Paarthukkondathu Kannukku Kannu(Thaaikku ThalaiMagan)
Song # 312
TMS with PS for Makkal Thilagam MGR & Jayalalitha
Movie : Thaaikku ThalaiMagan
Music : K V Mahadevan
Lyric : Kannadasan
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்கவிட்டு வெட்கமென்ன
சொல்லடி சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்கவிட்டு வெட்கமென்ன
சொல்லடி சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ண*டி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ண*டி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு !
கண்ணாலே மடக்கிவிட்டு
பெண்ணாசை பெருகவிட்டு
உன்னாசை மறைக்கலாகுமா
கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா
கண்ணாலே மடக்கிவிட்டு...
முந்தி முந்தி வரும் முத்து சிரிப்பினை
சிந்தி வரலாமா
சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு
சொல்லித் தரலாமா
முந்தி முந்தி வரும் ...
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ண*டி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு !
என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே
கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நானுங்கள் சொந்தம் அல்லவா
என்னென்ன நினைத்து வந்தேன்..
என்ன என்ன இது கன்னி மனசுக்கு
இத்தனை எண்ணங்களா
மெல்ல மெல்ல வந்து கன்னிப்பெண்
என்னிடம் இத்தனை கேள்விகளா
என்ன என்ன இது கன்னி மனசுக்கு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ண*டி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
http://s97.photobucket.com/albums/l2...20ThalaiMagan/
KannE Konjan Paaru Kaniyaa Kaayaa Kooru(ChellepPenn)
Song # 313
TMS with LRE for AVM Rajan + Pushpalatha
Music : B.A. Chidambaranath
Movie : ChellepPenn
Lyric : Vaali
கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
ஹோஹோஹோ..ஹோ...ஓஹோஓஓ..
கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடை எல்லாம் தேனோ
கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடை எல்லாம் தேனோ
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
ஹாஹா ஹாஆ..ஹா...ஆ...ஹாஹாஆ...
அலங்கார சிலையே நீ அசைந்தாடி வா வா
நிலையான பரிசாக உனையே நீ தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச*
உருவமே கெஞ்ச கெஞ்ச*
பருவமே கொஞ்ச கொஞ்ச*
உருவமே கெஞ்ச கெஞ்ச*
உறவாடி வந்தாலென்ன ஓடோடி வா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தா...னா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
ஹஹ் ஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தா...னா
கண்ணே கொஞ்சம் பாரு ஆஹா
கனியா காயா கூறு ஓஹோ
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
ஹாஹா ஹாஆ..ஹா...ஆ...ஹாஹா
விழி பேசும் மொழி போதும்
விளையாட வா வா
பழங்காதல் சுகம் எல்லாம்
மயங்காமல் தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச*
உருவமே கெஞ்ச கெஞ்ச*
பருவமே கொஞ்ச கொஞ்ச*
உருவமே கெஞ்ச கெஞ்ச*
உறவாடி வந்தாலென்ன ஓடோடி வா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
ஆஹா ! தாளம் போடு தாளம் போடு
தக்கத்திமி தானா
கண்ணே கொஞ்சம் பாரு ஹெஹ்ஹெ
கனியா காயா கூறு ஹெஹ்ஹெ
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்
என் ஆசை நெஞ்சம்
காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்...
exultantly cheery TMS and LRE
http://www.mediafire.com/download.php?2tmhm9bnezb
Indhaa Indhaa Nillu(Naanum Manidhan Thaan)
Song # 314
TMS with LRE for C L Aanandhan & Chandrakantha
Movie : Naanum Manidhan Thaan
Music : G K Venkatesh
Lyric : Trichy Thiyagarajan
இந்தா இந்தா நில்லு
நான் எதுல கொறைச்சல் சொல்லு
ஏய் ! இந்தா இந்தா நில்லு
நான் எதுல கொறைச்சல் சொல்லு
சந்தனம் போல தொட்டுக்குவேன்
நீ சம்மதிச்சாதான் கட்டிக்குவேன்
இந்தா இந்தா நில்லு
நான் எதுல கொறைச்சல் சொல்லு...
இந்தா இந்தா நில்லு ஹேய் ஹேய்...!
இங்கே கொஞ்சம் வாங்க*
எதுல கொறைச்சல் நீங்க*
இங்கே கொஞ்சம் வாங்க*
எதுல கொறைச்சல் நீங்க*
தங்கமும் பித்தளை ஆகாது
இந்த தங்கத்தின் புத்தியும் மாறாது
தங்கமும் பித்தளை ஆகாது....
ஓஹோ.ஒஹொ....ஹா ஆஆஆ..
ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்
ஏய் ! இந்தா இந்தா நில்லு..
ஆவணி மாசம் தாவணி கட்டி
ஐப்பசி மாசம் சேலையைக் கட்டி
தாவி வந்த மான்குட்டி
இந்த தை வந்தா என் பெண்டாட்டி
இந்த தை வந்தா என் பெண்டாட்டி
ஏழையின் குடிசை வாசலிலே
என் இறைவன் வந்த நேரத்திலே
ஏழையின் குடிசை வாசலிலே
என் இறைவன் வந்த நேரத்திலே
வாழை மரப்பந்தல் கட்ட வேணும்
மங்கள* வாத்தியம் தட்ட வேணும்
வாழை மரப்பந்தல் கட்ட வேணும்
மங்கள* வாத்தியம் தட்ட வேணும்
இங்கு மங்கள வாழ்த்து கேட்க வேணும்
ஏய் ! இந்தா இந்தா நில்லு
நான் எதுல கொறைச்சல் சொல்லு
ஹா ஆஆஆ..
சந்தனம் போல தொட்டுக்குவேன்
நீ சம்மதிச்சாதான் கட்டிக்குவேன்...
ஹா ஆஆஆ..ஹேய் ஹேய்..
ஹா ஆஆஆ..
to listen
http://www.mediafire.com/download.php?ytte2gym1yl
Velli salangai Thullik kulunga(Sri Ramajayam)
Song # 315
TMS with P Susheela for ThEngai Srinivasan & Sujatha
Movie : Sri Ramajayam
Music : MSV
Lyric: Kannadasan
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க*
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க*
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க*
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க*
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
பூச்சூடி சூடி கொடி போல ஆடி
பொன்னாக வந்த வெண்ணிலா
காற்றாட ஆட கண்ஜாடை பேசும்
கண்ணான கண்ணன் திருவிழா
கண்ணான கண்ணன் திருவிழா
திருவிழா !
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க*
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க*
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன*
என் ராசி நல்ல ராசிதான்
கண்ணான ஜோடி பொன்னான வாழ்வு
கல்யாணம் தந்த ராசிதான் கல்யாணம் தந்த ராசிதான்
ராசிதான் !
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க*
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க*
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம் !
http://www.mediafire.com/download.php?mzztymmj4c3