ஆனா அவர் அப்படி இல்ல. `ரெக்கார்டிங் வந்து உட்காரமாட்டேன்கிறேன்'னு மட்டும் சொல்றாரே, ஏன் உட்காரமாட்டேன்கிறேன்னு நினைச்சுப் பார்த்தாரா? என்னை சரியா கமிட் பண்ணல. பணம் கொடுத்து கமிட் பண்ணியிருந்தா ஒழுங்கா மியூசிக் டைரக்டர் மாதிரி நானும் வந்து வேலை பார்த்திருப்பேன். நான் நேரடியா ஒரு நண்பன்கிட்ட `செல்வா பணம் கொடு'னு கேட்கமுடியாது. அது அசிங்கம்ல. நம்ம கஷ்டத்தைத் தெரிஞ்சுகிட்டு ஹெல்ப் பண்ணணும். நான் ஒண்ணும் கடனா எதிர்பார்க்கலையே, நான் வேலை செய்ததுக்குத்தானே கேட்கிறேன். இது ஒத்துவராதபோது அப்படி ஒரு நட்பு தேவையில்லையே. இதுபற்றி எனக்கு கவலையும் கிடையாது. `இவன் இப்படிப் பண்ணிட்டானே'னு நான் கவலையே படமாட்டேன். எனக்கான உணவு மேலிருந்து தட்டுல விழுது. அதைத்தான் பார்ப்பேன். அடுத்தவங்க தட்டுல என்ன இருக்குன்னு பார்க்கமாட்டேன்.''


  கவிஞர் வைரமுத்து அவர்களோடு சேர்ந்து பணியாற்ற என்ன தயக்கம்?

  ``இதுல எனக்கு எந்தவிதமான தயக்கமும் கிடையாது. ஒரு டைரக்டர் `இவர்தான் என் படத்துல பாட்டு எழுதுறார்'னு சொல்லி கூப்பிட்டு வந்தா அவர் பாடல்களுக்கு இசையமைக்கத் தயாராய் இருக்கிறேன்.''

  நீங்கள் அடிக்கடி பாங்காக் போவது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது? இந்தத் தொடர் பயணங்கள் எதற்காக?

  ```புதுப்பேட்டை' படத்துக்காகத்தான் அடிக்கடி நானும் செல்வாவும் பாங்காக் போனோம். அந்தப் படத்துக்கு ரீ ரெக்கார்டிங் சிம்பொனி டைப்ல இருந்தால்தான் நல்லாருக்கும்னு ரெண்டு பேருமே ஃபீல் பண்ணினோம். ஒரு வாரத்துல எல்லாம் நடந்தாகணும். சிம்பொனி ட்ரூப் எங்கெங்க இருக்குன்னு பார்த்தப்ப ஐரோப்பாவுல இருந்தது. பத்து மணி நேர டிராவல் பண்ணி ஒவ்வொரு ரீலா ரீரெக்கார்டிங் முடிச்சு ட்ராக் அனுப்பணும். இந்த மாதிரியான சிரமங்களுக்காகத்தான் பாங்காக்கில் இருந்து நோட்ஸ் எழுதி ஒர்க் பண்ணினோம்.

  மற்றபடி வேற எந்தக் காரணமும் இல்ல. பாங்காக் `அந்த மாதிரி'யான ஊர்ங்கிறதால இதைப் பேசுறீங்க. சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பாரீஸ் கூட நான் அடிக்கடி போறேனே அதைப் பற்றி ஏன் பேசமாட்டேன்கிறீங்க?''
  கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? அப்பாவிடம் இதுபற்றி விவாதித்ததுண்டா?

  ``அப்பாவிடம் விவாதித்தது இல்லை. ஆனால் எனக்கே பர்சனலான கடவுள் பற்றிய அனுபவங்கள் இருக்கு. கடவுள் இருப்பதை நான் நம்புறேன். டிரெஸ்தான் மாடர்னா இருக்கே தவிர கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கு.''

  கார்த்திக்ராஜா இசை பற்றி, அவருடைய சினிமா கேரியர் பற்றிச் சொல்லுங்கள்.

  ``அண்ணன் என்னைவிட நூறு பர்சன்ட் திறமை உள்ளவர். சினிமாவில் ஒரு நல்ல டீம் அமையணும். டீம் இருந்தால்தான் சக்ஸஸ் பண்ண முடியும். அப்படியொரு டீம் அண்ணனுக்கு அமையல. நிச்சயம் ஒரு நல்ல டீம் அவருக்கு அமையும். இதை உறுதியா சொல்றேன்.''

  திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வருகிறதே?

  ``அதுபற்றி யோசிக்கவே இப்போதைக்கு எனக்கு நேரம் இல்லை. இன்னும் சில கடமைகள் இருக்கு. அதையெல்லாம் முடித்தபிறகு பார்க்கலாம்.''.
  :musicsmile: Experiencing the Naan Kadavul songs. Version 2.0

  Raaja Brahmasmi Om Om :bow:

 3. #323


  But, is money the reason behind this split? :roll:

  My friends dad produced "Junior Senior" and met with a huge flop and financial crisis. At that time, understanding his situation, YSR magnanimously didnt press with his payment due. Is it the same yuvan?
  A black cat crossing your path signifies that the animal is going somewhere.

 4. #324
  Quote Originally Posted by thamizhvaanan


  But, is money the reason behind this split? :roll:

  My friends dad produced "Junior Senior" and met with a huge flop and financial crisis. At that time, understanding his situation, YSR magnanimously didnt press with his payment due. Is it the same yuvan?
  Come on, Selva is making money on doing his projects. It is his duty to give what Yuvan or any other technician deserves. Just because Yuvan is his friend, I don't think Selva should expect Yuvan to work for free unless he works free for his producers.

  Yuvan does help producers who are in trouble.

 5. #325
  Quote Originally Posted by MrJudge
  Quote Originally Posted by thamizhvaanan


  But, is money the reason behind this split? :roll:

  My friends dad produced "Junior Senior" and met with a huge flop and financial crisis. At that time, understanding his situation, YSR magnanimously didnt press with his payment due. Is it the same yuvan?
  Come on, Selva is making money on doing his projects. It is his duty to give what Yuvan or any other technician deserves. Just because Yuvan is his friend, I don't think Selva should expect Yuvan to work for free unless he works free for his producers.

  Yuvan does help producers who are in trouble.
  no, I m not critcizing Yuvan.. it is his rights.. but at the same time, sad that such a combo needs to seperate for such an issue :x
  A black cat crossing your path signifies that the animal is going somewhere.

 6. #326
  Quote Originally Posted by thamizhvaanan
  sad that such a combo needs to seperate for such an issue
  Yes, it is a pity.

 7. #327

  Join Date
  Dec 2004
  Location
  Raja's Music World
  Posts
  1,968
  Quote Originally Posted by MrJudge
  Quote Originally Posted by thamizhvaanan
  sad that such a combo needs to seperate for such an issue
  Yes, it is a pity.
  BR-IR Combo too split for a similar reason after Nadodi thendral :| IR had also helped many people and have letgo his fees when the producers were suffering. Both IR and YSR's grouse should be over the friendship being misused for business.

  Hmmm... Neraiya Vishayangalla He is becoming like his father! let him not alienate himself from crowd too :P
  kalThOnRi ManThOnra kAlaththu munThOnRiya mUththa kudi thamizhkudinna, Muthal KolaigAranum avanAthana irukkanum! Olagathula irukra ella Thappum ivanthaan muthalla Senjirukkanum - Dr.Ilaiyaraaja

 8. #328
  Quote Originally Posted by rajasaranam
  BR-IR Combo too split for a similar reason after Nadodi thendral :| IR had also helped many people and have letgo his fees when the producers were suffering. Both IR and YSR's grouse should be over the friendship being misused for business.
  thats the point here. Seems, Selva has taken Yuvan for granted :evil: Thats not fair. Yuvan has clearly mentioned that he was in financial crisis at that time. :?
  Knowing that yuvan is goin thru tuf time, selva dint come fwd to help..
  :musicsmile: Experiencing the Naan Kadavul songs. Version 2.0

  Raaja Brahmasmi Om Om :bow:

 9. #329
  Englipeech versan of kumudham interview...

  ---

  Yuvan Shankar Raja opens out
  IndiaGlitz [Saturday, December 06, 2008]

  Yuvan Shankar Raja is quite a busy man these days. He is a busy music composer and a film producer too. His recent music album 'Silambattam' has reportedly become a favorite among youngsters and Simbu has been flooded with accolades.

  Meanwhile, Yuvan has opened up about his differences with Selvaraghavan and stated that it is unlikely that the two would work together ever again.

  'Friendship and professionalism are two different entities. He has failed to give respect to both', he said in an interview to a magazine.

  Though he was my good friend, he never came forward to help me and I never asked for it. But it left me disappointed, he said and added, ' I never brood over the past'.

  On his elder brother Karthik Raja, he said, 'he is a talented musician. He needs a good team to strike it rich. Hopefully he achieves it soon'.
  :musicsmile: Experiencing the Naan Kadavul songs. Version 2.0

  Raaja Brahmasmi Om Om :bow:

 10. #330
  Today morning I heard DEEPAVALI songs after a long gap. Each song is different and IMO, they are gems....:thumbsup:

  WOW..... Still all five songs, Pogaadhe, Kaadhal vaithu, Kannan varum velai, dol baaje, thoduvaen thoduvaen sounds very good......

  I am expecting another DEEPAVALI in near future from U1.
  Athanai selvamum unnidathil, naan bitchaikku selvadhu evvidathil,
  Verum paathiram ulladhu ennidathil, adhan soothiramo adhu unnidathil......

+ Reply to Thread

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts